என்னைப்பற்றி

உலக வாழ் தமிழர் தமிழச்சிகளுக்கு,

அடியேனின் வணக்கம். என்னுடைய பெயர் முனைவென்றி நா. சுரேஷ்குமார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் முனைவென்றி கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். நான் ஒரு முதுநிலை கணினிப் பயன்பாட்டியல் (MCA.,) பட்டதாரி இளைஞன். தற்போது சென்னையில் ஒரு தனியார் கணினி மென்பொருள் நிறுவனத்தில் கணினி மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிந்து வருகிறேன். சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறேன். என்னுடைய குடும்பத்தினர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசித்து வருகிறார்கள்.

என்னுடைய அப்பா பெயர் திரு த. நாகராஜன். என்னுடைய அம்மா பெயர் திருமதி. கமலம் நாகராஜன், என்னுடைய தங்கச்சிப் பாப்பாவின் பெயர் திருமதி சோபனா சுரேந்தர்.



அழகப்பா பல்கலைக் கழக அளவில் 2006 ம் ஆண்டு நடைபெற்ற கவிதை மற்றும் கவியரங்கம் போட்டியில் என்னுடைய கவிதை மூன்றாம் பரிசு வாங்கியது.

2006 ம் ஆண்டு மூன்று மாத காலம் காரைக்குடியில் என் நண்பர்களோடு சேர்ந்து நடத்திய 'புதிய சிற்பி' இதழின் பொறுப்பாசிரியர்களில் ஒருவராக பணியாற்றியிருக்கிறேன்.

கடந்த டிசம்பர் 2011ல் 9, 10, 11 ஆகிய நாட்களில் கோவை உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் கின்னஸ் சாதனைக்காக பரிந்துரை செய்யப்பட்ட 1001 கவிஞர்கள் பங்குபெற்ற 72 மணிநேர தொடர் கவியரங்கக் கவிதைநூலில் என்னுடைய புகைப்படத்துடன் என்னைப்பற்றிய குறிப்புகளுடன் என்னுடைய கவிதையும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (டிசம்பர் 2011, 9ம் தேதி எனக்கு அலுவலக வேலைச்சூழல் காரணமாக கவியரங்கத்திற்கு கவிபாட செல்ல இயலவில்லை.)

என்னுடைய படைப்புகள் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அவ்வப்போது ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதிக்கொண்டு வருகிறேன்.

தமிழ், ஆங்கில இலக்கியங்களில் நாட்டமுள்ளவன். மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் இவர்களின் கவிதைகளை அதிகம் படிப்பவன் நான் .

No comments: