வரவேற்புகள்

கடந்த நவம்பர் ௪, ௨௦௧௩ (04-11-2013) அன்று மாலை மூன்று பத்து மணியளவில் என் அலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

'ஆனந்தமழை' திரைப்பட இயக்குநர் திரு. சுப. தமிழ்வாணன் பேசினார். என்னுடைய http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/ வலைத்தளம் அவருடைய பார்வைக்குக் கிடைத்ததாகவும், 'தனித்தமிழ்நாடு - விரைவில்' என்ற என்னுடைய பதிவைக் குறித்தும் பேசினார்.

என்னுடைய எண்ணமான தனித்தமிழ்நாடு நிறைவேறும். தாமதமாகும் என்றார்.

அந்த சில நிமிடங்களில் என் மனதிற்குள் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. அதற்கான காரணம் இதுதான்.

இயக்குநர் திரு. சுப. தமிழ்வாணன் போன்று பலரின் எண்ணங்களை இந்தப் பதிவு பிரதிபலித்தது. பலரின் வரவேற்பை இந்தப் பதிவு பெற்றது. சிலர் அறிவுரை கூறினர். சிலர் எதிர்த்தனர்.

இயக்குநர் திரு. சுப. தமிழ்வாணன் என்னிடம் பேசி முடிக்கும்போது "இது என்னுடைய தனிப்பட்ட அலைபேசி எண். (Personal mobile number). குறித்து வைத்துக் கொள்ளுங்கள்." என்றார்.
------------------------------------------------

கடந்த ௨௦௧௩, என் பிறந்த நாளிற்காய் வாழ்த்து தெரிவித்திருந்தார் கூகிள் குழுமத்திலிருந்து ஒரு அன்பர்.

On Tuesday, August 20, 2013 11:45:57 AM UTC-7, உதயன் மு wrote:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் முனைவென்றி நா. சுரேஷ்குமார்

பெரிய கவிஞராக முனைவென்றியார் வளர வாழ்த்துக்கள்.
அவரது ஈழம் பற்றிய கவிதைகள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அன்புடன்,
நா. கணேசன்
http://nganesan.blogspot.com

https://groups.google.com/forum/#!topic/vallamai/2sh4Hq4uKKw


இதனைப் பார்த்தவுடன் வித்யாசாகர் அண்ணா குவைத்திலிருந்து உடனே அலைபேசி ஊடாக எனக்கு அழைத்து, பெரிய வாழ்த்து மடலொன்றை வாசித்தார்.
------------------------------------------------

குமுதம் (12-06-2013) இதழில் என்னுடைய 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூலின் நூல் அறிமுகம்


------------------------------------------------

- (சிவகங்கை) மீரா, தபுசங்கர் வரிசையில் சுரேஷ்குமாருக்கு ஓரிடம் உண்டு.

- (முத்தம் தொடர்பான ஒரு கவிதை தொடர்பாக) திருவள்ளுவரின் கொள்ளுப்பேரனாக இருப்பார் என நினைத்துக் கொண்டேன்.

- இவரது கவிதைகள் இளைஞர்களை கவரும். சாதாரண இளைஞர்களை கவிதை எழுதத் தூண்டும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் கடிதம் எழுத மிகவும் உதவியாக இருக்கும்.


அழகு ராட்சசி கவிதை நூலிற்காக திரு. ஸ்ரீரங்கம் செளரிராஜன் அவர்கள் எழுதிய நூல் விமர்சனத்திலிருந்து...
------------------------------------------------

௨௦௦௫ ஜுன் மாதம் தொடங்கி கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். ௨௦௦௬ ல் சரவணராஜ் அண்ணன் என்னிடம் ஒருநாள் 'சரவணன் என்ற ஒருவர் புதிய சிற்பி என்ற சிற்றிதழை ஆரம்பிக்கவிருக்கிறார். உங்கள் கவிதை ஏடுகளை படிக்கக் கேட்கிறார். கொடுங்கள்.' என்றார்.

நானும் அவரும் சரவணன் என்பவரை போய் பார்த்தோம். எனக்கு இயல்பாகவே, சரளமாகவே என்னுடைய கவிதைகளில் தொடைநயம் மிக்க வார்த்தைகள் அதிகம் வந்துவிழும். அவர் என்னுடைய கவிதைகளை படித்து விட்டு தன்னுடைய 'புதிய சிற்பி' அறிமுக மாத இதழில் எங்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப் படுத்தும்போது தன்னுடைய தலையங்கத்தில் இப்படித்தான் என்னை அறிமுகப்படுத்தினார்.

ஒரு சங்கீதக் கலாநிதியை போல், தொடையில் தட்டி பாடச்சொல்லும் கவிதைகளை தருபவர் முனைவென்றி நா. சுரேஷ்குமார்.

புதிய சிற்பி மாத இதழின் பொறுப்பாசிரியராக என்னையும் துணை ஆசிரியர்களாக அ. சரவணராஜ், யா. சாமுராஜ், சரவணப் பெருமாள், காந்தி முனிஸ் ஆகியோரை நியமித்தார். அழகப்பா பல்கலைக் கழகத்தில் கணினித் துறையைச் சார்ந்து நான் ஒருவன் மட்டும் தமிழ்த் துறையைச் சார்ந்து மற்ற அனைவரும் புதிய சிற்பி மாத இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தவர்கள்.
------------------------------------------------




------------------------------------------------



No comments: