விழியத்தைக் காண - https://www.youtube.com/watch?v=I8c_CJBBwtA
எனக்காகப் பிறந்தவளே
என் மனதில் நிறைந்தவளே
உனக்காக நானிருப்பேன்
உன்னுள்ளே நிறைந்திருப்பேன்
ஆண்குழந்தை நமக்கில்லை
ஆனாலும் குறைவில்லை
எனையுன் பிள்ளையென
ஏற்றுக்கொண்ட என்னுயிரே
எனக்குத்தான் பசியென்றால்
துடித்தே தான் சமைக்கின்றாய்
கொஞ்சமெனக்குக் காய்ச்சலென்றால்
நெஞ்சந்தான் பதறுகின்றாய்
சண்டை போட்டுத் திட்டினாலும்
சமாதானம் செய்வதற்கு
முதலில் வந்து நானழுவேன்
பிறகுனையே சிரிக்க வைப்பேன்
இன்றுனக்குப் பிறந்தநாள்
எனக்கின்று சிறந்த நாள்
மனையாளே இனியவளே
வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்