Sunday, April 27, 2014

தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' (NOTA - None Of The Above) வாக்குகள் பதிவு



நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' வாக்குகள் பதிவானதாக ஒரு செய்தி படித்தேன். மகிழ்ச்சியடைந்தேன்.

தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ ஏழு கோடிப் பேர்களில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் ஏறத்தாழ நான்கரை முதல் ஐந்து கோடிப் பேர்கள் இருப்பார்கள்.

ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' வாக்குகள் பதிவானதற்கு பதிலாக எழுபத்தைந்து விழுக்காடு அதாவது மூன்றுகோடி பதிவாகியிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

கடந்த வாரம் பரமக்குடி சென்றிருந்தபோது என் அம்மாவிடம் "வாக்களிக்க விருப்பமில்லை' (NOTA) என்ற சின்னத்தில் வாக்களி" என்று சொன்னேன். "எனக்கும் வரவர வாக்களிக்க விருப்பமில்லாமல்தான் இருக்கிறது. நான் அப்படி செய்தால் என்னுடைய வாக்கு செல்லாத வாக்காகி விடாதா?" என்று கேட்டாள். "அம்மா, நீ வேண்டுமானால் பார். நிறைய பேர் NOTA வில் தான் வாக்களிப்பார்கள். நம்முடைய இந்த வாக்குகள் நிச்சயம் பெருகும். நாட்டின் தலையெழுத்தையே மாற்றும். அப்போது அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் நிகழும்." என்று சொன்னேன்.

"யாருக்கு வாக்களித்தாய் அம்மா?" நேற்று என் அம்மாவிடம் கேட்டேன். "நீ சொன்னதுபோலவே NOTA வில் தான் வாக்களித்தேன்." என்றாள்.

தி.மு.க மாற்றும் காங்கிரசுடன் பேரம் பேசி பேரம் படியாததால் பா.ஜ.க. விடம் பெட்டி பெட்டியாய் பணம் வாங்கிக் கொண்டு பா.ஜ.க விற்கு ஆதரவாக தே.மு.தி.க தேர்தல் பரப்புரை செய்ததாக செய்திகள் வெளியாயின.

"விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை. கார்பரேட் கம்பெனிதான் ஆரம்பித்துள்ளார்." என்று கடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க வை எதிர்த்து தேர்தல் பரப்புரை செய்த வைகைப்புயல் வடிவேலு சொன்னது மிகச்சரியான வார்த்தை என்று இப்போது தெரிகிறது.


நஷ்டம் என்கிறார்கள். இலாபம் என்கிறார்கள். இலாபம் வரும்போது மட்டும் ஆளாளுக்கு தின்று ஏப்பம் விட்டுறானுங்க. நஷ்டம் என்று கணக்கு கட்டி எங்களோட தலைல கட்டப்பார்க்கறீங்க? ஏண்டா மொள்ளமாரி நொன்னைகளா?

இந்தியாவின் போதைக்கு தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களாகிய நாங்களும் ஈழத்தமிழர்களும் ஊறுகாய். உங்களோட போதைக்கு நாங்க ஊறுகாயாடா வெண்ணைகளா?

சீமான் அண்ணாச்சி,

அ.தி.மு.க விற்கு தாங்கள் நன்றி நவில்வது வேறு. வாக்களிக்க ஆதரவு தருமாறு பரப்புரை செய்வது வேறு. நம்முடைய தமிழ்நாட்டில் இலாபம் தரும் துறைகள் பல இருந்தும் அவற்றையெல்லாம் பதுக்கி வைத்துவிட்டு நஷ்டம் நஷ்டம் என்று பஞ்சப்பாட்டு பாடும் இந்த ஜெயலலிதாவால் மத்தியில் என்ன கிழித்துவிட முடியுமென்று நீங்கள் ஆதரவு திரட்டினீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை விஜயகாந்த் பா.ஜ.வி டம் பெட்டி பெட்டியாய் பணம் வாங்கியதுபோலவே தாங்களும் அ.தி.மு.வி டம் வாங்கியிருக்கிறீர்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

கட்சி ஆரம்பித்த புதிதில் "நாம் தமிழர் கட்சி மற்றுமொரு அரசியல் கட்சியல்ல. மாற்று அரசியல் புரட்சி." என்றெல்லாம் சொன்னீர்களே... இன்று நீங்களும் அந்த திராவிடமெனும் குழிக்குள்ளேயே விழுந்து விட்டீர்களே? இது நியாயமா அண்ணாச்சி?

எப்படியாயினும் நம்முடைய தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மாபெரும் சக்தி நாம்தான். பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments: