Saturday, May 8, 2021

என் மகள் ரிதன்யா

பிறந்தநாள் வாழ்த்து
=====================

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=UyVIWx3gH_o

இன்று (09-05-2021) தன்னுடைய ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும் என்னன்பு மகள் ரிதன்யாவை வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்

முனைவென்றி நா. வேல்முருகன் - ஆனந்தி ( அப்பா - அம்மா ), 
த. நாகராசன் - கமலம் ( அப்பப்பா - அப்பம்மா ),  
அ. சந்திரமோகன் - அனுசுயா ( அம்மப்பா - அம்மம்மா ), 
சு. சோபனா - நே. சுரேந்தர் ( அத்தை - மாமா ), 
தங்கை நிறைமதி, 
சு. விஷ்ணு ( அத்தை மகன் ), 
சு. பிரகதி ( அத்தை மகள் ), 
மற்றும் உற்றார் உறவினர்.


என் மகள் ரிதன்யாவைப் பற்றி ஒரு முக்கியமான செய்தி.

நான் யார் யாரிடம் அன்பை எதிர்பார்த்து நின்றேனோ, அவர்களின் மொத்த உருவமாய் இப்போது என்னோடு இருக்கும் ஒரு உன்னத ஆன்மா என் மகள் ரிதன்யா.

நான் என் கடந்த காலங்களில் என் அன்புக்குரியவர்களிடம் பேசிய வார்த்தைகளை நான் ரிதன்யாவிடம் பகிர்ந்துகொள்ளாமலேயே அதே வார்த்தைகளை என்னிடம் அவள் பேசுகிறாள். உதாரணத்திற்கு, 

"அப்பா, என்ன செல்லங்கொஞ்சு அப்பா"
"அப்பா, உன் மடியிலேயே படுத்துக்கணும் அப்பா"
"அப்பா, எங்கப்பா போற, என் கூடவே இரு அப்பா, எங்கேயும் போகாத அப்பா"
"அப்பா, என்மேல கோபமா இருக்கியா அப்பா"
இன்னும் பல...

ஒவ்வொரு அப்பாக்களுக்கும்  தங்களுடைய கலப்படமில்லாத தூய்மையான அன்பால் மயிலிறகு கொண்டு வருடி விடுவது போல கடந்த கால ஆறாத வடுக்களை, இரணங்களை, தோல்விகளை தேவையில்லாத நினைவுகளை மறக்கடிக்க இந்த பிரபஞ்ச சக்தி அனுப்பி வைத்த தேவதைகள் மகள்கள். ( இதை எழுதும்போதே கண்களில் கண்ணீர் ததும்ப ஆனந்தத்தில் மிதந்தபடி...)


தத்தைமொழி பேசுகின்ற கத்துங்கிளித் தேனே 
அத்தமக பெத்தெடுத்த முத்துச்சிப்பி தானே
முத்துமணி இரத்தினமாய் முத்தந்தரு மானே
கொத்துமலர் அற்புதத்தைப் பெற்றவனும் நானே 

கண்ணெதிரே நின்றொளிரும் காலைக்கதிர் நீயே
மண்ணுலகில் நின்றுலவும் மங்கைமதித் தாயே
உன்னுருவில் என்னுருவை உணரவைத் தாயே
என்னுலகில் வெண்ணிலவாய் உலவுமன்புச் சேயே 

தங்கமதை அங்கமதில் சூட்டியது போலே 
மங்கைமதிக் கங்கைநதி மனதில் நிறைந் தாளே 
குங்குமமாய் மங்களமாய் குலதெய்வம் போலே 
எங்களோடு சங்கமித்தாய் என்னுதிரம் போலே 

அழகுமகள் பழகுந்தமிழ் ஆசையுடன் கேட்டு 
புலருமதி காலையிலே புத்தம்புது பாட்டு 
மலருமிந்த மலர்களுமே நுகருமின்பக் காற்று 
மழலையிவள் நிலவைவிட அழகென்றே போற்று

சித்தமதில் புத்தம்புது சிந்தனையாய் நின்று 
நித்தமொரு பாட்டிசைப்பேன் நிலவுமுகம் கண்டு 
சத்தமின்றி ஏழைக்கிங்கு உதவினாலே இன்று
எத்தனையோ கணக்கில்லா இறைக்காற்றும் தொண்டு

1 comment: