Thursday, May 23, 2019

என் அப்பாவும் என் மாமனாரும் சீக்கிரம் செத்தால் நல்லது என்று தோன்றுகிறது

"நான் சாகும்வரை காங்கிரஸ் கட்சிக்காரன். அதிமுக கட்சிக்காரன். எனவே என்னுடைய வாக்குகள் காங்கிரசிற்கும் அதிமுக விற்கும் தான்" என்று சொல்லும் என் அப்பாவும், 23-05-2019 இரவு என் மனைவியிடம் அலைபேசியில் "என்னுடைய கட்சியான பாஜக வெற்றி பெற்று விட்டது." என்று மகிழும் என் மாமனாரும் எப்போது சாவார்கள் என்று 23-05-2019 இரவிலிருந்து என் மூளைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.

என் அப்பாவும் என் மாமனாரும் சீக்கிரம் செத்தால் நல்லது என்று தோன்றுகிறது. ஏனெனில், இன்றைய தேதியில் சென்னையில் பல இடங்களில் நிலத்தடி நீர் இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அல்லாடுகிறது ஊர். சென்னையில் மட்டுமல்ல, என்னுடைய மாமனார் ஊரான சாப்டூரில் (மதுரை திருமங்கலம் அருகில்) கிராமத்தில் கூட வறட்சி. தண்ணீர் இல்லை.

என் சாவிற்குப் பிறகு என் பிள்ளைகளுக்கு அவர்கள் கையில் பணம் இருக்கும். ஆனால், குடிக்க தண்ணீர் இல்லாமல், நா வறண்டு சாகும்.

இதெற்கெல்லாம் காரணம், பாஜக காங்கிரசின் சந்தை பொருளாதாரக் கொள்கையே.

கடந்த நான்காண்டுகளாக இணையம் வழியே இல்லுமிநாட்டிகளால் நமக்கு ஆபத்து என்று கத்திக் கதறினேன். இல்லுமிநாட்டிகள் என்பவர்கள் வேறு யாருமல்ல. நம்மை உளவியல் ரீதியாக அடிமைப் படுத்தி நம்முடைய அனுமதியுடன் நம்முடைய இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்களே இல்லுமிநாட்டிகள்.

உதாரணத்திற்கு மீத்தேன் எடுப்பது, ஹைட்ரோ கார்பன் எடுப்பது, பொள்ளாச்சியில் சிறுவாணி ஆற்று நீரை குத்தகைக்கு கொடுத்த அதிமுக திமுக அரசுகள், அதை ஏலத்திற்கு எடுத்து நம்மிடமே பணத்திற்கு விற்க வரும் சூயஸ் நிறுவனம் என பட்டியல் நீளும்.

சூயஸ் (suez) நிறுவனம் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட நிறுவனம். தற்போது பொள்ளாச்சியில் சிறுவாணி நீரை விற்க வந்திருக்கிறது. இந்த சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு அமெரிக்காவால் இயக்கப்படுகிற நிறுவனம். இது போன்ற நிறுவனங்கள் தான் இல்லுமிநாட்டிகள்.

சொந்த நாட்டு மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் அல்லாடும்போது தன்னுடைய நீர்வளத்தை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு அதுவும் வெளிநாடுகளால் துரத்தியடிக்கப் பட்ட சூயஸ் (suez) நிறுவனத்திற்கு வழங்கியது என்பது அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.

ஒரு பக்கம் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் 50,000 பணம் என்று கொடுத்துக்கொண்டு மறுபக்கம் விலைமதிக்க முடியாத நம்முடைய நிலத்தடி நீர் வளத்தை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வாரத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் துரோகச் செயலகளை பொதுமக்கள் புரிந்துகொள்ள முடியாமல் "நாங்கள் சாகும்வரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக" என்று உளவியல் அடிமைகளாக வாழ்ந்து பழகிப் போனவர்கள் நம் தமிழ்நாட்டு மக்கள்.

இதைத்தான் சீமான் மேடைகள் தோறும் கத்திக் கொண்டிருக்கிறார்.

இல்லுமிநாட்டிகளைப் பற்றி ஜான் பெர்க்கின்ஸ் (john perkins) தன்னுடைய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confessions of an Economic Hit Man)" என்ற நூலில் சொல்லுகிறார் "உங்களுடைய இயற்கை வளங்கள் உங்கள் கண்முன்னே பறிபோவதை பார்த்துக்கொண்டிருக்க சபிக்கப் பட்டவர்கள் பொதுமக்களாகிய நீங்கள்".

இல்லுமிநாட்டிகளின் நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. நம்முடைய இயற்கை வளங்களை சுரண்டி நம்மை பசியால், வறட்சியால் சாகடிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.

உலகின் 800 கோடி மக்கட்தொகையை 400 கோடியாக குறைக்கும் திட்டமே இது. இதற்காகக் தான் கடல் மாலை திட்டம் (சாகர்மாலா), ஆராய்ச்சி என்ற பெயரில் மலைகளை உடைத்து மலை மணல் (m-sand) என்ற பெயரில் விற்பது, ஆற்று மணல் கொள்ளை, தேனியில் குரங்காணி மலையின் காடுகளை தீ வைத்துக் கொளுத்துவது, நியூட்ரினோ திட்டம், சென்னையில் எண்ணூரில் கடலுக்குள் கப்பலில் உள்ள கழிவுகளை கடலில் கொட்டி கடலை மாசுபடுத்தி இயற்கை வளங்களை அழிப்பது இவை எல்லாமே மக்கள் தொகையை 400 கோடியாக அதாவது பாதியாக குறைக்கும் வேலையே.

மக்களின் எதிர்ப்பு அதிகம் இருந்தால் தற்காலிகமாக நிறுத்தி வைப்பார்கள். எதிர்ப்பு தொடர்ந்து இருந்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வேறு பெயரில் வருவது இதெல்லாம் இல்லுமிநாட்டிகளின் வேலை. உதாரணத்திற்கு மீத்தேன் திட்டம். தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம்.

நம்முடைய தமிழ்நாடு பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது. நம்முடைய தமிழ்நாடு தானாக பாலைவனமாக மாறவில்லை. மாற்ற தரகர் கூலி (broker commission) வாங்கிக் கொண்டு வேலை செய்வது பாஜக காங்கிரஸ் அதிமுக திமுக கட்சிகளே.

தம்முடைய பேரன் பேத்திகளுக்கு பணம் சேர்த்து வைத்தால் போதும். அவர்களுக்கு இயற்கை வளங்களான நிலத்தடி நீர், தூய காற்று இவற்றைக் கொடுக்க வேண்டுமே என்ற எண்ணமில்லாமல் அக்கறை இல்லாமல் காங்கிரஸ் பாஜக திமுக அதிமுக கட்சிகளுக்கு வாக்களித்த என் அப்பா, என் மாமனார், என் சித்தப்பா என காங்கிரஸ் பாஜக திமுக அதிமுக கட்சிகளுக்கு வாக்களித்த என் உறவினர்கள் சீக்கிரம் செத்தால் நல்லது என்றே தோன்றுகிறது.

- முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை