Tuesday, March 31, 2015

வாழ்த்துச் சொல்லுங்கள் (சிறுவர் பாடல்)

பாப்பாவுக்கு பிறந்தநாளில் வாழ்த்துச் சொல்லுங்கள்
பலூன் மிட்டாய் பம்பரமெல்லாம் வாங்கித் துள்ளுங்கள்

விஷ்ணு பாப்பா நல்லபாப்பா சொல்லிப் பாடுங்கள்
விளையாடத்தான் கூட்டிச்சென்று குதித்து ஆடுங்கள்

துறுதுறுவென்று ஓடும்பாப்பா எங்கள் பாப்பாதான்
துள்ளிக்குதிக்கும் மான்போலவே எங்கள் பாப்பாதான்

சுறுசுறுப்பாக காலையிலெழுந்து பள்ளியில் நிற்கணும்
சுட்டிப்பாப்பா நீயும்தானே நன்றாய் கற்கணும்

அள்ளஅள்ளக் குறையாமலே அழகே பேரழகு
அகரம் சொல்லிப் பேசும்போது அதுவும் ஓரழகு

செல்லம் தங்கம் வைரம் முத்து சொல்லிக் கொஞ்சுங்கள்
முத்தம் தாடா முத்தம் தாடா என்றே கெஞ்சுங்கள்

கூவும் குயிலின் இசையை இசையை உன்னில் நான்கண்டேன்
குட்டிப்பாப்பா கட்டிக்கரும்பாய் இனிக்க நான்நின்றேன்

சுட்டிக்கைகள் என்னைதினமும் எறும்பாய்த்தான் கிள்ளும்
குட்டிக்கால்கள் எங்கோசென்று என்மேல்தான் துள்ளும்

மூக்கும் பல்லும் புதிதாய் புதிதாய் கவிதைகளையே சொல்லும்
முத்தே அழகே அன்பேதானே என்றைக்கும் வெல்லும்

Thursday, September 18, 2014

தமிழ்நாட்டின் உண்மையான வரைபடம்



தமிழ்நாட்டின் உண்மையான வரைபடம் இதுதான். 

"வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்" என்றே வரையறுக்கிறது தொல்காப்பியம் (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3) 

தற்போதைய கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிலப்பரப்புகள்:

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு

தற்போதைய ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு

தற்போதைய கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி (காவிரி உற்பத்தியாகும் குடகு உட்பட), கோலார் தங்கவயல்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அவருடைய அதிகாரத்திற்குட்பட்ட எல்லைகளில் பிச்சையெடுக்கிறார். அரசு ஊழியர்களை பிச்சையெடுக்க வைக்கிறார். இன்னும் புரியும்படி சொல்லப்போனால் கொள்ளையடிக்கிறார். கொள்ளையடிக்க வைக்கிறார். அவருடைய அதிகார பலத்திற்கேற்றவாறு அவருடைய level க்கு ஏற்றவாறு கொள்ளையடிக்கிறார். இதையே ஒரு நாட்டின் பிரதமர் அவருடைய level க்கு ஏற்றவாறு கொள்ளையடிக்கிறார். 

இங்கு அதைத்தாண்டி உலக அளவில் கொள்ளையடிப்பவர்களை பற்றி தெரிந்துகொள்ளத் துவங்கியபோதுதான் "தேவையில்லாததை எதிர்ப்பதைவிட தேவையுள்ளதை ஆதரிப்பதை மட்டும், தேவையுள்ளதை தொடர்ந்து எண்ணுவது மட்டுமே வெற்றிக்கான வழி" என்று ஏற்கனவே எனக்கு தெரிந்த உண்மையை மீண்டும் நினைவுபடுத்திவிட்டு அந்த உண்மையை என் அனுபவ உரைகல்லில் உரசிப்பார்க்க வைத்துகொண்டிருக்கிறது என் மூளை.

கடந்த ஞாயிறன்று (௧௪-௦௯-௨௦௧௪ - 14-09-2014) இராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்லும் பயணிகள் தொடர்வண்டியில் இரவு ஏழு ஐம்பது மணிக்கு பரமக்குடியிலிருந்து மதுரை, (அதைத் தொடர்ந்து பெங்களூரு செல்வதற்காக மதுரை செல்லவேண்டி) கூட்டநெரிசலில் சென்றுகொண்டிருந்தேன். 

ஒருவர் மீசையை முறுக்கியவண்ணம் எனக்கு சற்று தள்ளி நின்றுகொண்டு வந்தார். அமர இடமிருந்தபோதும் இடமளிக்காமல் அமர்ந்திருந்த தமிழ் பேசும் ஒருசிலரிடமும் வடஇந்தியாவிலிருந்து வந்த ஒருசிலரிடமும் தமிழிலும் ஹிந்தியிலும் பேசி இடம்கேட்டுப் பார்த்தார் அந்த முறுக்குமீசைக்காரர். சில நிமிடங்கள் கழித்தபிறகு, அவரிடம் ஏதோ கேட்கவேண்டி பேசினேன். அவர் பேசியதை கேட்டு "நீங்கள் தமிழை வித்தியாசமாக பேசுகிறீர்கள். நீங்கள் தமிழ்நாட்டின் எந்த ஊர்?" என்றேன். "நான் தமிழ்நாடு அல்ல. தமிழீழம். என்னுடைய சொந்த ஊர் கதிர்காமம். இங்கு தான் தமிழை யாரும் கண்டுகொள்வதில்லை. எங்கள் நாட்டில் தமிழை அனைவரும் மதிப்போம்." என்றார். நான் சட்டென்று பதில் சொன்னேன் "எங்கள் தமிழ்நாட்டிலும் தமிழை மதிப்பவர்கள் பலர் உள்ளனர். உங்களுக்கு சரியாக தெரியவில்லை." என்றேன். 

பிறகு, "கதிர்காமம் எங்கு உள்ளது? கதிர்காமம் முருகன் கோவில் என்று சொல்வார்களே. அந்த ஊரா நீங்கள்?" என்றேன். "ஆமாம். நீங்கள் எங்கள் நாட்டிற்கு வரவில்லை என்றால் எப்படி உங்களுக்கு அந்த ஊர் எந்தப்பகுதியில் உள்ளது என்று தெரியும்?" என்றார்.

"நான் அங்கு வரவில்லை எனினும் ஈழத்தின்மீது தனித்த ஈடுபாடு உண்டு." என்று சொன்னேன். அவருடைய பெயரைக் கேட்டேன். "முத்தாண்டி" என்றார். இராமேச்வரத்திரத்திற்கு அருகிலுள்ள மண்டபம அகதிகள் முகாமில் தான் தான் பிறந்ததாகவும் இங்கேயே வளர்ந்ததால் வடஇந்திய நண்பர்கள் மூலமாக ஹிந்தி தெரியும் என்று என்னிடம் தெரிவித்தார்.

குமரிக்கண்டம், தமிழ்க்குடியரசு, ஈழத்தில் தற்போதைய நிலை என பேசிக்கொண்டே வந்தோம். திருப்பாச்சேத்தி நிலையம் வந்தவுடன் "விடைபெறுகிறேன் அண்ணா" என்று கூறி விடைபெற்றார் அந்த முறுக்குமீசை ஈழத்தமிழர்.

Wednesday, August 20, 2014

பரிசு வாங்கியபோது...

கடந்த ஜூலை ௨௭ ம் தேதி சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் என்னுடைய "குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்" ஹைக்கூ நூலிற்காக மின்மினி - கார்முகிலோன் விருதின் முன்றாம் பரிசை வாங்கியபோது எடுத்த புகைப்படம் கீழே. (ஞானபாலன் மற்றும் கன்னிக்கோவில் ராஜா அவர்களிடமிருந்து நேற்று முன்தினம்தான் இந்த புகைப்படங்கள் எனக்கு கிடைத்தன.)



​மேடையில் ஐயா புதுவைத் தமிழ்நெஞ்சன், கவிஞர் கார்முகிலோன், ஐயா ஈரோடு தமிழன்பன், முனைவர் மித்ரா அம்மையார் மற்றும் ஐயா கன்னிக்கோவில் ராஜா.


Saturday, August 9, 2014

என் பிறந்தநாளையொட்டி குழந்தைகளின் கல்விக்காக...




இந்த மாதம் என் பிறந்தநாளையொட்டி நான் வாங்கிய மூன்றாம் பரிசுக்குரிய தொகையை குழந்தைகளின் கல்விக்காக எழுத்தேணி அறக்கட்டளைக்குரிய வங்கிக் கணக்கில் இணைய வங்கி மூலமாக அனுப்பியிருக்கிறேன்.

அதோடு என் சம்பளப் பணத்திலிருந்து ஒரு தொகையை செவிவழி தொடுசிகிச்சை குழுமத்திற்கு (http://anatomictherapy.org/) இணைய வங்கி மூலமாக அனுப்பியிருக்கிறேன்.

என்னிடமிருந்த செவிவழி தொடுசிச்சை குறித்த காணொளிகளை (videos) குறுந்தகடுகள் மூலமாக வித்யாசாகர் அண்ணாவின் குவைத் முகவரிக்கும், தங்கை பாமினியின் பிரான்ஸ் முகவரிக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைத்தேன்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை "சீமான் அண்ணாவிற்கு முப்பத்தைந்து வயதாகி விட்டதே விரைவில் அவருக்கு திருமணம் ஆகவேண்டும்" என்று நான் என் அம்மாவிடம் சொன்னதுண்டு. நானும் அவருக்கு திருமணம் ஆகவேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்த சில மாதங்களில் அவருக்கு திருமணம் நடந்தேறியது. கடந்த மார்ச் மாதம் முதல் தங்கை பாமினிக்கு திருமணம் நடைபெற வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்த சில மாதங்களில் அவளுக்கு நிச்சயதார்த்தம் ஆனது. எனக்கு தெரிந்தவரை அடுத்த ஆண்டு அதாவது 2015, ஜூன் மாதத்திற்கு மேல் அவளுக்கும் அவளுடைய வருங்காலக் கணவர் திரு. விஜயரூபனுக்கும் சென்னையில் திருமணம் நடைபெறும்.

பாஸ்கர் ஐயா, உங்களின் ஒரு காணொளியில் நீங்கள் உங்களைப் பற்றி சொன்னபோது மனம் நெகிழ்ந்தேன். நீங்கள் காதலித்து திருமணம் செய்த உங்கள் காதல் மனைவி மனந்திருந்தி உங்களை விரைவில் தேடிவரும்போது அவளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பீர்கள் அல்லது உங்களுக்கு விரைவிலேயே ஒரு நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

உதவி செய்யும் மனப்பாங்கு உள்ளவர்கள் தாராளமாக எழுத்தேணி அறக்கட்டளை, செவிவழி தொடுசிகிச்சை குழுமம் (Anatomic Therapy Foundation), ஈரநெஞ்சம் போன்ற பல உதவும் உள்ளங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

நன்றி.

Sunday, July 27, 2014

மடிந்த ஹிட்லரின் மறுபிறவி

௨௦௦௯ ல் முத்தாரம் வார இதழில் வெளிவந்திருந்த பல விமர்சனக் கடிதங்களில் ஒன்று.


இன்று நடந்தேறிய முப்பெரும் விழா

கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்று (27-07-2014) சென்னை மயிலாப்பூரில் நடந்த முப்பெரும் விழாவைப் பற்றி தினமணி செய்தி வெளியிட்டிருந்தது.



விழாவில் நமது நூல் "குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்" நூலுக்கு சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட சான்றிதழும் மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்பட்டது.






விழா மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் நடந்தேறியது. விழாவில் பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தும் இந்த விழாவின் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

என்னுடன் பழகி என்னை நன்றாக புரிந்துகொண்ட ஒவ்வொருவருமே ஏதோவொரு தருணத்தில் என்னிடம் சொல்லும் வார்த்தைகள் "நீ என்ன இன்னும் சின்ன குழந்தையா?", "நீ ஒன்றும் குழந்தையில்ல..." என்று. இதனையே, இன்றைய விழாவில் விழா குறித்த துண்டு பிரசுரத்தில் "குழந்தை மனம் படைத்த கவிஞர்" என்று எழுதப்பட்டிருந்தது.



இதனையே குமுதம் இதழும் வெளியிட்டிருந்தது "பாசாங்கு இல்லாத இயல்பான மனதை ஹைக்கூவாக வடித்திருக்கிறார் சுரேஷ்குமார்" என்று.

விழாவில் பரிசுகள் வாங்கியபோது எடுத்த புகைப்படங்களை கன்னிக்கோவில் ராஜா ஐயா விரைவில் அனுப்பி வைப்பார். அனைத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Wednesday, July 23, 2014

௨௦௦௬ தினமலரில் என் தங்கச்சி பாப்பா சோபனா பெயரில் என் கவிதை...

௨௦௦௬ தினமலரில் என் தங்கச்சி பாப்பா சோபனா பெயரில் நான் எழுதிய கவிதை பிரசுரமாகியிருந்தது.

சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்த்தேன். அதில் ஒரு அண்ணன் தன் தங்கையிடம் தனக்கு பிடித்த ஒரு பெண்ணை அலைபேசியில் காணொளியாக காட்டும்போது “இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள்.” என்று சொன்னதும் “அண்ணா, நான் மட்டுந்தான் அழகு என்று சொன்னாயே” என்று அந்த தங்கை சொன்னவுடன் அந்த அண்ணன் சொல்வான் “தங்கச்சியில் வேணும் னா நீ அழகு” என்று. உடனே அந்த தங்கை சொல்வாள் “என்னது வேணும் னா வா? அப்பா.., அப்பா...” என்று கத்திக்கொண்டு கோபித்துக் கொண்டு ஓடுவாள்.

தங்கச்சியை தான் பெற்றெடுக்காத மகளாக அன்பு செலுத்தும் அண்ணன்களுக்கு மேற்சொன்ன வசனங்களின் மகோன்னதம் புரியும்.

என் சிறுவயதில் தொடங்கி என் தங்கச்சி பாப்பா சோபனா எப்போதும் எனக்கு அக்கா போலவே பக்குவம் நிறைந்தவள். “வாமன அவதாரம்”
என்று அவளை நான் அடிக்கடி அழைப்பதுண்டு.

என் சொந்த ஊரான முனைவென்றி பள்ளிக்கூடத்தில் நான் எட்டாம் வகுப்பும் என் தங்கச்சி ஆறாம் வகுப்பும் படித்தபோது எங்களுக்கு பாடம் நடத்த வந்த ஆசிரியர் அண்ணன் ம. சிவசங்கர செல்வம் அவர்களுக்கு எங்கள் இருவரும் மீதும் நிறைய அன்பு. அவருடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்த என்னிடம் கொடுத்தனுப்புவார். என்னை தனியே அழைத்து “நீ, சோபனா இருவரில் யார் புத்திசாலி?” என்று கேட்பார். நான் சொன்னேன் “என் தங்கை தான்.” என் தங்கச்சியை அழைத்து அவர் கேட்டபோது “என் அண்ணன் தான்.” என்று.

அதன்பிறகு அந்த அண்ணன் அவருடைய ஊருக்கு மாற்றலாகிப் போனபோதும் அவருடைய அலைபேசி என் மூலமாக அவருடன் தொடர்பு இருந்தது. கடந்த ௨௦௦௯ க்கு பிறகு அவருடைய அலைபேசி எண் பழையதாகிப் போனதோ என்னவோ இப்போதெல்லாம் அந்த அண்ணன் என்னுடனான இணைப்பில் இல்லை.


Tuesday, July 22, 2014

அமெரிக்க சுதந்திரதேவி சிலையின் மர்மம்

என்னுடைய சிறுவயதில் என் தாத்தா கடைகளில் அமர்ந்துகொண்டு மற்றவர்களோடு பேசும்போது "அமெரிக்கா தான் இரண்டு பக்கமும் சிண்டு மூட்டி விட்டு குளிர்காய்கிறது. தீவிரவாதம் வேண்டாம் என்று சொல்வதும் பிறகு அவர்களே தீவிரவாதத்தில் ஈடுபடுவதும் என தந்திரங்களை மேற்கொள்கிறது." என அவரை கடந்து போனபோதெல்லாம் இப்படி அமெரிக்காவை பற்றி அவர் பேசியதெல்லாம் அப்படியே பதிவுகளாக கடந்த சில நாட்கள் வரை இருந்தன.



ஆனால், கடந்த சில நாட்களாக மருத்துவ அறிஞர் பாஸ்கர் ஐயா அவர்கள் பேசிய "உலக அரசியல்" காணொளிகளை கேட்கக் கிடைத்தபோது பல தெரியாத தகவல்களை தெரிந்துகொண்டேன். அமெரிக்கா எந்த நாட்டையும் கட்டுப்படுத்தவில்லை. "அமெரிக்காவையே ஒரு குழு பின்னாலிளிருந்து இயக்கி வருகிறது. நாம் வசிக்கும் கோளான பூமியை, இங்குள்ள அனைத்து நாடுகளையும் இயக்கி, இயக்க முயற்சித்து வரும் ஒரு தீய சக்தி இருக்கிறது." என ஐயா பாஸ்கர் இந்த காணொளிகளின் மூலம் தெரிவித்திருக்கிறார். இவர் பேசிய ஒன்பது பாகங்களையும் கேட்டு விட்டேன். அதிர்ந்தேன். என் மூளைக்குள் இருக்கும் அனுபவ உரைகல்லின் மூலம் இவர் சொன்ன செய்திகளையெல்லாம் உரசிப் பார்க்க வேண்டும். என் மூளைக்குள் உள்ள சோதனைக்குழாய்க்குள் இவர் சொன்ன தகவல்களையெல்லாம் போட்டு குலுக்கிப் பார்க்க வேண்டும்.

உலக அரசியல் - http://anatomictherapy.org/tworld-poltics.php

பாகம் ௧ - https://www.youtube.com/watch?v=YWCzZYO6Sgs

பாகம் ௨ - https://www.youtube.com/watch?v=vHFf-sKpcEY

பாகம் ௩ - https://www.youtube.com/watch?v=9H2SY-neU8Y

பாகம் ௪ - https://www.youtube.com/watch?v=KPPlY532U44

பாகம் ௫ - https://www.youtube.com/watch?v=qQwvMPM3kHc

பாகம் ௬ - https://www.youtube.com/watch?v=pIe9uKm2eHM

பாகம் ௭ - https://www.youtube.com/watch?v=oJM1lpir5lg

பாகம் ௮ - https://www.youtube.com/watch?v=0uWAf2y0Vc8

பாகம் ௯ - https://www.youtube.com/watch?v=Lp_6BaThVKc

இந்த படத்தை பார்த்தால் புரியும். "இந்த உலகில் உள்ள அனைவரும் எதுவரை யோசிக்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி வாழ வேண்டும், நாம் என்ன உண்ண வேண்டும், நாம் எதனை கல்வி என கற்க வேண்டும் என அந்த மறைமுக மனிதர்கள் முடிவெடுக்கிறார்கள். அவர்கள் இதுவரை நேரடியாக இயங்கியதில்லை. மறைமுகமாகவே இயங்குகிறார்கள்." என தெரிய ஆரம்பித்திருக்கிறேன்.



"பணம் பாதாளம் வரை பாயும்" என்ற நம் முன்னோர்களின் வாக்கை கடந்த சில நாட்களில் தான்  முழு அர்த்தத்தையும் உணர ஆரம்பித்திருக்கிறேன்.

நான் பெரிதும் மதிக்கும் அமரர் எம். எஸ். உதயமூர்த்தி ஐயா அவர்களும் அமெரிக்காவில் தொழிலதிபராக பல காலமாய் வாழ்ந்தவர். இவர் பலருக்கும் பரிச்சயமான எழுத்தாளர். இவர் சமூக அக்கறை உள்ளவர். இவருக்குக் கூடவா அந்த மறைமுக மனிதர்களை பற்றி தெரிய வாய்ப்பில்லாமல் போனது. தெரிந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு இடத்தில் சொல்லாமல், எழுதாமல் இருந்திருக்க மாட்டாரே என்ற எண்ணம் மனதில் உதிக்கிறது.

இந்த படத்தை பாருங்கள். DNA வரைபடம் இந்த சுற்றப்பட்ட பாம்பை அடிப்படையாகக் கொண்டு கணினியில் வடிவமைக்கப் பட்டதாக sofware program என இந்த காணொளியில்  சொல்கிறார்கள். ஆக DNA இப்படித்தான் இருக்கும் என்பது கண்டுபிடிப்பல்ல, இது திட்டமிட்டு செய்யப்பட்ட வடிவமைப்பு என எண்ணம் வலுக்கிறது. https://www.youtube.com/watch?v=Eu3oN9sQwTQ இன்னமும் இதுபோன்ற காணொளிகளை நான் முழுமையாக பார்க்கவில்லை. பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். நாம் பள்ளியில், கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் படித்தவற்றையெல்லாம் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. ஏனெனில் நாம் கற்ற கல்வியே நம்மை வழிநடத்துகிறது.



இந்த காணொளியை பாருங்கள். https://www.youtube.com/watch?v=IxNw8OhmVZE
அமெரிக்க குடியரசு தலைவர் ஜான் கென்னடி பேசிய உரை. அவர் மறைமுகமாகத் தான் அந்த இரகசிய மனிதர்களை பற்றி பேசியிருக்கிறார். ஆனால், அவர் கொல்லப்பட்டார்.

இன்னும் பல மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன.

நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம்? என்றே தலை சுற்றுகிறது.

அலைபேசியில் நாம் பேசுவன, இணையம் வழி நாம் பேசுவன என தொடங்கி இவை அனைத்தும் satellite, database server மூலமாக அவர்களால் கண்காணிக்கப் படுகிறதா? நாம் நம் குழந்தைகளுக்கு அனுமதிக்கும் தடுப்பூசிகள் மூலமாக நம் வருங்கால சந்ததி பாதிக்கப் படுகிறதா, மனித இனம் மறைமுகமாக அழிக்கப்படுகிறதா? என பலவிதமான கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

அந்த மறைமுக குழுவை பற்றி ஏன் இதுவரை யாரும் இங்கு சொல்லவே, எழுதவே இல்லை என வருத்தமாக இருக்கிறது.

தயவு செய்து இந்த மின்னஞ்சலை உங்களை எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு அனுப்புங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள்.

என் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் அன்பர்கள், இந்த மின்னஞ்சலை படித்து முழுமையாய் படித்து மற்றவர்களிடம் பகிர்ந்து பகிரச் சொல்லி ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறேன்.

இங்கு எல்லா உணர்வுகளுக்கும் அடிநாதமாக, அந்தமாக விளங்கக் கூடியது அன்புதான். எல்லா உணர்வுகளின் கடைசி புள்ளி அன்பு தான்.

இந்த அன்பும் கருணையும் மனித நேயமும் எங்கும் பெருகினால் நமக்கு அளவுகடந்த மகிழ்ச்சி தான்.

௨௦௦௮ ல் நான் எழுதிய ஒரு கவிதையின் கடைசி சில வரிகள்

மனிதநேயத்தின் எல்லைக்கோடுகள்
பிரபஞ்சமாகும் நாள் 
எப்போது வரும்?

Sunday, July 20, 2014

௨௦௦௬ (2006) தினமலரில் பாண்டிலக்ஷ்மி அக்கா பெயரில் என் கவிதை...

௨௦௦௬ (2006) தினமலரில் என் அக்கா பாண்டிலக்ஷ்மி பெயரில் நான் எழுதி வெளிவந்த என் கவிதை.

௨௦௦௬ ம் ஆண்டு என் பட்ட மேற்படிப்பின் நான்காம் பருவ தேர்வு விடுமுறை. விடுமுறை நாட்களில் இப்படி என் பெயரிலும் என்மீது அன்பு கொண்டவர்களின் பெயரில் என் கையெழுத்தை மாற்றியும் எழுதி அனுப்பி அவை தினமலரில் பிரசுரமாவதை பார்த்து மகிழ்ந்தேன்.

சில மாதங்கள் கழித்து, சரவணராஜ் அண்ணாவை அலைபேசியில் அழைத்தபோது அவர் சொன்னார் "என் கவிதை வெளிவந்ததற்கு பக்கத்தில் அந்த பெண் பாண்டிலக்ஷ்மி எழுதிய கவிதையொன்று வெளிவந்திருக்கிறது." என்று.

நான் சொன்னேன் "அந்த கவிதையை அவள் பெயரில் நான் தான் எழுதி அனுப்பியிருந்தேன்." என்று.

இப்படி என்மீது அன்பு கொண்டவர்கள் என் ஆழ்மனதில் ஆழமாய் பதிந்து போகிறார்கள்.

என் பாண்டிலக்ஷ்மி அக்கா என்னிடம் அடிக்கடி சொல்வாள் "எதையும் யோசிக்காதப்பா" என்று.

சமீப காலங்களில் அவளை நினைவுபடுத்தும் விதமாக என் தங்கை பாமினி என்னிடம் ஸ்கைப், முகநூல் அல்லது அலைபேசி என ஏதாவதொன்றில் பேசி முடிக்கும்போது "யோசிக்காம இருங்க அண்ணா" என்றே சொல்வாள்.

என் வாழ்வில் நடந்த இரண்டு நிகழ்வுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

௨௦௦௬ ம் ஆண்டில் ஒருநாள் இரயிலில் பயணப்பட அந்த நிலையத்திற்கு போனேன். அங்கு பாண்டிலக்ஷ்மி அக்காவும் அமர்ந்திருந்தாள். ஏற்கனவே சில நாட்களாக என்னிடம் ஏதோ கோபத்தில் பேசாமல் இருந்தாள். அப்போது தான் என் நினைவிற்கு வந்தது நான் இன்னும் பயணச்சீட்டு எடுக்கவில்லை என்பது.

பயணச்சீட்டு எடுப்பதற்காக விரைந்தேன். நான் எழுந்து நடப்பதை அக்கா பார்த்து விட்டு அவள் என்னிடம் பேசாமல் இருப்பதால் நான் கோபத்தில் கிளம்புவதாக நினைத்துக் கொண்டு அவள் உடனிருந்த தங்கை மகாலக்ஷ்மியிடம் "சுரேஷ் கோபத்தில் போகிறது. என்ன ன்னு கேளு" என்றபடி மகாலக்ஷ்மி என்னை நோக்கி வேகமாக ஓடிவர அவள் பின்னால் பாண்டிலக்ஷ்மி அக்கா ஓடிவந்தாள்.

