Sunday, March 23, 2014

வைகை ஆற்றுப்பாலத்தில் விஷ்ணு பாப்பா (மொ.மு - மொட்டையடிப்பதற்கு முன், மொ.பி - மொட்டையடித்ததற்கு பின்)இன்று என் தங்கச்சி பாப்பாவுக்கு பிறந்தநாள்

இன்று என் தங்கச்சி பாப்பா சோபனாவுக்கு பிறந்தநாள்.

இன்று என் தங்கச்சி பாப்பா சோபனாவின் பிறந்தாநாளை  கொண்டாடும் விதமாக ஈரநெஞ்சம் தொண்டு நிறுவனத்திற்கு என்னால்  தொகையை அனுப்பியிருக்கிறேன்.

Saturday, March 22, 2014

ஆஸ்திரேலியா வானொலியில் தோழர் செங்கொடி பற்றி வித்யாசாகர் அண்ணா சொன்ன கவிதை

பிரபஞ்சவாழ் தமிழர் தமிழச்சிகளுக்கு,

அன்பு வணக்கம். சில நாட்களுக்கு முன்பு நான் அனுப்பிவைத்த தோழர் செங்கொடி பற்றி வித்யாசாகர் அண்ணா சொன்ன கவிதை இன்று ஞாயிறு ஆஸ்திரேலியா நேரப்படி முற்பகல் பதினொரு மணிக்கு ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலியில் ஒலிபரப்பாகவிருக்கிறது.

இதன்மூலம் பிரபஞ்சவாழ் தமிழர் தமிழச்சிகள் அனைவரும் தோழர் செங்கொடியைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்ற வித்யாசாகர் அண்ணாவின் எண்ணமும் என்னுடைய விருப்பமும் எண்ணமும் நிறைவேறவிருக்கிறது.

அனுப்பி வைத்த எனக்கு ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலி ஊடாக நன்றி சொன்ன நிகழ்ச்சி அறிவிப்பாளர் திரு. அப்துல் ஜாபர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.


---------- Forwarded message ----------
From: Abdul Jabbar
Date: 2014-03-22 23:15 GMT+05:30
Subject: உங்களது செங்கொடிக்கான அஞ்சலி.
To: munaivendri.naa.sureshkumar@gmail.com


வணக்கம்,

மேற்சொன்ன விஷயம் நாளை ஞாயிறு ஆஸ்த்ரேலிய நேரப்படி
முற்பகல் பதொனொரு மணிக்கு ஆஸ்த்ரேலியா தமிழ் ஒலிபரப்பு
கூட்டுத்தாபன வானொலியில் ஒலிபரப்பாகவிருக்கிறது.

அன்புடன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

--
Sathankulam Abdul Jabbar,

செங்கொடி அரங்கத்தில் வளைகுடா வானம்பாடி கவிஞர்சங்கக் கூட்டம்.. (வித்யாசாகர்) காணொளி..

அப்படிப்பட்ட பெண்ணை தீயில் தள்ளியது யாரென்று யோசிக்கையில்தான் கனத்தப் பார்வையொன்று நம் மீதும் நம் தேசத்து அரசியல் மீதும் அசிங்கமாகப் படுகிறது...

---------- Forwarded message ----------
From: வித்யாசாகர்
Date: 2014-03-16 18:52 GMT+05:30
Subject: {பகலவன் குழுமம்} - செங்கொடி அரங்கத்தில் வளைகுடா வானம்பாடி கவிஞர்சங்கக் கூட்டம்.. (வித்யாசாகர்) காணொளி..
To: "editor@vidhyasaagar.com"


14.03.2014 அன்று, குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம் நடத்திய மாதாந்திரக் கூட்டநிகழ்வில், மூவர் விடுதலைப்போராட்டம் வெல்லும் தீர்ப்படைந்ததை எண்ணத்திலேற்று "தமிழர் பெருமை" எனும் தொடர் மாதந்திரத் தலைப்பில் இம்முறை 'தியாகி செங்கொடி'யைப் பற்றிப் பேசப்பட்டது. கீழுள்ளவாறு பதிவிடப்பட்டது.
தலைப்பு - தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி...

யூடியூப் இணைப்பு - http://youtu.be/uCB6HJni8B8
தீயள்ளித் தின்னவ
நீதிக்குத் தன்னுயிரைத் தந்தவ
யாருக்கோ செத்தவ
எனக்காகவும் அழுதவள் என் தாயம்மா
செங்கொடிக்கு வணக்கம்!

எனைச் செந்தீயில் எரித்தாலும்
தீயள்ளி என்மீது தெளித்தாலும்
தமிழாகவே எரிந்து
தமிழாகவே கரிந்து
தமிழாகவே மண்ணிலூறி
தமிழாகவே மணத்து
தமிழாக மட்டுமே எனைத் தலைநிமிரச் செய்த என் தாய்மொழிக்கு வணக்கம்!

எந் தமிழுக்கும் செவிசாய்த்து, என் தமிழர்ப்பெருமையைக் கேட்கஇசைந்த இம்மாமன்றத்திற்கும்
பெரியோர் இளையோருக்கும் எனது சிரந்தாழ்ந்த வணக்கம்!!

ஒரு குழந்தையைப் பெற்றவர்களுக்கு ஒரு கனவிருக்கும், ஒரு குழந்தையோடு வளரும் சகோதர சகோதரிகளுக்கும், அந்தக் குழந்தைப்பற்றியாதொரு கனவிருக்கும்,

கொட்ட கொட்ட கண்விழித்து ஏக்கத்தோடு நமைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமது சமுதாயத்திற்கும் நமைப் பற்றியோர் கனவிருக்கும்..

வளர வளர, வயசு தீர வயசு வர, வாழ்க்கைப் பற்றி; வளரும் குழந்தைக்கும் ஒரு கனவிருக்கும்.

அப்படி எல்லாக் கனவுகளையும் தீயிலிட்டு, நெருப்போடு தன் உடலையேந்திப் போராடியச் செங்கொடிக்கு மூன்று உயிருக்கான நீதி மட்டுமே கனவாக இருந்ததெனில்; அந்த உத்தமியின் பெருமயைப் பேச எனக்குக் கிடைத்த இந்த மாமன்றத்தைப் பெரிதாக மதிக்கிறேன்.. நன்றியோடு நினைக்கிறேன்..

ஒரு சின்னப்பொண்ணு அவ;
சமூக அக்கறையும் குடும்பப் பாசமும் துள்ளலும் விளையாட்டும் நிறைந்த திறமையான பெண்ணவள்..

நாள்தோறும் பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு போய் அங்குள்ளப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது அப்பொழுதிலிருந்தே அவளுக்கு வழக்கமா இருந்திருக்கு..

ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டுறியே… பேசாம தபால்ல பட்டப்படிப்புக்கு படி’னு சொல்லியிருக்காரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதிலென்ன தெரியுமா? நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’ என்றிருக்கிறாள்..

இசையில் அந்தப்பொண்ணுக்கு அத்தனை ஆர்வம் அதிகமாம். பறையை எடுத்து அடிக்க ஆரம்பிச்சாள்னா, இன்றைக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாமாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்குமாம். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பாளாம்.

தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ எந்தச் சூழ்நிலைலயும் அவள் ஆதரிக்கவே கூடாதுன்றதுல உறுதியா இருந்திருக்கா. அப்படிப்பட்ட பெண்ணை தீயில் தள்ளியது யாரென்று யோசிக்கையில்தான் கனத்தப் பார்வையொன்று நம் மீதும் நம் தேசத்து அரசியல் மீதும் அசிங்கமாகப் படுகிறது...

தன்னோட பதினோரு வயதில்.. தவறாத நியாயம் வேணும்னு தன்னோட தந்தையையே சிறைக் கூண்டுல ஏத்தி இருக்கிறாள்..

ஒரு கூலி வேலை செய்யுற அப்பா, சின்ன வயசுலையே அம்மா இறந்துப்போறாங்க, ஒரு கட்டத்துல அப்பா இரண்டாவது திருமணம் செய்து வறாரு. வாழக் கிடைக்காத தாயன்பை அந்த அம்மா தறா, அதையும் பொறுக்காத அப்பா குடிச்சிட்டு வந்து சண்டைப் போடுறாரு, குழந்தைகளைப் போட்டு அடிக்கிறாரு. தட்டிக்கேட்ட சிற்றன்னையையும் அடித்து சண்டைக்கு இழுக்க ஒரு கட்டத்துல சண்டை முத்திப்போயி கோபத்துல மண்ணெண்ணெயை ஊற்றி அந்த இரண்டாம் தாயை எரித்தே விடுகிறான் அந்தப் படுபாவி..

எப்படியேனும் அந்த இரண்டாம் தாயை காப்பாற்றப் போராடும் செங்கொடியும் அவளுடைய தங்கச்சும் தீப்புண்ணிற்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள், அப்போது அவளுக்கு பதினோரு வயது. நேரே காவல்நிலையம் சென்று நடந்ததைக் கூறி தனது தந்தையை சிறையிலிட்டு தண்டனை வாங்கித் தருகிறாள் செங்கொடி.

கடைசியில் யாருமற்ற நிலையில் அவளுடைய சிற்றப்பா எடுத்தவளை வளர்க்கிறார். சமுதாயப் பார்வைகள் விரிகிறது செங்கொடிக்கு. மக்கள் மன்றத்துல சேர்ந்து பல தொண்டாற்றி வரும்போதுதான் ஈழத்துப் பிரச்சனைகள் அவளுடையக் கண்ணில்படவருது. முத்துக்குமார் தீக்குளிக்கிறார்.

அந்த சம்பவம் அவளுடைய மனதில் மிக ஆழமாகப் படுகிறது. எல்லா நேரத்திலும் ஆசானாக இருக்கும் தனது சிற்றப்பாவை நோக்கிக் கேட்கிறாள்; “ஏம்பா, ஏதோ ஒரு கட்டத்துல எல்லோரும் பொங்கியெழுறோம், போராடுறோம், நீதி நியாயம்னு கத்துறோம், பிறகு நாளாக ஆக அது மறந்து அந்தப் பிரச்சனைகளை அப்படியே விட்டுட்டுக் கடந்துப் போயிடுறோமே, பிறகு நமது பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு தான் என்னப்பா? என்கிறாள். அதற்கு யாராலும் பதில்சொல்ல முடியவில்லை.

அந்தச் சமயம் பார்த்துத் தான் இந்த மூவர் விடுதலைக் கோரியப் போராட்டம் எழுகிறது. தானும் கலந்துக் கொண்டு பெரும் ஆற்றலோடு களமாடுகிறாள். ஒரு கட்டத்தில் அரசியலின் அவலநிலைவெடிக்கும் ஆட்டம் துவங்க நீதி வேறாகவும் உண்மை வேறாகவும் திரிந்துவருகிறது. பொங்கி எழுகிறாள் செங்கொடி.

இதை இப்படியே விடக்கூடாது, நீதி வேண்டும். நியாயம் வெல்லனும், எனது அண்ணன்கள் அநீதியால் சாகக் கூடாது என்று முடிவெடுக்கிறாள். எத்தனையோ போராட்டம், எங்கெங்கோ கெஞ்சல், அழை என எல்லாவற்றிலும் கலந்துக்கொள்கிறாள். கடைசியில் எல்லாம் தோற்றுப் போக அவளுக்குக் கடைசியாக மிஞ்சியது; தனது உயிரும் உடலும் மட்டுமே...

அதை கயிலேந்துகிறாள். மண்ணெண்ணெய் ஊற்றினால் அணைத்துவிடுவார்கள் என்று பெட்ரோல் வாங்கி உடலின்மேல் ஊற்றிக் கொண்டு நியாயம் வேண்டும்.. நீதி வேண்டும்.. எனது அண்ணன்கள் மூவரைக் காப்பாற்று.. காப்பாற்று.. என்றுக் கத்தி கூச்சலிட்டவாறே முனகி முனகி தீயில் வெந்துக் கருகிச் சரிகிறாள்...

இங்கே தற்கொலை சரியான தீர்ப்பென்பது வாதமில்லை. அவளை அந்நிலைக்குத் தள்ளியது யார்? அவளைக் கொன்றது யார்? சமூக அக்கறைக் கொண்ட அழுத்தமானப் பெண்ணொருத்தியை அப்படி கருகி சாம்பலாக்கியது யார்? நம் திராணி போதாத அரசியல் செயல்களும் அதைத் தட்டிக்கேட்காமல் மறைமுகமாக ஊக்குவித்த நாமுமில்லையா?

அதை நாம் சரிசெய்யவேண்டும். அரசியல் நேர்மை, நடத்தையில் கண்ணியம், செயலில் பொதுதர்மம், பேச்சில் உண்மை என்று வாழ்ந்தவர்கள் நாம்; தமிழர்கள். அந்தத் தமிழரின் பெருமை காலத்திற்கும் நன்னிலத்தில் நிலைத்தல் வேண்டும். அங்ஙனம் தமிழரின் பெருமையில் ஒன்றான நீதிக்குவேண்டி உயிர்தந்த தமிழச்சி என் செங்கொடியின் தியகாத்தையும் எனது தமிழர் பெருமையில் ஒன்றெனக் கருதி.. இந்த அஞ்சலிக் கவிதையோடு விடைகொள்கிறேன்..

பசிநெருப்புக் கொள்ளுதேன்னு
பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவ
பட்டுத்துணிப் பாவமுன்னு
கறுப்புச் சட்டையைப் போட்டவ..

கல்லுமுள்ளு மிதித்து
காலத்துள் காலடியைப் பதிந்தவ
ஐய்யய்யோ வலிக்குதேன்னு –
அதர்மத்தை எதிர்த்து உயிராலச் சுட்டவ..

சுடும்தீன்னுத் தெரிந்தும்
துணிந்து உடலாலத் தொட்டவ
தூக்குக் கயிறு முடிச்சவிழ்க்க
மொத்தத் தீயிலேறி நின்னவ..

மூவுயிரைக் காக்க
தன்னுயிரைத் தந்தவ
என் தமிழச்சி வீரத்தைக் காட்ட
உயிரேந்திப் போனவ..

மரணதண்டனை தீர்ப்பொழிக்க
தன் தலையெழுத்தைக் கலைத்தவ
இனி அழியாப் புகழுக்குள்; நினைவுக்குள்
எம் தாயாக நிலைப்பவள் –

தங்கச்சி செங்கொடிக்கு வணக்கம் கூறி நன்றியோடு விடைகொள்கிறேன்..
குறிப்பு: செங்கொடி பற்றிய அரியத் தகவல்களை நேரடியாக ஆராய்ந்துப் பதிந்துள்ள வினவு வலைதளத்திற்கும் நன்றி..

Monday, March 17, 2014

தோழர் செங்கொடி பற்றி நான் எழுதிய பாடல் தமிழர் எழுச்சி மாத இதழில்...

கடந்த வாரம் வீட்டிற்கு சென்றிருந்தபோது தமிழர் எழுச்சி மாத இதழில் தோழர் செங்கொடி பற்றி நான் எழுதிய பாடல் பின் அட்டையின் உட்பக்கத்தில் வெளிவந்திருந்தது.

என் தங்கச்சி சோபனா என்னிடம் செங்கொடி பற்றி சுருக்கமாகக் கேட்டாள்.

'என்போன்ற தமிழின விடுதலையை விரும்புகிறவர்களுக்கு அன்புத்தங்கையானவள் தோழர் செங்கொடி. இவளுக்கு கிடைக்கவேண்டிய பேரும் புகழும் (credit) ஜெயலலிதாவிற்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் செங்கொடியை மறந்துவிட்டார்களோ என்ற அச்சம் எழுகிறது. ' என்று சொன்னேன்.


Friday, March 7, 2014

கத்தாரிலிருந்து என் பதிவுகளுக்கான ஒரு வரவேற்பு... (அலைபேசி ஊடாக)

இன்று காலை தமிழ்நாட்டு நேரப்படி மணி பதினொன்று இருக்கலாம், (வளைகுடா நாடுகள்) கத்தாரிலிருந்து என் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 'பேசுவது சுரேஷ்குமார் தானே... தங்களின் பதிவுகளை, கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். குறிப்பாக தமிழர்களின் விடுதலை குறித்தான பதிவுகள், கட்டுரைகள் அருமையாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.' என மனதார வாழ்த்தினார்.

Tuesday, March 4, 2014

ஆழ்ந்த இரங்கல் (பாகம் - இரண்டு)

இந்தப் பதிவை முதல் பாகத்துடனேயே முடித்துவிடலாம் என்று தான் நினைத்தேன். கடந்தசில நாட்களாகவே இரண்டாம் பாகத்தை எழுதிவிட வேண்டும் என்ற மனநெருக்கடி, கட்டாயம், எழுதவேண்டிய அவசியம் இதுவே என்பன போன்ற காரணங்களால் எழுதத் துவங்குகிறேன்.

முதல் பாகத்தை படிக்காதவர்கள் http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/02/blog-post_26.html படித்து விட்டு இந்தப் பாகத்தை தொடரலாம்.

சரியாக பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முன் பல வாரங்களுக்குப் பிறகு என் தங்கை என்னிடம் பேசினாள்.

'இடையில் பேசாததனால் வருத்தம் வேண்டாம் அண்ணா. வருத்தப்படாதீர்கள். தங்களின் அடுத்த கவிதைநூலை எப்போது வெளியிடப் போகிறீர்கள் அண்ணா? என்னுடைய முதல் கவிதைநூலை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளேன். நான் இன்னும் சில வாரங்களில் அதனை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். வாழ்த்துச்செய்தி ஒன்று உங்களிடமிருந்து வேண்டும். பிழைத்திருத்தமும் செய்யவேண்டும் அண்ணா.' என்று தலைப்பை சொல்லி 'நன்றாக இருக்கிறதா அண்ணா?' என்று கேட்டு என்மீதிருந்த அன்பை வெளிப்படுத்தினாள்.

அவளைப்பற்றி நான் அவளிடம் பகிர்ந்துகொண்டதை, என்னுடைய வலைத்தளத்தில் அவளைப்பற்றி பதிவதை படித்து இப்போதும் நினைவில் நிறுத்தி என்னிடம் அவள் அதனை பகிர்ந்துகொண்ட அந்தசில நிமிடங்களில் அவள்மனதில் என்மீதிருக்கும் அதீத அன்பை ஆழமாக உணர்ந்துகொண்டேன்.

ஏற்கனவே பத்து மாதங்களுக்கு முன்பு அவள் கேட்டதுபோலவே 'உங்களுக்கு எத்தனை வயது?' என்றாள். 'முப்பது. எதற்காக ப்பா கேட்கிறாய்?' என்றேன். 'திருமணம் ஆகிவிட்டதா அண்ணா?' என்றாள். 'இல்லப்பா' என்றேன். 'இப்போது திருமணம் செய்துகொள்ளாமல் நாற்பது வயதிலா திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? நான் வேண்டுமானால் இங்கு பெண் பார்க்கவா அண்ணா?' என்றாள்.

என்மீது அதீத அன்பு கொண்டவர்களிடம் தான் நான் உரிமையோடு உதவி கேட்கமுடியும் என்பதால் உதவி கேட்டேன். 'ஓரிரு நாட்கள் ஆகும் அண்ணா. சொல்கிறேன் அண்ணா.' என்றாள்.

என் தங்கை பல வேலைகளில் இருப்பாள். தற்காலிகமாக மறந்து விடுவதற்கு வாய்ப்புகள் இருக்கும் என்பதால், தொடர்ந்து நினைவுபடுத்த முயன்றும் தொலைபேசி ஊடாக பேச முயற்சித்தும் தோற்றுப்போனேன். அதன்பிறகே பொதுஇடத்தில் உரிமையோடு கோபப்பட வேண்டியதாயிற்று. அன்றிரவு நிம்மதியான உறக்கமில்லை. அதிகாலை நான்கரை மணிக்கு தெரிந்தது 'சித்தப்பா மரணம்' என்று. அன்று முழுவதும் என்னால் சாப்பிட இயலவில்லை. நான் கோபப்பட்டு ஓரிரு வார்த்தைகள் கூடக்குறைய பேசியிருந்தாலும் என்மனதில் அவள் என் தங்கைதான். நான் அவளின் அண்ணா தான்.

அடுத்த சில நாட்களில் நான் அவளிடம் தெரிவித்திருந்தேன்.

'நான் உன்னை பலர் முன்னிலையில் அவமானப்படுத்திவிட்டதாகச் சொன்னாய். அப்படி யாராவது உன்மேல் கோபமாக இருந்தால் அவர்களை என்னிடம் பேசச்சொல். நான் அவர்களிடம் உண்மையை விளக்கி மன்னிப்பு கேட்கிறேன்.' என்று சொல்லியிருந்தேன்.

மேலே அவளுக்கும் எனக்கும் இடையே நடந்தவற்றைப் பற்றி எதுவுமே தெரியாமல் கருத்து கந்தசாமியாக, மாத இதழின் ஆசிரியராக, பதிப்பாளராக வலம்வரும் ஒரு 'மனுச' பிரபல எழுத்தாளர் அரைவேக்காடு போல நாட்டாமை செய்வதாக நினைத்துக்கொண்டு, கருத்து சொல்வதாக, நியாயம் சொல்வதாக நினைத்துக்கொண்டு வெளியிட்டிருந்த ஓரிரு பதிவுகளை பார்க்க நேர்ந்தது.

'மனுச' பிரபலமானவரைப் பற்றி ஒரு தகவலை இந்த இடத்தில் நினைவுகூறவேண்டியது அவசியமாகிப் போகிறது. கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு பெங்களூருவிற்கு புதிதாக நான் வந்திருந்தபோது ஒரு நண்பர் வீட்டில் பத்து நாட்கள் தங்கியிருந்தேன். அந்த வீட்டில் தங்கியிருந்த நண்பர் ஒருவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தவர், வேறுவேறு சானல்களை மாற்றிக் கொண்டிருந்தார். அந்த 'மனுச' பிரபலம் எப்போதும் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சிகளில் பங்குபெறுபவர் என்பதால் அப்போது நேரலையில் அந்த பிரபலமானவர் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த இன்னொரு நண்பர் சானலை மாற்றிக்கொண்டிருந்த நண்பரைப் பார்த்து 'இந்த நாயா? வேறு சானலில் வை' என்றார். எனக்கு அன்று முதல் அவர் சொன்ன வார்த்தை என் மனதில் ஆழமாகவே பதிந்துவிட்டது. ஏன் அந்த நண்பர் அந்த 'மனுச' எழுத்தாளரைப் பார்த்து நாய் என்று திட்டினார் என்பதற்கான காரணம் இப்போது நன்றாகவே புரிகிறது. எந்தவிதமான பின்புலமும் இல்லாதவர்களை தெருநாய் என்று திட்டுவதும், நாய்போல் வாலை ஆட்டிக்கொண்டு ஸ்டாலினுக்கு மாலையிட்டு பிறந்தநாள் சொல்வதும், ஜெயலலிதாவை பார்க்கப் போனால் அங்கு போய் பம்முவதுமாய், தனக்குள் நாய்க்குரிய குணம் அதிகம் இருப்பதால்தான் எந்தவிதமான பின்புலமும் இல்லாதவர்களை தெருநாய் என்று திட்டுவதும் பதவியில் இருப்பவர்களிடம் பம்முவதுமாய் வாழ்வதால் தான் அன்று அந்த நண்பர் இந்த 'மனுச' பிரபலத்தை நாய் என்று திட்டினார் என்று தெள்ளத்தெளிவாக இப்போது உணர்கிறேன்.

சில தினங்களுக்குமுன்பு முகநூலில் ஒரு சிலர் இந்த 'மனுச' பிரபலத்தைப் பற்றி 'மங்கூஸ் மண்டையன்' என்று எழுதியிருந்ததையும் பார்க்க நேர்ந்தது.

ஆனந்தவிகடனில் பத்துப்பேரிலோ நூறுபேரிலோ ஒருவராக அவரை வெளியிட்டிருக்கலாம். 'அறிவுமதிக்கு என்ன தெரியும்? நான் எழுத்து, பத்திரிகை, பதிப்பகம் என்று மட்டுமல்லாமல் அரசியலில் பலகாலமாய் இயங்கிக் கொண்டிருப்பவன் என்று சொல்லிக்கொண்டு தன்னைச்சுற்றி ஒருசில அடிவருடிகளையும் ஒரு பத்து அல்லது பதினைந்து ஜால்ராக்களையும் கூட்டிகொண்டு சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு பிரபலம் என்ற போர்வைக்குள் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அதற்கு என்ன செய்வது? அவனவன் புத்தி லட்சணம் அவ்வளவுதான் என்று நினைத்து விலகிப் போகவேண்டியது தான்.

நான் இரண்டு முக்கியமான தகவல்களை இந்த நிகழ்வுகளின்மூலம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அ. 'என்ன நடந்தது?' என்று மட்டும் பார்த்துவிட்டு கருத்து சொல்லாமல் 'ஏன் நடந்தது? எந்த சூழலில் நடந்தது?' என்றும் பார்க்கவிடாமல் இவரைப் போன்ற பிரபலங்களின் பொய்யான பிம்பமும் அகந்தையும் அவர்களுடைய அறிவை வேலை செய்யவிடாமல் மழுங்கடித்து விடுகின்றன. அதனால் இவரால் எந்த அளவு மட்டமாக இறங்கமுடியுமோ அந்த அளவுக்கு கீழிறங்கி அவர்களின் பின்புலம் பார்த்து ஆளுக்குத் தகுந்தாற்போல் திட்டுவதும், வாலாட்டுவதுமாய் இருக்கிறார்.

'என்ன நடந்தது? ஏன் நடந்தது? எந்த சூழலில் நடந்தது?' என்று பார்க்கும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

ஆ. எதிரியாகப் பார்த்தல், அதனால் கிடைக்கும் பிரதிபலன் என்று சொல்வதெல்லாம் இதற்குமுன் பல்வேறு எழுத்தாளர் குழுக்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டதைப் பார்த்துப் பார்த்து வந்ததனால் எழுதியிருக்கிறார் அந்த 'மனுச' எழுத்தாளர். அவர்கள் அப்படி எதிர்த்துக் கொள்வதனால் கிடைக்கும் பிரதிபலனை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், ஏற்கனவே நடந்த பல நிகழ்வுகளுக்கும் இப்போது நடக்கும் நிகழ்விற்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்படி மூளை இதற்கு முன் பார்த்தவற்றை தற்போது நடக்கும் நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கு 'Artificial Neural Networks - Artificial Intelligence (A.I)' ல் 'Auto associative memory' என்கிறார்கள்.