Tuesday, July 22, 2014

அமெரிக்க சுதந்திரதேவி சிலையின் மர்மம்

என்னுடைய சிறுவயதில் என் தாத்தா கடைகளில் அமர்ந்துகொண்டு மற்றவர்களோடு பேசும்போது "அமெரிக்கா தான் இரண்டு பக்கமும் சிண்டு மூட்டி விட்டு குளிர்காய்கிறது. தீவிரவாதம் வேண்டாம் என்று சொல்வதும் பிறகு அவர்களே தீவிரவாதத்தில் ஈடுபடுவதும் என தந்திரங்களை மேற்கொள்கிறது." என அவரை கடந்து போனபோதெல்லாம் இப்படி அமெரிக்காவை பற்றி அவர் பேசியதெல்லாம் அப்படியே பதிவுகளாக கடந்த சில நாட்கள் வரை இருந்தன.



ஆனால், கடந்த சில நாட்களாக மருத்துவ அறிஞர் பாஸ்கர் ஐயா அவர்கள் பேசிய "உலக அரசியல்" காணொளிகளை கேட்கக் கிடைத்தபோது பல தெரியாத தகவல்களை தெரிந்துகொண்டேன். அமெரிக்கா எந்த நாட்டையும் கட்டுப்படுத்தவில்லை. "அமெரிக்காவையே ஒரு குழு பின்னாலிளிருந்து இயக்கி வருகிறது. நாம் வசிக்கும் கோளான பூமியை, இங்குள்ள அனைத்து நாடுகளையும் இயக்கி, இயக்க முயற்சித்து வரும் ஒரு தீய சக்தி இருக்கிறது." என ஐயா பாஸ்கர் இந்த காணொளிகளின் மூலம் தெரிவித்திருக்கிறார். இவர் பேசிய ஒன்பது பாகங்களையும் கேட்டு விட்டேன். அதிர்ந்தேன். என் மூளைக்குள் இருக்கும் அனுபவ உரைகல்லின் மூலம் இவர் சொன்ன செய்திகளையெல்லாம் உரசிப் பார்க்க வேண்டும். என் மூளைக்குள் உள்ள சோதனைக்குழாய்க்குள் இவர் சொன்ன தகவல்களையெல்லாம் போட்டு குலுக்கிப் பார்க்க வேண்டும்.

உலக அரசியல் - http://anatomictherapy.org/tworld-poltics.php

பாகம் ௧ - https://www.youtube.com/watch?v=YWCzZYO6Sgs

பாகம் ௨ - https://www.youtube.com/watch?v=vHFf-sKpcEY

பாகம் ௩ - https://www.youtube.com/watch?v=9H2SY-neU8Y

பாகம் ௪ - https://www.youtube.com/watch?v=KPPlY532U44

பாகம் ௫ - https://www.youtube.com/watch?v=qQwvMPM3kHc

பாகம் ௬ - https://www.youtube.com/watch?v=pIe9uKm2eHM

பாகம் ௭ - https://www.youtube.com/watch?v=oJM1lpir5lg

பாகம் ௮ - https://www.youtube.com/watch?v=0uWAf2y0Vc8

பாகம் ௯ - https://www.youtube.com/watch?v=Lp_6BaThVKc

இந்த படத்தை பார்த்தால் புரியும். "இந்த உலகில் உள்ள அனைவரும் எதுவரை யோசிக்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி வாழ வேண்டும், நாம் என்ன உண்ண வேண்டும், நாம் எதனை கல்வி என கற்க வேண்டும் என அந்த மறைமுக மனிதர்கள் முடிவெடுக்கிறார்கள். அவர்கள் இதுவரை நேரடியாக இயங்கியதில்லை. மறைமுகமாகவே இயங்குகிறார்கள்." என தெரிய ஆரம்பித்திருக்கிறேன்.



"பணம் பாதாளம் வரை பாயும்" என்ற நம் முன்னோர்களின் வாக்கை கடந்த சில நாட்களில் தான்  முழு அர்த்தத்தையும் உணர ஆரம்பித்திருக்கிறேன்.

நான் பெரிதும் மதிக்கும் அமரர் எம். எஸ். உதயமூர்த்தி ஐயா அவர்களும் அமெரிக்காவில் தொழிலதிபராக பல காலமாய் வாழ்ந்தவர். இவர் பலருக்கும் பரிச்சயமான எழுத்தாளர். இவர் சமூக அக்கறை உள்ளவர். இவருக்குக் கூடவா அந்த மறைமுக மனிதர்களை பற்றி தெரிய வாய்ப்பில்லாமல் போனது. தெரிந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு இடத்தில் சொல்லாமல், எழுதாமல் இருந்திருக்க மாட்டாரே என்ற எண்ணம் மனதில் உதிக்கிறது.

இந்த படத்தை பாருங்கள். DNA வரைபடம் இந்த சுற்றப்பட்ட பாம்பை அடிப்படையாகக் கொண்டு கணினியில் வடிவமைக்கப் பட்டதாக sofware program என இந்த காணொளியில்  சொல்கிறார்கள். ஆக DNA இப்படித்தான் இருக்கும் என்பது கண்டுபிடிப்பல்ல, இது திட்டமிட்டு செய்யப்பட்ட வடிவமைப்பு என எண்ணம் வலுக்கிறது. https://www.youtube.com/watch?v=Eu3oN9sQwTQ இன்னமும் இதுபோன்ற காணொளிகளை நான் முழுமையாக பார்க்கவில்லை. பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். நாம் பள்ளியில், கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் படித்தவற்றையெல்லாம் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. ஏனெனில் நாம் கற்ற கல்வியே நம்மை வழிநடத்துகிறது.



இந்த காணொளியை பாருங்கள். https://www.youtube.com/watch?v=IxNw8OhmVZE
அமெரிக்க குடியரசு தலைவர் ஜான் கென்னடி பேசிய உரை. அவர் மறைமுகமாகத் தான் அந்த இரகசிய மனிதர்களை பற்றி பேசியிருக்கிறார். ஆனால், அவர் கொல்லப்பட்டார்.

இன்னும் பல மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன.

நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம்? என்றே தலை சுற்றுகிறது.

அலைபேசியில் நாம் பேசுவன, இணையம் வழி நாம் பேசுவன என தொடங்கி இவை அனைத்தும் satellite, database server மூலமாக அவர்களால் கண்காணிக்கப் படுகிறதா? நாம் நம் குழந்தைகளுக்கு அனுமதிக்கும் தடுப்பூசிகள் மூலமாக நம் வருங்கால சந்ததி பாதிக்கப் படுகிறதா, மனித இனம் மறைமுகமாக அழிக்கப்படுகிறதா? என பலவிதமான கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

அந்த மறைமுக குழுவை பற்றி ஏன் இதுவரை யாரும் இங்கு சொல்லவே, எழுதவே இல்லை என வருத்தமாக இருக்கிறது.

தயவு செய்து இந்த மின்னஞ்சலை உங்களை எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு அனுப்புங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள்.

என் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் அன்பர்கள், இந்த மின்னஞ்சலை படித்து முழுமையாய் படித்து மற்றவர்களிடம் பகிர்ந்து பகிரச் சொல்லி ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறேன்.

இங்கு எல்லா உணர்வுகளுக்கும் அடிநாதமாக, அந்தமாக விளங்கக் கூடியது அன்புதான். எல்லா உணர்வுகளின் கடைசி புள்ளி அன்பு தான்.

இந்த அன்பும் கருணையும் மனித நேயமும் எங்கும் பெருகினால் நமக்கு அளவுகடந்த மகிழ்ச்சி தான்.

௨௦௦௮ ல் நான் எழுதிய ஒரு கவிதையின் கடைசி சில வரிகள்

மனிதநேயத்தின் எல்லைக்கோடுகள்
பிரபஞ்சமாகும் நாள் 
எப்போது வரும்?

Sunday, July 20, 2014

௨௦௦௬ (2006) தினமலரில் பாண்டிலக்ஷ்மி அக்கா பெயரில் என் கவிதை...

௨௦௦௬ (2006) தினமலரில் என் அக்கா பாண்டிலக்ஷ்மி பெயரில் நான் எழுதி வெளிவந்த என் கவிதை.

௨௦௦௬ ம் ஆண்டு என் பட்ட மேற்படிப்பின் நான்காம் பருவ தேர்வு விடுமுறை. விடுமுறை நாட்களில் இப்படி என் பெயரிலும் என்மீது அன்பு கொண்டவர்களின் பெயரில் என் கையெழுத்தை மாற்றியும் எழுதி அனுப்பி அவை தினமலரில் பிரசுரமாவதை பார்த்து மகிழ்ந்தேன்.

சில மாதங்கள் கழித்து, சரவணராஜ் அண்ணாவை அலைபேசியில் அழைத்தபோது அவர் சொன்னார் "என் கவிதை வெளிவந்ததற்கு பக்கத்தில் அந்த பெண் பாண்டிலக்ஷ்மி எழுதிய கவிதையொன்று வெளிவந்திருக்கிறது." என்று.

நான் சொன்னேன் "அந்த கவிதையை அவள் பெயரில் நான் தான் எழுதி அனுப்பியிருந்தேன்." என்று.

இப்படி என்மீது அன்பு கொண்டவர்கள் என் ஆழ்மனதில் ஆழமாய் பதிந்து போகிறார்கள்.

என் பாண்டிலக்ஷ்மி அக்கா என்னிடம் அடிக்கடி சொல்வாள் "எதையும் யோசிக்காதப்பா" என்று.

சமீப காலங்களில் அவளை நினைவுபடுத்தும் விதமாக என் தங்கை பாமினி என்னிடம் ஸ்கைப், முகநூல் அல்லது அலைபேசி என ஏதாவதொன்றில் பேசி முடிக்கும்போது "யோசிக்காம இருங்க அண்ணா" என்றே சொல்வாள்.

என் வாழ்வில் நடந்த இரண்டு நிகழ்வுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

௨௦௦௬ ம் ஆண்டில் ஒருநாள் இரயிலில் பயணப்பட அந்த நிலையத்திற்கு போனேன். அங்கு பாண்டிலக்ஷ்மி அக்காவும் அமர்ந்திருந்தாள். ஏற்கனவே சில நாட்களாக என்னிடம் ஏதோ கோபத்தில் பேசாமல் இருந்தாள். அப்போது தான் என் நினைவிற்கு வந்தது நான் இன்னும் பயணச்சீட்டு எடுக்கவில்லை என்பது.

பயணச்சீட்டு எடுப்பதற்காக விரைந்தேன். நான் எழுந்து நடப்பதை அக்கா பார்த்து விட்டு அவள் என்னிடம் பேசாமல் இருப்பதால் நான் கோபத்தில் கிளம்புவதாக நினைத்துக் கொண்டு அவள் உடனிருந்த தங்கை மகாலக்ஷ்மியிடம் "சுரேஷ் கோபத்தில் போகிறது. என்ன ன்னு கேளு" என்றபடி மகாலக்ஷ்மி என்னை நோக்கி வேகமாக ஓடிவர அவள் பின்னால் பாண்டிலக்ஷ்மி அக்கா ஓடிவந்தாள்.

மகாலக்ஷ்மி என்னை அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பி நின்று "பயணச்சீட்டு எடுக்க மறந்துட்டேன் ப்பா. அதான் எடுக்க போறேன். எடுத்துட்டு வந்துருவேன். லூசுங்களா எதுக்காக இப்டி ஓடி வர்றீங்க?" என்றபடி பாண்டிலக்ஷ்மி அக்காவின் முகம் பார்த்தேன். அவள் என்மீதுள்ள கோபத்தில் என்முகம் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். "நான் பாண்டிலக்ஷ்மி அக்காவின் மீது கோபமாகத்தான் எழுந்து நடக்க ஆரம்பித்தேன்" என நினைத்துத்தான் இருவரும் ஓடிவந்தார்கள் என புரிந்துகொண்டேன்.

௨௦௦௫ ம் ஆண்டில் ஒருநாள் ஏதோவொரு சூழலில் என் பாண்டிலக்ஷ்மி அக்கா காதலித்த அந்த என் அத்தானைப் பற்றி அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் என்னிடம் சொன்னாள். அந்த அவளின் முகம் என் ஆழ்மனதில் இன்றும் கண்ணீரோடு கலந்திருக்கிறது.

என் பாண்டிலக்ஷ்மி அக்கா என் அத்தானை எப்படியெல்லாம் நேசித்திருப்பாள் என்ற அந்த தாக்கத்தில் பிறந்த கவிதையே “அவள் உயிர் அழுகிறது” -  http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2011/09/blog-post_653.html

இதே தாக்கத்தில் நான் எழுதி வைத்திருக்கும் ஒரு கவிதைநூல் "உள்ளம் உருக்கிப் போனாயடா..."

௨௦௦௫ ல் என் பாண்டிலக்ஷ்மி அக்கா என்னிடம் அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் என்னிடம் அவளின் காதலனை அதாவது என் அத்தானைப் பற்றி சொன்னபோது அவள் சொன்னாள் "இந்நிகழ்வை இனி நான் நினைவுபடுத்த விரும்பவில்லை. நீயும் என்னிடம் இனி நினைவுபடுத்தாதே ப்பா. பிறகு என்னால் தாங்கிக்கொள்ள முடியாது." என்றாள்.

என்னிடம் அன்புகொண்ட இவள் போன்றவர்கள் அவ்வப்போது என்னிடம் பேசினால் எனக்கு எந்த வலியும் தாக்கமும் தெரியாது. ஆனால், யாரும் அப்படி இருப்பதில்லை. மனிதர்கள் காலப்போக்கில் மறந்துபோகிறார்கள். மனிதர்கள் காலப்போக்கில் மாறிப்போகிறார்கள். இதனாலேயே மனதில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக "யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்" என அவள் சொன்னதையும் மீறி பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

என் காதலை சேர்த்து வைக்க ஆசைப்பட்டவள் அவள்.

அவளுக்கு நான் எழுதிய சில கவிதைகளில் ஒரு கவிதையில் சில வரிகள்.

படிப்பதில் படுசுட்டி தான் - அன்பால்
துடிப்பதில் படுகெட்டிதான்

நான் என்னிடம் பழகிய பலருக்கும் அவர்கள் கேட்காமலேயே எழுதிக் கொடுத்திருக்கிறேன். சமீபத்தில் என் தங்கை பாமினிக்கு அவள் தன் கவிதைநூலிற்கு வாழ்த்துச்செய்தி கேட்டு நான் கவிதையாக எழுதிக் கொடுத்த கவிதைகள் வரை அனைத்தும் அவரவர் பத்திரமாக வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

அதே சமயத்தில் என் இப்படி என்னோடு பழகிய சகோதர சகோதரிகளுக்காக, தோழிக்காக, என் தங்கச்சி பாப்பா சோபனாவிற்காக என நான் எழுதிய கவிதைகளை, அவர்கள் பெயர்களில் நான் எழுதி வெளிவந்த கவிதைகளையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். ஏனெனில் இவைகள் அனைத்தும் என் குழந்தைகள்.


Wednesday, July 16, 2014

தமிழர் எழுச்சி ஜூலை மாத இதழ்



தமிழர் எழுச்சி ஜூலை ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.in/2014/07/2014.html

தமிழர் எழுச்சி ஜூன் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_2960.html

தமிழர் எழுச்சி மே ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_4170.html

தமிழர் எழுச்சி ஏப்ரல் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_1222.html

தமிழர் எழுச்சி மார்ச் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_27.html

தமிழர் எழுச்சி பிப்ரவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_26.html

தமிழர் எழுச்சி ஜனவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_708.html

தமிழர் எழுச்சி டிசம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_25.html

தமிழர் எழுச்சி நவம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014.html

தமிழர் எழுச்சி மாத  இதழுக்கான இணையதளம் - http://thamizharezhuchchi.blogspot.in/

Tuesday, July 15, 2014

என் சமீபத்திய புகைப்படங்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு பரமக்குடி திரௌபதி அம்மன் கோயில் வாசலில் என் அலைபேசியில் உள்ள புகைப்படக் கருவி மூலம் என் தங்கச்சி பாப்பா சோபனாவால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.




Sunday, July 13, 2014

அழகு ராட்சசி கவிதைநூலிற்கு சமீபத்தில் எனக்கு கிடைத்த குறுஞ்செய்தி விமர்சனம்

"கவிஞரே, தாங்கள் எழுதிய அழகு ராட்சசி நூலை மறு வாசிப்பு செய்தேன். காதல் சொட்டச்சொட்ட இருந்தது. அருமை."

- கவித்துளி குமார். ௯௭௯௧௫௬௫௯௨௮ (9791565928)

என்னுடைய கவிதைநூலை இவர் எப்போது வாங்கினார்?, எங்கே வாங்கினார்? என்ற விவரங்கள் எனக்கு தெரியவில்லை.

இந்த கவிதைநூலிற்கு ஏற்கனவே கிடைத்த விமர்சனங்களில் மிகமிக முக்கியமான விமர்சனத்திலிருந்து

- (சிவகங்கை) மீரா, தபுசங்கர் வரிசையில் சுரேஷ்குமாருக்கு ஓரிடம் உண்டு.

- (முத்தம் தொடர்பான ஒரு கவிதை தொடர்பாக) திருவள்ளுவரின் கொள்ளுப்பேரனாக இருப்பார் என நினைத்துக் கொண்டேன்.

- இவரது கவிதைகள் இளைஞர்களை கவரும். சாதாரண இளைஞர்களை கவிதை எழுதத் தூண்டும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் கடிதம் எழுத மிகவும் உதவியாக இருக்கும்.


அழகு ராட்சசி கவிதை நூலிற்காக திரு. ஸ்ரீரங்கம் செளரிராஜன் அவர்கள் எழுதிய நூல் விமர்சனத்திலிருந்து...

Saturday, July 12, 2014

௨௦௦௬ புதிய சிற்பி மாத இதழில் பொறுப்பாசிரியராக...

௨௦௦௬ புதிய சிற்பி மாத இதழில் பொறுப்பாசிரியராக அங்கம் வகித்தபோது முதுநிலை கணினி பயன்பாட்டியல் (M.C.A.,) படித்துக் கொண்டிருந்தேன்.

இந்த பட்டியலில் என்னைத்தவிர ஏனைய பலபேர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் முதுகலை, இளங்கலை தமிழ் படித்துக் கொண்டிருந்தவர்கள்.

ஒருநாள் நான்கு மணிக்கு முடியவேண்டிய என் கணினித்துறை வகுப்புகள் மாலை மூன்று மணிக்கே முடிந்துவிட்டது. அதனால் பக்கத்திலிருந்த தமிழ்த்துறைக்கு ஒரு கவிதை நண்பரை பார்க்க அவர் வகுப்பறைக்குள் நுழைந்தேன். சில நிமிடங்களில் தமிழம்மா உள்ளே நுழைந்துவிட்டாள். நான் ஏற்கனவே கவிதைப்போட்டியில் கலந்துகொண்டது குறித்து அந்த தமிழம்மாவுக்கு தெரியும் என்பதாலும் என்னுடைய துறை தேர்வுகளுக்கு அவள் தேர்வு மேற்பார்வை அதிகாரியாக (Exam Supervisor) வந்ததை வைத்து என்னை அவளுக்கு தெரியும் என்பதாலும் தமிழ் அல்லாத வேறுதுறை மாணவனாகிய நான் அவள் நடத்தும் வகுப்பில் அமர்ந்திருந்ததை கண்டும் எதுவும் சொல்லாமல் பாடம் நடத்திவிட்டு வகுப்பு முடிந்தவுடன் கிளம்பினாள். அதன்பிறகு என் கவிதை நண்பர்களோடு பேசி, பகிர்ந்து கடந்த நினைவுகள் பசுமையானவை.

அப்போதெல்லாம் எனக்கு என் துறையில் என் விடுதியில் என் அறையில் உள்ளவர்களோடு இருந்ததைவிட இப்படி கவிதைகளோடு வாழும் தமிழ்த்துறை நண்பர்களோடு கவிஞனான நானும் அதிக ஈடுபாடோடு கடந்த பசுமையான கால நினைவுகள்.


Wednesday, July 9, 2014

நேசிக்காதே (காதல் கவிதை)

௨௦௧௨ இராணிமுத்து மாதமிருமுறை இதழில் வெளிவந்த கவிதை.


Tuesday, July 8, 2014

பரமக்குடி பூங்காவில் விஷ்ணு பாப்பா

கடந்த சனிக்கிழமையன்று பரமக்குடி உழவர்சந்தை பூங்காவில் எங்க வீட்டு விஷ்ணு பாப்பா விளையாடினான். அப்போது எடுத்த புகைப்படங்கள்.

என் மருமகன் விஷ்ணு பாப்பாவின் அழகைக்காண கோடி கண்கள் வேண்டும்.



சஞ்சிகை மாத இதழில் வெளியான என் ஹைக்கூ



ஜூன் சஞ்சிகை மாத இதழில் வெளியான என் ஹைக்கூ இது. முகநூலில் பலரால் வரவேற்கப்பட்ட ஹைக்கூ இது. ஆனால், என்னுடைய கவிதை எப்போதுமே ஊடகங்களால் அவ்வளவு எளிதில் வரவேற்கப்படுவதே இல்லை. இதனாலேயே இணையத்தில் இந்த பிரபஞ்சம் முழுக்க அனுப்பி வைப்பதுண்டு. அப்படி அனுப்புவதையும் விளம்பரப்படுத்துவதாக என்னை குறை சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்த கவிதையை வெளியிட்டு எனக்கு ஆறுதல் அளித்த சஞ்சிகை மாத இதழுக்கு என் நன்றி.

என்னுடைய ஊரில் மணலாக ஓடும் வைகை ஆறரை நினைவில் வைத்தே எழுதப்பட்ட ஹைக்கூ இது. நான் பிறப்பதற்கு முன்புவரை வைகை ஆற்றில் நீர் பாலத்தை உடைக்குமளவிற்கு வந்ததாக சொல்வார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்படி நீர் வந்ததில்லை. நான் என் ஊருக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் ஆற்றில் மணல்தான் ஓடுகிறது.

வைகை ஆற்றின் முகப்பில் இருப்பதால் தான் இராமநாதபுரம் என்ற ஊருக்கு முகவை (முக+வை - முக - முகப்பில், வை - வைகை, வைகையின் முகப்பில் உள்ள ஊர்) என்று பெயர் வந்தது. அதனாலேயே பலரும் முகவை மாவட்டம் என்றே எழுதுவர்.

மற்ற மொழிகளில் இடுகுறிப் பெயர்கள் அதிகம். காரணப் பெயர்கள் குறைவு. ஆனால் தமிழ்மொழியில் மட்டுந்தான் காரணப் பெயர்கள் அதிகம். இடுகுறிப் பெயர்கள் மிகமிகக் குறைவு. அதனால் தான் "தேங்காயை உடைத்துப் பார். தமிழ் வார்த்தைகளை பிரித்துப் பார்" என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். தேங்காயை உடைத்தால் அது நல்ல தேங்காயா இல்லையா என்று தெரியும். தமிழ் வார்த்தைகளை பிரித்துப் பார்த்தால் பொருள் புரியும்.