ஆண்:
அத்தபெத்த என்னோட
ஆசப்புள்ள – நீ
ஒத்துக்கிட்டா
வாடிபுள்ள தப்பேஇல்ல
பெண்:
அய்த்தமகன் என்னோட
ஆசராசாவே
அதுக்குள்ளே
சிக்கமாட்டா இந்தரோசாவே
ஆண்:
வஞ்சி கொஞ்சம்
வாடிபுள்ள
கஞ்சி தந்து
போடிபுள்ள
பெண்:
கஞ்சிகொண்டு
வாரேன்ராசா – என்
நெஞ்சம்நெறஞ்ச
ஆசராசா
ஆண்:
அச்சமேதும்
வேணாம்புள்ள
மச்சங்காட்டிப்
போடிபுள்ள
பெண்:
மச்சங்காட்டச்
சொல்வீரோ – பின்னே
மிச்சங்காட்டச்
சொல்வீரோ
ஆண்:
சத்தான இளஞ்சிறுக்கி
கத்தாழப் பழம்பொறுக்கி
அத்தான நீஉருக்கி
செத்தேன்டி உன்னால
பெண்:
சுத்தாதே பின்னாலே
பித்தானேன் உன்னாலே
அத்தான்னு சொன்னாலே
செத்தேன்டா தன்னால
ஆண்:
பித்தந்தலைக் கேறிடுச்சு முத்தந்தந்தாய்
ஆறிடுச்சு
நித்தம்நிலை மாறிடுச்சு சுத்தம்கித்தம்
பார்க்காதே
பெண்:
சத்தம்போட்டுக் கேக்காதே பத்திக்கொள்ளப்
பாக்காதே
கத்தும்கவி அத்தானே முத்தந்தந்தால்
வேர்க்காதே
ஆண்:
தாலிகட்ட வர்றேன்புள்ள
தோழிபோல வாடிபுள்ள
பெண்:
தாலிதந்தா கவலையில்ல
வேலியில்ல வாடாஉள்ள
ஆண்:
அத்தபெத்த என்னோட
ஆசப்புள்ள – நீ
பத்துப்புள்ள
பெத்துத்தாடி தப்பேஇல்ல
பெண்:
அய்த்தமகன் என்னோட
ஆசராசாவே – உன்
அன்பாலே
சிக்கிப்புட்டா இந்தரோசாவே
1 comment:
really nice one!!!
Post a Comment