Saturday, May 29, 2021

கர்ணன் (2021) திரைப்படமும் மகாபாரதமும் கொரோனா தடுப்பூசியும் உலக அரசியலும்

உண்மையில் மகாபாரதம் நடந்த இடம் திருவெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் தான். கேரள மலைக்குறவர்கள் 100 பேர் தான் கௌரவர்கள். குறவர் என்ற பெயரைத்தான் யூத பிராமணன் கௌரவர் என்று மாற்றி வைத்துள்ளான். பாண்டியர் என்ற பெயரைத்தான் பாண்டவர் என்று மாற்றி வைத்துள்ளான் யூத பிராமணன். மகாபாரதப் போர் நடந்த இடம் வட இந்தியாவில் உள்ள குருஷேத்ரம் என்று கதை கட்டியுள்ளான் யூத பிராமணன். 

ஐந்து ஆண்களுக்கு ஒரு பெண் எப்படி மனைவியாக இருக்க முடியும்? திரௌபதி என்பது தரை + பதி தான். அதாவது, தரைக்கு அதிபதி. அதாவது, இந்த தமிழர் நிலம் தான் பெண்ணாக உருவகப் படுத்தப் பட்ட திரௌபதி. இந்தத் தரைக்கு அதிபதிகள் தரையில் விவசாயம் செய்த இராவண வாரிசுகளான பாண்டியர்கள். குறவர்கள் மலைகளில், குகைகளில் வாழ்ந்தவர்கள். 

பாண்டியர்கள் விவசாயம் செய்ய காட்டின் ஒரு பகுதியை கொளுத்த முற்பட்டனர். குறவர்கள் காட்டைக் கொளுத்தக் கூடாது என்று சண்டையிட்டனர். சித்தரான கிருஷ்ணன் அதாவது கண்ணன் (கண்ணபிரான்) பாண்டியர்களுக்கு ஆதரவாக நின்று பாண்டியர்களை வெற்றி பெற வைத்தார். இந்தப் போரே உண்மையான மகாபாரதப் போர்.

சீதை என்பது ஊட்டி மலைப்பகுதியை குறித்த பெயர். ஊட்டி மலைப் பகுதியைத்தான் சீதை என்ற பெண்ணாக உருவகப் படுத்தினான் யூதன். தமிழர்களை அழிக்க வந்த யூத பிரமணன் இராமன். பத்துக் கலைகளில் சிறந்தவர் சித்தரானான இராவணன். இதனாலேயே பத்துக்கலை இராவணன் என்று சொல்லி காலப் போக்கில் பத்துத்தலை இராவணன் என்றானது. இரா + வானன் அதாவது இரவில் வானத்தை ஆராய்பவன் என்ற பொருளில் இராவணன் என்ற பெயர். தமிழகத்தை குறிப்பாக ஊட்டி மலைப் பகுதியை கைப்பற்ற வந்த யூத பிராமணனான இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் ராமன் தோற்கடிக்கப் பட்டான். இந்தப் போரே இராவணீயப் போர். இதைத்தான் இராமாயணப் போர் என்று கதை கட்டினான் யூத பிராமணன். கம்பர் என்பவரும் யூத பிராமணனின் கட்டாயத்தின் பேரில் உண்மை வரலாற்றை மறைத்து இராமாயணம் என்ற பொய்யை பிரபலப் படுத்தினார். உண்மையில் கதாநாயகனின் பெயரை வைத்துத்தான் காவியத்தின் தலைப்பு கொண்டாடப் பட வேண்டும். இங்கு இராமன் தோற்கடிக்கப் பட்டான். அந்த அவமானம் தாங்காமல் இராமன் இராவணீஸ்வரக் (இராமேஸ்வர) கடலில் தற்கொலை செய்துகொண்டான். தோற்றவனை, தமிழினத் துரோகியை இராமன் என்ற கடவுளாக்கி, இராவணீயப் போர்  என்பதை மறைத்து தற்கொலை செய்து கொண்டவனின் பெயரால் இராவணீயப் போரை இராமாயணப் போர் என்று கதை கட்டினான் யூத பிராமணன்.

 எனவே, நமது கடவுளர் யார் யார்? என்று தெரிந்து கொண்டு அவர்களை மட்டும் வழிபடுங்கள். 

பராசக்தியை வழிபடுங்கள். துர்க்கை என்பவள் கேடுகெட்டவள். துர்க்கையை கடவுளாக்கி வழிபடாதீர்கள்.

நேற்று இரவுதான் கர்ணன் (2021) திரைப்படம் பார்த்தேன். படத்தில் நாயகன் பெயர் கர்ணன். நாயகி பெயர் திரௌபதி. வில்லனாக வரும் காவல்துறை அதிகாரியின் பெயர் கண்ணபிரான். கதைக்களம் திருநெல்வேலி மற்றும் அதன் அருகாமை. இன்னும் சில பாத்திரங்களின் பெயர்கள் வடமலையான், எமன், துரியோதனன், இன்னும் பல.... அதிர்ந்து போனேன்.

கதைக்கரு என்னவென்றால் ஆதிக்க வர்க்க வன்மமும் பகையும், தனிமனித வன்மமும் பகையும், வில்லனாக வரும் காவல்துறை அதிகாரியின் தலைக்கனத்தால், ஆதிக்க குணத்தால் வரும் விளைவுகள், கொஞ்சம் சாதிச் சீண்டல்கள், மோதல்கள். இந்தக் கதைக்கருவில் மகாபாரத வரலாற்று உண்மை நாயகர்களின் பெயர்கள் ஏன் வருகின்றன? இந்தப் பெயர்கள் இந்தந்தக் கதாப்பாத்திரங்களுக்கு யார் வைக்கின்றனர்? இந்தப் பெயர்கள் இந்தந்தக் கதாப்பாத்திரங்களுக்குத் தான் வைக்க வேண்டுமென யார் முடிவு செய்கின்றனர்? ஏன் கதைக்கருவிற்கு சம்பந்தமில்லாமல் கதாப்பாத்திரங்களுக்கு பெயர்களை வைக்கின்றனர்? இந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் கர்ணன் கண்ணபிரானை கழுத்தை அறுத்துக் கொலை செய்வது போல வரும்.

திரைப்படத்தின் இடை இடையே வில்லனாக வரும் கண்ணபிரான் மகாபாரதத்தில் உள்ள பெயர்களைச் சொல்லி கிண்டலடிப்பது போல காட்சிகள் வருகின்றன. ஊர் பெரியவர்களுக்கு மகாபாரதப் பெயர்களான குறிப்பாக துரியோதனன் பெயரைச் சொல்லி ஏன் இந்தப் பெயரை வைத்தாய் என்று சொல்லி வில்லனான கண்ணபிரான் அங்கு வந்த அனைவரையும் அடித்து மொட்டைமாடி வெயிலில் தண்டனை கொடுப்பது போல காட்சிகள் வருகின்றன.

படத்தின் பெயரை ஏன் கர்ணன் என வைத்திருக்கின்றனர்?

கதைக்கருவிற்கும் ஒருசில காட்சிகளுக்கும் காதாப்பாத்திரங்களின் பெயர்களுக்கும் வேறு ஏதேதோ அர்த்தங்கள் சொல்லி முன்னறிவிப்பு செய்வது போலவே தெரிகிறது. நீங்களும் அந்தப் படத்தைப் பாருங்கள்.

சாதியை, சாதிக் கலவரத்தை காட்சிப்படுத்திப் படுத்தியே கர்ணன், அசுரன், காலா, பரியேறும் பெருமாள் போன்று படங்களை எடுத்து தமிழர்களில் ஒவ்வொரு சாதிகளுக்கும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்ற பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, தமிழ்க் குடிகளுக்குள் நீ அவனுக்குப் பகை, அவன் உனக்குப் பகை என்பதை மக்கள் மனங்களில் பதிய வைத்து  தமிழர்கள் மத்தியில் நிரந்தரப் பகையுணர்வை ஏற்படுத்தி தமிழன் தன்னுடைய முன்னோர்களால் தான் இந்த சாதிக் கலவரங்கள் தூண்டப்பட்டன என்று தன்னைத் தானே இழிபிறவியாக கருதிக்கொண்டு கூனிக்குறுகி வாழவேண்டும் என்ற எண்ணத்தில் குளிர் காய்ந்து கொண்டும் கல்லா கட்டிக் கொண்டுமிருக்கிறது இந்த தமிழ் திரைப்படத் துறை.

 ஆனால்,சாதிக்கலவரங்களும் இனவெறித் தாக்குதல்களும் ஆதிக்க வர்க்க யூத பிராமணர்களாலும் அவர்களின் வேட்டை நாய்களான நாயுடு நாயக்கர் போன்ற தெலுங்கர்களாலும் விஜய நகரப் பேரரசு தமிழ்நாட்டில் வந்தபிறகு தான், பரசுராமனின் கலவரப் (களப்பிரர்) படையெடுப்பின் பின்னர் தான் என்பது தான் உண்மை. இந்த உண்மையை தமிழ் திரைப்படத் துறை ஏன் சொல்ல மறுக்கிறது? ஏனெனில் தமிழினத்தின் மீதான வன்மம் காரணமாகவே பொய்யான பிரச்சாரங்களை கதைக்கருவாக புகுத்தி உலக அரசியலை மறைமுகமாகச் சொல்லி (உதாரணத்திற்கு தசாவதாரம், விஸ்வரூபம், ,அன்பே சிவம் ) பாமரத் தமிழர்களின் அறிவை மழுங்கடித்து அவர்களின் அறியாமையை தொடர்ந்து நீட்டித்து தமிழர்களை தங்களின் உண்மையான வரலாற்றைப் பற்றி தெரிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் செயல்படுகின்றனர்.

சாதிப் பட்டங்களைக் கொண்டு மட்டும் தான், வேற்றினத்தவரிடமிருந்து தமிழரை வேறுபடுத்திக் காட்டமுடியும். சாதிகள் என்பது தமிழரின் வரலாற்றை பதிந்து வைத்திருக்கும் அடையாளங்கள். தமிழர் வரலாற்றின் திறவுகோலே சாதி தான். சாதி ஒழிப்பு என்பது தமிழர் ஒழிப்பில் முடியும்!

பொதுவாக தடுப்பூசி என்பது இரண்டு மூன்று ஆண்டுகள் எலிகளுக்கு, மற்ற பிராணிகளுக்கு சோதனைகள் செய்து பார்த்த பிறகுதான் மனிதர்களுக்குச் செலுத்துவார்கள். ஆனால், கொரோனா தடுப்பூசியை மட்டும் உயிர் பயம் காட்டி ஏன் கண்டுபிடித்த ஆறு மாத காலங்களுக்குள் மனிதர்களுக்கு செலுத்துகிறார்கள்? நாம் தான் யோசிக்க வேண்டும்.

கொரோனா நோய் என்பது உண்மை. அது தானாக பரவ வில்லை. அந்த நோய் சீனாவிலிருந்து அமெரிக்க இரகசியக் குழுக்கள் மூலமாக பரப்பப் பட்டிருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.

பொதுவாகவே இரகசியக் குழுக்கள் தங்களின் திட்டங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீட்டி வைத்து மிகவும் மெதுவாக ஆமை வேகத்தில் செயல்படுத்துவார்கள். முதலில் பொது மக்களுக்கு மறைமுகமாக பிரச்சினைகளை உருவாக்குவார்கள். உதாரணத்திற்கு கொரோனா நோய் தொற்று. சில மாதங்கள் கழித்து அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லுவான். அரசாங்கத்தை விட்டு சொல்ல வைப்பான். உதாரணத்திற்கு கொரோனா தடுப்பூசி. அது சரி, இந்த கொரோனா தடுப்பூசியினால் யாருக்கு என்ன லாபம்?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவத் துறைக்கு சம்பந்தமில்லாத கணினித்துறை சார்ந்த Microsoft நிறுவனத்தின் தலைவனான பில்கேட்ஸ் ஒரு மாநாட்டில் மக்கட்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக பேசியுள்ளான். இணையத்தில் world depopulation agenda 2030 என தேடிப்பாருங்கள். 

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்களுக்கு மலட்டுத் தன்மையை உண்டாக்கினால் மக்கட்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தலாமல்லவா? இதற்காகத்தான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவத் துறைக்கு சம்பந்தமில்லாத கணினித்துறை சார்ந்த Microsoft நிறுவனத்தின் தலைவனான பில்கேட்ஸ் மக்கட்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என பேசினானா?

உலக மக்கட்தொகையை 700 கோடிகளிலிருந்து 400 கோடிகளாக அதாவது பாதியாக குறைப்பதே world depopulation agenda 2030 என்று உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரகசியக் குழுக்களின் (இல்லுமினாட்டிகளின்) மறைமுகத் திட்டம். 

இராவணீயப் போரின் (இராமாயணப் போரின்) பழிவாங்கலே முதலாம் உலகப் போர். மகாபாரதப் போரின் பழிவாங்கலே இரண்டாம் உலகப்போர்.

உலகின் முதல் சித்தர் என அறியப்படுகிற ஆதிசிவனை குறவர் என்றும் குறவன் என்றும் குறவோன் என்றும் அழைப்போம். அந்த சிவனை வணங்கிய சித்தரான இராவணனையும் குறவோன் என்றே அழைக்கிறோம். அந்த குறவோன் தான் crown (மகுடம்) என்றாகி கொரோனா என்றானது. ஆக, இராவணீயப் போரில் இராவணனால் தோற்கடிக்கப் பட்ட யூதனான இராமனுக்காக யூத இரகசியக் குழுக்களால் தன்னுடைய யூத இராமனை தோற்கடித்த இராவணனை கொரோனா வைரஸாக உருவகப் படுத்தி இராவணனை பழிவாங்கவே இந்த கொரோனாவை பரப்பி விட்டதும் கொரோனா தடுப்பூசி நாடகமும்.

எனவே, கொரோனா தடுப்பூசிக்கும் மலட்டுத் தன்மைக்கும் உலக அரசியலுக்கும் இராமாயண மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, May 15, 2021

மறுமகளே தாயீ

அம்முக்குட்டி அழகுக்குட்டி
அருகில் நீயும் வாடி
செல்லக்குட்டி வெல்லக்கட்டி
அழகு முத்தம் தாடி

பொம்முக்குட்டி புஜ்ஜுக்குட்டி
பூனைக்குட்டி வாடி
கண்ணுக்குட்டி கவிதைப்பெட்டி
கட்டிமுத்தம் தாடி

அழகுச்சிலை மெழுகுச்சிலை
அன்புமொழி ஆயீ
முழுவதுவாய் மனதில் நிறை
மறுமகளே தாயீ

கொஞ்சுமயில் கூவும்குயில்
குலவிளக்கே வாடி
நெஞ்சமதில் விஞ்சுமெழில்
முழுநிலவே வாடி

வாப்பட்டி கருப்பட்டி
வாயாடிப்பிள்ள
அடம்பிடித்து அழுதாலே 
பிள்ளையில்ல தொல்ல 

பிறந்தநாளில் பரிசாக
புத்தம்புது பாட்டு
பத்திரமா வச்சுக்கோ
காதோரம் கேட்டு 

Saturday, May 8, 2021

என் மகள் ரிதன்யா

பிறந்தநாள் வாழ்த்து
=====================

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=UyVIWx3gH_o

இன்று (09-05-2021) தன்னுடைய ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும் என்னன்பு மகள் ரிதன்யாவை வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்

முனைவென்றி நா. வேல்முருகன் - ஆனந்தி ( அப்பா - அம்மா ), 
த. நாகராசன் - கமலம் ( அப்பப்பா - அப்பம்மா ),  
அ. சந்திரமோகன் - அனுசுயா ( அம்மப்பா - அம்மம்மா ), 
சு. சோபனா - நே. சுரேந்தர் ( அத்தை - மாமா ), 
தங்கை நிறைமதி, 
சு. விஷ்ணு ( அத்தை மகன் ), 
சு. பிரகதி ( அத்தை மகள் ), 
மற்றும் உற்றார் உறவினர்.


என் மகள் ரிதன்யாவைப் பற்றி ஒரு முக்கியமான செய்தி.

நான் யார் யாரிடம் அன்பை எதிர்பார்த்து நின்றேனோ, அவர்களின் மொத்த உருவமாய் இப்போது என்னோடு இருக்கும் ஒரு உன்னத ஆன்மா என் மகள் ரிதன்யா.

நான் என் கடந்த காலங்களில் என் அன்புக்குரியவர்களிடம் பேசிய வார்த்தைகளை நான் ரிதன்யாவிடம் பகிர்ந்துகொள்ளாமலேயே அதே வார்த்தைகளை என்னிடம் அவள் பேசுகிறாள். உதாரணத்திற்கு, 

"அப்பா, என்ன செல்லங்கொஞ்சு அப்பா"
"அப்பா, உன் மடியிலேயே படுத்துக்கணும் அப்பா"
"அப்பா, எங்கப்பா போற, என் கூடவே இரு அப்பா, எங்கேயும் போகாத அப்பா"
"அப்பா, என்மேல கோபமா இருக்கியா அப்பா"
இன்னும் பல...

ஒவ்வொரு அப்பாக்களுக்கும்  தங்களுடைய கலப்படமில்லாத தூய்மையான அன்பால் மயிலிறகு கொண்டு வருடி விடுவது போல கடந்த கால ஆறாத வடுக்களை, இரணங்களை, தோல்விகளை தேவையில்லாத நினைவுகளை மறக்கடிக்க இந்த பிரபஞ்ச சக்தி அனுப்பி வைத்த தேவதைகள் மகள்கள். ( இதை எழுதும்போதே கண்களில் கண்ணீர் ததும்ப ஆனந்தத்தில் மிதந்தபடி...)


தத்தைமொழி பேசுகின்ற கத்துங்கிளித் தேனே 
அத்தமக பெத்தெடுத்த முத்துச்சிப்பி தானே
முத்துமணி இரத்தினமாய் முத்தந்தரு மானே
கொத்துமலர் அற்புதத்தைப் பெற்றவனும் நானே 

கண்ணெதிரே நின்றொளிரும் காலைக்கதிர் நீயே
மண்ணுலகில் நின்றுலவும் மங்கைமதித் தாயே
உன்னுருவில் என்னுருவை உணரவைத் தாயே
என்னுலகில் வெண்ணிலவாய் உலவுமன்புச் சேயே 

தங்கமதை அங்கமதில் சூட்டியது போலே 
மங்கைமதிக் கங்கைநதி மனதில் நிறைந் தாளே 
குங்குமமாய் மங்களமாய் குலதெய்வம் போலே 
எங்களோடு சங்கமித்தாய் என்னுதிரம் போலே 

அழகுமகள் பழகுந்தமிழ் ஆசையுடன் கேட்டு 
புலருமதி காலையிலே புத்தம்புது பாட்டு 
மலருமிந்த மலர்களுமே நுகருமின்பக் காற்று 
மழலையிவள் நிலவைவிட அழகென்றே போற்று

சித்தமதில் புத்தம்புது சிந்தனையாய் நின்று 
நித்தமொரு பாட்டிசைப்பேன் நிலவுமுகம் கண்டு 
சத்தமின்றி ஏழைக்கிங்கு உதவினாலே இன்று
எத்தனையோ கணக்கில்லா இறைக்காற்றும் தொண்டு

Sunday, April 25, 2021

மறுமகனுக்குப் பிறந்தநாள் (26-04-2021) - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்

பாடல் வரிகளை கேட்க - https://youtu.be/yRLzL3E2rNo


சுட்டித் தம்பி மறுமகனே
கட்டி முத்தம் தருபவனே
குட்டிமுயற்க் குட்டிபோல
எட்டியோடும் அரும்பிவனே

செல்ல மச்சக்காள - சிவ
கங்கைச் சீமையாள
நல்லப்பிள்ள போல - சேட்டை
செய்யும் வெட்டிவேல

கள்ளமில்லா உள்ளம் - கரை
கடக்குமன்பு வெள்ளம்
செல்லமழகுச் செல்லம் - இது
சீனிக்கரும்பு வெல்லம்

ஆட்டம் போடும் பாட்டு - எங்கும்
கூட்டம் கூடும் கேட்டு
வேட்டு வெடி வேட்டு - நீ
போட்டுத் தாளம் போட்டு

முத்துமணி மால - இவன்
முத்தந்தரும் காள
சொத்துசுகம் ஆள - பிறந்த
செல்லமச்சக் காள

பிறந்தநாளில் வாழ்த்தி - புகழ்
பாடுமுந்தன் கீர்த்தி - தலை 
சிறந்துவாழ வாழ்த்தி - இறையை
பணிந்துதலை தாழ்த்தி

Sunday, April 11, 2021

சித்திரை மாதமே வருக

சித்திரை மாதமே வருக
சத்தியம் நித்தமும் பெருக
சித்தர்கள் அருளைத் தருக
உத்தமர் உள்ளமும் உருக

சித்தர் ஓரையும் சிவனே
சித்திரை மாதமும் அவனே
சித்தமும் நித்தமும் சிவனே
சிந்தையில் திகழொளி பவனே

திருமால் தந்திட்ட பஞ்சாங்கம்
திருவே சரணம் என்றென்றும்
ஒருநாள் உனையே நினைக்க 
உருகும்  மனமும் தினமும்

சிவனின் கொடையே தமிழ்ச்சங்கம் 
அதுவே நமக்கு முதற்ச்சங்கம்
முருகன் கொடையே தமிழ்ச்சங்கம்
அதுவே இரண்டாம் தமிழ்ச்சங்கம்

திருமால் கொடையே தமிழ்ச்சங்கம்
அதுவே மூன்றாம் தமிழ்ச்சங்கம்
கருணை வடிவே பெருங்கடலே
கனமும் தினமும் உம்நினைவே

இராவணன் மகனே இந்திரசித்தன்
இராவண இந்திர இரட்டையர்  மீனம்
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு சித்தனாய்
உயர்வாய் வகுத்தவன் உன்னதத் தமிழன்

தமிழ்ப் புத்தாண்டு இன்று தொடக்கம்
சித்தர்கள் அருளால் நன்மை கிடைக்கும் 
தமிழ்மொழி பேசும் அனைவருக்கும்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

Tuesday, September 1, 2020

ஆசிரியர் தினம்

அன்புவழி அழகுமொழி கற்பிக்கும் குருவே
அறியாமை அழிக்கின்ற ஆண்டவனின் உருவே
மண்மேலே கற்பித்தல் முதலான தேவை
மனதிற்கு நிறைவாக மகிழ்வான சேவை

கண்போலே கல்விதனை கற்பித்தல் நலமே
அன்பாலே உலகமெலாம் ஆளுங்கல்வி வளமே
உன்போலே ஆசிரியர் உலகமெலாம் வாழ்க
தன்னிகரு மில்லாதத் தமிழ்போலே ஆள்க

ஆடுகின்ற ஓடுகின்ற அரும்புகளே நிற்க
அறியாமை இருள்நீங்க அனுதினமும் கற்க
பாடுகின்ற குயில்போல பரவசமும் வேண்டும்
பரவசமாய் பாடங்களை படித்திடவும் வேண்டும்

இப்போது தேவையிந்த இணையவழிக் கல்வி
எப்போதும் இளமையாக இருக்குந்தமிழ்ச் செல்வி
தப்பேதும் இல்லையிங்கு தமிழ்வழியே கல்வி
தமிழிலுள்ள அறிவியலை தரணிதனில் சொல்லி

மழலையரே நம்முடைய எதிர்கால உடைமை
மனமுவந்து கற்பித்தல் மகத்தான கடமை
மழலைகளில் பாகுபாடு என்பதுவே மடமை
மண்ணிலிந்த கல்வியது  மனிதர்களின் உரிமை


Thursday, July 30, 2020

நிறைமதி

அழகாய் அறிவாய் அமுதாய் தமிழாய்
நிலவாய் பிறந்த நிறைமதி வா வா
மலராய் மணமாய் மனதில் நிறைவாய்
வழியாய் ஒளியாய் வான்மதி வா வா

சங்கத் தமிழாய் தங்கச் சிமிழாய்
எங்கள் மகளாய் இறையே வா வா
பொங்கும் புனலாய் தங்கும் வளமாய்
எங்கும் எழிலாய் எழில்மதி வா வா

பகலவன் ஒளியாய் பௌர்ணமி நிலவாய்
அகிலாய் அகலாய் அழகே வா வா
மகளிவள் ஆற்றாய் மனதில் ஊற்றாய்
முகிலாய் மழையாய் மலர்மதி வா வா

காற்றில் ஒலியாய் கவிதைக் குயிலாய்
கவியாய் தெறிப்பாய் கவிமதி வா வா
பாட்டில் இசையாய் பைந்தமிழ் மொழியாய்
பாட்டாய் காற்றாய் புகழ்மதி வா வா

மழலை குறும்பாய் மலரும் அரும்பாய்
மணியே அணியே மகிழ்மதி வா வா
விழியில் நிறைவாய் வெகுளிச் சிரிப்பாய்
வளமாய் நலமாய் வளர்மதி வா வா

பாப்பா நீயும் சிரித்தா லழகு
பாசம் கொண்டே பார்த்தா லழகு
அப்பா என்றே அழைக்கும் நாளே
அப்பா எனக்கும் அழகோ அழகு

உலகம் உன்னால் அழகோ அழகு
அழகே நீயும் அழகோ அழகு
மழலை மொழியில் மணக்கும் தமிழும்
மகளே உன்னால் அழகோ அழகு

கண்கள் அழகு கால்கள் அழகு
சிரித்தே மயக்கும் செயல்கள் அழகு
முன்னால் தெரியும் முயற்குட்டிப் பற்கள்
மகளே அவையும் அழகோ அழகு

Wednesday, July 8, 2020

முழுநிலவின் முகக்கவசம்

முழுநிலவின் அழகை
மேகங்கள் மறைப்பதைப் போலவே
உன் முக அழகை
முகக் கவசமது
மறைக்கிறது

நானும்
ஏமார்ந்துதான் போகிறேன்
முழுநிலவின் அழகை
இரசிக்க வந்து
ஏமார்ந்து போகும்
குழந்தையை போல...

ஆனாலும் புரிகிறது
மறைப்பது
பாதுகாப்புக் கவசமென்பதால்...


Friday, April 3, 2020

என் மறுமகளே

அம்மாயி பொம்மாயி வாடியம்மா வா
ஆத்தா என் மறுமகளே வாடியம்மா வா
அம்மாடி அழகுச்சிலை வாடியம்மா வா
அமுதூறும் வாயாலே முத்தமொன்று தா

பொன்னான பெண்ணழகே கண்ணான கண்ணழகே
பொக்கைவாய் சிரிப்பழகே புதுமையான மொழியழகே
பெண்ணாகப் பேரழகே பேரழகின் அழகழகே
அமுதூறும் வாயழகே அழகூறும் சேயழகே
(......அம்மாயி)

தத்திவரும் நடையழகே தாமரைப்பூ முகமழகே
புத்தியுரைத் தமிழழகே புத்தம்புது மலரழகே
தத்தைமொழிப் பேச்சுழகே தாலாட்டும் பாட்டழகே
முத்துமுத்தாய் பல்லழகே முழுநிலவின் முகமழகே
(......அம்மாயி)

மாமனென்று நீயழைக்க மனமெங்கும் மகிழ்வாகும்
பூமணக்கும் காய்கனியும் பிஞ்சுமலர் சிரிப்பினிலே
ஆமெனக்கு அதிசயமே அழகான சித்திரமே
வாமனனாய் வடிவெடுத்த என்தங்கை மகளே வா

அத்தையென நீயுரைக்க உறவிங்கே அழகாகும்
முத்துமுத்தாய் நீபேச முழுநிலவின் புகழ் மங்கும்
சொத்துசுகம் அதிகமில்லை சோகமிங் கெனக்கில்லை
தத்தையிவள் தமிழ்பேச சித்தமதில் கர்வமடி
(......அம்மாயி)

அம்மாயி பொம்மாயி வாடியம்மா வா
ஆத்தா என் மறுமகளே வாடியம்மா வா
அம்மாடி அழகுச்சிலை வாடியம்மா வா
அமுதூறும் வாயாலே முத்தமொன்று தா

Thursday, November 28, 2019

கார்த்திகை மாதத்தில் கிராமங்களில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன்? வீடுகளில் நாம் தீபமேற்றுவது ஏன்?






கார்த்திகை என்பதன் பொருள் மழைக்காலத்தில் (கார் காலத்தில்) கையில் தீயை ஏந்துதல் என்று பொருள்.

அதாவது கார் + தீ + கை = கார்த்தீகை = கார்த்திகை.

ஏன் கையில் தீயை ஏந்த வேண்டும்?

முருகனின் இன்னொரு பெயர் கார்த்தீகையன் என்பதாகும். கார்த்தீகையன் என்ற பெயரே கார்த்திகேயன் என்றானது.

ஏன் முருகன் கார்த்தீகையன் என்று அழைக்கப் பட்டார்?

குமரிக் கண்ட அழிவிற்கு பிறகு சித்தரான முருகன் எஞ்சிய தம் மக்களை அழைத்துக் கொண்டு வந்து குடியேறிய இடம் தமிழீழத்தில் உள்ள (இன்றைய இலங்கையில் உள்ள) கதிர்காமம் என்பதாகும்.

கதிர் என்றால் கேழ்வரகு கதிர், சோளக் கதிர், நெற்கதிர் என்பதாகும்.
காமம் என்றால் கிராமம் என்று பொருள்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் வாழ்ந்த காலத்திற்கு முன்பு கிராமம் என்ற வார்த்தை தமிழில் இல்லை. காமம் என்ற வார்த்தையே தமிழில் இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் காமம் என்பதற்கு கிராமம் என்று பொருள்.

விவசாயத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் முருகனே. முருகன் போர்க்கலைகள் (Martial Arts) தெரிந்த படைத்தளபதி.

