Friday, April 22, 2022

மறுமகன் விஷ்ணுவின் 11வது பிறந்தநாள் - 26-04-2022 (புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்)

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/5aQsAs0Q6SM


11வது பிறந்தநாள் வாழ்த்து (26-04-2022)
====================================

பெயர்: விஷ்ணு சபரீஷ் 
பெற்றோர் பெயர்: நே. சுரேந்தர் - சோபனா 
சொந்த ஊர் - சிவகங்கை 
இருப்பு - பரமக்குடி

என் மறுமகன் விஷ்ணு சபரீஷ் தன்னுடைய 11வது பிறந்தநாளை தன்னுடைய இல்லத்தில் பரமக்குடியில் வெகு சிறப்பாக கொண்டாடவிருக்கிறார். அவரை அப்பா நே. சுரேந்தர், அம்மா சோபனா, தங்கை பிரகதி, தாய்மாமன்  முனைவென்றி நா. வேல்முருகன், அத்தை ஆனந்தி, மாமன் மகள்கள் ரிதன்யா, நிறைமதி மற்றும் அம்மப்பா த. நாகராசன், அம்மம்மா கமலம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வாழ்த்துகிறோம்.




பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி கூட்டத்திலே
பக்கம்வந்து போனவனே 
புத்தம்புது தோட்டத்திலே
புதுமலராய் பூத்தவனே

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி

எந்நாளும் சந்தோசமாய்
எங்கவீட்டு மருமகனே
சொன்னாலும் பாட்டுக்குள்ளே 
சொக்கும் முத்தம் தருபவனே

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி 

எட்டியோடும் குட்டிப்பையா 
எங்க வீட்டு சுட்டிப்பையா 
பட்டிதொட்டி கலகலக்கும் 
நம்ம பாட்டு தூள் பறக்கும்

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி

துள்ளியோடும் செல்லக்குட்டி
பள்ளியோடும் வெல்லக்கட்டி
வெள்ள மனம் நல்ல குணம்
விஷ்ணு எங்க செல்லக்குட்டி 

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி

Saturday, April 16, 2022

தமிழ் சித்திரைப் புத்தாண்டும் ஆசீவகச் சித்தர்களும் ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

நான் பாடிய பாடலை கேட்டு மகிழ, பார்த்து மகிழ, பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=1fz1TjIZaiU

இந்த பாடலின் பல இடங்களில் சந்தம் துள்ளி விளையாடியிருக்கிறது. 

ஆங்கில வார்த்தையான "Orion" என்பது நம்முடைய தமிழின் ஓரையோன் என்ற வார்த்தையிலிருந்தே வந்திருக்கிறது. ஓரையோன் என்பது உலகின் முதல் சித்தனான சிவனையே குறிக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முன்னோர்களும் விஞ்ஞானிகளுமான கீழ்க்கண்ட சித்தர்களை இந்த தமிழ் சித்திரைப் புத்தாண்டில்  நினைவு கூறவேண்டும். 

1. சிவன்
-------------

சித்தரான சிவன் நமக்கு அருளியவை அளப்பரியவை. அவற்றில், இரும்பை உருக்கி காய்ச்சும் தொழில்நுட்பத்தை உலகிற்கு முதன்முதலில் உருக்கு வேதமென்று (ரிக் வேதம்) நமக்களித்தவர் சிவன்தான். ஆல மரத்தடியில் அமர்ந்தே சிவன் போதித்தார். அதனாலேயே, நம்முடைய கோயிலுக்கு ஆலயம் (ஆல் + அயம்) என்ற பெயரும் வந்தது.

2. முருகன் 
----------------

வேலை தன்னகத்தே வைத்த முருகன் வேல் + தன் -> வேந்தன் என ஆரம்ப காலகட்டத்தில் அழைக்கப்பட்டு பின்னர் அரசாட்சி செய்யும் மன்னர்களுக்கும் வேந்தன் என்ற பெயர் பொதுவானது.

சித்தரான முருகன் நமக்கு அருளியவை அளப்பரியவை. அவற்றில், விவசாயத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் முருகனே. குமரிக்கண்ட அழிவின்போது, நம் மக்களை அழைத்துக் கொண்டு ஈழத்தின் கதிர்காமம் வந்து அங்கே முருகன் முதன்முதலில் விவசாயத்தைத் தொடங்கி வைத்தார். இனத்தைப் பெருக்க இரும்புச் சத்து மிகுந்த முருங்கை மரத்தின் இலைகளை, காய்களை உண்ணச் சொன்னார். தற்காப்புக்காக போர்க்கலைகள் கற்ற படைத்தளபதி என்றபோதும் கொல்லாமையை போதித்தவர். மாமிசம் உண்ணாமையை வலியுறுத்தியவர். சிவலிங்க வழிபாட்டிற்கு மாற்றாக அறுகோண நட்சத்திர வழிபாட்டை (star of david) உருவாக்கியவர்  முருகனே.

3. இராவணன் (இரவு + வானன்) 
-------------------------------------------------

சித்தரான இராவணன் நமக்கு அருளியவை அளப்பரியவை. அவற்றில், புஷ்பக விமானம் என்ற விமானம் சார்ந்த தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர் இவரே. ஆனால், இராவணன் கண்டறிந்த விமானம் சார்ந்த தொழில்நுட்பத்தை ரைட் சகோதரர்கள் தான் கண்டுபிடித்ததாக உண்மைகள் மறைக்கப்பட்டன.

4. கும்ப கரணன்
--------------------------

சிவலிங்க வழிபாட்டிற்கு மாற்றாக கும்ப வழிபாட்டை உருவாக்கியவர்  கும்ப கரணனே.

5. இந்திரன்
------------------

லெகிமம் கரிமம் அணிமம் மகிமம் வியாபியம் என்ற பஞ்சமா சித்திகள் அதாவது ஐந்திறன் -> இந்திரன், ஐந்திற சித்தன் -> இந்திர சித்தன் -> இந்திரஜித் -> இந்திரசித். ஆக இந்திரனும் இந்திரஜித்தும் ஒருவனே. அவன் இராவணனின் மகனே.

சக்கரத்தைக் கண்டறிந்தவர் இந்திரனே. தவ வலிமையினால் உடலை இலகுவாக்கி லெகிமம் சக்தியின் மூலம் மேகங்களுக்கு மேலே பறந்து மழை வரப்போவதை முன்கூட்டியே கணித்துச் சொல்வாராம் இந்திரன். அதனாலேயே இந்திரலோகம் மேகங்களுக்கிடையே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

6. கிருஷ்ணன்
----------------------

நல்ல கருத்தானவன், அறிவானவன் -> கருத்தினன் -> கிருட்டிணன் -> கிருஷ்ணன்.

7. தர்மன், பீமன், அர்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் தரைபதி என்ற திரௌபதி (பாஞ்சாலி)

8. விஷ்ணு என்ற திருமால்
-----------------------------------------

அனைவர் வீட்டிலும் வசிப்பவன் -> வீட்டினன் -> வீ ட்ணு -> விஷ்ணு.

விஷ்ணு விண்ணாராய்ச்சி செய்த சித்தர். அவர் கண்டறிந்த புவியீர்ப்பு விசை குறித்தான பல அறிவியல் உண்மைகள் (e=mc2) நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் கண்டுபிடித்ததாக உண்மைகள் மறைக்கப்பட்டன.

9. பிள்ளையார் மற்றும் முருகனின் ஏழு சப்த கன்னிகள்
------------------------------------------------------------------------------------------

பிள்ளையார் ஆசீவத்தைக் குறிக்கும் ஒரு உருவகக் கடவுளே.


மேற்ச்சொன்னவற்றை முடிந்தவரை இந்தப் பாடலில் கொண்டு வந்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள். தமிழர் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்.

தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.




சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்
கத்தியு மந்த இரத்தமுந் தந்த
முத்திய கலி - போய்
சித்தமு மந்த முக்தியுந் தந்த 
சத்திய வழி

ஆதிசிவனாய் பாதியுமையாய்
சோதியில் தானே - அப்பன்
ஆதியில் தோன்றி நீதியும் போதித்த
தத்துவ ஞானி
போதிமரமாய் ஆலமரத்தில்
போதித்த தெக்கன் - அவனே
சித்தமு மொத்தமும் சிந்தையில் வைத்த
சிவந்த முக்கண்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

இரும்பை உருக்கும் தொழிலின் நுட்பம்
அறிந்த சிவன் - அதனை
உருக்கு வேதமாய் தொகுத்தே அளித்த
அறிவின் மகன்
பிரம்பை எடுத்த குருவின் வடிவம்
தக்சினா மூர்த்தி - உனையே
மறந்த பிறப்பை சிறந்ததென்று 
சொல்லாது கீர்த்தி

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

நீரூழியில் கடல் பேரலையில் அழிந்த
குமரிக்கண்டம் - அங்கே
அழிவின் விளிம்பில் தவித்த மக்களை
காத்த கந்தன்
கதிர்காமம் தஞ்சம் விவசாயம் செய்த
கதிர்வேலன் - இவன்
முருங்கை வைத்து இனத்தை வளர்த்த
மொழிக்காவலன்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

தற்காப்புக்காக போர்க்கலைகள் கற்ற 
படைத்தளபதி - சித்தன்
முற்போக்காக அகிம்சையை போதித்த
மக்கள் அதிபதி 
முருக னழகன் கடம்பன் கந்தன்
வேல் தன் - வேந்தன்
அறுபடைகளில் மருகி உருகும் மக்கள்
பாலகன்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

இரவில் வானத்தை ஆராய்ச்சி செய்த
இரவு வானன் - இராவணன்
இசையை அறிந்து மொத்தமும் கற்ற
யாழின் பாணன்
பறப்பதற்கு புஷ்பக விமானம் கண்டிட்ட
சித்தன் - தமிழர்
உறவின் நிலங்கள் உரிமை காத்த
சிவனின் பக்தன்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

கருத்தினன் கிருட்டினன் கிருஷ்ணன் மன்னன்
அழகுக் கண்ணன் - எங்கள் 
மக்களைக் காக்க சகுனியைக் கொன்ற
இனக்காவலன்
விவசாயம் செழிக்க பாண்டியர் ஐவர்
பக்கத்தில் நின்றான் - பாரதப்
போரினில் குறவர் கௌரவர் தோற்றிடத் தானே
உதவி செய்தான் 

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

திருமாலின் பெருமை மறந்தாருக் கில்லை
அருமை பெருமை - திருச்
சிறார் பள்ளியில் குருகுலச் சித்தர்கள் தந்த
விஷ்ணுவின் கருணை
ஆலமர மெங்கும் அரசமர மெங்கும்
பிள்ளையார் வைத்தான் - அவனே
ஆசீவகச் சித்தன் பாம்புப் பஞ்சாங்கம் தந்த 
பாரத ராசன்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

இன்னும் சித்தர்கள் பலர் வாழ்த்திட்ட
எங்கள் குமரிக்கண்டம் - அவர்கள்
சிறப்பைப் பாடியே குதித்து ஆடியே
கும்பிட வந்தோம்
மண்ணில் சித்திரைத் தமிழர் புத்தாண்டை
நாமும் கொண்டாடுகிறோம் - எங்கள்
மண்ணில் சித்தர்கள் செய்த அற்புதங்களையே
நினைத்தே வாழ்வோம்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்
கத்தியு மந்த இரத்தமுந் தந்த
முத்திய கலி - போய்
சித்தமு மந்த முக்தியுந் தந்த 
சத்திய வழி