Saturday, June 1, 2019

என் பெயருக்குப் பின்னால் சேர்வை என்ற சாதிப்பெயர் எதற்கு?

நரேந்திர மோடி என்பரை நாம் மோடி என்று அவருடைய சாதிப்பெயரை வைத்துத்தான் அழைக்கிறோம்.

ராகுல் என்ற ஒருவரை அவருடைய சாதிப்பெயரான காந்தி என்பதனை சேர்த்து ராகுல் காந்தி என்றே அழைக்கிறோம்.

நம் மாநிலத்தின் பக்கத்து மாநிலமான கேரளாவிலிருந்து வரும் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்களின் பெயருக்குப் பின்னால் மேனன் என்றும் நாயர் என்றும் தங்களின் ஜாதிப்பெயர்களை இட்டுக்கொள்வதை நாம் பார்க்க முடிகிறது. உதாரணமாக லட்சுமி மேனன், கௌதம் வாசுதேவ மேனன், சுவேதா மேனன், கார்த்திகா நாயர்.

வெளிநாடுகளில் taylor (tailor), cook என்று முடியும் பெயர்கள் மிகப் பிரபலம். taylor என்பதற்கு தையற்காரன் என்று பொருள். cook என்பதற்கு சமையற்காரன் என்று பொருள்.

இப்படி எல்லா இடங்களிலும் சாதிப்பெயரை தங்களின் பெயருக்குப் பின்னால் இட்டு தங்களின் தேசிய இன வரலாற்றை தங்களின் அடுத்த தலைமுறையினருக்கு கடத்துகின்றனர்.

நான் தமிழன் என்பதற்கான அடையாளம் என் குலம் மற்றும் குடிப் பெயரான அகமுடையான் எனும் சேர்வை.

தமிழர் யார் தெலுங்கர் யார் கன்னடர் யார் மலையாளி யார் என்று அறிந்து கொள்வதற்கு குலம் மற்றும் குடிகளை உள்ளடக்கிய ஜாதிப்பட்டம் அவசியம்.

தமிழர்கள் தங்களின் சாதிப்பெயரை மறந்ததே தங்களின் வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனதற்கான காரணம்.

பறையன் என்றால் சாதிவெறி அல்ல. கோனார் என்றால், நாடார் என்றால், பள்ளர் என்றால்,  கவுண்டர் என்றால் தேவர் என்றால் கள்ளர் என்றால் மறவர் என்றால் உடையார் என்றால் வன்னியர் என்றால் சாதிவெறி அல்ல. இவையெல்லாம் நாம் தமிழர் என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.

வெங்காய ராமசாமியின் சாதி ஒழிப்பு என்ற சதித்திட்டம் குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.

- முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை

No comments: