Monday, September 18, 2023

விநாயகர் சதுர்த்தி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/PcFrUapA5AU




ஆசீவக வாழ்வியலின் ஆரம்பம் நீதானே - இங்கு 
ஆனை முகம் கொண்ட எங்கள் ஆண்டவனும் நீதானே 
ஆசிர்வாதம் தருகின்ற அப்பன் எங்கள் பிள்ளையாரே - இவன் 
அருளாலே தொடங்கும் செயல் அனைத்தும் இங்கு வெற்றி தானே 

செட்டியார்கள் செல்வம் கொண்ட தொப்பை கொண்ட கூட்டம் தான் 
சித்தர்கள் அறிவாலே உயர்ந்த தமிழர் கூட்டம் தான் 
செட்டியார்களின் தொப்பை இங்கு பிள்ளையாரின் தொப்பை தான்
சித்தர்களின் அறிவு இங்கு பிள்ளையாரின் யானை முகம்

ஆசீவகச் சின்னந்தானே அறிவான யானையாரே
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையாரின் சிலைதானே 
ஆசீவகத் திருமால் எனும் விஷ்ணு என்ற சித்தர் தான் 
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையார் சிலை வைத்தாரே

சித்தர்கள் பொதுவாக காட்டிற்குள் வாழ்ந்தனரே
மாதத்திற்கு இருமுறையும் ஊருக்குள் வருவாரே
ஆலமர அரசமர நிழலில் தான் அமர்வாரே
மக்களின் பிரச்சனைகளை கேட்டே தீர்வுகள் சொல்வாரே
இதுதானே தமிழரின் ஆசீவக வாழ்வியலே 

பிரச்சனைகளை தீர்க்க வந்த சித்தர்களின் நினைவாக 
இந்த ஆசீவக வாழ்வியலின் வரலாற்றைக் கடத்தத் தான் 
ஆசீவகத் திருமால் எனும் விஷ்ணு என்ற சித்தர் தான் 
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையார் சிலை வைத்தாரே

வி என்ற வார்த்தைக்கு வெற்றி என்ற பொருளுண்டு
வெற்றிக்கு நாயகன் விநாயகரின் அருளுண்டு
பிள்ளையாரை மனதார வேண்டுவோம் அருள் பெறுவோம் 
வெற்றிக்கு எப்போதும் உழைத்தாலே பொருள் பெறுவோம்

No comments: