Saturday, July 29, 2023

நிறைமதி பிறந்தாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/aTpM85MQYA0


நாளை (31-07-2023) அன்று என் இளைய மகளும் என் குட்டி இளவரசியுமான  நிறைமதிக்குப் பிறந்தநாள். அவளின் பிறந்தநாளிற்காய் நான் மெட்டமைத்த/எழுதிய/பாடிய பாடல்.

சந்தமும் தொடைநயமும் துள்ளி விளையாடுகிறது இந்தப் பாடலில்...




கொஞ்சிடும் குயிலாய் வஞ்சியே - உன்
குரலைக் கேட்டேன் துஞ்சியே  
கெஞ்சிடும் குழவி அஞ்சியே - என் 
தோளிலே ஆடிடும் துஞ்சியே

மங்கையே மானின் தங்கையே - உன் 
மலர்ந்த கைகள் செங்கையே 
கங்கையே புனித கங்கையே - புது
மழலை பேசும் மங்கையே 

தங்கமே ஜொலிக்கும் தங்கமே - என்
தேவதை அழகின் அங்கமே 
பொங்குமே அழகு பொங்குமே - உன் 
பொன்னிற மேனியில் எங்குமே 

அன்னையே எனக்கு அன்னையே - என் 
கண்ணெனக் காப்பேன் உன்னையே 
விண்ணையே பார்த்தால் விண்ணையே - நிறை
மதியாய் உலவும் பெண்ணையே

செல்லமே எனக்குச் செல்லமே - உன் 
பிறந்தநாளில் வெல்லமே
கள்ளமே இல்லா உள்ளமே - உனை 
வாழ்த்திப் பாடித் துள்ளுமே 

No comments: