Friday, March 14, 2025

பால புரஸ்கார் விருதாளர் ஐயா மு. முருகேஷ் உடனான சந்திப்பும் இலக்கியவாதிகளின் என்னுடைய சில கேள்விகளும்...

நான் கடந்த 2023 ஜனவரி முதல் வாரம், கவிஞரும் நண்பருமான தம்பி வாலிதாசனால் அழைக்கப்பட்டு பச்சையப்பன் கல்லூரி கவிதை பயிற்சிப் பட்டறையில் ஒரு பார்வையாளனாக என் இளைய மகள் நிறைமதியுடன் கலந்துகொண்டேன். கலந்து கொண்ட நான்கு மணி நேரங்களில் அங்கு மேடையில் பேசிய ஐயா மு. முருகேஷ் உட்பட அனைவரும் தி. மு. க வை புகழ் பாடி, முதல் அமைச்சர் ஸ்டாலினை புகழ் பாடி திராவிட ஆதரவாளர்களாக இருந்ததைக் கண்டு மனதளவில் வேதனை அடைந்தேன். 

இன்னும் பலர் தலித்திய ஆதரவாளர்களாக இருந்தனர். 

தலித்தியம், திராவிடம், தான் வளர்ப்பு மகளையே திருமணம் செய்த வெங்காய ராமசாமி போன்ற எல்லாமே தமிழர்களை மறைமுகமாக அழிக்கப் பிறந்த சித்தாந்தங்கள்.

மத்திய அரசின் பால புரஸ்கார் விருது வாங்கிய ஐயா மு. முருகேஷ் மேடையேறுவதற்கு முன் பேசும்போது "இசைப் பாடகர் கவிஞர் முனைவென்றி நா. சுரேஷ்குமார்" என்று என்னையும் இரண்டு முறை மேற்கோள் காட்டிப் பேசினார். ஆனால், அவரும் திராவிட ஆதரவாளர் என்று அறிந்தவுடன் மிகவும் மன வேதனை அடைந்தேன்.

அதன் பிறகு சில தினங்கள் கழித்து பச்சையப்பன் கல்லூரி குறித்தான whatsapp குழுமத்தில் இருந்த அனைவரையும் என்னுடைய "தமிழினத்தின் வேர்தேடி..." என்ற என் குழுமத்தில் இணைத்துக் கொண்டேன்.
நம் இந்த குழுமத்தில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த திராவிட, தலித்திய ஆதரவாளர்கள் அனைவரும் இணைந்திருக்கின்றனர்.

அதில் சிலர் இந்த நம் whatsapp குழுவை விட்டு வெளியேறி விட்டனர்.

விழிப்புணர்வில்லாத அந்த திராவிட, தலித்திய, வெங்காய ஆதரவாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே என்னால் முடிந்த தூய தமிழ் தேசியக் கருத்துகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

இலக்கியம் என்பது மொழியை வைத்து பொழுதுபோக்குவது அல்ல, பிழைப்புவாதம் அல்ல. 

இலக்கு + இயம் - ஒரு இலக்கை எடுத்து இயம்புதல், கூறுதல்.

இலக்கியம் என்பது அந்த மொழியையும் மொழி பேசும் இனத்தையும் உள்ளன்போடு நேசிப்பதுமே ஆகும்.

இன்று இலக்கியம் என்பது தமிழர்களை அழிக்க வந்த ஆளும் திராவிட, பிராமண சக்திகளை புகழ் பாடுவதும் அவர்களின் காலடி தொழுவதுமாகிப் போனதும் தான் வேதனை.

இலக்கியம் என்பது தூய தமிழ் தேசியத்தை காக்கும் விதமாக இயங்க வேண்டும். மாறாக அந்த இனத்தின் அழிவிற்கு துணை போகும் கூட்டத்தை ஆதரிக்குமெனில், இனம் அழிந்து மொழி எப்படி வாழும்? மொழி இல்லாமல் இலக்கியத்தின் பயனென்ன?

Sunday, March 2, 2025

என் விழியில் பூவாக - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtube.com/shorts/08mibC8f0IU?feature=share



என் விழியில் பூவாக
நீ மலர்கிறாய்
என் செவியில் தேனாக
நீ பாய்கிறாய்

கனவு முழுதும் கலைந்து போக 
கவிஞன் மனமும் கவிதை பாட
நினைவு முழுதும் உன்னைச் சேர்க்க
நிலவும் வந்து உளவு பார்க்க 

என் விழியில் பூவாக
நீ மலர்கிறாய்
என் செவியில் தேனாக
நீ பாய்கிறாய்
---

கண் திறந்து பார்த்தாலே
எதிரில் நிற்கிறாய்
என் வானில் நிலவாக 
நீ தோன்றினாய்

உறவு என்று உன்னைத்தேட
உலகம் என்று உன்னை நாட 
மலர்கள் மீது பார்வை செல்ல
மனமும் முழுதும் மகிழ்வில் துள்ள 

கண் திறந்து பார்த்தாலே
எதிரில் நிற்கிறாய்
என் வானில் நிலவாக 
நீ தோன்றினாய்
---

பால் வண்ணம் மாறாமல்
பாசம் கொள்கிறாய்
வேல் விழியால் என் நெஞ்சை 
குத்திச் செல்கிறாய் 

வெல்லம் உன்னை செல்லம் கொஞ்ச
உள்ளம் எங்கும் வெள்ளம் ஆக
கள்ளம் இல்லா உள்ளம் நீயே 
கொள்ளை அழகு கொஞ்சும் தாயே

பால் வண்ணம் மாறாமல்
பாசம் கொள்கிறாய்
வேல் விழியால் என் நெஞ்சை 
குத்திச் செல்கிறாய் 
---

என் இதயம் முழுதாக 
நீ நிறைகிறாய் 
என் தேசம் எங்கெங்கும்
நீ விரைகிறாய்

மரணம் என்று ஒன்றும் இல்லை 
மனதில் காதல் கொண்ட பிள்ளை 
பயணம் தொடரும் கவலை இல்லை
பாசம் பொங்கும் அன்பின் எல்லை 

என் இதயம் முழுதாக 
நீ நிறைகிறாய் 
என் தேசம் எங்கெங்கும்
நீ விரைகிறாய்
---