Saturday, September 28, 2013

தமிழ்நாட்டுப் பேருந்துகளில் பகல்கொள்ளை மற்றும் வழிப்பறி செய்யும் நடத்துநர்களும் அரசாங்கமும் (பாகம் - ௩ மூன்று)

பிரபஞ்சவாழ் தமிழர் தமிழச்சிகளுக்கு,

அடியேனின் வணக்கம். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பதிவின் மூன்றாம் பாகத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மன மகிழ்ச்சியடைகின்றேன். 

மதுரை மாநகர வழிப்பறிப் பேருந்து ஓட்டுனரிடம் நேர்காணல் 

கடந்த செப்டம்பர் ஆறு, ௨௦௧௩ (06-09-2013) அன்று காலை மதுரை இரயில்  நிலைய சந்திப்பில் இறங்கி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நியாய விலைக் கட்டணப் பேருந்துக்காகக் காத்திருந்தேன். 

அரைமணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தும் நான் எதிர்பார்த்த நியாய விலைக் கட்டணப் பேருந்து வரவில்லை. எனவே, வேறுவழியில்லாமல் வழிப்பறிப் பேருந்திலேயே (அதாங்க சொகுசுப் பேருந்து - இதைத்தான் ஆங்கிலத்தில் deluxe bus என்று சொல்லி நம் அனைவரின் தலையிலும் மிளகாய் அரைக்கின்றனர் ஆளுங்கட்சியினர்) ஏறினேன். ஓட்டுனருக்கு அருகே நின்றபடி வந்த நான் அவரிடம் "ஐயா, தமிழ்நாட்டுப் பேருந்துகளில் நடைபெறுகின்ற பகல்கொள்ளையைப் பற்றிக் கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருக்கின்றேன். அது தொடர்பாக தங்களிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்." என்றேன். 

பேருந்தை ஓட்டியபடியே மேற்கொண்டு கேட்குமாறு சைகை காட்டினார். 

"இப்பொழுதெல்லாம் நியாய விலைப் பேருந்துகளை தமிழ்நாட்டில் பார்க்க முடியவில்லையே ஐயா?" என்றேன்.

"white board (நியாயவிலைப் பேருந்துகள்) தற்போது முற்றிலும் அழித்தொழிக்கப் பட்டுவிட்டன தம்பி" என்றார்.

"யார் இப்படி செய்வது ஐயா?" என்றேன்.

"மேலிருந்து கீழ்வரை அனைத்து அதிகாரிகளும் இந்தக் கொள்ளைக்கு உடந்தை" என்றார்.

"பேருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் அன்றாடங்காய்ச்சிகளும் ஏழைபாளைகளும் தான் ஐயா. ஏற்கனவே இரண்டு மடங்குக் கட்டணமாக உயர்த்தப்பட்ட ஆளுங்கட்சியினரின் வழிப்பறி மற்றும் பகல்கொள்ளை தற்போது நான்கு மடங்காக உயர்த்தி வழிப்பறிப் பேருந்துகளை அதிகரித்து இரண்டு மடங்கு கட்டணமுள்ள நியாயவிலைப் பேருந்துகளை மறைமுகமாக அழித்தொழிக்கின்றனரே" என்றேன்.

"உண்மைதான் தம்பி. ஆளுங்கட்சியில் மேல் தொடங்கி கீழ்வரை அனைத்து அரசியல்வாதிகளும் இதற்கு உடந்தை. மேல்மட்ட அதிகாரிகள் முதலமைச்சருக்கு பெட்டி நிறைய கட்சி வளர்க்க கொள்ளையடித்தாவது வசூல் செய்த (collection) பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக இருக்கின்றது தம்பி. நாங்கள் பணிமனைக்குச் சென்றவுடன் வசூல் (collection) எங்கே? இவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என எங்களை வற்புறுத்துகின்றனர் தம்பி. நாங்கள் என்ன செய்வோம்? மக்கள் பேருந்துகளில் ஏறி இறங்கினால் வசூல் கிடைக்கும். அதிக வசூலுக்கு ஆசைப்பட்டு நியாய விலைப் பேருந்துகளை அழித்தொழிக்கின்றனர் தம்பி" எனவெளியுலகிற்குத் தெரியாத சில உண்மைகளைத் தைரியமாகப் போட்டுடைத்தார்

நான் இறங்க வேண்டிய மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் நெருங்கிவிட்டதால் அவரிடம் நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டேன். 

