Thursday, August 18, 2022

கிருஷ்ணன் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=Pm6IqpSFhZw


தூய தமிழ் தேசியம் தொடர்பாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தீவிரமான தேடல் எனக்கிருக்கிறது. சற்றுமுன் ஒரே இருப்பில் என்னிடமிருந்த பிறந்த மெட்டும் பாடலும்...

கேட்டு மகிழுங்கள். கிருஷ்ண ஜெயந்தியை மகிழ்வோடு கொண்டாடுங்கள். கிருஷ்ணன் கோனார்களுக்கு மட்டும் சொந்தமில்லை. அவர் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தம். அவர் தமிழர்களான நமக்காகவே பாடுபட்டார்.

இந்தப் பாடல் நன்றாகவே வந்திருக்கிறது. கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள். உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் இந்த காணொளி மற்றும் வலைத்தள இணைப்பை அனுப்பி கேட்டு மகிழச் சொல்லுங்கள். உண்மையான வரலாற்றை உலகம் முழுவதும் பரப்புவோம்.




கண்ணனே மன்னனே கார்முகில் வண்ணனே 
கண்களின் முன்னே வா - நீ 
கண்களின் முன்னே வா - எங்கள் 
எண்ணமே  திண்ணமே ஏழிசை வண்ணமே
எங்களின் முன்னே வா - நீ
எங்களின் முன்னே வா

ஆயனே மாயனே ஆண்களில் அழகனே
ஆசீவகச் சித்தன் வா - நீ
ஆசீவகச் சித்தன் வா - எங்கள் 
ஐயனே மெய்யனே ஐயப்ப சித்தனே
ஐயங்கள் தீர்க்கவே வா - உள்ள
ஐயங்கள் தீர்த்திட வா

குருகுலம் தருகின்ற பொதிகைமலைச் சித்தன்
குருவே சரணம் வா - நீ
குருவே சரணம் வா - இங்கு
கருத்தான கறுப்பான கருத்தண்ண சாமியே
கருத்தினன் நீயே வா - எங்கள்
கிருட்டினன் நீயே வா

கண்ணுக்கு ஒப்பான கண்ணனே கிருஷ்ணனே
கீதம் இசைத்திட வா - உன் 
பாதம் பதித்திட வா - எங்கள்
முன்னவன் தென்னவன் கண்ணவன் கண்ணன்
கண்ணா மன்னா வா - என்
முன்னே முன்னே வா 

புல்லாங் குழலிசை கீதத்தைப் போலவே 
பாட்டினி லிங்கே வா - என்
பாட்டினி லிங்கே வா - எங்கள்
இல்லமெங்கும் உள்ளோர் உள்ளமதில் தங்கும்
இறையே அருளே வா - நீ
இறையே அருளே வா

No comments: