பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/HYh9D_rWnbo?feature=share
இன்று பிப்ரவரி 13, உலக வானொலி தினம். 13 என்றவுடனே சந்தேகம் தான் எழுகிறது.
ஜான் என்ற பெயர் சிவனின் மேற்குலகப் பெயர் (western name).
தாமஸ் என்பது சித்தர் இராவணனின் மேற்குலகப் பெயர்.
Antony (அந்தோனி) என்பது சித்தர் கிருஷ்ணனின் மேற்குலகப் பெயர்.
இதே போல், மார்க்கோனி என்ற பெயர் சித்தர் முருகனைக் குறிக்கும் மேற்குலகப் பெயர்.
வானொலி என்பது 200 அல்லது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப் பட்டது அல்ல. 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக் கண்டத்தில் பிறந்த முருகன் வானொலி, மிதிவண்டி என்ற சைக்கிள் போன்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை கண்டறிந்தார்.
3G cellphone என்பது 2013 ல் கண்டுபிடிக்கப் பட்டது அல்ல. 7,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் சித்தரான கிருஷ்ணர் 3G தொழில்நுட்பத்தை (technology) கண்டறிந்தார்.
நம் சித்தரான கிருஷ்ணர் solar car அதாவது சூரிய ஒளியில் இயங்கும் மகிழ்வுந்து அதாவது solar car ஐ கண்டறிந்துள்ளார்.
மேற்சொன்ன அனைத்தும் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் ஐயா. பாண்டியன், ஐந்தாம் தமிழர் சங்கம் மற்றும் சுசித்ரா ஆசீவகர் ஆகியோரின் துணையுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளன.
இன்று நம் சித்தர்களை நினைவுகூர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.
1990 களில் என் கிராமத்தில் பக்கத்து வீடுகளில் இலங்கை மற்றும் திருச்சி வானொலி நிலையங்களில் பாடல்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கேட்டு மகிழ்ந்த காலம். அப்பொழுதெல்லாம் வானொலி, மிதிவண்டி இருந்த குடும்பங்கள் பணக்கார்கள்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மழை வெள்ளம் வந்து மின்சாரமும் இன்றித் தவித்தபோது வானொலியில் மட்டுமே வெளியில் நம்மைச் சுற்றி என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
வானொலியைப் பற்றி தொடையில் தட்டியபடியே பாடியதில் மிக்க மகிழ்ச்சி.
காதுவழி உள்நுழைந்து
காதலிக்க வைக்கிறாய்
காற்றுவழி ஒலிபரப்பி
கானமதைத் தைக்கிறாய்
ஊணுருக நெஞ்சமதை
உருக வைக்கும் பாடல்கள்
உங்கள் முகம் என்னவென்று
உளமாரத் தேடல்கள்
பூதங்கள் ஐந்தினையும்
கட்டிப்போட்டு வைக்கிறாய்
பூமணமாய் புவியெங்கும்
இணையவழி மொய்க்கிறாய்
செய்திகளைத் தருவதிலே
முந்தி வரும் அன்பலை
சிறப்பான பாடல்களை
செவியனுப்பும் பண்பலை
அறிவியலை அன்புடனே
அள்ளித்தரும் பொக்கிஷம்
விவசாயம் வில்லுப்பாட்டு
சொல்லித்தரும் புத்தகம்
ஆதலினால் வானொலியை
காதலிக்கச் சொல்கிறேன்
நான் காதலிக்கும் வானொலிக்கு
வாழ்த்துப் பாடல் சொல்கிறேன்