பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/W7NWrdtdx8Y
பிறந்தநாள் வாழ்த்து
====================
நாளை (26-04-2023) என் மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் இயற்றிய மெட்டும் மெட்டிலமைந்த பாடலும் இது.
என் மருமகனின் முழுப்பெயர் விஷ்ணு சபரீஷ். இங்கு சபரி என்பது சபரி மலை ஐயப்பனாகிய கிருஷ்ணனையே குறிக்கும்.
சிவனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் முருகன். அதேபோல் ஏற்றவர் இராவணனும் ஆவார். முருகனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் கிருஷ்ணன். அதேபோல், கிருஷ்ணனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் திருமால் என்ற விஷ்ணு.
அனைவர் வீட்டிலும் வசிப்பவன், இருப்பவன் என்ற பொருளில் வீட்டினன் என்ற பெயரே வீட்னு என்று மருவி அதுவே விஷ்ணு என்றானது.
சின்ன நிலா வண்ண உலா
போனதென்ன தம்பியுடன்
எண்ணமதில் உன்னினைவே
எங்க குல சாமி நீயே
எங்க தம்பி தங்கக் கம்பி
எங்க பலம் உன்ன நம்பி
பொங்கும் பொங்கல் தங்கு மெங்கும்
அங்க மதில் அன்பு பொங்கும்
செங்கமலம் பெத்த புள்ள
பெத்தெடுத்த முத்துப்பிள்ள
தங்கைமகன் விஷ்ணுப்பிள்ள
எங்களோட செல்லப்பிள்ள
கள்ளமில்லா உள்ளங்கொண்ட
காளை எங்க விஷ்ணுப்பிள்ள
எல்லையில்லா அன்புகொண்ட
என் தங்கை பெற்ற புள்ள
மன்னாதி மன்னனான
மருதுபாண்டி வம்சத்துல
பொன்னான சிவகங்கைச்
சீமை பெற்ற மச்சக்காள
அப்புக்குட்டி செல்லக்குட்டி
தங்கக்கட்டி வெல்லக்கட்டி
முத்துப்பெட்டி வைரப்பெட்டி
முத்தந்தரும் கன்னுக்குட்டி
No comments:
Post a Comment