Monday, September 18, 2023

விநாயகர் சதுர்த்தி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/PcFrUapA5AU




ஆசீவக வாழ்வியலின் ஆரம்பம் நீதானே - இங்கு 
ஆனை முகம் கொண்ட எங்கள் ஆண்டவனும் நீதானே 
ஆசிர்வாதம் தருகின்ற அப்பன் எங்கள் பிள்ளையாரே - இவன் 
அருளாலே தொடங்கும் செயல் அனைத்தும் இங்கு வெற்றி தானே 

செட்டியார்கள் செல்வம் கொண்ட தொப்பை கொண்ட கூட்டம் தான் 
சித்தர்கள் அறிவாலே உயர்ந்த தமிழர் கூட்டம் தான் 
செட்டியார்களின் தொப்பை இங்கு பிள்ளையாரின் தொப்பை தான்
சித்தர்களின் அறிவு இங்கு பிள்ளையாரின் யானை முகம்

ஆசீவகச் சின்னந்தானே அறிவான யானையாரே
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையாரின் சிலைதானே 
ஆசீவகத் திருமால் எனும் விஷ்ணு என்ற சித்தர் தான் 
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையார் சிலை வைத்தாரே

சித்தர்கள் பொதுவாக காட்டிற்குள் வாழ்ந்தனரே
மாதத்திற்கு இருமுறையும் ஊருக்குள் வருவாரே
ஆலமர அரசமர நிழலில் தான் அமர்வாரே
மக்களின் பிரச்சனைகளை கேட்டே தீர்வுகள் சொல்வாரே
இதுதானே தமிழரின் ஆசீவக வாழ்வியலே 

பிரச்சனைகளை தீர்க்க வந்த சித்தர்களின் நினைவாக 
இந்த ஆசீவக வாழ்வியலின் வரலாற்றைக் கடத்தத் தான் 
ஆசீவகத் திருமால் எனும் விஷ்ணு என்ற சித்தர் தான் 
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையார் சிலை வைத்தாரே

வி என்ற வார்த்தைக்கு வெற்றி என்ற பொருளுண்டு
வெற்றிக்கு நாயகன் விநாயகரின் அருளுண்டு
பிள்ளையாரை மனதார வேண்டுவோம் அருள் பெறுவோம் 
வெற்றிக்கு எப்போதும் உழைத்தாலே பொருள் பெறுவோம்

Wednesday, September 6, 2023

கிருஷ்ண ஜெயந்தி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/O_wJb7XqaPg


கண்ணான கண்ணனுக்குப் பிறந்தநாளாம் - எங்கள்
மன்னாதி மன்னனுக்குப் பிறந்தநாளாம்
தென்னகத்தின் திண்டுக்கலில் பிறந்த மன்னா - என் 
அன்னை பூமி காத்து நின்ற கண்ணா கண்ணா

கருப்பான நிறத்தோடு கிருஷ்ணா கிருஷ்ணா - எங்கள்
கருத்தான கருத்தினனே கிருஷ்ணா கிருஷ்ணா
பிறந்த மண்ணில் சிறந்து நின்ற கண்ணன் நீயே - உன் 
பிறப்பாலே எங்கள் துன்பம் நீக்கினாயே

பாண்டியர்கள் ஐவர் பின்னே நின்றாய் நீயே - அந்தப் 
பாரதத்தின் போரிலே தான் வென்றாய் நீயே 
தூண்டிவிட்ட சகுனியையும் நீ கொன்றாயே - எங்கள்
துரோகிகள் அனைவரையும் அழித்தாயே

சிவன் கண்ட குருகுலத்தை முருகன் தொடர்ந்தார் - அந்த 
சபரிமலை குருகுலத்தை நீயே தொடர்ந்தாய்
எவனிங்கு எங்கள் தமிழரை எதிர்த்த போதும் - நீ 
எமனாகக் கொல்லம் நின்ற காவல் தெய்வம்

எங்கள் தமிழர் எங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் - எங்கும் 
ஏழ்மை நிலை நீங்கி மக்கள் மகிழ வேண்டும்
பொங்கும் பொங்கல் போல மனம் நெகிழ வேண்டும் - தமிழர் 
புகழோடு பல்லாண்டு வாழ வேண்டும்

கண்ணான கண்ணனுக்குப் பிறந்தநாளாம் - எங்கள்
மன்னாதி மன்னனுக்குப் பிறந்தநாளாம்
தென்னகத்தின் திண்டுக்கலில் பிறந்த மன்னா - என் 
அன்னை பூமி காத்து நின்ற கண்ணா கண்ணா