மகாலக்ஷ்மி என்னை அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பி நின்று "பயணச்சீட்டு எடுக்க மறந்துட்டேன் ப்பா. அதான் எடுக்க போறேன். எடுத்துட்டு வந்துருவேன். லூசுங்களா எதுக்காக இப்டி ஓடி வர்றீங்க?" என்றபடி பாண்டிலக்ஷ்மி அக்காவின் முகம் பார்த்தேன். அவள் என்மீதுள்ள கோபத்தில் என்முகம் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். "நான் பாண்டிலக்ஷ்மி அக்காவின் மீது கோபமாகத்தான் எழுந்து நடக்க ஆரம்பித்தேன்" என நினைத்துத்தான் இருவரும் ஓடிவந்தார்கள் என புரிந்துகொண்டேன்.

௨௦௦௫ ம் ஆண்டில் ஒருநாள் ஏதோவொரு சூழலில் என் பாண்டிலக்ஷ்மி அக்கா காதலித்த அந்த என் அத்தானைப் பற்றி அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் என்னிடம் சொன்னாள். அந்த அவளின் முகம் என் ஆழ்மனதில் இன்றும் கண்ணீரோடு கலந்திருக்கிறது.

என் பாண்டிலக்ஷ்மி அக்கா என் அத்தானை எப்படியெல்லாம் நேசித்திருப்பாள் என்ற அந்த தாக்கத்தில் பிறந்த கவிதையே “அவள் உயிர் அழுகிறது” -  http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2011/09/blog-post_653.html

இதே தாக்கத்தில் நான் எழுதி வைத்திருக்கும் ஒரு கவிதைநூல் "உள்ளம் உருக்கிப் போனாயடா..."

௨௦௦௫ ல் என் பாண்டிலக்ஷ்மி அக்கா என்னிடம் அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் என்னிடம் அவளின் காதலனை அதாவது என் அத்தானைப் பற்றி சொன்னபோது அவள் சொன்னாள் "இந்நிகழ்வை இனி நான் நினைவுபடுத்த விரும்பவில்லை. நீயும் என்னிடம் இனி நினைவுபடுத்தாதே ப்பா. பிறகு என்னால் தாங்கிக்கொள்ள முடியாது." என்றாள்.

என்னிடம் அன்புகொண்ட இவள் போன்றவர்கள் அவ்வப்போது என்னிடம் பேசினால் எனக்கு எந்த வலியும் தாக்கமும் தெரியாது. ஆனால், யாரும் அப்படி இருப்பதில்லை. மனிதர்கள் காலப்போக்கில் மறந்துபோகிறார்கள். மனிதர்கள் காலப்போக்கில் மாறிப்போகிறார்கள். இதனாலேயே மனதில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக "யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்" என அவள் சொன்னதையும் மீறி பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

என் காதலை சேர்த்து வைக்க ஆசைப்பட்டவள் அவள்.

அவளுக்கு நான் எழுதிய சில கவிதைகளில் ஒரு கவிதையில் சில வரிகள்.

படிப்பதில் படுசுட்டி தான் - அன்பால்
துடிப்பதில் படுகெட்டிதான்

நான் என்னிடம் பழகிய பலருக்கும் அவர்கள் கேட்காமலேயே எழுதிக் கொடுத்திருக்கிறேன். சமீபத்தில் என் தங்கை பாமினிக்கு அவள் தன் கவிதைநூலிற்கு வாழ்த்துச்செய்தி கேட்டு நான் கவிதையாக எழுதிக் கொடுத்த கவிதைகள் வரை அனைத்தும் அவரவர் பத்திரமாக வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

அதே சமயத்தில் என் இப்படி என்னோடு பழகிய சகோதர சகோதரிகளுக்காக, தோழிக்காக, என் தங்கச்சி பாப்பா சோபனாவிற்காக என நான் எழுதிய கவிதைகளை, அவர்கள் பெயர்களில் நான் எழுதி வெளிவந்த கவிதைகளையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். ஏனெனில் இவைகள் அனைத்தும் என் குழந்தைகள்.