பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/xv_M70dpPAI?feature=share
Victory என்ற ஆங்கில வார்த்தை வெற்றி என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உண்டானதே. இன்று விநாயகருக்குப் பிறந்தநாள். இந்தப் பாடலில் வெற்றி என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன். அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகள்.
இந்தப் பாடலை வழிபாட்டுப் பாடலாக
ஒலிக்கச் செய்து நீங்கள் விநாயகரை வணங்கலாம் அல்லது நீங்களே என்னுடைய இந்தப் பாடலை பாடி விநாயகரை வணங்கலாம்.
பற்றிய பிணி போக முற்றிய சனி சாக
வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
செல்வங்கள் தங்கிடவும் சங்கடங்கள் நீங்கிடவும்
உன்னை வணங்குகின்றோம் விநாயகனே
வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
சொந்தங்கள் சேர்ந்திடவும் பந்தங்கள் நிலைத்திடவும்
உன்னை வணங்குகின்றோம் விநாயகனே
வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
நீண்டநாள் நெஞ்சில் நின்ற தேவைகள் பூர்த்தியாக
உன்னை வணங்குகின்றோம் விநாயகனே
வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
தடங்கல்கள் நீங்கி நீங்கி படிக்கட்டாய் மாறிடவும்
உன்னை வணங்குகின்றோம் விநாயகனே
வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
அன்பே என்றென்றும் வீட்டை ஆண்டிடவும்
உன்னை வணங்குகின்றோம் விநாயகனே
வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
உந்தன் அருளாலே எந்தன் பொருள் பெருக
உன்னை வணங்குகின்றோம் விநாயகனே
வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
எண்ணமதில் வெற்றி வெற்றி எங்கும் எதிலும் வெற்றி வெற்றி
வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே