Sunday, May 2, 2010

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி திருவினையாக்கும்! - என்ற
பயிற்சி உறுதுணையாக்கும்!!

வானம் புதிதுதான்! - இந்த
வையமும் புதிதுதான்! - நம்
வாழ்க்கையும் புதிதுதான்!! - வீணாய்
வருந்தாதே நண்பா!!

கடந்த காலத்தில் நிகழ்ந்த
தோல்விகளை நினைத்து - வீட்டில்
முடங்குவதை நிறுத்து!!

இடிவிழுந்து
இமயமலை சாய்வதில்லை!
காகம் பறந்து
கடலலை ஓய்வதில்லை!!
இமயமலை போல்
நீ நிமிர்ந்துநில்!!

சின்னச்சின்ன தோல்வி கண்டு
ஒய்ந்துபோகாமல்
கடலலைபோல் தொடர்ந்து
ஓயாமல் போராடு!!

தன்னம்பிக்கை இருந்தால்
தடைக்கற்கள் தானே
படிக்கற்களாய் மாறும்!
உன்னால்
முடியுமென நம்பு!
உன்னால்
முடியும்வரை நம்பு!
இதுவே
உனக்கு புதுத்தெம்பு!!

காலத்தின் அருமைகண்டு
சற்றே பொறுமையுடன் போராடு!!

வீட்டில் படுத்து
உறங்குவதை தடுத்து
வாய்மையை எடுத்து
தூய்மையாய் உடுத்து!!

காலக்குதிரையின் கடிவாளத்தை
நீ கொஞ்சம் இழுத்து
வெற்றிக்காவியங்கள் பல நடத்து!!

முயற்சி திருவினையாக்கும்! - என்ற
பயிற்சி உறுதுணையாக்கும்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 10-07-2006

2. இலங்கை வானொலி – 03-09-2006

3. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 09-04-2007

4. முத்தாரம் – 19-04-2007

5. பாவையர் மலர் - 01-08-2012

4 comments:

Anonymous said...

very good
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை said...

நன்றி.

Anonymous said...

ஏற்கெனவே தான் நான் கருத்துப் போட்டுள்ளேனே!!!!
தங்கள் கவிதையைப் பாருங்கள் என்று மின்னஞ்சல் வருகிறது!.
எங்கள் வலைக்கு நீங்கள் வரமாட்டீர்களோ?
வேதா. இலங்காதிலகம்.

Ilakkuvanar Thiruvalluvan said...

நன்று.
உனக்கு ப் புதுத் தெம்பு
உறங்குவதை த் தடுத்து
இந்த க் கவிதை
எனத் திருத்துக.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /