Sunday, August 12, 2012

தமிழா... (இந்தியாவை) விட்டு விடுதலைகாண்

தமிழனுக் கென்று தாய்நா டிரண்டு
தரணியில் வேண்டும் தோழா வாடா
செம்மொழித் தமிழன் செருப்பாய் இழிவாய்
இருப்பதும் முறையோ? பொறுப்பதும் சரியோ?
எம்மொழி தமிழ்மொழி என்றொரு பற்றுதல்
இங்ஙனம் வேண்டும் எழுந்திரு தோழா
பொம்மையைப் போலவே பழந்தமிழ்க் கூட்டம்
பகுத்தறி வெங்கே போனது தோழா?

இந்தியன் என்றொரு இனமிங் கில்லை
இருந்தால் தமிழர்க் கதுவே தொல்லை
செந்தமிழ் மொழியெங்கள் சிறப்பின் எல்லை
சேற்றினில் வாழ்தல் சிறப்பிங் கில்லை
சிந்திய செந்நீர் சோகத்தின் எல்லை
சிங்களன் வெற்றி நிரந்தர மில்லை
முந்தைய தமிழர் மோகத்தின் பிள்ளை
முத்தமிழ் எத்திசை முழங்கவு மில்லை

வேதனை யுடனே வாழ்ந்தது போதும்
வேள்விகள் செய்தொரு வாளெடு தீரும்
தீதிந்த அரசியல் தெளிந்தால் மாறும்
தேருதல் தானிங்கு தீர்வினைக் கூறும்
ஜாதியைச் சொல்லி சேர்ந்தது போதும்
செம்மொழித் தமிழால் சேர்ந்திடல் பாரும்
நீதியும் விழித்தே நேர்மையைக் கூறும்
நேசிக்கும் தமிழகம் தனிநா டாகும்

இன்னொரு சுதந்திரம் வேண்டுமே நமக்கு
இமைபோல் காத்தது என்தமிழ் மொழியே
பொன்னென மின்னும் புகழுடைத் தமிழா
புழுதியில் சகதியில் பிழைப்பதும் தகுமா?
இன்னல்கள் தந்திடும் இந்தியா எப்படி
என்னுடைத் தமிழனின் இடுக்கண் களையும்?
அன்னைத் தமிழினை அடியேன் மறவேன்
அன்பால் அவளெனை அனுதினம் காப்பாள்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 31-08-2012

2. தமிழர் எழுச்சி - 01-09-2012

3 comments:

பெருமாள் தேவன் செய்திகள் said...

அருமையான கருத்து. இந்தியாவிலிருந்து விடுவித்துக் கொண்டால்தான் தமிழர் நலம் காக்கப்படும். அதே நேரத்தில் இந்து மத- சாதி ஒழிப்பு பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது அது பற்றிய கருத்துக்களை அறிய விரும்பினால் என்னுடைய கட்டுரைகளை படித்துப் பாருங்கள். நன்றி.

http://perumalthevan.blogspot.in/2012/08/blog-post_6510.html

http://perumalthevan.blogspot.in/2012/04/blog-post_29.html

bharathi said...

tamizharukkendru veeram varugiratho andre nammudaiya latchiyathai naam adaiya mudiyam. thamizhanukku veeram varuma? nammudaiya thoppul kodi uravugalukku nammal udava mudiyuma? ingulla kudumba arasiya seibavargalai thamizhargal purindhu kolvargala?

Unknown said...

அருமையான கருத்து இந்(தி)யாவிடமிருந்து நமக்கும் சிங்களத்திடமிருந்து நம் ஈழ உறவுகளுக்கும் விடுதலை வேண்டும் என்பதே எனது கனவும்,
பெறுவோம் விடுதலை தமிழ்தேசியங்கள் அமைக்க,