Saturday, November 30, 2013

கடலுக்கடியில் தூங்கும் மாபெரும் “தமிழ்க் கண்டம்”

நன்றி: NewIndiaNews.com
கடலுக்கடியில் தூங்கும் மாபெரும் “தமிழ்க் கண்டம்”(வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2013, 08:25.03 AM GMT +05:30 ]   
இந்திய திருநாட்டில் நம் மக்களிடையே மறைக்கப்பட்ட உண்மைகள் ஏராளம் என்றே சொல்லலாம்.
இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு, 20,000 வருடத்திற்கும் பழமை வாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.
சுமார் 20,000 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய பகுதி தான் “நாவலன் தீவு” என்ற பெயரில் அழைக்கப்பட்ட குமரிப் பெருங்கண்டம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.
இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது, இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இக்கண்டம் ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்.
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள அவுஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் குமரிக் கண்டம்.
ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன. பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன.
மேலும் குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன, தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.
உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் இறையனார் அகப்பொருள் என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.
தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440-ல் 4449 புலவர்களுடன், சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது.
இதில் பரிபாடல் முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.
இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

மேலும் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850-இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில் அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விடயம்.
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம்!!!

ஆதாரம்: NewIndiaNews.com

விஷ்ணு பாப்பாவின் புகைப்படங்கள்

தமிழ்நாடு இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்

நன்றி: https://www.facebook.com/profile.php?id=100007079860823நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது

'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத்தான். ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.

அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.

நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக்.

அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.

வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.

மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர்.

அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.

தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது (காண்க: பெட்டிச் செய்தி).

ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.

தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.

தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்). ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.

பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்).

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.

இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.

இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்...

இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது.

பவானி நதிப் பிரச்சினை கிடையாது.

தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது.

சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது.

எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.

கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.

1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின.

இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.

மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?

வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.

வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர். இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.

சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.

இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.

கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.

பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்-

பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.

தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.

Saturday, November 23, 2013

வெற்றிநடை மாத இதழின் ஆசிரியர் திரு. பாலமுரளி அவர்களுக்கு உதவி தேவை.

இந்த உலகில் உள்ள அனைத்து மருத்துவங்களும் இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையைத்தான் செய்கின்றன. அவற்றிற்கு பலமடங்கு பணம் வசூலிக்கின்றன. ஒரு ரூபாய் செலவில்லாமல் நாமே நம்முடைய இரத்தத்தை எப்படி சுத்தப்படுத்தலாம் என்பதைத்தான் செவிவழி தொடுசிகிச்சை சொல்லித்தருகிறது. 'நம்முடைய இரத்தத்தை மட்டும் எப்போதும் நாம் சுத்தமாக வைத்திருந்தால், உடல் உறுப்புகள் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும்.இரத்தத்தை எப்படி சுத்தப்படுத்துவது?' என்பதை சொல்லித்தருவதே செவிவழி தொடுசிகிச்சையின் நோக்கம்.

இந்த மின்னஞ்சலை செவிவழி தொடுசிகிச்சை நிபுணர் திரு. பாஸ்கர் அவர்களுக்கும் அனுப்பி வைத்திருந்தேன். சில நாட்கள் கழித்தபிறகு அவரிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. நாகை பாலமுரளி அவர்களின் அண்ணாவைப் பற்றி கேட்டறிந்தார். அவரின் அலைபேசி எண்களை கேட்டார். கொடுத்தேன். 

சில மணிநேரம் கழித்தபிறகு நாகை பாலமுரளி அவர்களிடம் பேசினேன். 'சென்னையில் இன்னும் சில தினங்களில் செவிவழி தொடுசிகிச்சை தொடர்பாக பேசுகிறேன். வந்து கலந்து கொள்ளுங்கள்.' என்று திரு. பாஸ்கர் சொன்னதாக பாலமுரளி ஐயா சொன்னார்.

அதன்பிறகு திரு. பாஸ்கர் அவர்கள் என்னிடம் பேசினார்.

'http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/ என்ற வலைத்தளம் யாருடையது?' என்று கேட்டார். 'என்னுடையது' என்று பதிலளித்தேன். 'எதற்காக கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன். விரிவாக பதிலளித்தார்.

'எனக்கு இணையம் பற்றி தெரியாத காலகட்டத்தில் உதவி செய்வதாக ஒருசிலர் பழகினர். ஆரம்பத்தில் எனக்கு ஒருசில உதவிகள் செய்தாலும் காலப்போக்கில் அவர்கள் என்பெயரைச் சொல்லியும் செவிவழி தொடுசிகிச்சை பெயரைச் சொல்லியும் பணம் பறிக்கத் தொடங்கிவிட்டனர். சில மாதங்களுக்கு முன்புதான் அவர்களிடமிருந்து நமக்கான http://anatomictherapy.org/ என்ற இணையத்தை என் பெயருக்கு மாற்றினேன். உங்களின் பதிவில் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/11/blog-post_23.html) youtube ல் உள்ள காணொளிகளுக்கான இணைப்புகளை கொடுத்திருக்கிறீர்கள்.  நம்முடைய http://anatomictherapy.org/ சென்று அங்கிருந்து காணொளிகளை தரவிறக்கம் செய்யச்சொல்லி பரிந்துரை செய்யுங்கள். youtube ல் உள்ள காணொளிகளுக்கான இணைப்புகளை யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள். அப்படி செய்தால், அந்த காணொளிகளில் உள்ள எண்களுக்கு மக்கள் அழைப்பார்கள். அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் பாஸ்கர் அவர்கள் இங்கிருக்கிறார். இவ்வளவு பணம் கொண்டு வாருங்கள். அவரைப் பார்க்கலாம். என்று என் பெயரைச் சொல்லி பணம் பறிக்கின்றனர். 

நான் வெளிநாடு செல்ல வேண்டிய தகவல்களை சேகரித்துக்கொண்டு நான் அங்கு போகும் முன்னரே அவர்கள் அங்கு சென்று என் பெயரைச் சொல்லி பொடி, மருந்து என்ற பெயரில் விற்று மக்களிடம் பணம் பறிக்கின்றனர். 

செவிவழி தொடுசிகிச்சை மருத்துவத்தில் மருந்தே இல்லை என்று நான் பரப்புரை செய்கிறேன். ஆனால், சென்னையில் ஒரு வீட்டில் ஒருவர் என்பெயரைச் சொல்லி பொடி, மருந்து போன்றவற்றை விற்று பணம் பறிக்கிறார். சென்னை சென்றபோதெல்லாம் கூட்டத்தில் இவரை பற்றி சொல்வேன். யாரும் அந்த மோசடிப் பேர்வழியை தட்டிக் கேட்பதில்லை. மக்கள் அனைவரும் நான் பேசுவதை பார்க்கின்றனர். சென்று விடுகின்றனர். 

இதனாலேயே, கூட்டத்தில் பேசும்போது அந்த மோசடிப் பேர்வழிகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று சேர்த்தே சொல்கிறேன். 

உலக மருத்துவத்தில் நடக்கிற தில்லுமுல்லுகளை எதிர்த்து நாங்கள் பரப்புரை செய்கிறோம். ஒரு தனிமனிதனுக்காக பயந்து முடங்கினால், நாளை உலக அளவில் பிரச்சனைகள் உருவாகும்போது எப்படி அவற்றையெல்லாம் தீர்ப்பது? அதனாலேயே அவர்களிடமிருந்து எங்கள் மருத்துவம் தொடர்பான தகவல்களை படிப்படியாக நாங்கள் எங்கள் வசம் கொண்டுவர வேண்டும்.' என்றார்.

என்னிடம் அலைபேசி ஊடாக ஒருசிலமுறை தான் பேசினார். ஆரம்பிக்கும் ஒவ்வொரு முறையும் பேசி முடிக்கும் ஒவ்வொரு முறையும் 'வாழ்க இவ்வையகம்' என்ற வாக்கியத்தை உச்சரிக்கிறார்.

திரு. பாஸ்கர் அவர்களின் மனம்போலவே அவருக்கும் செவிவழி தொடுசிகிச்சை தொடர்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கும் எல்லாம் நல்லதாகவே அமையும் என்றே நான் கருதுகிறேன். மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.

-----------

Dear Sir/Madam, My brother Mr.Devarajan admitted in GH, chennai for kidney transplant which cost Rs.2 Lks. I request you to help. Thanks&regards Balamurali Ct. 
8098858383, 9944527480 
S.DEVARAJAN. AXIS BANK, TRICHY BRANCH. A/C NO.137010100267908 IFS CODE: UTIB0000137

வெற்றிநடை மாத இதழின் ஆசிரியர் திரு. பாலமுரளி அவர்களின் அண்ணனுக்கு சிறுநீரகக் கோளாறு காரணமாக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை சென்னையில் செய்ய வேண்டி ஒரு மாதத்திற்கு முன்பு வரை முகநூலின் ஊடாக ரூபாய் இரண்டு இலட்சம் வரை தேவைப்படுவதாகக் கேட்டிருந்தார். 

ஒரு வாரத்திற்கு முன்பு இது தொடர்பாக ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தேன். திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு தான் ஆரம்பிக்கவிருக்கும் 'அகரமுதல' இணைய இதழில் உதவி தேவை என வெளியிட திரு. பாலமுரளி அவர்களின் கடவுச்சீட்டு (Passport size) புகைப்படம் கேட்டார். இதனால் நான், பாலமுரளி ஐயா அவர்களிடம் அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டேன்.

தற்போதைய நிலவரப்படி, தன்னுடைய அண்ணனுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால், காலை வெட்டி எடுத்து விட்டதாகவும்  அதனால் அறுவைசிகிச்சை செய்ய இயலவில்லை என்றும் வீட்டில் வைத்து பார்க்க வேண்டும் என்றும் சொன்னார்.

இந்தத் தகவலை இலக்குவனார் திருவள்ளுவன் ஐயாவிடம் சொன்னேன். அவரும், பாலமுரளி ஐயாவிடம் செயற்கைக் கால் பொருத்துவது தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்படுமா என்று தெரிந்து கொள்வதற்காக பாலமுறை ஐயாவை அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டதாகவும் இணைப்பு கிடைக்கவில்லை என்றும் என்னிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நான் பாலமுரளி ஐயாவை தொடர்பு கொண்டேன். அவர் அதிகமாகத் தயங்கினார். என்ன யோசித்தார் என்பது தெரியவில்லை.

திண்டுக்கல் ஓவியா பதிப்பகம் மூலமாக சென்னை புத்தகக் கடையிலிருந்து என்னுடைய குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும் ஹைக்கூ நூல் சிங்கப்பூரில் விற்பனையில் மூலம் கிடைத்த பணம் சில வாரங்களுக்கு முன்பு இணைய வங்கிக்கணக்கு உதவியுடன் அதன் உரிமையாளர் திரு. வதிலைபிரபா அவர்களின் மூலமாக எனக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

அந்தத் தொகையை திரு. பாலமுரளி ஐயாவின் வங்கிக் கணக்கிற்கு என்னுடைய இணைய வங்கிக் கணக்கின் உதவியுடன் சற்றுமுன் அனுப்பி வைத்தேன். 

ஏற்கனவே, சென்னை புத்தகத் திருவிழாவில் என்னுடைய இருநூல்கள் விற்பனையின் மூலம் கிடைத்த தொகையை அவருக்கு அனுப்பி வைத்தேன்.

என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்.

வித்யாசாகர் அண்ணாவும் பணம் அனுப்பி வைத்ததாக கேள்விப்பட்டேன். 

உதவி செய்யும் மனப்பாங்கு உள்ள அன்பர்கள் தங்களால் முடிந்த பண உதவியை செய்யுங்கள்.

இந்தத் தகவலை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் உதவி செய்ய, பரிந்துரை செய்யுங்கள்.

குறிப்பு:
=============

செவிவழி தொடுசிகிச்சை நிபுணர் திரு. கோவை பாஸ்கர், ஒரு உறுப்பை வெட்டி எடுப்பது என்பது தவறான மருத்துவம். அப்படி வெட்டிஎடுத்தால் மற்ற உடல் உபாதைகள் (side effects) ஏற்படும். நம் உடல் உறுப்புகளே அவற்றை சரி செய்து கொள்ளும்.அறுவை சிகிச்சையோ உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையோ தேவையில்லை என்கிறார்.

ஆனால், வேறு வழியில்லாததால் தான், திரு. பாலமுரளி ஐயா அவர்களின் அண்ணனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம்.

ஒரு ரூபாய் செலவில்லாமல், அறுவை சிகிச்சை செய்யாமல்,  எந்தவித மருந்து மாத்திரையும் உட்கொள்ளாமல் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, இதய நோய் போன்றவற்றை குணப்படுத்த இந்தப் பதிவை பாருங்கள், படியுங்கள். http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/07/blog-post_20.htmlவருமுன் காப்போம் என்பது நம் கடமையன்றோ...
வந்தபின் பார்ப்போம் என்பது நம் மடமையன்றோ...

Wednesday, November 20, 2013

United States of Tamizh (UST - தமிழர் ஐக்கிய நாடுகள்)

Few days ago, my facebook friend has talked with me over the mobile from chennai and he informed me the following.

"I have shown your posts and the images on which tamizhnadu and tamizheezham have been highlighted and pointed by the finger to my college friends. Most of us felt happy. Somebody said we will combine both the states tamizhnadu and tamizheezham and we can call it as United States of Tamizh - UST".

After he said the above, i really delighted and i excited.

He continued,

"A non tamizhan asked me are you a tamilian?. I responded i am not a tamilian or tamilan. I am a tamizhan. You should not be calling me tamilian or tamilan. You should have to call me tamizhan."

While he informed the above, an incident in my life has been recalled by my mind.

Nine years ago, during april 2004 i sent the applications for studying my M.C.A., to azhagappa university and pondicherry university. When i was writing my address on the cover, i wrote tamizhnadu instead of tamilnadu.

காலத்தை மீறி கனவு கண்டவன் பாரதி. இங்கு நம் தமிழிளைஞர்கள் காலத்தை மீறி கனவு காண்கின்றனர். நியாயமான கனவுதான். நாமும் வாழ்த்துவோம்.

தமிழர் ஐக்கிய நாடுகள் (UST - United States of Tamizh) என்ற அமைப்பின்கீழ் உள்ள நாடுகள்
அ. தமிழ்நாடு அல்லது தமிழர் நாடு.

ஆ. தமிழீழம்.

UAE க்கும் USA க்கும் UK க்கும் படைஎடுத்தவர்கள் எல்லாம் நாளை UST க்கு படையெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.Tuesday, November 19, 2013

உயிர்மை மாத இதழில் மெட்ராஸ் கபே திரை பற்றிய கட்டுரைக்கு என்னுடைய மாற்றுக்கருத்து.

கடந்த அக்டோபர் மாதம் நான்கு, ஐந்து தேதிகளில் சென்னையில் தங்கியிருந்த போது, திருவல்லிக்கேணி நூலகத்தில், உயிர்மை மாத இதழ் என் பார்வைக்குக் கிடைத்தது.

அதில் "மெட்ராஸ் கபே திரைப்படம் பற்றியும் அதனை திரையிட விடாமல் தடுக்கும் தமிழக கட்சிகள், இயக்கங்கள் அதனை எதிர்ப்பதன் மூலம் அதில் என்ன தான் அப்படி இருக்கிறது பார்த்து விடுவோம் என்ற ஆர்வத்தை தூண்டி எப்படியாவது பார்க்க வைத்து விடும். திரையிடக் கூடாது என்று தடுப்பதன் மூலம் அந்தப் படம் அவர்களுக்கு தெரியாமலேயே விளம்பரப்படுத்தப் படுகிறது. இப்படி போராட்டங்களினால் தடுப்பதை விட, நாமும் தரமான படைப்புகளின்மூலம் மெட்ராஸ் கபே போன்ற படங்களை, படைப்புகளை தவிடுபொடியாக்கலாம்." என்று பொருள்பட ஒரு கட்டுரையாளர் எழுதியிருந்தார்.

என்னுடைய மாற்றுக்கருத்து இதுதான்.

"நீங்கள் சொன்னதுபோல், படைப்புகளின் மூலம் பதில்சொல்ல, சமீபத்தில் வெளிவந்த பாலை, உச்சிதனை முகர்ந்தால் போன்ற படைப்புகள் எத்தனை பேரால் பார்க்கப் பட்டன? வெறுமனே தமிழ் படைப்பாளிகளை மட்டுமே குறை சொல்லாமல், நன்றி கெட்ட, தமிழ்நாட்டு ஈனத்தமிழர்களையும் குறை சொல்லுங்கள். 

ஒரு படம், படைப்பு வெற்றியடைய சந்தைப்படுத்துதல் இன்றைய நவீன உலகில் மிகமிக அவசியமானதாகும். ஒரு விநியோகஸ்தர் சொல்கிறார் படம் எடுக்க ஆன செலவை விட மூன்றுமடங்கு அதனை விளம்பரப்படுத்த, சந்தைப்படுத்த ஆனது என்று.

பாலை, உச்சிதனை முகர்ந்தால் போன்ற படங்கள் வெளிவந்த தகவல்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? 

கேட்டால், அப்படியா? இப்படிப்பட்ட பெயர்களில் படங்கள் வந்தனவா? என்று கேட்போர் தான் அதிகம்.

பாலை, உச்சிதனை முகர்ந்தால் போன்ற படங்கள் வெளிவந்த தகவல்களே பெரும்பாலான பிரபஞ்சத் தமிழர்களுக்கு தெரியவில்லையே ஏன்? ஏனெனில் இவர்களிடம் சந்தைப்படுத்த (Marketing) ஆளில்லை. அப்படியே செய்தாலும், தமிழ் உணர்வுள்ள ஈனத்தமிழர்கள் தமிழ்நாட்டில் மிகமிகக் குறைவு.

காங்கிரஸ் துணையோடு, மெட்ராஸ் கபே படம் எடுத்தவனுக்கு, சந்தைப்படுத்துவதற்கு (Marketing) பணபலமும் ஆள்பலமும் அரசியல் செல்வாக்கும், அரசியல் பலமும் நிறைய இருந்ததால், எளிதாக சந்தைப்படுத்தி விட்டான். 
ஏழைசொல் அம்பலம் ஏறாது என்பதைப் போல், தமிழனுக்கு உண்மையாக ஆதரவு தெரிவிக்க முன்வருபவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, போராடியவர்களை முழுக்க முழுக்க குறை சொன்னது தவறு. போராடியவர்கள் என்ன செய்வார்கள் பாவம்? தமிழனை தவறாக சித்தரித்த படம் என்பதால் போராடினார்கள். அவர்களில் அதன்மூலம் தமிழ்நாட்டு அரசியலில் எதிர்காலத்தை தேடிய கட்சிகளும் உண்டு என்ற உண்மையையும் நாம் நடுநிலையோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்."

Sunday, November 17, 2013

குளம்படி சப்தங்கள்

ஆளரவம் எதுவுமில்லை
நள்ளிரவு நிசப்தம்

கேட்டுக்கொண்டே இருக்கின்றன
குளம்படி சப்தங்கள்
காதுகளில்...

எந்தத் திசைநோக்கியும்
செல்லலாம்
அந்தக் குதிரை

கடிவாளமும் அணிந்திருக்கலாம்
காற்றாய் பறக்கும்
அந்தக் குதிரை

கனமழை பொழிவதற்காய்
கூடிய மேகங்களை
கலைத்துவிட்டும் போகலாம்
அந்தக் குதிரை

தூக்கத்திலிருந்து பலரை
தட்டியெழுப்பியிருக்கலாம்
அதன் கணைப்பொலி

நிச்சயமாய் ஒருவன்
அமர்ந்திருப்பான்
அதன்மேல்...

என்ன அவரசம்
அந்தக் குதிரைக்கு?

கேட்டுக்கொண்டே இருக்கின்றன
குளம்படி சப்தங்கள்
காதுகளில்...

Tuesday, November 12, 2013

விஷ்ணு பாப்பாவின் சேட்டைகள்

'அப்பா தாடி, அப்பா டாடி - தாடி அப்பா, டாடி அப்பா' என்றும் பூசாரி அப்பா என்றும் நான் என் அப்பாவின் முகத்தாடையை உருவி செல்லங்கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தேன். எங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த என் மருமகன் விஷ்ணு அவனின் தாத்தாவிடம் நான் செய்வது போல அவனும் அவருடைய முகத்தாடையை உருவி விளையாடினான். 

அவனின் தாத்தாவை (அம்மப்பாவை) தாத்தை என்றும் அவனின் அம்மாச்சியை (அம்மம்மாவை) ஆச்சி, ஏச்சி என்றும் அவனின் அப்பாவை ஆப்பா என்றும் மழலைமொழியில் அவன் அழைக்கும் அழகைக் காண, கோடி கண்கள் வேண்டும்.

என் அம்மா அதாவது அவனின் அம்மாச்சி சொல்லிக்கொடுத்த படியே, என் அம்மா அவனிடம் மாமாவுக்கு உருவி முத்தம் கொடுடீ என்று அவனைப் பணித்தவுடனே என் மூக்கையும் முகத்தாடையையும் உருவி முத்தம் கொடுப்பான்.

ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை சென்றிருந்த போது என் நண்பன் ஒருவன் மூலம் ஈழ இசையமைப்பாளர் ஒருவர் அறிமுகமானார். 

கடந்த வாரம் தீபாவளிக்கு ஊருக்குப் போயிருந்தபோது அந்த அன்பான ஈழ இசையமைப்பாளார் ஈழத்திலிருந்து பேசியபோது என் குடும்பத்தினரை கேட்டார். விஷ்ணு பாப்பாவை நலம் விசாரித்தார். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.Saturday, November 9, 2013

மூன்று பேருக்கு வேலை - ரூபாய். ஒன்பது இலட்சம் வரை கொள்ளை - அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணையம் (டி.ஆர்.பி).

அனைவருக்கும் வணக்கம்,

தமிழ்நாட்டின் ஆசிரியர் தேர்வாணையம் செய்த குளறுபடியால் கடந்த ௨௦௧௨ (2012) நவம்பரில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் பலருக்கு (B.A communicative English போன்ற பல படிப்புகள் தகுதியற்றவை என முடிவெடுத்து ) வேலை கிடைக்காமல் அலைக்கழிக்கப் பட்டனர். 

கடந்த டிசம்பரில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வாணையத்திற்கு (TRB - Teachers Recruitment Board) எதிரான வழக்கில் கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பே வெளியான தீர்ப்பை ஆ. தே. ஆ (TRB) மதிக்காததால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றுபேர் நீதிமன்றத்தில் ஆ.தே . ஆ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர். 

மதுரை நீதிமன்ற நீதிபதிகளின் கைவரிசை 

நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் மூன்று பேருக்கும் ஆ. தே . ஆ பணிநியமன ஆணை வழங்கி மூன்று பேரும் வேலையில் சேர்ந்து விட்டனர். 

ஆனால், கடந்த நவம்பர் ௨௦௧௩ 2013 ல் தேர்ச்சியடைந்தவர்கள் என்று பணிநியமன ஆணையில் உண்மையை மறைத்து தற்போது வேலை வழங்கப் பட்டது போல் ஏற்பாடு செய்திருக்கிறது ஆ.தே .ஆ.

அந்த மூன்று பேரும் சரியாக ஒரு ஆண்டிற்கு முன்பே வேலையில் சேர்ந்திருக்க வேண்டியவர்கள். அப்படி சேர்ந்திருந்தால் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய மாதம் ஏறத்தாழ ரூபாய். இருபத்து ஆறாயிரம் வீதம் 12x 26000 = ௩௨௧௦௦௦ (321000) வரை மூன்று பேருக்கும் சேர்த்து ரூபாய் ஒன்பது இலட்சம் வரை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.

அந்த அன்றாடங்காய்ச்சிகள் மூன்று பேருக்கும் ரூபாய் மூன்று இலட்சம் வீதம் ரூபாய் ஒன்பது இலட்சத்தைத் தராமல் நீதிபதிகளும், ஆ.தே.ஆ ஊழியர்களும் பகிர்ந்து கொண்ட உண்மை அம்பலமாகியுள்ளது. 

வேடிக்கை பார்க்கும் அரசியல் விபச்சாரி ஜெயலலிதா 

காமராஜர் வாழ்ந்த காலத்தில் அரசியல்வாதிகள் தேசத் தலைவர்களாக மதிக்கப்பட்டனர். அதன்பிறகு தற்போதைய ஜெயலலிதா, கருணாநிதி, பிரணாப் முகர்ஜி, தமிழனின் மானத்தைக் கப்பலேற்றிய ப. சிதம்பரம் போன்ற பலரை அரசியல் வியாபாரிகள் என்று எழுதத் தொடங்கினோம். 

உண்மையை சொல்லப்போனால் ஜெயலலிதா, கருணாநிதி, பிரணாப் முகர்ஜி, தமிழனின் மானத்தைக் கப்பலேற்றிய ப. சிதம்பரம் போன்ற பலரையும் அரசியல் விபச்சாரிகள் என்று அழைப்பதே சாலச்சிறந்தது. விபச்சாரிகள் கூட வாங்கிய பணத்திற்கு நேர்மையாக நடந்து கொள்வார்கள்.

அரசியல் விபச்சாரியான கன்னடச்சி ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்கிறேன்.

"நீ கொள்ளையடித்த என்னைப் போன்ற கீழ் நடுத்தர (Lower Middle Class) மற்றும் ஏழை, அன்றாடங்காய்ச்சிகள் கட்டும் வரிப்பணத்தை வைத்து நீ மஞ்சக்குளி, பேருந்து விழா என்ற பெயரில் விவசாயிகளின் (தமிழ்நாட்டில் ஏறத்தாழ விவசாயம் அழிந்து விட்டது. ஒப்பந்தம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து தண்ணீர் தர மறுக்கும் கேரள கர்நாடக அரசுகளைக் கேட்பதற்கு யாருக்கும் திராணி இல்லை.) வாழைமரங்களை வைத்து சுயவிளம்பரம் செய். இலவசத் தண்ணீரை பத்து ரூபாய் நன்னீர் என்ற பெயரில் விற்பனை செய்து கல்லா கட்டு. 

இவர்கள் மூன்று பேர்களுக்கும் தரவேண்டிய ரூபாய். ஒன்பது இலட்சத்தைத் தராமல் ஏன் கொள்ளையடித்தாய்? அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் வழக்கறிஞர்களுக்கு ரூபாய். முப்பதாயிரம் வரை செலவழித்துள்ளனர். 

நீ பதுக்கி வைத்திருக்கும் எங்களின் வரிப்பணம் எங்கே? கோடி கோடியாய் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களிடம் கொள்ளையடி. இவர்களைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளிடம் கொள்ளையடித்து ஏன் அந்த மூன்று பேர்களின் வயிற்றில் அடிக்கிறாய்?

உன்னைப் போன்ற விபச்சாரிகளை விடக் கேவலமான அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஈனத் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருக்கும்வரை உன்னைப் போன்றவர்களின் வியாபாரம் மன்னிக்கவும் விபச்சாரம் சூடுபிடிக்கும்."

கரன்சிக்கு கற்பிழக்கும் வேசிபோல தமிழ்நாட்டு ஊடகங்கள் 

கரன்சிக்கு கற்பிழக்கும் வேசிபோல தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்படுகின்றன. ஏற்கனவே செய்தித்தாள் என்ற பெயரில் வெளிவரும் தாள்களில் செய்திகள் எங்கே என்று தேட வேண்டியுள்ளது? அந்த அளவுக்கு விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் பணம் போதாதென்று ஜெயலலிதாவைப் போன்ற அரசியல் விபச்சாரிகளைப் போன்றவர்களின் படங்களை வெளியிட்டு  கல்லா கட்டும் தமிழ்நாட்டு ஊடக விபச்சாரி மகன்களே, பத்திரிகை தர்மத்தை மீறி பொய்யான செய்தியை வெளியிடுவதும் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களின் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வதும் உங்கள் தொழிலுக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

இந்தத் தமிழ்நாட்டு ஊடக விபச்சாரி மகன்கள் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களின் செய்திகளை, நான் அனுப்பும் உண்மைகளை கண்டுகொள்ள மாட்டார்கள், வெளியிட மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். 

இருந்தாலும் உண்மைகளை எழுத்தின் மூலம் வெளியுலகிற்குத் தெரிவிப்பதும் எழுதுவதும் என் கடமை. என் உரிமை.

மனித உரிமைகள் ஆணையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளேன்.

"எங்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் மூன்று இலட்சம் வீதம் மூவருக்கும் கிடைக்க வேண்டிய ரூபாய் ஒன்பது இலட்சத்தை ஆ. தே. ஆ ஊழியர்களுடன் சேர்ந்து எங்களுக்குத் தீர்ப்பளித்த நீதிபதிகளே கொள்ளையடித்து விட்டனர் அண்ணா. ஏற்கனவே, வழக்கறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய். முப்பதாயிரம் வரை செலவழித்து இந்த வேலையை வாங்கியிருக்கிறோம். இனி அந்த ஒன்பது இலட்சத்தைப் பெறுவதற்கும் கடந்த நவம்பரில் இருந்து வேலையில் சேர்ந்ததாக ஆணை வாங்கவும் வழக்குப் பதிவு செய்ய, வழக்கறிஞர்களுக்கு செலவு செய்ய எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை அண்ணா, கொள்ளையடித்த நீதிபதிகளிடமே மறுபடியும் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். எங்களைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளைப் பொறுத்தவரை மூன்று இலட்சம் என்பது மிகப்பெரிய தொகை. 

இந்த வேலை கிடைத்ததே பெரிய விஷயம் என்று எங்கள் பெற்றோர் ஆறுதல் அடைகின்றனர். ஆனாலும் கிடைக்க வேண்டிய மூன்று இலட்சம் கிடைக்கவில்லையே, எங்கள் பெற்றோர் எங்களைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்தனர். ஆனாலும் கிடைக்க வேண்டிய மூன்று இலட்சம் கிடைக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. யாரிடம் சென்று நீதி கேட்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. முப்பதாயிரம் செலவு செய்த பிறகுதான், ஐம்பது சதவீத நீதியே கிடைத்திருக்கிறது. எல்லாவற்றையும் பணம் தான் தீர்மானிக்கிறது." என்று அந்த மூன்று பேர்களும் என்னிடம் தனித்தனியே அலைபேசி ஊடாக அழுது புலம்பினர். 

"வருத்தப் படாதீர்கள், என்னுடைய எழுத்தின் மூலமாக உங்களைப் பற்றிய செய்திகளை தொடர்ந்து கட்டுரைகளாக எழுதி வந்திருக்கிறேன். தற்போது, நீங்கள் சொன்ன செய்தியையும் கட்டுரையாக எழுதி மனித உரிமைகள் ஆணையம், தலைமைச் செயலகம் என அனைவருக்கும் அனுப்பி வைக்கிறேன். எங்காவது ஒரு மூலையில் நிச்சயம் யாராவது ஒருவர் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார். நிச்சயம் நீதி முழு வெற்றியடையும்." என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னேன்.குறிப்பு:
==========

கன்னடச்சி ஜெயலலிதா போன்ற அரசியல் விபச்சாரிகள் பலருக்கும் எனக்கும் சொத்துத் தகராறோ வாய்க்கால் வரப்புத் தகராறோ எதுவுமில்லை. இங்கு நியாயம் மறுக்கப் படுகிறது. நீதி சிதைக்கப் படுகிறது. அவ்வளவுதான், இந்தக் கட்டுரையை படிக்கும் வாய்ப்பு, கன்னடச்சி ஜெயலலிதாவிற்கோ மற்ற அரசியல் விபச்சாரிகளுக்கோ படிக்கக் கிடைத்தால், என்மேல் கோபப்படுவதற்குப் பதிலாக, கொஞ்சம் தனிமையில் அமர்ந்து சிந்திப்பார்கள், அவர்கள் மனசாட்சி உறுத்த ஆரம்பிக்கும். அங்கு நல்லது நடக்க ஆரம்பிக்கும். இந்த ஒற்றை நம்பிக்கை தான் என் மனதில் உள்ளது.

அரசியல் தான் எல்லாவற்றிற்கும் ஆணிவேர். அரசியலைத் தவிர்த்து விட்டு மக்கள்நலனைப் பற்றி சிந்திப்பது முட்டாள்தனம். அரசியலை சீர்படுத்தி விட்டால் மற்ற அனைத்தும் நேராகி விடும்.


-----------------------------------------------------------

இது குறித்து சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. அதில் public service என்பது தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசு சார்ந்த நிறுவனங்களையும் குறிக்கும். TRB என தனியே அரசாணையில் குறிப்பிடப்படத் தேவையில்லை. எனவே ஆசிரியர்தேர்வாணையம் (TRB - Teachers Recruitment Board) தமிழக அரசின் ஆணையை மதித்து இந்த தீர்ப்பு வெளியான இரண்டு வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பிரதி எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.
ஆக அரசாணையையும் அவமதித்து நீதிமன்ற தீர்ப்பையும் அவமதித்துக் கொண்டிருக்கிறது ஆசிரியர் தேர்வாணையம். இது குறித்து எந்த நாளிதழும் வார இதழும் எந்த செய்தியையும் வெளியிடவில்லை. அந்தப் பொறுப்பை நான் ஏற்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இந்த இழையில் நடந்தவற்றை வெளி உலகிற்கு தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
வரும்  ஆகஸ்டு மாதம் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அரசாணையை வெளியிட்டு விட்டு அதனை மதிக்காத ஆசிரியர் தேர்வாணையம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தலைமைச் செயலகம் மீதும் தமிழ்நாடு அரசு மீதும் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு வெளியான பிறகும் அதனை மதித்து பணி நியமன வழங்க உரிய நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்தும் TRB மீதும் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். TRB மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் முழுமுதல் காரணமாக பாதிக்கப்பட்ட கல்லூரி முதல்வர்களும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் தான். அவர்களைத்தான் முதலில் அனைவரும் சேர்ந்து செருப்பால் அடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கல்லூரி முதல்வர்களும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தமிழ்நாடு அரசிடம் தொடர்பு கொண்டு அரசாணையை வெளியிட்ட பிறகு அந்த அரசாணை நடைமுறைப் படுத்தப் பட்டதா என்று பார்க்கவில்லை. மாதச் சம்பளம் கிடைத்தால் போதும் என்று கடனுக்கு வேலை பார்க்கும் இவர்களும் தண்டனைக்குரியவர்களே.
இவர்கள் அனைவரும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள். எங்கெல்லாம் நீதி ஒடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வன்முறை வெடிக்க ஆரம்பிக்கும். 
நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. நம் எதிரி தான் தீர்மானிக்கிறான்.
தாமதப்படுத்தப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதியும் அநீதிக்குச் சமமானது. சில மாதங்களுக்கு முன் ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் சார்பில் போராட்டம் வெடித்தது. மீண்டும் ஒரு முறை இன்னும் சில மாதங்களுக்குள் இன்னும் ஒரு போராட்டமோ வன்முறையோ வெடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயகத்திற்கும் இந்த மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளை உண்மையை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியுள்ளது. TRB நீதிமன்ற தீர்ப்பை மதித்தாலே போதும். பாதிக்கப்பட்டவர்களுக்காக யாரும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கத் தேவையில்லை.
ஆறு மாதங்களுக்கு முன் கடந்த டிசம்பர் மாதம் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரனை சந்தித்தேன். அப்போது அவர் சொன்ன செய்தி இதுதான்.
'அண்ணா, தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் பணிநியமன ஆணை வழங்கப்படாததிற்கான காரணத்தை தெரிந்து கொள்ள கல்லூரி முதல்வரையும் பல்கலைக் கழக துணைவேந்தரையும் அணுகினோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். அதன்பிறகு அவர்கள் யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்களில் சிலர் 
ஒன்று சேர்ந்து சென்னைக்கு சென்றோம். TRB அலுவலகம் சென்று கேட்டோம். அங்குள்ள ஊழியர்கள் எங்களின் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு எங்களை விரட்டியடித்தனர். பொதுவாக ஒவ்வொரு அலுவலகத்திலும் சந்தேகம் தீர்க்கும் பிரிவு (enquiry section) இருக்கும். ஆனால் TRB ஊழியர்கள் எங்களை விரட்டியடித்தனர். அரசாணையை கையில் வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து கேள்வி கேட்க அனுமதிக்க வில்லை. மீறி அங்கேயே நின்ற போது இங்கே நிற்கக் கூடாது. முடிந்தால் நீதிமன்றம் சென்று வழக்குத் தொடருங்கள். என்று கூறி விரட்டியடித்தனர். நீதிமன்றம், வழக்கு என்று போவதற்கு நிறைய செலவாகும். அவ்வளவு பணத்திற்கு நாங்கள் எங்கே அண்ணா போவோம்?' என்றார்.
நான் பதிலளித்தேன் 'கவலைப்படாதீர்கள் இதற்கெல்லாம் அதிக செலவாகாது உங்கள் பக்கம் நீதி உள்ளது தொடர்ந்து போராடுங்கள் இது குறித்து நான் மின்னஞ்சல் ஊடாக செய்தியாக என்னால் முடிந்தவரை நாளிதழ்களுக்கும் ஊடகங்களுக்கும் தலைமைச் செயலகத்திற்கும் அனுப்பி வைக்கிறேன். நம்பிக்கையோடு போராடுங்கள்.' 

இதன் அடிப்படையில் இது தொடர்பாக தொடர்ந்து அவ்வப்போது மின்னஞ்சல்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். மனித நேயமுள்ள ஊடக நிருபர்கள் இது குறித்து செய்தி வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமில்லாத நீதி வழங்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் என்னுடைய விருப்பம்.
சீமான் அண்ணா, அன்பு எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், மதிப்பிற்குரிய திரு. இறையன்பு ஆகிய மூவருக்கும் என் அன்பான வேண்டுகோள். ஏனெனில் நீங்கள் மூவரும் ஊடகங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் மக்களோடு மக்களிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்கள்.


சீமான் அண்ணாவுக்கு, வணக்கம். ஒரு வருடத்திற்கு முன்பு என்னுடைய ஒரு பதிவில் இந்தியா என் பக்கத்து நாடு என்று நான் சொல்லியிருந்தேன். அதனை நீ படித்து விட்டு சில மாதங்களுக்குப் பிறகு போராளிகளைப் பற்றிய ஒரு தமிழ்த் திரைப்பட விழாவில் நீ பேசும் போது இந்தியா என் பக்கத்து நாடு என்று ஒரு அன்புத் தம்பி சொன்னார் என என் பெயரைச் சொல்லாமல் நான் சொன்ன வார்த்தையை நீ சொன்னது குறித்து நான் முகநூலில் காணொளியில்  (video) எட்டு மாதத்திற்கு முன் பார்த்தேன். அதே போல் TRB குறித்து என்னுடைய இந்த செய்தியையும் உனக்கான நேர்காணலில் நீ சொல்ல வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஈழத்தமிழர் பற்றியே போராடாமல் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் நீ பேச வேண்டும். போராட வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டுத் தமிழர்களே பலர் அன்றாட வாழ்க்கைக்கு போராடிக் கொண்டிருக்கும் இழிநிலையில் நீ ஈழத் தமிழர்களுக்காக மட்டும் போராடுவது நியாமல்ல. தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நலமோடு வேதனையில்லாமல் வாழ்ந்தால் தான் ஈழத்தமிழர்களுக்காக ஒன்றுகூடி போராட முடியும்.
ஒரு காலத்தில் காமராஜர் மக்களுக்காக வாழ்ந்தார். அவரை இந்த நன்றி கெட்ட மக்கள் தோற்கடித்தனர். மக்கள் மறந்து விட்டனர். ஆனால் காலம் அவரை தத்தெடுத்து நினைவில் வைத்து அடுத்த தலைமுறைப் பிள்ளைகளான நமக்கு நினைவூட்டியிருக்கிறது. அதே போல் தமிழர்களின் நலனுக்காக போராடும் உன்னைப் போன்றவர்களை மக்கள் கண்டுகொள்ளா விட்டாலும் காலம் நினைவில் வைத்துக் கொள்ளும். என்னைப் போன்றவர்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள்.

அன்பு எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு, வணக்கம். எல்லா தொலைக்காட்சி நிலைய நேரடி நேர்காணல் நிகழ்விலும் தாங்கள் கலந்து கொள்கிறீர்கள் மக்களின் அவல நிலை பற்றி, ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து (இது ஒரு தனிப்பட்ட இனத்திற்கான கொடுமைகள் அல்ல, ஒட்டுமொத்த மனித உரிமைக்கு எதிரான வன்முறை, படுகொலை என ) தங்களின் சிந்தனையை மக்களின் பார்வைக்கு முன் வைக்கிறீர்கள். தங்களின் நேர்காணலை பார்த்து கேட்டு பலரும் விழிப்புணர்வு பெறுகிறார்கள். அதே போல் TRB யால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருப்பதைக் குறித்தும் நீங்கள் பேச வேண்டும் அதனை கேட்கும் மக்கள் இது குறித்து விழிப்புணர்வு அடைவார்கள் என்பது என்னுடைய விருப்பம். என்னுடைய வேண்டுகோள்.


மதிப்பிற்குரிய திரு. இறையன்பு அவர்களுக்கு, வணக்கம். மாணவர்களின் கல்வி குறித்தும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் அவர்களின் தேர்வுமுறை பாடத்திட்டம் குறித்தும் IAS தேர்வு குறித்தும் அக்கறைப் படும் தாங்கள் இது குறித்தும் பேச வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.


முகநூல் குழுமங்கள் சிலவற்றில் அரசியலைப் பற்றிய பதிவுகள் நீக்கப்படும் என அறிவுறுத்தப் பட்டுள்ளன. படித்தவர்களின் இப்படிப்பட்ட அறியாமை குறித்து எனக்கு மனதிற்கு வேதனையாக உள்ளது.
'மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி மக்களாட்சி, ஜனநாயக ஆட்சி. எனவே அரசியல் பேசுங்கள். நமக்காக நம்மில் ஒருவரால் நடைபெறும் ஆட்சியைப் பற்றி நாம் பேசினால் எழுதினால் சிந்தித்தால் தான் நாம் நலமுடன் எந்தக் குறைகளும் இல்லாமல் வாழ முடியும் ' என மறைந்த ஐயா எம். எஸ். உதயமூர்த்தி அவர்களும் மக்கள் சக்தி இயக்க நண்பர்களும் அடிக்கடி சொல்வார்கள். எழுதுவார்கள்.
எத்தனையோ சுயநலவாதிகள், கொள்ளையர்கள் அரசியலில் வியாபாரிகளாக வலம்வரும்போது ஐயா அவர்களின் வார்த்தைகளுக்கேற்ப அரசியலைக் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறேன் எழுதிக் கொண்டிருக்கிறேன். சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இது தெரியாமல் 'அரசியல் பேசாதீர்கள்' என்று சொல்லும் மூடர்களை  நினைத்து நான் எந்த சுவற்றில் முட்டிக் கொள்ள?

முதலமைச்சரின் கவனத்திற்கு:
நாங்கள் வாக்களித்து உங்களை முதலமைச்சராக்கினோம். உங்கள் ஆட்சியில் ஒரு அரசு அலுவலகத்தில் அராசகமும் முறைகேடுகளும் நடைபெறுகின்றன. உரிய நடவடிக்கை எடுங்கள். ---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் <munaivendri.naa.sureshkumar@gmail.com>
Date: 2013/5/10

சில மாதங்களுக்கு முன் இந்தப் பதிவை இட்டவுடன் ஒரு சில குழும நண்பர்கள் இது குறித்து அக்கறையோடு கேட்டார்கள். ஒருவர் நீதிமன்ற தீர்ப்பின் பிரதியை அனுப்பி வைக்கக் கேட்டார்.

அதன்படி இந்த மின்னஞ்சலோடு மதுரை நீதிமன்ற தீர்ப்பின் பிரதியை இணைத்திருக்கிறேன்.

எண் 5 மற்றும் 6 வது பத்தியில் சொல்லப்பட்டுள்ளதை வாசித்துப் பாருங்கள்.

அரசாணையில் ஆசிரியர் தேர்வாணையத்திற்கும் இது பொருந்தும் என்று குறிப்பிடப் படவில்லை என்ற டி. ஆர். பி யின் (puplic services என்ற வார்த்தை டி.ஆர்.பி யை குறிக்காது) பதிலை/வாதத்தை வைத்து மதுரை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

"puplic services என்ற வார்த்தைக்குள் டி.ஆர்.பி யும் அடங்கும் என்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தீர்ப்பு வெளியாகிய இரண்டு வாரங்களுக்குள் பணிநியமன ஆணை வழங்கப் படவேண்டும்" என டி.ஆர். பி க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆக மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பிலும் டி.ஆர். பி க்கு சாதகமாகத் தான் தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆனால் டி.ஆர்.பி இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையோ பதிலோ தராததால் பாதிக்கப்படவர்கள் சார்பில் டி.ஆர். பி யின் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

"puplic services என்றாலே அது ஆசிரியர் தேர்வாணையத்தையும் குறிக்கும் என்பது நாம் அறிந்ததே. ஏனெனில் டி.ஆர்.பி யும் தமிழ்நாட்டில் தான் உள்ளது. இதுவும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்குகிறது" என்பது பாதிப்பட்டவர்களின் வாதம்.

இது மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பு தான். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் பணிநியமன ஆணை வழங்கியே ஆக வேண்டும் என்று தீர்ப்பளித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருந்தார்கள். (சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரதி எனக்கு இதுவரை கிடைக்கவில்லை).

puplic services என்றால் அதற்குள் டி.ஆர்.பி வராது என்று வாதம் செய்து முரண்டு பிடித்த டி. ஆர். பி யின் இந்த முடிவைப் பார்க்கும் போது டி.ஆர். பி ஏதோ தவறு செய்துவிட்டு அதை மறைப்பதற்காக இப்படி சப்பைக்கட்டு கட்டுவதாக யூகங்கள் கிளம்புகின்றன. டி. ஆர். பி க்கு ஏன் பாதிக்கப்பட்டவர்கள் மேல் இவ்வளவு கொலைவெறி என்று தெரியவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் எந்தப் பாவமும் அறியாதவர்கள். அன்றாடம் உழைக்கும் பணத்தையெல்லாம் தன் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும் என்று பணத்தை தண்ணீரைப் போல் செலவழித்துப் படிக்க வைக்கும் பெற்றோர், தூக்கம் பசி மறந்து படித்து தேர்ச்சியடைந்தும் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு மூலையில் முடங்கிக் கிடக்கும் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்கள் ஒரு பக்கம்.

தமிழ்நாட்டிலேயே வாழும் தமிழனுக்கே வாழ்வதற்கும் அன்றாட தேவைகளுக்காகவும் இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது.

ஆக மொத்தத்தில் அரசாணையே தவறு என்கிறது டி.ஆர்.பி. அரசாணையை வெளியிட்ட தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப் பட வேண்டும். இல்லையென்றால் கடந்த டிசம்பர் மாதம் சென்னை நந்தனத்தில் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சரின் நிகழ்வு பொதுசொத்தில் (மக்களின் வரிப்பணத்தில்) தற்புகழ்ச்சி செய்து கொண்டதாகவும்  சுய விளம்பரம் செய்து கொண்டதாகவும் முதலமைச்சரின் மீது பழி வந்து சேரும். மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதலமைச்சர் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகின. இதையெல்லாம் முதல்வர் மனதில் வைத்து நியாயமான முறையில் தமிழ்நாடு அரசு பாதிப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

முதலமைச்சரின் பார்வைக்கும் இது அனுப்பப்பட்டுள்ளது.

---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் <munaivendri.naa.sureshkumar@gmail.com>
Date: 2013/2/25
Subject: உயர்நீதிமன்ற தீர்ப்பு - அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணைய் (டி.ஆர்.பி).
To:


ஆசிரியர் தேர்வு ஆணையம் செய்த முட்டாள்த்தனமான செயலை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். கடந்த வாரம் தீர்ப்பு வெளியானது.

"இன்னும் இரண்டு வாரம் முதல் ஒரு மாத காலத்திற்குள் அரசாணையை மதித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட வேண்டும்" என நீதிபதி தீர்ப்பளித்ததாக கடந்த வாரமே எனக்கு செய்தி கிடைத்தது.

ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிடும் என எதிர்பார்த்தேன். குறிப்பாக தினமலர் கல்விமலர், புதிய தலைமுறை போன்ற ஊடகங்களை அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் ஊடகங்கள் அனைத்துமே இது தொடர்பான செய்தியை இருட்டடிப்பு செய்தது மனதில் வேதனையை உண்டாக்கியது.

தற்போது இந்த செய்தியை இந்த இழை மூலமாக வெளி உலகிற்கு தெரிவிக்கிறேன்.

நன்றி.

அனைவருக்கும் வணக்கம்,

ஆசிரியர் தகுதித் துணைத்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 2012 ல் நடைபெற்றது. தேர்ச்சியடைந்த மாணவ மாணவியருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த நவம்பர் 10 2012 க்குள் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 'இளங்கலை ஆங்கில இலக்கியமும் இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலமும் சமம்' (B. A. Communicative English is equivalent to B. A. English) என்று தமிழக அரசு சார்பில் அரசாணை கடந்த நவம்பர் 27 ல் வெளியாகியுள்ளது. (Refer my attachment).

ஆனால், இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலம் படித்து தகுதித் துனைத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளின் பெயர்கள், கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிட்ட இறுதிப் பட்டியலில் இல்லை. என்ன காரணம் என்றும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் (அதிகபட்சமாக 100 பேர்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால்,
அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணைய்தை இதுவரை தமிழக அரசு என்னவென்று கேட்டதில்லை. அரசாணைக்கு மதிப்பில்லை.

இது தொடர்பாக செய்திகளை  ஊடகங்கள் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துள்ளன.  தமிழக முதலமைச்சர் இந்தப் பதிவை படிக்க நேர்ந்தால் நிச்சயம் மனம் வருந்துவார் என நம்புகிறேன். உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

 பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் உங்கள் அனைவரையும், உங்கள் உதவியையும் பெரிதும் எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் காத்திருக்கின்றனர்.

மனித நேயம் உள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். இதுபோன்ற பதிவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் பெருந்தன்மையான மனம் வேண்டும். அந்த நல்மனம் எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

கீழ்க்கண்ட நியாயங்களை பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நான் முன்வைக்கிறேன்.

1. 'அரசாணை இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை' என பொறுப்பில்லாமல் காட்டுமிராண்டித் தனமாக பதிலளித்து அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணைய்தின்மீதும் அங்குள்ள ஊழியர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் வெளிப்படையான நிர்வாகம் இல்லை. வெளிப்படையான இறுதிப் பட்டியல் வெளியீடு இல்லை. திரைமறைவில் ஏதோ தில்லுமுல்லு நடப்பதாகத் தெரிகிறது.

3. ஆசிரியர் தகுதித் துணைத்தேர்வின் வினாத்தாளின் இரண்டாம் பக்கத்தில் 'சமமான பட்டப்படிப்பு' என அவர்களே சொல்லியிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்களின் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

4. அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் இறுதிப் பட்டியலில் பெயர் வெளியிடாமல் இழுத்தடிக்கும்  ஆசிரியர் தேர்வு ஆணையம், பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்களின் எதிர்காலத்தை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கான சரியான தெளிவான விளக்கமும்ஆசிரியர் தேர்வு ஆணைய ஊழியர்களிடம் இல்லை.


நானும் ஒரு பத்திரிகையாளனாக இருந்திருக்கிறேன், நானும் ஒரு கவிஞன், எழுத்தாளன் என்ற முறையில் எழுத்தின் பலமும் எழுதுகோலின் பலமும் எனக்கு என்னவென்று நன்றாகவே தெரியும்.

இலக்கிய இதழ் ஆசிரியர்களே, ஒரு வேண்டுகோள். தாங்கள் சிற்றிதழ்களாக இருந்தாலும் சரி. இலக்கியம் = இலக்கு + இயம். ஒரு இலக்கை எடுத்து இயம்புதல்.
சமுதாய மாற்றம் என்ற ஒரு இலக்கை எடுத்து இயம்புங்கள் ஊடக அன்பர்களே.


தமிழர்களின் தாய்நாடான தமிழ்நாட்டிலேயே நியாயமான உரிமைகளைப் பெற ஆள்பலமும் இல்லாமல் பணபலமும் இல்லாமல் அதிகார பலமும் இல்லாமல் தன்னந்தனியே போராட வேண்டியிருக்கிறது. வேதனையோடு வாழ வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டை ஒரு தமிழனோ தமிழச்சியோ ஆண்டிருந்தால் தமிழர்களின் வலி வேதனை புரிந்திருக்கும். தற்போது அப்படி இல்லை. காசுக்காக நக்கிப் பிழைக்கின்ற கூட்டம்தான் அதிகம்.

மனித நேயம் உள்ளவர்கள், இந்தப் பதிவைக் குறித்து பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை நேர்காணல் செய்ய விரும்புகிறவர்கள், என்னைத் தொடர்பு கொள்ளலாம்.