Sunday, March 2, 2025

என் விழியில் பூவாக - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtube.com/shorts/08mibC8f0IU?feature=share



என் விழியில் பூவாக
நீ மலர்கிறாய்
என் செவியில் தேனாக
நீ பாய்கிறாய்

கனவு முழுதும் கலைந்து போக 
கவிஞன் மனமும் கவிதை பாட
நினைவு முழுதும் உன்னைச் சேர்க்க
நிலவும் வந்து உளவு பார்க்க 

என் விழியில் பூவாக
நீ மலர்கிறாய்
என் செவியில் தேனாக
நீ பாய்கிறாய்
---

கண் திறந்து பார்த்தாலே
எதிரில் நிற்கிறாய்
என் வானில் நிலவாக 
நீ தோன்றினாய்

உறவு என்று உன்னைத்தேட
உலகம் என்று உன்னை நாட 
மலர்கள் மீது பார்வை செல்ல
மனமும் முழுதும் மகிழ்வில் துள்ள 

கண் திறந்து பார்த்தாலே
எதிரில் நிற்கிறாய்
என் வானில் நிலவாக 
நீ தோன்றினாய்
---

பால் வண்ணம் மாறாமல்
பாசம் கொள்கிறாய்
வேல் விழியால் என் நெஞ்சை 
குத்திச் செல்கிறாய் 

வெல்லம் உன்னை செல்லம் கொஞ்ச
உள்ளம் எங்கும் வெள்ளம் ஆக
கள்ளம் இல்லா உள்ளம் நீயே 
கொள்ளை அழகு கொஞ்சும் தாயே

பால் வண்ணம் மாறாமல்
பாசம் கொள்கிறாய்
வேல் விழியால் என் நெஞ்சை 
குத்திச் செல்கிறாய் 
---

என் இதயம் முழுதாக 
நீ நிறைகிறாய் 
என் தேசம் எங்கெங்கும்
நீ விரைகிறாய்

மரணம் என்று ஒன்றும் இல்லை 
மனதில் காதல் கொண்ட பிள்ளை 
பயணம் தொடரும் கவலை இல்லை
பாசம் பொங்கும் அன்பின் எல்லை 

என் இதயம் முழுதாக 
நீ நிறைகிறாய் 
என் தேசம் எங்கெங்கும்
நீ விரைகிறாய்
---

No comments: