Thursday, September 18, 2014

தமிழ்நாட்டின் உண்மையான வரைபடம்தமிழ்நாட்டின் உண்மையான வரைபடம் இதுதான். 

"வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்" என்றே வரையறுக்கிறது தொல்காப்பியம் (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3) 

தற்போதைய கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிலப்பரப்புகள்:

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு

தற்போதைய ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு

தற்போதைய கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி (காவிரி உற்பத்தியாகும் குடகு உட்பட), கோலார் தங்கவயல்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அவருடைய அதிகாரத்திற்குட்பட்ட எல்லைகளில் பிச்சையெடுக்கிறார். அரசு ஊழியர்களை பிச்சையெடுக்க வைக்கிறார். இன்னும் புரியும்படி சொல்லப்போனால் கொள்ளையடிக்கிறார். கொள்ளையடிக்க வைக்கிறார். அவருடைய அதிகார பலத்திற்கேற்றவாறு அவருடைய level க்கு ஏற்றவாறு கொள்ளையடிக்கிறார். இதையே ஒரு நாட்டின் பிரதமர் அவருடைய level க்கு ஏற்றவாறு கொள்ளையடிக்கிறார். 

இங்கு அதைத்தாண்டி உலக அளவில் கொள்ளையடிப்பவர்களை பற்றி தெரிந்துகொள்ளத் துவங்கியபோதுதான் "தேவையில்லாததை எதிர்ப்பதைவிட தேவையுள்ளதை ஆதரிப்பதை மட்டும், தேவையுள்ளதை தொடர்ந்து எண்ணுவது மட்டுமே வெற்றிக்கான வழி" என்று ஏற்கனவே எனக்கு தெரிந்த உண்மையை மீண்டும் நினைவுபடுத்திவிட்டு அந்த உண்மையை என் அனுபவ உரைகல்லில் உரசிப்பார்க்க வைத்துகொண்டிருக்கிறது என் மூளை.

கடந்த ஞாயிறன்று (௧௪-௦௯-௨௦௧௪ - 14-09-2014) இராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்லும் பயணிகள் தொடர்வண்டியில் இரவு ஏழு ஐம்பது மணிக்கு பரமக்குடியிலிருந்து மதுரை, (அதைத் தொடர்ந்து பெங்களூரு செல்வதற்காக மதுரை செல்லவேண்டி) கூட்டநெரிசலில் சென்றுகொண்டிருந்தேன். 

ஒருவர் மீசையை முறுக்கியவண்ணம் எனக்கு சற்று தள்ளி நின்றுகொண்டு வந்தார். அமர இடமிருந்தபோதும் இடமளிக்காமல் அமர்ந்திருந்த தமிழ் பேசும் ஒருசிலரிடமும் வடஇந்தியாவிலிருந்து வந்த ஒருசிலரிடமும் தமிழிலும் ஹிந்தியிலும் பேசி இடம்கேட்டுப் பார்த்தார் அந்த முறுக்குமீசைக்காரர். சில நிமிடங்கள் கழித்தபிறகு, அவரிடம் ஏதோ கேட்கவேண்டி பேசினேன். அவர் பேசியதை கேட்டு "நீங்கள் தமிழை வித்தியாசமாக பேசுகிறீர்கள். நீங்கள் தமிழ்நாட்டின் எந்த ஊர்?" என்றேன். "நான் தமிழ்நாடு அல்ல. தமிழீழம். என்னுடைய சொந்த ஊர் கதிர்காமம். இங்கு தான் தமிழை யாரும் கண்டுகொள்வதில்லை. எங்கள் நாட்டில் தமிழை அனைவரும் மதிப்போம்." என்றார். நான் சட்டென்று பதில் சொன்னேன் "எங்கள் தமிழ்நாட்டிலும் தமிழை மதிப்பவர்கள் பலர் உள்ளனர். உங்களுக்கு சரியாக தெரியவில்லை." என்றேன். 

பிறகு, "கதிர்காமம் எங்கு உள்ளது? கதிர்காமம் முருகன் கோவில் என்று சொல்வார்களே. அந்த ஊரா நீங்கள்?" என்றேன். "ஆமாம். நீங்கள் எங்கள் நாட்டிற்கு வரவில்லை என்றால் எப்படி உங்களுக்கு அந்த ஊர் எந்தப்பகுதியில் உள்ளது என்று தெரியும்?" என்றார்.

"நான் அங்கு வரவில்லை எனினும் ஈழத்தின்மீது தனித்த ஈடுபாடு உண்டு." என்று சொன்னேன். அவருடைய பெயரைக் கேட்டேன். "முத்தாண்டி" என்றார். இராமேச்வரத்திரத்திற்கு அருகிலுள்ள மண்டபம அகதிகள் முகாமில் தான் தான் பிறந்ததாகவும் இங்கேயே வளர்ந்ததால் வடஇந்திய நண்பர்கள் மூலமாக ஹிந்தி தெரியும் என்று என்னிடம் தெரிவித்தார்.

குமரிக்கண்டம், தமிழ்க்குடியரசு, ஈழத்தில் தற்போதைய நிலை என பேசிக்கொண்டே வந்தோம். திருப்பாச்சேத்தி நிலையம் வந்தவுடன் "விடைபெறுகிறேன் அண்ணா" என்று கூறி விடைபெற்றார் அந்த முறுக்குமீசை ஈழத்தமிழர்.
Post a Comment