2014ல் கடைசியாக கவிதை எழுதியது. அதன்பிறகு தானாக நின்று போனது. ஏனெனில், நான் வெளியிடட இரு நூல்களுக்கும் உரிமை ஆசிரியருக்கு
என்று இரு நூல்களின் இரண்டாம் பக்கத்தில் அச்சிட்டு அதற்குரிய பணத்தையும்
வாங்கிக் கொண்டு நூல்கள் வெளியிட்டு இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து
முறைகேடான முறையில் அரசு அதிகாரிகளை கையூட்டு பெறவைத்து நூலாணையை பெற்று
என் பெயருக்கு களங்கம் விளைவித்து என்னுடைய அந்த இரு நூல்களையும் புதிதாக
"முதல் பதிப்பு" என அச்சிட்டு அவற்றை விற்று காசு பார்ப்பவை தான்
பெரும்பாலான பதிப்பகங்கள்.
கடந்த 2014 தொடங்கி மூன்றாண்டுகளில் நிறைய அலைபேசி அழைப்புகள். அவற்றில் "நான் புதிதாக கவிதைநூல் வெளியிடவிருக்கிறேன். தங்கள் இருநூல்கள் வெளியிட்ட அந்த பதிப்பகம் மூலம் வெளியிடலாமா? அவர்கள் தான் நூலணையின் மூலம் நமது நூல்களை அரசு நூலகங்களில் வைக்க ஏற்பாடு செய்கிறார்களாமே" என்று கேட்டனர். "ஏமார்ந்து விடாதீர்கள். உங்கள் நூல்களை யார் சந்தைப் படுத்துவதற்கு உதவுகின்றனரோ, யார் உங்களை ஏமாற்றாமல் செய்து தருகின்றனரோ, யார் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த மாடடார்களோ அவர்களிடம் போய் அச்சிட்டுக் கொள்ளுங்கள். இதற்கு பேசாமல் நீங்களே ஒரு பதிப்பகம் தொடங்கி அச்சிட்டுக் கொள்ளலாம்." என்றே கேட்பவர்களிடமெல்லாம் சொன்னேன்.
2014ல் எனக்கு துரோகம் செய்த
அந்த பதிப்பக உரிமையாளனை மின்னஞ்சல் ஊடாக பத்து பேர் முன்னிலையில்
தொடர்புகொண்டு நியாயம் கேட்டேன். "நீ அறிமுக எழுத்தாளன். என்
வடிவமைப்புதான் சிறந்தது." என்று என்னை மட்டந்தட்டி தன்னை பெருமை அடித்துக் கொண்டான் அந்த பதிப்பக
உரிமையாளன். அந்த பத்துப் பேரில் ஒருவன் "எல்லா பதிப்பகங்களும்
இப்படித்தான். எல்லோருமே இப்படித்தான்." என்று சொன்ன, சாமி வணக்கமுங்க, அரைகுடத்தின் நீரலைகள் என்றெல்லாம்
எழுதிய ஒருவனும் கூட அப்படித்தான் என்று அதன்பிறகு தான் புரிந்துகொண்டேன்.
இந்த துரோகத்தையும் துரோகிகளையும் மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் என்
மனதிற்கு மூன்றாண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது போல.கடந்த 2014 தொடங்கி மூன்றாண்டுகளில் நிறைய அலைபேசி அழைப்புகள். அவற்றில் "நான் புதிதாக கவிதைநூல் வெளியிடவிருக்கிறேன். தங்கள் இருநூல்கள் வெளியிட்ட அந்த பதிப்பகம் மூலம் வெளியிடலாமா? அவர்கள் தான் நூலணையின் மூலம் நமது நூல்களை அரசு நூலகங்களில் வைக்க ஏற்பாடு செய்கிறார்களாமே" என்று கேட்டனர். "ஏமார்ந்து விடாதீர்கள். உங்கள் நூல்களை யார் சந்தைப் படுத்துவதற்கு உதவுகின்றனரோ, யார் உங்களை ஏமாற்றாமல் செய்து தருகின்றனரோ, யார் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த மாடடார்களோ அவர்களிடம் போய் அச்சிட்டுக் கொள்ளுங்கள். இதற்கு பேசாமல் நீங்களே ஒரு பதிப்பகம் தொடங்கி அச்சிட்டுக் கொள்ளலாம்." என்றே கேட்பவர்களிடமெல்லாம் சொன்னேன்.
No comments:
Post a Comment