Monday, February 27, 2023

பெண்ணே நீ யாரடி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த காதல் பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/qxPI1-zlTmE


வரும் மார்ச் 2 ம் தேதி (வியாழக்கிழமை) என் மனைவி ஆனந்தியின் பிறந்தநாள். என் கற்பனையில் உருவான இந்த புத்தம் புது மெட்டும் மெட்டுக்கு அமைந்த காதல் பாடலும் என் மனைவியின் பிறந்தநாளுக்காய் நான் அவளுக்கு கொடுக்கும் அன்பு பரிசு.

இன்னும் சில தினங்களுக்குள் இதே பாடலின் பெண் ஆணைப் பார்த்து பாடுவது போலான பதிவினை, விழியத்தினை வெளியிடுவேன். நன்றி.





உணர்வில் கலந்து உயிரில் நிறைந்த
எனது சுவாசம் நீயடி
உறக்கம் நுழைந்து கனவில் கலந்த 
காதல் கவிதை நீயடி

பெண்ணே நீ யாரடி
எந்தன் வானும் மண்ணும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வாழ்வும் சாவும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் கவியும் இசையும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் உயிரும் மூச்சும்

மனதில் எங்கும் மகிழ்வாய் நிறைந்த
எந்தன் தாயும் நீயடி
எனது உடலின் உள்ளே ஓடும்
இரத்த நாளம் நீயடி

பெண்ணே நீ யாரடி
எந்தன் இரவும் பகலும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வலியும் மருந்தும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வெயிலும் மழையும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் அறிவும் மடமும்

அழகு மலராய் அருகில் நிற்கும்
எந்தன் அழகு தேவதை
விழிகள் நனைத்து விரலும் கோர்த்த
எந்தன் நெஞ்சின் மாமழை

பெண்ணே நீ யாரடி
எந்தன் விருப்பும் வெறுப்பும் 
பெண்ணே நீ யாரடி
எந்தன் நீரும் நெருப்பும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் முதலும் முடிவும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் பேச்சின் மௌனம் 

Sunday, February 12, 2023

அத்த மகளே ( என் கற்பனையில் உருவான புத்தம் புது கிராமிய மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/DRE0QoPogWM


தினம் தினம் அன்பு செலுத்தத் தேவையான அன்பான, அழகான, அமைதியான மனமிருந்தால், காதலர் தினம் என்று தனியாக நாம் கொண்டாட வேண்டியதில்லை.

என் கற்பனையில் உருவான இந்த மெட்டுக்கும் வரிகளுக்கும் நானும் என் மனைவியும் சேர்ந்து பாடிய பாடல்...

சதுரகிரி மலையடிவாரமான சாப்டூர் கிராமத்தைச் சேர்ந்தவள் என் மனைவி ஆனந்தி. அவள் சிறுவயது புகைப்படத்தைத் தான், இந்தக் காணொளியின் முதலாக இணைத்துள்ளேன். 





ஆண்
அத்த மகளே என்மேல்
ஆசவச்ச பெண்மயிலே
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கவச்ச உண்மையிலே

பெண்
அத்த மகனே என்மேல்
ஆசவச்ச மச்சானே 
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கும்படி வச்சானே 

ஆண் 
காலொடிஞ்சு நா கெடக்க
கல்லொடைக்க போன புள்ள
நாளுமொரு யுகமாச்சு
நானழுது குளமாச்சு
( அத்த மகளே )

ஆண்
நானுமுன்னப் பிரிஞ்சாலே
உசுருங்கூட என்னதில்ல 
ஆணுங்கொண்ட அன்பு மட்டும்
ஆயுசுக்கும் போவதில்ல
( அத்த மகளே )

ஆண்
பசியா நானிருந்தா
பதறிச்சோறு ஆக்கிடுவ
பக்கம்வந்து பக்கம்வந்து
பக்குவமா ஊட்டிடுவ
( அத்த மகளே )

ஆண்
சோறுதண்ணி சாப்பிடத்தா
சோர்வின்றி நீ உழைச்ச
தேருபோல எம் மனசில்
உசந்து நின்னு நீ சிரிச்ச
( அத்த மகளே )

ஆண்
ஆத்தோரம் தோப்போரம் - நா
நடந்து போகயிலும்
ஒன் நெனப்புத்தானே புள்ள
கட்டயிலே வேகயிலும் 
( அத்த மகளே )

ஆண்
அத்த மகளே என்மேல்
ஆசவச்ச பெண்மயிலே
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கவச்ச உண்மையிலே

பெண்
அத்த மகனே என்மேல்
ஆசவச்ச மச்சானே 
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கும்படி வச்சானே

Saturday, February 4, 2023

வேல்முருகன் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

முருகனுக்கு அறமான் என்ற பெயரும் உண்டு. அறம் என்பதற்கு உளத்தூய்மை என்றே பொருள். முருகன் அவ்வாறே உளத்தூய்மையோடு தமிழ் மக்களுக்காகவே குமரிக்கண்டத்தில் வாழ்ந்தார். 

குறவோன் என்பது முருகனின் முன்னோடியான சித்தர் சிவனையே குறித்தாலும் சிவனின் தாசனான வானாராய்ச்சி சித்தரான இராவணனையும் சேர்த்தே குறிக்கிறது. இந்த குறவோன் என்ற வார்த்தையே ஆங்கிலத்தில் crown ( கிரௌன் - தலையில் அணியும் கிரீடம், மகுடம் ) என்றாகி கொரோனா ( corono ) என்றானது. இதை விரிவாக இன்னொரு பதிவில் விரிவாக பேசலாம். 

அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்.


பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/aVFq7alAV_0





கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
பால தாண்டாயுத பாணிக்கு அரோகரா
தமிழ்க்கடவுளுக்கு அரோகரா
அறிவியல் விஞ்ஞானிக்கு அரோகரா
அரோகரா அரோகரா 

அறமானே முருகனே
அறமானே முருகனே
அன்பின் வடிவோனே அழகிய தமிழ் மகனே
அன்பின் வடிவோனே அழகிய தமிழ் மகனே
முன்பாய் வாழ்ந்தோனே முதல்வனே மூத்தோனே 
அறமானே முருகனே

மறவேனே மறவனே
மறவேனே மறவனே
சித்தம் தெளிந்திட சித்தன் உனையேற்றும் 
கத்தும் குயிலென நித்தமும் ஒரு பாட்டும்
ரத்தம் உறைந்திட புத்தம் புது தோற்றம்
மறவேனே மறவனே
மறவேனே மறவனே

குறவோனே குறவனே 
மருத்துவம் செய்தோனே மகத்துவ மானோனே 
கருவளக் கடவுளாய் கதிர்காமம் நின்றவனே 
குறவோனே குறவனே
குறவோனே குறவனே

முருகனே அழகனே முத்தமிழ் அறிஞனே 
கருணையின் உருவமே இடும்பனே கடம்பனே
எந்தையே சிந்தையே முந்தைய கந்தனே 
விந்தையே எந்தன் சிந்தையில் நின்றோய்