கவி பாடிய காணொளி - https://youtu.be/hI4ZhReRR6Y
வெள்ளைநிறச் சீருடையில்
வந்தாளெங்கள் தேவதையே
முல்லைமலர் சிரிப்புடனே
முகமெல்லாம் புன்னகையே
உணவும் மறந்து உறக்கம் மறந்து
உயிர்கள் காத்திடும் தேவதைகள்
கனவும் கலைந்து கணவன் மறந்து
கருணை பொங்கும் காவியங்கள்
குடும்பம் மறந்து குழந்தை மறந்து
புன்னகை செய்யும் தாதியர்கள்
கவலை மறந்து கண்ணீர் மறைத்து
நோய்கள் விரட்டும் தூதுவர்கள்
கொட்டும் மழையை அடிக்கும் வெயிலைக்
கடந்தே செல்லும் காவலர்கள்
சொட்டும் கண்ணீர் உடல்வலி தாங்கி
பிணிகள் போக்கும் செவிலியர்கள்
ஊரும் அடங்க வீட்டில் முடங்க
கொடும்நோய் தீர்க்கும் ஓவியங்கள்
சிறுநீர் அடக்கி அமர மறந்து
நடந்தே திரியும் நல்லுள்ளங்கள்
உதிரப்போக்கும் கால்கள் வழிய
உயிரும் உருக உதிரமும் உருக
விடுப்பென்பதே கனவில் மட்டும்
மூன்றுநாள் கடந்தும் ரத்தம் சொட்டும்
உன்னைப்போல செவிலியர் பார்த்தால்
அன்னையைப் பார்த்தது போலாகும்
கண்ணைமூடி விசமும் குடித்து
உன் கை பட்டால் நோய்தீரும்
மண்ணில் வாழும் கடவுளையெல்லாம்
உன்றன் உருவில் காண்கின்றேன்
எல்லையில்லா ஆனந்தம் பெருகி
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
No comments:
Post a Comment