Wednesday, July 23, 2014

௨௦௦௬ தினமலரில் என் தங்கச்சி பாப்பா சோபனா பெயரில் என் கவிதை...

௨௦௦௬ தினமலரில் என் தங்கச்சி பாப்பா சோபனா பெயரில் நான் எழுதிய கவிதை பிரசுரமாகியிருந்தது.

சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்த்தேன். அதில் ஒரு அண்ணன் தன் தங்கையிடம் தனக்கு பிடித்த ஒரு பெண்ணை அலைபேசியில் காணொளியாக காட்டும்போது “இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள்.” என்று சொன்னதும் “அண்ணா, நான் மட்டுந்தான் அழகு என்று சொன்னாயே” என்று அந்த தங்கை சொன்னவுடன் அந்த அண்ணன் சொல்வான் “தங்கச்சியில் வேணும் னா நீ அழகு” என்று. உடனே அந்த தங்கை சொல்வாள் “என்னது வேணும் னா வா? அப்பா.., அப்பா...” என்று கத்திக்கொண்டு கோபித்துக் கொண்டு ஓடுவாள்.

தங்கச்சியை தான் பெற்றெடுக்காத மகளாக அன்பு செலுத்தும் அண்ணன்களுக்கு மேற்சொன்ன வசனங்களின் மகோன்னதம் புரியும்.

என் சிறுவயதில் தொடங்கி என் தங்கச்சி பாப்பா சோபனா எப்போதும் எனக்கு அக்கா போலவே பக்குவம் நிறைந்தவள். “வாமன அவதாரம்”
என்று அவளை நான் அடிக்கடி அழைப்பதுண்டு.

என் சொந்த ஊரான முனைவென்றி பள்ளிக்கூடத்தில் நான் எட்டாம் வகுப்பும் என் தங்கச்சி ஆறாம் வகுப்பும் படித்தபோது எங்களுக்கு பாடம் நடத்த வந்த ஆசிரியர் அண்ணன் ம. சிவசங்கர செல்வம் அவர்களுக்கு எங்கள் இருவரும் மீதும் நிறைய அன்பு. அவருடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்த என்னிடம் கொடுத்தனுப்புவார். என்னை தனியே அழைத்து “நீ, சோபனா இருவரில் யார் புத்திசாலி?” என்று கேட்பார். நான் சொன்னேன் “என் தங்கை தான்.” என் தங்கச்சியை அழைத்து அவர் கேட்டபோது “என் அண்ணன் தான்.” என்று.

அதன்பிறகு அந்த அண்ணன் அவருடைய ஊருக்கு மாற்றலாகிப் போனபோதும் அவருடைய அலைபேசி என் மூலமாக அவருடன் தொடர்பு இருந்தது. கடந்த ௨௦௦௯ க்கு பிறகு அவருடைய அலைபேசி எண் பழையதாகிப் போனதோ என்னவோ இப்போதெல்லாம் அந்த அண்ணன் என்னுடனான இணைப்பில் இல்லை.


No comments: