பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/kIU0N3SQuxQ
நாளை (31-07-2025) என் இளைய மகளும் எங்கள் வீட்டு குட்டி இளவரசியுமான நிறைமதி என்ற நிலா வுக்கு பிறந்த நாள்.
இந்தப் பாடலின் முதல் வரியே "வானம் பூமி எல்லாம் உனை வாழ்த்துகிறதே" என்று தொடங்கியிருக்கிறேன். அனைவரும் என் மகளை வாழ்த்துங்கள்.
உனை வாழ்த்துகிறதே செல்லம்
நானும் நீயும் சேர்ந்தால்
என்றும் துள்ளுவதோ உள்ளம்
அழகு மகள் உள்ளம்
அன்பு பொங்கும் இல்லம்
நிலவும் இங்கே வந்தே
உளவு பார்த்துச் செல்லும்
(வானம் பூமி)
பூக்கள் எல்லாம் கெஞ்சும்
பூமிப்பந்தே கொஞ்சும்
எந்த னன்பு நெஞ்சம்
இவள் காலடியில் தஞ்சம்
(வானம் பூமி)
அன்புமகள் நித்தம்
ஆசையுடன் முத்தம்
கத்துங்கிளியின் சத்தம்
கவிதை மழையாய் கொட்டும்
(வானம் பூமி)
செல்லமகளே நீயே
செல்வம் எனக்குத் தாயே
கொள்ளையழகு நீயே
கொஞ்சும் மழலைத் தாயே
(வானம் பூமி)
பிறந்தநாளில் இன்று
வாழ்த்தும் நெஞ்சம் ஒன்று
அழகு வாழைக்கன்று
அசைந்து ஆடுது இன்று
வானம் பூமி எல்லாம்
உனை வாழ்த்துகிறதே செல்லம்
நானும் நீயும் சேர்ந்தால்
என்றும் துள்ளுவதோ உள்ளம்