இந்த மாதம் என் பிறந்தநாளையொட்டி நான் வாங்கிய மூன்றாம் பரிசுக்குரிய தொகையை குழந்தைகளின் கல்விக்காக எழுத்தேணி அறக்கட்டளைக்குரிய வங்கிக் கணக்கில் இணைய வங்கி மூலமாக அனுப்பியிருக்கிறேன்.
அதோடு என் சம்பளப் பணத்திலிருந்து ஒரு தொகையை செவிவழி தொடுசிகிச்சை குழுமத்திற்கு (http://anatomictherapy.org/) இணைய வங்கி மூலமாக அனுப்பியிருக்கிறேன்.
என்னிடமிருந்த செவிவழி தொடுசிச்சை குறித்த காணொளிகளை (videos) குறுந்தகடுகள் மூலமாக வித்யாசாகர் அண்ணாவின் குவைத் முகவரிக்கும், தங்கை பாமினியின் பிரான்ஸ் முகவரிக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைத்தேன்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை "சீமான் அண்ணாவிற்கு முப்பத்தைந்து வயதாகி விட்டதே விரைவில் அவருக்கு திருமணம் ஆகவேண்டும்" என்று நான் என் அம்மாவிடம் சொன்னதுண்டு. நானும் அவருக்கு திருமணம் ஆகவேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்த சில மாதங்களில் அவருக்கு திருமணம் நடந்தேறியது. கடந்த மார்ச் மாதம் முதல் தங்கை பாமினிக்கு திருமணம் நடைபெற வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்த சில மாதங்களில் அவளுக்கு நிச்சயதார்த்தம் ஆனது. எனக்கு தெரிந்தவரை அடுத்த ஆண்டு அதாவது 2015, ஜூன் மாதத்திற்கு மேல் அவளுக்கும் அவளுடைய வருங்காலக் கணவர் திரு. விஜயரூபனுக்கும் சென்னையில் திருமணம் நடைபெறும்.
பாஸ்கர் ஐயா, உங்களின் ஒரு காணொளியில் நீங்கள் உங்களைப் பற்றி சொன்னபோது மனம் நெகிழ்ந்தேன். நீங்கள் காதலித்து திருமணம் செய்த உங்கள் காதல் மனைவி மனந்திருந்தி உங்களை விரைவில் தேடிவரும்போது அவளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பீர்கள் அல்லது உங்களுக்கு விரைவிலேயே ஒரு நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.
உதவி செய்யும் மனப்பாங்கு உள்ளவர்கள் தாராளமாக எழுத்தேணி அறக்கட்டளை, செவிவழி தொடுசிகிச்சை குழுமம் (Anatomic Therapy Foundation), ஈரநெஞ்சம் போன்ற பல உதவும் உள்ளங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
நன்றி.