Sunday, October 29, 2023

முத்து ராமலிங்கத் தேவர் துதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/0Su1Wrxq_WU



சிவகங்கைச் சீமையிலே 
வந்துதித்த தேவர் ஐயா
உம் புகழைப் பாடுகிறோம் ...
கண்திறந்து பாரும் ஐயா

கமுதிக்குப் பக்கத்திலே
பசும்பொன்னி்ன் தேவர் ஐயா
முத்துராம லிங்கமென 
இவருடைய பெயரும் ஐயா

உக்கிரபாண்டி தேவருக்கும் 
இந்திராணி அம்மைக்கும்
பிறந்த ஒரே மகனாவார்
முத்துராம லிங்கம் ஐயா

பிறந்த ஆறு மாதத்திலே
தாயை இழந்து தவித்தவராம்
இசுலாமியத் தாயிடமும் 
பால் குடித்து வளர்ந்தாராம்

நேதாஜி நண்பராக
விடுதலைக்குப் பாடுபட்டார் 
தேசியமும் தெய்வீகமும்
எனது இரு கண்கள் என்றார்

செல்வந்தராய் பிறந்தாலும்
எளிமையுடன் வாழ்ந்தவரே
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
தன் சொத்தைக் கொடுத்தாரே

சாதி மத ஒற்றுமையை
வலியுறுத்தி வாழ்ந்தாரே
தெய்வத்திரு மகனாக
மக்கள் மனம் நின்றாரே

சிவகங்கைச் சீமையிலே 
வந்துதித்த தேவர் ஐயா
உம் புகழைப் பாடுகிறோம் 
கண்திறந்து பாரும் ஐயா