விவசாயத் தொழில்நுட்பம் முதன்முதலில் தொடங்கிய இடம் தமிழீழம் தான். தமிழீழத்தில் உள்ள கதிர்காமம் தான். விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டு தமிழீழத்தில் யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குபேரன் என்ற மன்னன் தன் மக்களோடு செல்வச் செழிப்போடு வாழ்ந்தது தமிழர்களாகிய நம்முடைய வரலாறு. குபேரன் போல் நாமும் செல்வ செழிப்போடு நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும் என்பதற்காகத் தான்  நாமும் நம்முடைய வீட்டிலோ வியாபாரம் செய்யும் இடத்திலோ குபேர பொம்மையை வைத்திருக்கிறோம்.

10000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசிவன் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாடும் தமிழீழமும் இணைந்த, தமிழீழத்திற்குக் கீழே பரந்து விரிந்த நிலப்பரப்பாய் குமரிக்கண்டத்தில் மக்கள் அனைவரும் குறிஞ்சி நிலமாகிய மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த காலமே கிரித யுகம் (கிருத யுகம்) ஆகும். கிரி என்றால் மலை (உதாரணத்திற்கு சதுரகிரி) என்று பொருள். கிரித யுகம் என்றால் மக்கள் மலைகளில் வாழ்ந்த யுகம் என்று பொருள்.

மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த ஆதிகாலத் தமிழர்கள் மலைக்குறவர்கள் என்றும் வரையர்கள் (பறையர்கள்) என்றும் அழைக்கப் பட்டனர். 

ஆதிசிவனும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மலைக்குறவராகவும் வரையராகவும் (பறையராகவும்) அறியப்பட்டார். தமிழர்கள் அனைவருமே ஆதிகாலத்தில் வரையர் (பறையர்) மற்றும் குறவர் இனத்திலிருந்து தோன்றியவர்கள் தாம்.
வரை என்றால் தமிழில் மலை என்ற பொருளும் உண்டு. வரையர் என்றால் மலையில் வாழ்பவர் என்று பொருள்.

மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக காலப்போக்கில் மனிதர்கள் மலையிலிருந்து இறங்கி முல்லை நிலமாகிய காடுகளில் வாழ்ந்தனர். தரையில் மக்கள் வாழ்ந்ததால் அந்த யுகம் தரைத யுகம் (திரேதா யுகம்) என்று அழைக்கப் பட்டது.

மக்கட்தொகை பெருகப் பெருக, உணவின் தேவை அதிகமானது. அப்போது வாழ்ந்த முருகன் காடுகளில் ஒரு பகுதியை அழித்து தீயிலிட்டுக் கொளுத்தி, பனைமரக் காடுகளைக் கொளுத்தி சமநிலமாக்கி விவசாயம் என்ற உயரிய தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.

முருகன் பனைமரக் காடுகளை கொளுத்தி விவசாயத்தை தொடங்கிய காலம் மழைக்காலம் (கார் காலம்) தொடங்கிய இந்த கார்த்தீகை மாதத்தில் தான். கார்த்தீகை என்பதே மருவி கார்த்திகை என்றானது.

முருகன் பனை மரக் காடுகளை கொளுத்தி விவசாயத் தொழில்நுட்பத்தை கண்டறிந்ததன் நினைவாகத் தான் கிராமங்களில் சொக்கப்பனை கொளுத்தி முருகனையும் விவசாயத்தையும் வழிபடுகின்றனர்.

குமரிக் கண்ட அழிவிற்கு பிறகு தமிழர்களின் மக்கட்தொகை குறைவதைக் கண்ட முருகன் மக்கட்தொகையை உயர்த்த முடிவுசெய்து இரும்புச் சத்து மிகுந்த, இனப்பெருக்கத்திற்கு உதவி செய்யும் ஒரு மரத்தை அனைவரின் வீட்டிலும் நட்டு வளர்க்கச்சொல்லி பரிந்துரைத்தார் முருகன். அந்த மரம் முருகனின் பெயரால் முருகன் மரம் என்றே அழைக்கப்பட்டு நாளைடைவில் இன்று முருங்கை மரம் என்றானது. முருகனின் நினைவாகத் தான் இன்றும் நாம் நம் வீட்டில் முன் பகுதியிலோ அல்லது பின் பகுதியிலோ முருங்கை மரம் வளர்க்கிறோம். முருங்கை மரத்தின் இலை, காய், பூ என அனைத்தும் இரும்புச்சத்து மிகுந்தவை.

நாமும் இந்த கார்த்திகை மாதத்தில் முருகனையம் விவசாயத்தையும் போற்றும் விதமாகத் தான் வீடுகளில் தீபமேற்றுகிறோம்.