Sunday, February 9, 2025

நம் முன்னோர்கள் உருவாக்கிய ஆங்கில மொழி

https://www.facebook.com/reel/1669755110278065?mibextid=rS40aB7S9Ucbxw6v

இந்த விழியம் வெறும் நகைச்சுவைக்காக மட்டுமல்ல. ஆங்கில மற்றும் பிற மொழிகளின் பெரும்பாலான வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை தான்.

உதாரணத்திற்கு,

அரிசி - rice 

பின்னுதல் - பின்னு - ஸ்பின்னு - spin 

பஞ்சு - ஸ்பஞ்சு - sponge

பீடு நடை (வேகமான நடை) - பீடு (வேகம்) - ஸ்பீடு - speed

தமிழ் வார்த்தைகளுக்கு முன் ஸ் என்ற உச்சரிப்பைச் சேர்த்து பல ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழிலிருந்து ஆங்கிலத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

என் அம்மாச்சி அடிக்கடி முட்டி வலிக்கிறது என்று சொல்வதற்கு பதில் கிண்ணி வலிக்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

உருவத்தில் சின்னக் கிண்ணம் போலத்தான் முட்டி இருக்கும்.

முட்டிக்கு அதாவது கிண்ணிக்கு ஆங்கிலத்தில் knee. அதாவது, கிண்ணி -> knee. இந்த knee யில் k என்ற எழுத்தை க் என்று உச்சரிக்கக் கூடாது என்று k silence என்று கிண்ணி  யை knee யாக மாற்றியிருக்கிறான் வெள்ளைக்கார யூதன்.

இதே போல் மதுரை என்று சொல்வதற்கு பதில் மருதைக்கு போறியா? என்று கேட்க நான் பார்த்திருக்கிறேன்.

உண்மையில் மதுரை முன்னொரு காலத்தில் மருத நிலமாக அதாவது ஐந்திணைகளில் ஒன்றான வயலும் வயல் சார்ந்த இடமாக அதாவது விவசாய நிலமாக இருந்திருக்கிறது.

மதுரையை மதுரை என்று சொல்லத் தெரியவில்லையே என்று என் அம்மாச்சியை கிண்டல் செய்திருக்கிறேன். ஆனால், காலப்போக்கில் தான் புரிந்தது மதுரை அல்ல மருதை என்று.

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை வட்டார வழக்கு கொச்சைத் தமிழை நான் வெறுத்தேன். முனைவென்றியை முனவண்டி என்று சொல்வது, மதுரையை மருதை என்று சொல்வது, முகத்தை மூஞ்சி என்று சொல்வது போன்ற பல. ஆனால், காலப்போக்கில் இந்த வட்டார வழக்கு கொச்சைத் தமிழ், நம் வரலாற்றை உள்ளடக்கியிருக்கிறது என்று புரிய ஆரம்பித்த போது கொச்சைத் தமிழையும் நான் நேசிக்கத் தொடங்கினேன்.

என் அம்மாச்சியின் இறுதி நாட்களில் சென்னையிலிருந்து என் சொந்த ஊரான முனைவென்றிக்கு என் அம்மாச்சியை பார்க்க வந்திருந்த போது என் மகள்கள் இருவரிடமும் "நம் குல தெய்வத்தை வணங்க ஐந்து மணி நேரம் பயணம் செய்து தஞ்சாவூர், நீடாமங்கலம் அருகில் போய் தான் பார்க்க வேண்டும். பாட்டி தான் நம்மூரில் இப்போது நம் குல தெய்வம் ஆயியாராம்மன். காலில் விழுந்து வணங்குங்கள்." என்று சொல்ல காலைத் தொட்டு வணங்கி நாங்கள் மூவரும் திருநீர் வாங்கினோம்.

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

No comments: