Tuesday, March 4, 2014

ஆழ்ந்த இரங்கல் (பாகம் - இரண்டு)

இந்தப் பதிவை முதல் பாகத்துடனேயே முடித்துவிடலாம் என்று தான் நினைத்தேன். கடந்தசில நாட்களாகவே இரண்டாம் பாகத்தை எழுதிவிட வேண்டும் என்ற மனநெருக்கடி, கட்டாயம், எழுதவேண்டிய அவசியம் இதுவே என்பன போன்ற காரணங்களால் எழுதத் துவங்குகிறேன்.

முதல் பாகத்தை படிக்காதவர்கள் http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/02/blog-post_26.html படித்து விட்டு இந்தப் பாகத்தை தொடரலாம்.

சரியாக பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முன் பல வாரங்களுக்குப் பிறகு என் தங்கை என்னிடம் பேசினாள்.

'இடையில் பேசாததனால் வருத்தம் வேண்டாம் அண்ணா. வருத்தப்படாதீர்கள். தங்களின் அடுத்த கவிதைநூலை எப்போது வெளியிடப் போகிறீர்கள் அண்ணா? என்னுடைய முதல் கவிதைநூலை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளேன். நான் இன்னும் சில வாரங்களில் அதனை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். வாழ்த்துச்செய்தி ஒன்று உங்களிடமிருந்து வேண்டும். பிழைத்திருத்தமும் செய்யவேண்டும் அண்ணா.' என்று தலைப்பை சொல்லி 'நன்றாக இருக்கிறதா அண்ணா?' என்று கேட்டு என்மீதிருந்த அன்பை வெளிப்படுத்தினாள்.

அவளைப்பற்றி நான் அவளிடம் பகிர்ந்துகொண்டதை, என்னுடைய வலைத்தளத்தில் அவளைப்பற்றி பதிவதை படித்து இப்போதும் நினைவில் நிறுத்தி என்னிடம் அவள் அதனை பகிர்ந்துகொண்ட அந்தசில நிமிடங்களில் அவள்மனதில் என்மீதிருக்கும் அதீத அன்பை ஆழமாக உணர்ந்துகொண்டேன்.

ஏற்கனவே பத்து மாதங்களுக்கு முன்பு அவள் கேட்டதுபோலவே 'உங்களுக்கு எத்தனை வயது?' என்றாள். 'முப்பது. எதற்காக ப்பா கேட்கிறாய்?' என்றேன். 'திருமணம் ஆகிவிட்டதா அண்ணா?' என்றாள். 'இல்லப்பா' என்றேன். 'இப்போது திருமணம் செய்துகொள்ளாமல் நாற்பது வயதிலா திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? நான் வேண்டுமானால் இங்கு பெண் பார்க்கவா அண்ணா?' என்றாள்.

என்மீது அதீத அன்பு கொண்டவர்களிடம் தான் நான் உரிமையோடு உதவி கேட்கமுடியும் என்பதால் உதவி கேட்டேன். 'ஓரிரு நாட்கள் ஆகும் அண்ணா. சொல்கிறேன் அண்ணா.' என்றாள்.

என் தங்கை பல வேலைகளில் இருப்பாள். தற்காலிகமாக மறந்து விடுவதற்கு வாய்ப்புகள் இருக்கும் என்பதால், தொடர்ந்து நினைவுபடுத்த முயன்றும் தொலைபேசி ஊடாக பேச முயற்சித்தும் தோற்றுப்போனேன். அதன்பிறகே பொதுஇடத்தில் உரிமையோடு கோபப்பட வேண்டியதாயிற்று. அன்றிரவு நிம்மதியான உறக்கமில்லை. அதிகாலை நான்கரை மணிக்கு தெரிந்தது 'சித்தப்பா மரணம்' என்று. அன்று முழுவதும் என்னால் சாப்பிட இயலவில்லை. நான் கோபப்பட்டு ஓரிரு வார்த்தைகள் கூடக்குறைய பேசியிருந்தாலும் என்மனதில் அவள் என் தங்கைதான். நான் அவளின் அண்ணா தான்.

அடுத்த சில நாட்களில் நான் அவளிடம் தெரிவித்திருந்தேன்.

'நான் உன்னை பலர் முன்னிலையில் அவமானப்படுத்திவிட்டதாகச் சொன்னாய். அப்படி யாராவது உன்மேல் கோபமாக இருந்தால் அவர்களை என்னிடம் பேசச்சொல். நான் அவர்களிடம் உண்மையை விளக்கி மன்னிப்பு கேட்கிறேன்.' என்று சொல்லியிருந்தேன்.

மேலே அவளுக்கும் எனக்கும் இடையே நடந்தவற்றைப் பற்றி எதுவுமே தெரியாமல் கருத்து கந்தசாமியாக, மாத இதழின் ஆசிரியராக, பதிப்பாளராக வலம்வரும் ஒரு 'மனுச' பிரபல எழுத்தாளர் அரைவேக்காடு போல நாட்டாமை செய்வதாக நினைத்துக்கொண்டு, கருத்து சொல்வதாக, நியாயம் சொல்வதாக நினைத்துக்கொண்டு வெளியிட்டிருந்த ஓரிரு பதிவுகளை பார்க்க நேர்ந்தது.

'மனுச' பிரபலமானவரைப் பற்றி ஒரு தகவலை இந்த இடத்தில் நினைவுகூறவேண்டியது அவசியமாகிப் போகிறது. கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு பெங்களூருவிற்கு புதிதாக நான் வந்திருந்தபோது ஒரு நண்பர் வீட்டில் பத்து நாட்கள் தங்கியிருந்தேன். அந்த வீட்டில் தங்கியிருந்த நண்பர் ஒருவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தவர், வேறுவேறு சானல்களை மாற்றிக் கொண்டிருந்தார். அந்த 'மனுச' பிரபலம் எப்போதும் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சிகளில் பங்குபெறுபவர் என்பதால் அப்போது நேரலையில் அந்த பிரபலமானவர் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த இன்னொரு நண்பர் சானலை மாற்றிக்கொண்டிருந்த நண்பரைப் பார்த்து 'இந்த நாயா? வேறு சானலில் வை' என்றார். எனக்கு அன்று முதல் அவர் சொன்ன வார்த்தை என் மனதில் ஆழமாகவே பதிந்துவிட்டது. ஏன் அந்த நண்பர் அந்த 'மனுச' எழுத்தாளரைப் பார்த்து நாய் என்று திட்டினார் என்பதற்கான காரணம் இப்போது நன்றாகவே புரிகிறது. எந்தவிதமான பின்புலமும் இல்லாதவர்களை தெருநாய் என்று திட்டுவதும், நாய்போல் வாலை ஆட்டிக்கொண்டு ஸ்டாலினுக்கு மாலையிட்டு பிறந்தநாள் சொல்வதும், ஜெயலலிதாவை பார்க்கப் போனால் அங்கு போய் பம்முவதுமாய், தனக்குள் நாய்க்குரிய குணம் அதிகம் இருப்பதால்தான் எந்தவிதமான பின்புலமும் இல்லாதவர்களை தெருநாய் என்று திட்டுவதும் பதவியில் இருப்பவர்களிடம் பம்முவதுமாய் வாழ்வதால் தான் அன்று அந்த நண்பர் இந்த 'மனுச' பிரபலத்தை நாய் என்று திட்டினார் என்று தெள்ளத்தெளிவாக இப்போது உணர்கிறேன்.

சில தினங்களுக்குமுன்பு முகநூலில் ஒரு சிலர் இந்த 'மனுச' பிரபலத்தைப் பற்றி 'மங்கூஸ் மண்டையன்' என்று எழுதியிருந்ததையும் பார்க்க நேர்ந்தது.

ஆனந்தவிகடனில் பத்துப்பேரிலோ நூறுபேரிலோ ஒருவராக அவரை வெளியிட்டிருக்கலாம். 'அறிவுமதிக்கு என்ன தெரியும்? நான் எழுத்து, பத்திரிகை, பதிப்பகம் என்று மட்டுமல்லாமல் அரசியலில் பலகாலமாய் இயங்கிக் கொண்டிருப்பவன் என்று சொல்லிக்கொண்டு தன்னைச்சுற்றி ஒருசில அடிவருடிகளையும் ஒரு பத்து அல்லது பதினைந்து ஜால்ராக்களையும் கூட்டிகொண்டு சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு பிரபலம் என்ற போர்வைக்குள் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அதற்கு என்ன செய்வது? அவனவன் புத்தி லட்சணம் அவ்வளவுதான் என்று நினைத்து விலகிப் போகவேண்டியது தான்.

நான் இரண்டு முக்கியமான தகவல்களை இந்த நிகழ்வுகளின்மூலம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அ. 'என்ன நடந்தது?' என்று மட்டும் பார்த்துவிட்டு கருத்து சொல்லாமல் 'ஏன் நடந்தது? எந்த சூழலில் நடந்தது?' என்றும் பார்க்கவிடாமல் இவரைப் போன்ற பிரபலங்களின் பொய்யான பிம்பமும் அகந்தையும் அவர்களுடைய அறிவை வேலை செய்யவிடாமல் மழுங்கடித்து விடுகின்றன. அதனால் இவரால் எந்த அளவு மட்டமாக இறங்கமுடியுமோ அந்த அளவுக்கு கீழிறங்கி அவர்களின் பின்புலம் பார்த்து ஆளுக்குத் தகுந்தாற்போல் திட்டுவதும், வாலாட்டுவதுமாய் இருக்கிறார்.

'என்ன நடந்தது? ஏன் நடந்தது? எந்த சூழலில் நடந்தது?' என்று பார்க்கும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

ஆ. எதிரியாகப் பார்த்தல், அதனால் கிடைக்கும் பிரதிபலன் என்று சொல்வதெல்லாம் இதற்குமுன் பல்வேறு எழுத்தாளர் குழுக்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டதைப் பார்த்துப் பார்த்து வந்ததனால் எழுதியிருக்கிறார் அந்த 'மனுச' எழுத்தாளர். அவர்கள் அப்படி எதிர்த்துக் கொள்வதனால் கிடைக்கும் பிரதிபலனை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், ஏற்கனவே நடந்த பல நிகழ்வுகளுக்கும் இப்போது நடக்கும் நிகழ்விற்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்படி மூளை இதற்கு முன் பார்த்தவற்றை தற்போது நடக்கும் நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கு 'Artificial Neural Networks - Artificial Intelligence (A.I)' ல் 'Auto associative memory' என்கிறார்கள்.

No comments: