செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி - https://youtu.be/vX75x_3C_to
நான் எடுத்த புகைப்படங்கள் - https://photos.app.goo.gl/xz5aLpKWJJcH9J3T7
நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு.
செய்தி.
நேற்று முன்தினம் நானும் என் மாமா மங்களசாமியும் என் ஊர் முனைவென்றியிலுள்ள முதுமக்கள் தாழி கண்டெடுக்கப் பட்ட இடத்தைத் தேடிப் போனோம். அந்த இடம் கடைசியில் எங்கள் வண்ணான் கண்மாய் வயலுக்கு மிக அருகாமையில் 300 முதல் 400 அடி தூரத்தில் வண்ணான் கண்மாயின் நீட்சியாக ஆவடியாத்தான் கண்மாயில் பார்த்தோம்.
எங்கள் வயலுக்கு வண்ணான் கணமாயில் என்னுடைய சிறுவயதில் நானும் என் அப்பாவும் ஏற்றம் வைத்து நீர் இறைத்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி நெல், பருத்தி, மிளகாய் போன்றவை பயிரிட்ட பழைய நினைவுகள் தோன்றுகின்றன இப்போதும்.
எங்கள் வயலைத் தாண்டிச் செல்லும்போது என் மாமா சொன்னார் "இதற்குப் பெயர்தான் கொழஞ்சித் திடல். கொழஞ்சி என்பது ஒரு செடி. வயலுக்கு இயற்கை உரம். நம்மூர் விவசாயிகள் என்னுடைய சிறுவயதில் இந்தக் கொழஞ்சிச் செடிகளைத் தான் உரமாகப் பயன்படுத்த இங்கிருந்து அறுத்துக் கொண்டு போவோம். அப்போதெல்லாம் இயற்கை உரமாக இந்தச் செடி தான்."
முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் விற்காமல் கிடந்த வெடி மருந்துகளை உரமென்றும் பூச்சிக்கொல்லி என்றும் இந்திய அரசாங்கத்தின் துணையோடு பசுமைப் புரட்சி என்ற பெயரில் விற்பனை செய்து நாம் விளைவிக்கும் உணவுப் பொருட்களை உரம், பூச்சிக்கொல்லி என விசமாகவே விளைவிக்கிறோம்.
கொழஞ்சித்திடல் அருகே வண்ணான் கண்மாயின் தொடர்ச்சியான ஆவடியாத்தான் கணமாயில் நான் எடுத்த புகைப்படங்கள்.
No comments:
Post a Comment