Wednesday, December 21, 2011

பாட்டாளியின் பாடல்

தங்கமே தில்லாலே ஏலே
தங்கமே தில்லாலே

நாடுபோற நிலயப் பாரு
தங்கமே தில்லாலே
நாமெல்லாம் எப்டி வாழ?
தங்கமே தில்லாலே

விலைவாசி ஏத்தத்தால்
தங்கமே தில்லாலே
வெறும்வயிறு பட்டினிதான்
தங்கமே தில்லாலே

விவசாயம் நாங்க செய்றோம்
தங்கமே தில்லாலே
விலைய எவனோ நிர்ணயிப்பான்
தங்கமே தில்லாலே

நாளெல்லாம் நாம் உழைக்க
தங்கமே தில்லாலே
நாணயஸ்தன் போல்நடிப்பான்
தங்கமே தில்லாலே

உண்டுறங்க இடமில்லை
தங்கமே தில்லாலே
ஊழலிலே திளைக்கின்றான்
தங்கமே தில்லாலே

இலவங்கள் தருவதெல்லாம்
தங்கமே தில்லாலே
இளிச்சவாயன் ஆக்கத்தான்
தங்கமே தில்லாலே


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

2. இராணி - 22-01-2012

3. பதிவுகள் (இணைய இதழ்) - 27-04-2012

1 comment:

vetha (kovaikkavi) said...

தங்களுக்குப் புதுவருட வாழ்த்து தங்கமே தில்லாலே..
தங்களுக்குப் பொங்கல் வாழ்த்து தங்கமே தில்லாலே..
என்ன மௌனம் தங்கமே தில்லாலே....
நலமாக உள்ளீர்களா தங்கமே தில்லாலே...
கவிதைக்கு வாழ்த்து தங்கமே தில்லாலே..
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com