மதுரை - பரமக்குடி நியாயவிலைக் கட்டணப் பேருந்தில் நடந்த வழிப்பறியும் பகல்கொள்ளையும் 

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பரமக்குடி செல்லும் நியாயவிலைப் பேருந்தில் (முன்பின் எந்தப் பதாகைகளும் ஓட்டப்படாததால் நியாயவிலைப் பேருந்துதான் என உறுதி செய்து கொண்டேன்.) ஏறி நடத்துநரிடம் பயணச்சீட்டிற்கான ௩௪ (34) ரூபாயைக் கொடுத்தேன். 

"௩௫ ரூபாய் (35) தம்பி" என்றார். ௩௪ தானே ஐயா எப்போதிலிருந்து ௩௫? என்றேன். "கடந்த இரண்டரை ஆண்டுகளாக இதே விலைதான் தம்பி." என்றார். "என்னடா நடக்குது இங்க" என்று முணுமுணுத்தபடி அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு "இனி பயணச்சீட்டை ஆதரத்திற்காகச் சேமித்து வைக்க வேண்டும் போலிருக்கிறதே" என்றேன். என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் வேதனையோடு சிரித்தார். 

பயணிகள் இரயிலின் வேகம் 

கடந்த ௧௧, செப்டெம்பர் ௨௦௧௩ (11-09-2013) அன்று மாலை எட்டு மணிக்கு எனக்கு மதுரை இரயில் நிலைய சந்திப்பிலிருந்து பெங்களூரு செல்லும் தூத்துக்குடி - மைசூர் இரயில். அன்று நான் தங்கியிருக்கும் ஊரான பரமக்குடியில் தியாகி இமானுவேல் குருபூஜை என்பதால் மதியத்திற்கு மேல் பரமக்குடி வழியே செல்லும், பரமகுடியிலிருந்து செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன அல்லது மாற்று வழியில் சுற்றுப்பாதையில் பல மைல் தொலைவில் பல மணி நேரத்திற்குப் பிறகே சென்று சேரும்படி இயக்கப் பட்டிருந்தன. (அன்று தான் மகாகவி பாரதியின் நினைவுதினம். அன்று யாரும் பாரதியை நினைத்தும் வழிபட்டதாகத் தெரியவில்லை.)  அதனால் பெற்றோரின் அறிவுறுத்தலின் பேரில் மதியம் இரண்டு மணிக்கே இராமேஸ்வரம் - மதுரை செல்லும் பயணிகள் இரயிலில் மதுரை செல்ல வேண்டியதாயிற்று. 

பேருந்திலும் சரி, இரயிலிலும் சரி பரமக்குடியிலிருந்து மானாமதுரைக்குச் செல்ல குறைந்த பட்சம் இருபத்தைந்து நிமிடங்கள் ஆகும். ஆனால் நான் சென்ற அந்தப் பயணிகள் இரயில் வெறும் பதினைந்து நிமிடங்களில் சென்று சேர்நதது

அப்போது தான் ஒரு விடயம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து பரமக்குடிக்கு மானாமதுரை வழியாக செல்லும் விரைவு இரயில் (Express), அதிவேக விரைவு இரயில் (Super fast) என்று ஏமாற்றும் இரயில்கள் கூட பரமக்குடிக்கும் மானாமதுரைக்கும் உள்ள தூரத்தை வெறும் பதினைந்து நிமிடங்களில் சென்று சேர்ந்ததில்லை.

எப்படியெல்லாம் நாம் ஏமார்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.

வழிப்பறிப் பேருந்துகளை முதலில் அறிமுகப்படுத்தியது யார்?

கடந்த கருணாநிதி ஆட்சிக்கு முந்தைய ஜெயலலிதா ஆட்சியிலேயே சொகுசுப் பேருந்துகள் என்ற வழிப்பறிப் பேருந்துகள் அறிமுகமாகி விட்டன. ஒருவேளை அதற்கு முந்தைய ஆட்சியிலேயே அறிமுகம் செய்யப் பட்டு விட்டனவா என்பது தெரியவில்லை. வழிப்பறி பெருந்துகளுக்கான வேரைத் தேடி விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 

என்வாழ்வில் சந்தித்த கடமை தவறாத நடத்துநர்கள் 

என் வாழ்வில் நான் சந்தித்த கடமை தவறாத சில நடத்துநர்களைப் பற்றிச் சொல்கின்றேன். கேளுங்கள்.

என்னுடைய சிறுவயதில் என்னுடைய சொந்த ஊரான முனைவென்றியில் எனக்குப் பள்ளி நேரம் முடிந்தபின்பு ஆடு மாடுகளை மேய்ப்பது, என் தாத்தாவின் பலசரக்குக் கடையைப் பார்த்துக் கொள்வது என ஒருநாள் காலையில் கடையில் தாத்தாவை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நான் அமர்ந்தேன். வெளியில் எங்காவது யாரையாவது பார்ப்பதற்கு அல்லது வயல்வெளிகளுக்குச் செல்வதற்காக கடையில் ஆளை மாற்றி விட்டு தாத்தா செல்வது வழக்கம். 

அன்று என்னிடம் 'ஐம்பது ரூபாய், இருபத்தைந்து ரூபாய் போன்றவற்றிற்கு இருபத்தைந்து காசுகள், ஐம்பது காசுகள் மற்றும் ஒரு ரூபாய் நாணயங்களை எண்ணிக் கட்டி வைத்து விடு. நமது ஊருக்கு வரும் பேருந்து நடத்துநர் வந்து கேட்பார். அவரிடம் கொடுத்து விடு. அவர் அதற்கு உண்டான ரூபாய்த் தாள்களைத் தந்து விடுவார்' என்று சொல்லி விட்டுப் போவார். 

என் தாத்தா சொன்னபடி நடத்துநர் கடைக்கு வந்து தனக்குத் தேவையான ஐம்பது ரூபாய்க்கோ அல்லது இருபத்தைந்து ரூபாய்க்கோ சில்லறை வாங்கிச் செல்வார். அவர் கடமையைச் செய்ய தனக்குத் தேவையானதை தானே முன்கூட்டியே தயார்செய்து வைத்துக் கொள்கிறார். 

இன்று சென்னையில் உள்ள நடத்துநர்களை நினைத்துப் பார்க்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் அரசு ஊழியர்களை தங்களுக்குத் தொண்டு செய்யும் கடவுளாக அவர்களை கடவுள் நிலைக்கு உயர்த்திப் பார்க்கிறார்கள்.ஆனால், அரசு ஊழியர்களில் குறிப்பாக பேருந்து நடத்துநர்களில் பயணிகளை பெரும்பாலும் மதிப்பதில்லை. ஏதோ புழுப் பூச்சிகளைப் பார்ப்பது போல பார்க்கின்றனர். என்னவோ இவன் அப்பன் வீட்டுப் பேருந்து போலவும் இவன் தான் அதன் உரிமையாளர் போலவும் நினைத்துக் கொண்டு கொடுக்க வேண்டிய ஐம்பது பைசா, ஒரு ரூபாய் சில்லறைகளைக் கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளையடித்து பணம் பார்க்கின்றனர். தகாத வார்த்தைகளால் பயணிகளை திட்டுவதும் வாடிக்கையாகி விட்டது.

சென்னையில் என் சொந்த நேரடி அனுபவத்தில் நான் சந்தித்த நேர்மையான, மனித நேயமுள்ள நடத்துநரைப் பற்றிச் சொல்கிறேன். கேளுங்கள்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் உள்ள என் அக்கா (பெரியம்மா மகள்) வீட்டிற்குச் சென்றுவிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள என் அறைக்குத் திரும்புவதற்காக தி.நகர் செல்லும் நியாயவிலைப் பேருந்தில் (whiteboard) ஏறி அமர்ந்தேன். சட்டைப்பைக்குள் ஒரு நூறு ரூபாய்த் தாள், ஒரு ஐந்து ரூபாய் நாணயமும் வைத்திருந்தேன். 

பயணச்சீட்டு ஆறு ரூபாய் கொடுப்பதற்கு என்னிடம் இருந்த நூறு ரூபாயை நீட்டினேன். 'சில்லறையாக ஆறு ரூபாய் இருக்கின்றதா பாருங்கள்' என்றார். 'இல்லை. ஐந்து ரூபாய் நாணயமும் இந்த நூறு ரூபாய்த் தாளும் தான் இப்போது என்னிடம் இருக்கின்றது' என்றேன். உடனே நான் கொடுத்த நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு பயனச்சீட்டைக் கிழித்துக் கொடுத்து விட்டு மீதி ரூபாயை தி.நகர் பேருந்து நிலையம் வந்தவுடன் மறக்காமல் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சொன்னார்.

கண்ணம்மா பேட்டை விலக்கருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் சிவப்பு விளக்கு (signal) எரிந்ததால் பேருந்து பல நிமிடங்கள் நின்றது. அதன்பிறகு மெல்ல நகர்ந்தது. மீண்டும் அதிகமான போக்குவரத்து நெரிசலால் இன்னும் சில அடி தூரத்தில் இருக்கும் தி.நகர் பேருந்து நிலையம் செல்ல, பேருந்து மெதுவாக நின்று நின்று ஊர்ந்து ஊர்ந்து சென்றது.

எனக்கு என்னுடைய அறையில் அவரச வேலை இருந்ததால் 'சரி, இறங்கி நடந்து விடலாம். அடுத்த பேருந்தைப் பிடிக்க வேண்டும்' என நினைத்தவனாய் மீதி தொண்ணூற்று நான்கு ரூபாயை வாங்காமல் இறங்கி வேகமாக நடந்தேன். பேருந்து நிலைய வளைவை நெருங்கி விட்டேன். எப்படியோ பேருந்து ஊர்ந்து ஊர்ந்து எனக்கு முன்னே சென்றது. பேருந்து நின்றது. யாரோ யாரையோ சத்தம் போட்டு அழைப்பது போலத் தோன்றியது. அந்தப் பேருந்தில் இருந்து அந்த நடத்துநர் என்னைப் பார்த்து கையசைத்தார். நடைபாதையில் நின்ற நான் பேருந்தை நோக்கி அந்த நடத்துரை நோக்கி வேகமாக நடந்து அவர் அருகில் நின்றேன். அவர் என்னிடம் தர வேண்டிய தொண்ணூற்று நான்கு ரூபாயைத் தந்து விட்டு 'மறந்து விட்டீர்களோ' என்றபடி பேருந்தில் உள்ளே செல்ல முயன்றார். அவருக்கு நன்றி கூறினேன். அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாத, அடுத்தவர் நிலையை உணர்ந்த பண்பான நடத்துநர் அவர்.

பேருந்து நடத்துநரைக் காதலித்தக் கல்லூரி மாணவி 

காதல் எவ்வளவு மேன்மையானது எவ்வளவு மென்மையானது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

எனக்குத் தெரிந்த ஒரு சகோதரி என்னிடம் கடந்த அட்டு ஆண்டுகளுக்கு முன்பு பகிர்ந்து கொண்ட உண்மை நிகழ்வு இது. 

அவள் தினமும் கல்லூரிக்குச் செல்லும் பேருந்தின் நடத்துரை  வளுக்கு மிகவும் பிடிக்குமாம். அந்த நடத்துநரை மிகவும் நேசித்திருக்கிறார். அவரிடம் சொல்ல முயன்ற நாள் அன்று அந்த நடத்துநர் இவளிடம் தன்னுடைய திருமண அழைப்பிதழை நீட்டியிருக்கின்றார். 

அவள் என்னிடம் சொன்னபோது தான் நேசித்த அந்த நடத்துநரின் திருமண நாளையும் நினைவில் வைத்துச் சொன்னாள். அவரை நினைத்து அதன்பிறகு இரவு உறங்கும்போது போர்வைக்குள் அழுதிருப்பதாகச் சொன்னாள். 

அவள் அவரைப் பற்றிச் சொன்னபோது சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் இருந்த அவளின் வேதனை தாங்கிய அந்த அன்புமுகம் இன்னும் என் மூளைக்குள்ளே கண்ணீரோடு கலந்து நிற்கின்றது. 

(அந்த சகோதரியின் கல்லூரியில் படித்த போது எடுத்த கடவுச் சீட்டு புகைப்படம் (passport size photo) என் பார்வைக்கு ஒரு முறை கிடைத்தது.)

அதன்பிறகு அந்த நடத்துநர் அத்தான் எப்படி இருப்பார் உயரமா குள்ளமா தோற்றம் எப்படி அவர் குணம் எப்படி என்று அந்தக் கற்பனையில் அந்த வலியில் பல இரவுகளில் பதறி எழுந்திருக்கின்றேன். பயணத்தின்போது, வேலை நேரத்தின்போது, சாப்பிடும்போது, குளிக்கும்போது என பல நேரங்களில் என்னையறிமாலேயே என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருப்பதுமுண்டு.

(அந்த வலியில் அந்த சகோதரியின் மனநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கவிதை 'அவள் உயிர் அழுகிறது' - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2011/09/blog-post_653.html)

(அந்த வலியில் அந்தத் தாக்கத்தில் ஒரு பெண்ணின் மனநிலையோடு சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி வைத்திருக்கும் என்னுடைய நான்காவது கவிதைத் தொகுப்பு 'உள்ளம் உருக்கிப் போனாயடா')

அந்த சகோதரி இன்று நல்ல பொருளாதார நிலையில் வாழ்வதாகவும் சமீபத்தில் அவளுக்குத் திருமணம் நடந்தேறியதாகவும் தகவல் தெரிந்தது.

இராமேஸ்வரம் - மதுரை பேருந்தில் என் நண்பனுக்கு நேர்ந்த கொடுமை 

என்னுடைய ஊரில் என் நண்பனிடம் 'பேருந்தில் உனக்கு நேர்ந்த ஏதேனும் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னேன். நான் எழுதிக் கொண்டிருக்கும் தொடர் கட்டுரைக்கு மிகவும் உதவும்.' என்றேன்.

மதுரை செல்வதற்காக இராமேஸ்வரம் - மதுரை செல்லும் பேருந்தில் பரமக்குடி ஓட்டைப் பாலம் நிறுத்தத்தில் ஏறியிருக்கின்றான் என் நண்பன். அவசரமாகச் செல்ல வேண்டியிருந்ததால் அவனிடம் அந்த நேரம் பார்த்து ஐந்நூறு ரூபாய்த் தாள் தான் இருந்திருக்கின்றது. 'நான் இறங்கப் போகும் கடைசி நிறுத்தத்தில் தங்களிடம் மீதிப் பணத்தை வாங்கிக் கொள்கிறேன்' என்று விளக்கமாகக் கூறியும் நடத்துநர் அவனை கண்டபடி மரியாதைக் குறைவாக திட்டிவிட்டு பேருந்தை விட்டு கீழிறங்கச் சொல்லியிருக்கின்றான். அந்த நடத்துநர் நாய்க்கு இருக்கையில் அமர்ந்திருந்த காவல்துறை கவ்வோதியும் சேர்ந்து கொண்டு வக்காலத்து வாங்கியிருக்கின்றான். இவனும் மன வேதனையோடு அடுத்த பேருந்து நிறுத்தமான அரசு மருத்துவமனை நிறுத்தத்தில் கீழே இறங்கி விட்டானாம்.

அவன் சொல்லி முடித்த போது நான் அவனை இடைமறித்து 'வட இந்தியாவில் இரயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதகர் (TTE - Train Ticket Examiner) பயணச்சீட்டுக் கேட்டால் அவரை பயணிகள் ஓடும் இரயிலில் இருந்து பிடித்துக் கீழே தள்ளி விடுவார்களாம். தமிழ்நாட்டில் அப்படியெல்லாம் நடைபெறுவது இல்லை. உன்னை அப்படிச் செய்யச் சொல்லவில்லை. குறைந்த பட்சம் அந்த இருவரையும் உன் காலில் கிடந்த செருப்பைக் கழற்றியாவது அடித்து விட்டு கீழே இறங்கியிருந்திருக்க வேண்டும்.' என்றேன்.

பழைய தமிழ்த் திரைப்படத்தின் ஒரு நகைச்சுவைக் காட்சியை இங்கு நினைவு படுத்த வேண்டியுள்ளது. 

பேருந்து நடத்துநர் பயணிகளைப் பார்த்து 'சில்லறை இல்லாதர்வர்கள் பேருந்தை விட்டு இறங்கி விடுங்கள்' என்று கத்துவார். அப்போது ஒருவர் அந்த நடத்துநரைப் பார்த்து 'உன்னிடம் சில்லறை இருக்கின்றதா?' என்று கேட்பார். அதற்கு அந்த நடத்துநர் 'இல்லை' என்பார். உடனே அவர் அந்த நடத்துநரைப் பார்த்து 'எங்களோடு சேர்த்து நீயும் இறங்கி விடு' என்பார். இந்தக் காட்சி சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் தான்.

ஒரு வேலையைச் செய்பவன் தனக்குத் தேவையானதை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொண்டு தான் தன் வேலையை ஆரம்பிக்க வேண்டும். அது அவனவன் கடமை. 

கடைக்கு வந்து சில்லறையை வாங்கி வைத்துக் கொண்டு தன்னுடைய நடத்துநர் வேலையை கண்ணும் கருத்துமாய் செய்த நடத்துநர் எங்கே? இப்போது உள்ள நடத்துனர்கள் எங்கே

இன்றும் சென்னையில் இரவு நேரப் பேருந்துகளில் (இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை ) அதிகக் கட்டணம் வசூலிக்கப் படுகின்றது. உதாரணத்திற்கு பகலில் நியாய விலைப் பேருந்துகளில் பேருந்துக் கட்டணம் ஐந்து ரூபாய், (வழிப்பறிப் பேருந்துகளில் ் (deluxe bus) பத்து ரூபாய்) எனில் இரவில் அதே நியாய விலைப் பேருந்துகளில் பத்து ரூபாய், வழிப்பறிப் பேருந்துகளில் இருபது ரூபாய் வசூலிக்கப் படுகின்றது.

ஆனால் இப்படி அரசாங்கத்தாலும் முதலமைச்சராலும் கொள்ளையடிக்கும் பணம் மக்களுக்கு நலத்திட்டங்களாகக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் குச்சி ஐஸில் ஐஸ் உருகி குச்சி மட்டுமே கிடைப்பது போலவே பலரின் ஊழலுக்குப் பிறகு இடிந்து விழும் பாலமாகவும் தரம் குறைந்த மக்களுக்குப் பயனற்றத் திட்டங்களாகவும் கடைநிலை மக்களுக்குக் கிடைக்கின்றது. 

பெங்களூரு பேருந்தில் வடஇந்தியனின் தைரியமான அணுகுமுறை

சில வாரங்களுக்கு முன்பு நான் என் அலுவலகத்திலிருந்து என் அறைக்குத் திரும்ப, பேருந்தில் (அங்கும் வழிப்பறிப் பேருந்துகள் தான். வேறு வழியில்லை.) ஒன்பது ரூபாய் பயணச்சீட்டிற்குப் பத்து ரூபாயை நீட்டினேன். பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டு அந்தக் கன்னட நடத்துநர் ஒரு ரூபாயைத் தராமல் என்னைப் பார்த்து கன்னடத்தில் திட்டினான். நான் அவனிடம் 'If i have the change, i can give you otherwise you have to give me the change. It is your duty. Please do your duty.' என்றபடி அவனைப் பார்த்து முறைத்தேன். ஒரு ரூபாய் வாங்க வேண்டிய என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஹிந்தி பேசும் வட இந்திய அன்பர் அந்த நடத்துனரின் பணப்பையைப் பிடித்திழுத்தவாறே 'Show me your bag. Show me your bag. I saw you have lot of one rupee coins.' என்று கத்தினார். சற்றும் எதிர்பார்க்காத அந்த நடத்துநர் நடுநடுங்கியபடி தன்னுடைய பணப்பையில் உள்ள பல ஒரு ரூபாய் நாணயங்களில் இருந்து எனக்கும் அவருக்கும் தனித்தனியே ஒவ்வொரு ரூபாய் நாணயங்களைக் கொடுத்து விட்டு பயந்தபடி மற்றவர்களைப் பார்த்து பயணச்சீட்டுக் கேட்க ஆரம்பித்தான். அந்த அன்பர் அவனைப் பார்த்து 'Dont try to make more money from others illegally.' என்றபடி முறைத்தார். 

காவிரி நீரைப் பற்றி என் அலுவலக கன்னடனின் கொக்கரிப்பு 

என் அலுவலகத்தில் நான் அமர்ந்திருக்கும் ஒரு அறையில் எனக்குப் பக்கத்தில் ஒரு மலையாளியும் அவனுக்கு அருகில் ஒரு வடஇந்தியனும் எனக்கு நேரெதிரே ஒரு மராட்டியனும் அவனுக்கருகில் ஒரு கன்னடனும் அமர்ந்திருக்கின்றனர். 

நாங்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசிக் கொள்வோம்.

இணையதளத்தில் ஒரு செய்தியைப் படித்து விட்டு அந்தக் கன்னடன் மராட்டியனிடம் சொல்கின்றான். தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் ஓசூர் தமிழ்மக்கள் (சிந்தும் சிதறும்) காவிரி நீரைப் பயன்படுத்துகின்றனர். பெங்களூருவில் காவிரி நீர் கிடைப்பதில்லை. ஆனால், தம்ழர்கள் காவிரி நீரைக் கேட்டுப் போராட்டம் நடத்துகின்றனர்.' என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு கடைசியாய் அவன் சொல்கின்றான். 'bloody tamilians' என்று.

இவன் மொழியைக் கூட இவன் சொந்தமாக உருவாக்காமல் என் தாய்த்தமிழைக் கடன்வாங்கி அதில் பல மாற்றங்களைச் செய்து கொண்டு கொக்கரிக்கின்றது ஒரு கன்னட நாய் 'bloody tamilians' என்று.

பல மொழிகள் (தெலுங்கு, கன்னடம், மலையாளம், மாராட்டி, ஹிந்தி மற்றும் பல) தமிழைக் கடன்வாங்கித்தான் (சமஸ்கிருதமும் தமிழ்ச் சித்தர்கள் பயன்படுத்திய மொழி ஆதலால் சமன்+கிருதம். கிருதம் என்றால் எழுத்து. ஒரு வார்த்தையின் ஒரு எழுத்தைச் சமன் செய்ய சித்தர்களால் உருவாக்கப் பட்ட மொழியே சமஸ்கிருதம். சமஸ்கிருதமும் தமிழ் மொழிக்கு இணையானதே. நம்முடைய தமிழ்ச்சித்தர்கள் சமஸ்கிருதத்தை தமிழுக்கிணையாகப் பயன்படுத்தியதால் சமஸ்கிருதத்தை நாம் வெறுக்க வேண்டாமே என்பது என் கருத்து.) உருவாக்கியிருக்கின்றார்கள். தமிழ் மொழியை சிதைத்து உருவாக்கப்பட்ட மொழிகள் தான் பிற மொழிகள் அனைத்தும். ஆக, மற்ற மொழியின மக்கள் அனைவரும் தமிழர்களாகிய நம்மிடம் கடன் வாங்கிய கடன்கார நாய்கள்.

இந்தக் கடன்காரக் கன்னட நாய் தமிழர்களைப் பார்த்துக் கொக்கரிக்கின்றான் 'bloody tamilians' என்று.

தமிழ்நாட்டில் பாசனத்திற்கும், குடிப்பதற்கும் எத்தனை பேர் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது இந்த கன்னட நாய்க்கு எங்கே தெரியப் போகின்றது புரியப் போகின்றது.

'நானொரு தமிழன், நானொரு தமிழன்' என்ற கர்வம் எப்போதும் என் தலைக்கேறிக் கொண்டிருப்பதுண்டு.

எவ்வளவு அடித்தாலும் தாங்கும் ரொம்ப நல்லவன் தமிழன் தான் 

இங்கு யாரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமையோடு இருப்பதில்லை. தமிழர்களைத் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் அனைத்து மொழி வாரியான இனங்களும் தங்களை இந்தியர்கள் என்று கருதாமல் மலையாளிகள், தெலுங்கர்கள் என தங்களைத் தங்களின் மொழிவாரியான இனங்களுக்குள் வாழப் பழக்கிக் கொள்கின்றனர். 

ஊர்ப் பெருமைக்காக, உலகப் பெருமைக்காக வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா என்று ஒரு கூட்டம் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. 


ஆனால் தமிழன் மட்டும் தமிழின உணர்வோடு வாழ முற்பட்டால் இந்தியக் கயமைவாதிகளால் தீவிரவாதிகள் எனவும் மொழிவெறியர்கள் எனவும் முத்திரை குத்தப்படுகின்றனர். ஏனெனில் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் ரொம்ப நல்லவன் தமிழன் தான். 

No comments: