Tuesday, August 30, 2022

விநாயகர் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=womXDbB7JWI


அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

தூய தமிழ் தேசியம் தொடர்பாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தீவிரமான தேடல் எனக்கிருக்கிறது.

குபேரன் என்ற மன்னன் ஈழத்தின் வடக்கில் உள்ள யாழ்ப்பாண நகரை விவசாயம் செய்து சீரும் சிறப்புமாக ஆண்டார். அவரின் நினைவுகூறும் விதமாகவே வாழ்க்கை சாத்திரம் என்றழைக்கப் படும் வாஸ்து சாஸ்திரத்தில் வட மூலை குபேர மூலை என்றழைக்கப் படுகிறது.

ஆனால், குபேரனுக்கு விநாயகருக்கும் என்ன தொடர்பு? என்பதை நான் பாடிய இந்தப் பாடலைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஏற்கனவே நான் மெட்டமைத்துப் பாடிய 

தமிழ் சித்திரைப் புத்தாண்டும் ஆசீவகச் சித்தர்களும் - https://www.youtube.com/watch?v=1fz1TjIZaiU

கிருஷ்ணன் துதி - https://www.youtube.com/watch?v=Pm6IqpSFhZw

போன்ற பாடல்களைப் போலவே இந்தப் பாடலும் ஒரே இருப்பில் மெட்டும் பாடலும் என்னிடமிருந்து வெளிவந்தது. மகிழ்வான தருணமிது.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். நன்றி. 




ஆசீவகச் சின்னந்தானே
அறிவான யானை
அறிவான யானை - எங்கும்
அமைதியாக வணங்கிடுவோம் 
அழகுப்பிள்ளை யாரை
அழகுப்பிள்ளை யாரை
ஆசீர்வாதம் தருகின்ற
அப்பன் பிள்ளையாரே
அப்பன் பிள்ளையாரே - அவன்
அருளாலே தொடங்கும் செயல்
அனைத்தும் வெற்றிதானே
அனைத்தும் வெற்றிதானே

விவசாயம் செய்து
பணக்காரனானான்  குபேரன்
பணக்காரனானான் குபேரன் - யாழ்ப்
பாண நகரை சீருஞ்சிறப்பாய் 
ஆண்டவனே குபேரன்
ஆண்டவனே குபேரன்
அவன் செல்வச் செழிப்பை உருவகமாய் 
குறிக்கும் தொப்பை வயிறு
பிள்ளையார் தொப்பை வயிறு - நம்
பிள்ளையாரின் தலையென்பது
யானையாரின் தலையே
யானையாரின் தலையே

பிள்ளையாரின் உடலென்பது
குபேரன் செழிப்பின் வயிறே
குபேரன் செழிப்பின் வயிறே - இங்கே
வி என்பது வெற்றிதானே
வெற்றிக்கு நாயகன் விநாயகன்
வெற்றிக்கு நாயகன் விநாயகன்
இல்லங்களில் மகிழ்ச்சி பெறுக
எங்கள் பிள்ளையார் வருவார்
எங்கள் பிள்ளையார் வருவார் - வந்தே
இன்பம் பொங்கிப் பெருகிடவே 
வெற்றிகளையே தருவார்
வெற்றிகளையே தருவார் 

விநாயகர் என்பவர் முருகன் போல
மண்ணில் வாழ்ந்தவரில்லை
மண்ணில் வாழ்ந்தவரில்லை - அவர்
தமிழர் மதமாம் ஆசீவகத்தை
குறிக்கும் உருவகச் சின்னம்
குறிக்கும் உருவகச் சின்னம்
விநாயகர் சதுர்த்தி நாளில் நாமும்
விநாயகரையே நினைப்போம்
விநாயகரையே அழைப்போம் - அவரை
நினைத்தபடியே நினைத்த காரியம்
வெற்றிபெறவே உழைப்போம்
வெற்றிகளில் திளைப்போம்

Thursday, August 18, 2022

கிருஷ்ணன் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=Pm6IqpSFhZw


தூய தமிழ் தேசியம் தொடர்பாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தீவிரமான தேடல் எனக்கிருக்கிறது. சற்றுமுன் ஒரே இருப்பில் என்னிடமிருந்த பிறந்த மெட்டும் பாடலும்...

கேட்டு மகிழுங்கள். கிருஷ்ண ஜெயந்தியை மகிழ்வோடு கொண்டாடுங்கள். கிருஷ்ணன் கோனார்களுக்கு மட்டும் சொந்தமில்லை. அவர் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தம். அவர் தமிழர்களான நமக்காகவே பாடுபட்டார்.

இந்தப் பாடல் நன்றாகவே வந்திருக்கிறது. கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள். உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் இந்த காணொளி மற்றும் வலைத்தள இணைப்பை அனுப்பி கேட்டு மகிழச் சொல்லுங்கள். உண்மையான வரலாற்றை உலகம் முழுவதும் பரப்புவோம்.




கண்ணனே மன்னனே கார்முகில் வண்ணனே 
கண்களின் முன்னே வா - நீ 
கண்களின் முன்னே வா - எங்கள் 
எண்ணமே  திண்ணமே ஏழிசை வண்ணமே
எங்களின் முன்னே வா - நீ
எங்களின் முன்னே வா

ஆயனே மாயனே ஆண்களில் அழகனே
ஆசீவகச் சித்தன் வா - நீ
ஆசீவகச் சித்தன் வா - எங்கள் 
ஐயனே மெய்யனே ஐயப்ப சித்தனே
ஐயங்கள் தீர்க்கவே வா - உள்ள
ஐயங்கள் தீர்த்திட வா

குருகுலம் தருகின்ற பொதிகைமலைச் சித்தன்
குருவே சரணம் வா - நீ
குருவே சரணம் வா - இங்கு
கருத்தான கறுப்பான கருத்தண்ண சாமியே
கருத்தினன் நீயே வா - எங்கள்
கிருட்டினன் நீயே வா

கண்ணுக்கு ஒப்பான கண்ணனே கிருஷ்ணனே
கீதம் இசைத்திட வா - உன் 
பாதம் பதித்திட வா - எங்கள்
முன்னவன் தென்னவன் கண்ணவன் கண்ணன்
கண்ணா மன்னா வா - என்
முன்னே முன்னே வா 

புல்லாங் குழலிசை கீதத்தைப் போலவே 
பாட்டினி லிங்கே வா - என்
பாட்டினி லிங்கே வா - எங்கள்
இல்லமெங்கும் உள்ளோர் உள்ளமதில் தங்கும்
இறையே அருளே வா - நீ
இறையே அருளே வா