Saturday, May 8, 2021

என் மகள் ரிதன்யா

பிறந்தநாள் வாழ்த்து
=====================

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=UyVIWx3gH_o

இன்று (09-05-2021) தன்னுடைய ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும் என்னன்பு மகள் ரிதன்யாவை வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்

முனைவென்றி நா. வேல்முருகன் - ஆனந்தி ( அப்பா - அம்மா ), 
த. நாகராசன் - கமலம் ( அப்பப்பா - அப்பம்மா ),  
அ. சந்திரமோகன் - அனுசுயா ( அம்மப்பா - அம்மம்மா ), 
சு. சோபனா - நே. சுரேந்தர் ( அத்தை - மாமா ), 
தங்கை நிறைமதி, 
சு. விஷ்ணு ( அத்தை மகன் ), 
சு. பிரகதி ( அத்தை மகள் ), 
மற்றும் உற்றார் உறவினர்.


என் மகள் ரிதன்யாவைப் பற்றி ஒரு முக்கியமான செய்தி.

நான் யார் யாரிடம் அன்பை எதிர்பார்த்து நின்றேனோ, அவர்களின் மொத்த உருவமாய் இப்போது என்னோடு இருக்கும் ஒரு உன்னத ஆன்மா என் மகள் ரிதன்யா.

நான் என் கடந்த காலங்களில் என் அன்புக்குரியவர்களிடம் பேசிய வார்த்தைகளை நான் ரிதன்யாவிடம் பகிர்ந்துகொள்ளாமலேயே அதே வார்த்தைகளை என்னிடம் அவள் பேசுகிறாள். உதாரணத்திற்கு, 

"அப்பா, என்ன செல்லங்கொஞ்சு அப்பா"
"அப்பா, உன் மடியிலேயே படுத்துக்கணும் அப்பா"
"அப்பா, எங்கப்பா போற, என் கூடவே இரு அப்பா, எங்கேயும் போகாத அப்பா"
"அப்பா, என்மேல கோபமா இருக்கியா அப்பா"
இன்னும் பல...

ஒவ்வொரு அப்பாக்களுக்கும்  தங்களுடைய கலப்படமில்லாத தூய்மையான அன்பால் மயிலிறகு கொண்டு வருடி விடுவது போல கடந்த கால ஆறாத வடுக்களை, இரணங்களை, தோல்விகளை தேவையில்லாத நினைவுகளை மறக்கடிக்க இந்த பிரபஞ்ச சக்தி அனுப்பி வைத்த தேவதைகள் மகள்கள். ( இதை எழுதும்போதே கண்களில் கண்ணீர் ததும்ப ஆனந்தத்தில் மிதந்தபடி...)


தத்தைமொழி பேசுகின்ற கத்துங்கிளித் தேனே 
அத்தமக பெத்தெடுத்த முத்துச்சிப்பி தானே
முத்துமணி இரத்தினமாய் முத்தந்தரு மானே
கொத்துமலர் அற்புதத்தைப் பெற்றவனும் நானே 

கண்ணெதிரே நின்றொளிரும் காலைக்கதிர் நீயே
மண்ணுலகில் நின்றுலவும் மங்கைமதித் தாயே
உன்னுருவில் என்னுருவை உணரவைத் தாயே
என்னுலகில் வெண்ணிலவாய் உலவுமன்புச் சேயே 

தங்கமதை அங்கமதில் சூட்டியது போலே 
மங்கைமதிக் கங்கைநதி மனதில் நிறைந் தாளே 
குங்குமமாய் மங்களமாய் குலதெய்வம் போலே 
எங்களோடு சங்கமித்தாய் என்னுதிரம் போலே 

அழகுமகள் பழகுந்தமிழ் ஆசையுடன் கேட்டு 
புலருமதி காலையிலே புத்தம்புது பாட்டு 
மலருமிந்த மலர்களுமே நுகருமின்பக் காற்று 
மழலையிவள் நிலவைவிட அழகென்றே போற்று

சித்தமதில் புத்தம்புது சிந்தனையாய் நின்று 
நித்தமொரு பாட்டிசைப்பேன் நிலவுமுகம் கண்டு 
சத்தமின்றி ஏழைக்கிங்கு உதவினாலே இன்று
எத்தனையோ கணக்கில்லா இறைக்காற்றும் தொண்டு

Sunday, April 25, 2021

மறுமகனுக்குப் பிறந்தநாள் (26-04-2021) - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்

பாடல் வரிகளை கேட்க - https://youtu.be/yRLzL3E2rNo


சுட்டித் தம்பி மறுமகனே
கட்டி முத்தம் தருபவனே
குட்டிமுயற்க் குட்டிபோல
எட்டியோடும் அரும்பிவனே

செல்ல மச்சக்காள - சிவ
கங்கைச் சீமையாள
நல்லப்பிள்ள போல - சேட்டை
செய்யும் வெட்டிவேல

கள்ளமில்லா உள்ளம் - கரை
கடக்குமன்பு வெள்ளம்
செல்லமழகுச் செல்லம் - இது
சீனிக்கரும்பு வெல்லம்

ஆட்டம் போடும் பாட்டு - எங்கும்
கூட்டம் கூடும் கேட்டு
வேட்டு வெடி வேட்டு - நீ
போட்டுத் தாளம் போட்டு

முத்துமணி மால - இவன்
முத்தந்தரும் காள
சொத்துசுகம் ஆள - பிறந்த
செல்லமச்சக் காள

பிறந்தநாளில் வாழ்த்தி - புகழ்
பாடுமுந்தன் கீர்த்தி - தலை 
சிறந்துவாழ வாழ்த்தி - இறையை
பணிந்துதலை தாழ்த்தி

Sunday, April 11, 2021

சித்திரை மாதமே வருக

சித்திரை மாதமே வருக
சத்தியம் நித்தமும் பெருக
சித்தர்கள் அருளைத் தருக
உத்தமர் உள்ளமும் உருக

சித்தர் ஓரையும் சிவனே
சித்திரை மாதமும் அவனே
சித்தமும் நித்தமும் சிவனே
சிந்தையில் திகழொளி பவனே

திருமால் தந்திட்ட பஞ்சாங்கம்
திருவே சரணம் என்றென்றும்
ஒருநாள் உனையே நினைக்க 
உருகும்  மனமும் தினமும்

சிவனின் கொடையே தமிழ்ச்சங்கம் 
அதுவே நமக்கு முதற்ச்சங்கம்
முருகன் கொடையே தமிழ்ச்சங்கம்
அதுவே இரண்டாம் தமிழ்ச்சங்கம்

திருமால் கொடையே தமிழ்ச்சங்கம்
அதுவே மூன்றாம் தமிழ்ச்சங்கம்
கருணை வடிவே பெருங்கடலே
கனமும் தினமும் உம்நினைவே

இராவணன் மகனே இந்திரசித்தன்
இராவண இந்திர இரட்டையர்  மீனம்
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு சித்தனாய்
உயர்வாய் வகுத்தவன் உன்னதத் தமிழன்

தமிழ்ப் புத்தாண்டு இன்று தொடக்கம்
சித்தர்கள் அருளால் நன்மை கிடைக்கும் 
தமிழ்மொழி பேசும் அனைவருக்கும்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

Tuesday, September 1, 2020

ஆசிரியர் தினம்

அன்புவழி அழகுமொழி கற்பிக்கும் குருவே
அறியாமை அழிக்கின்ற ஆண்டவனின் உருவே
மண்மேலே கற்பித்தல் முதலான தேவை
மனதிற்கு நிறைவாக மகிழ்வான சேவை

கண்போலே கல்விதனை கற்பித்தல் நலமே
அன்பாலே உலகமெலாம் ஆளுங்கல்வி வளமே
உன்போலே ஆசிரியர் உலகமெலாம் வாழ்க
தன்னிகரு மில்லாதத் தமிழ்போலே ஆள்க

ஆடுகின்ற ஓடுகின்ற அரும்புகளே நிற்க
அறியாமை இருள்நீங்க அனுதினமும் கற்க
பாடுகின்ற குயில்போல பரவசமும் வேண்டும்
பரவசமாய் பாடங்களை படித்திடவும் வேண்டும்

இப்போது தேவையிந்த இணையவழிக் கல்வி
எப்போதும் இளமையாக இருக்குந்தமிழ்ச் செல்வி
தப்பேதும் இல்லையிங்கு தமிழ்வழியே கல்வி
தமிழிலுள்ள அறிவியலை தரணிதனில் சொல்லி

மழலையரே நம்முடைய எதிர்கால உடைமை
மனமுவந்து கற்பித்தல் மகத்தான கடமை
மழலைகளில் பாகுபாடு என்பதுவே மடமை
மண்ணிலிந்த கல்வியது  மனிதர்களின் உரிமை


Thursday, July 30, 2020

நிறைமதி

அழகாய் அறிவாய் அமுதாய் தமிழாய்
நிலவாய் பிறந்த நிறைமதி வா வா
மலராய் மணமாய் மனதில் நிறைவாய்
வழியாய் ஒளியாய் வான்மதி வா வா

சங்கத் தமிழாய் தங்கச் சிமிழாய்
எங்கள் மகளாய் இறையே வா வா
பொங்கும் புனலாய் தங்கும் வளமாய்
எங்கும் எழிலாய் எழில்மதி வா வா

பகலவன் ஒளியாய் பௌர்ணமி நிலவாய்
அகிலாய் அகலாய் அழகே வா வா
மகளிவள் ஆற்றாய் மனதில் ஊற்றாய்
முகிலாய் மழையாய் மலர்மதி வா வா

காற்றில் ஒலியாய் கவிதைக் குயிலாய்
கவியாய் தெறிப்பாய் கவிமதி வா வா
பாட்டில் இசையாய் பைந்தமிழ் மொழியாய்
பாட்டாய் காற்றாய் புகழ்மதி வா வா

மழலை குறும்பாய் மலரும் அரும்பாய்
மணியே அணியே மகிழ்மதி வா வா
விழியில் நிறைவாய் வெகுளிச் சிரிப்பாய்
வளமாய் நலமாய் வளர்மதி வா வா

பாப்பா நீயும் சிரித்தா லழகு
பாசம் கொண்டே பார்த்தா லழகு
அப்பா என்றே அழைக்கும் நாளே
அப்பா எனக்கும் அழகோ அழகு

உலகம் உன்னால் அழகோ அழகு
அழகே நீயும் அழகோ அழகு
மழலை மொழியில் மணக்கும் தமிழும்
மகளே உன்னால் அழகோ அழகு

கண்கள் அழகு கால்கள் அழகு
சிரித்தே மயக்கும் செயல்கள் அழகு
முன்னால் தெரியும் முயற்குட்டிப் பற்கள்
மகளே அவையும் அழகோ அழகு

Wednesday, July 8, 2020

முழுநிலவின் முகக்கவசம்

முழுநிலவின் அழகை
மேகங்கள் மறைப்பதைப் போலவே
உன் முக அழகை
முகக் கவசமது
மறைக்கிறது

நானும்
ஏமார்ந்துதான் போகிறேன்
முழுநிலவின் அழகை
இரசிக்க வந்து
ஏமார்ந்து போகும்
குழந்தையை போல...

ஆனாலும் புரிகிறது
மறைப்பது
பாதுகாப்புக் கவசமென்பதால்...


Friday, April 3, 2020

என் மறுமகளே

அம்மாயி பொம்மாயி வாடியம்மா வா
ஆத்தா என் மறுமகளே வாடியம்மா வா
அம்மாடி அழகுச்சிலை வாடியம்மா வா
அமுதூறும் வாயாலே முத்தமொன்று தா

பொன்னான பெண்ணழகே கண்ணான கண்ணழகே
பொக்கைவாய் சிரிப்பழகே புதுமையான மொழியழகே
பெண்ணாகப் பேரழகே பேரழகின் அழகழகே
அமுதூறும் வாயழகே அழகூறும் சேயழகே
(......அம்மாயி)

தத்திவரும் நடையழகே தாமரைப்பூ முகமழகே
புத்தியுரைத் தமிழழகே புத்தம்புது மலரழகே
தத்தைமொழிப் பேச்சுழகே தாலாட்டும் பாட்டழகே
முத்துமுத்தாய் பல்லழகே முழுநிலவின் முகமழகே
(......அம்மாயி)

மாமனென்று நீயழைக்க மனமெங்கும் மகிழ்வாகும்
பூமணக்கும் காய்கனியும் பிஞ்சுமலர் சிரிப்பினிலே
ஆமெனக்கு அதிசயமே அழகான சித்திரமே
வாமனனாய் வடிவெடுத்த என்தங்கை மகளே வா

அத்தையென நீயுரைக்க உறவிங்கே அழகாகும்
முத்துமுத்தாய் நீபேச முழுநிலவின் புகழ் மங்கும்
சொத்துசுகம் அதிகமில்லை சோகமிங் கெனக்கில்லை
தத்தையிவள் தமிழ்பேச சித்தமதில் கர்வமடி
(......அம்மாயி)

அம்மாயி பொம்மாயி வாடியம்மா வா
ஆத்தா என் மறுமகளே வாடியம்மா வா
அம்மாடி அழகுச்சிலை வாடியம்மா வா
அமுதூறும் வாயாலே முத்தமொன்று தா

Thursday, November 28, 2019

கார்த்திகை மாதத்தில் கிராமங்களில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன்? வீடுகளில் நாம் தீபமேற்றுவது ஏன்?






கார்த்திகை என்பதன் பொருள் மழைக்காலத்தில் (கார் காலத்தில்) கையில் தீயை ஏந்துதல் என்று பொருள்.

அதாவது கார் + தீ + கை = கார்த்தீகை = கார்த்திகை.

ஏன் கையில் தீயை ஏந்த வேண்டும்?

முருகனின் இன்னொரு பெயர் கார்த்தீகையன் என்பதாகும். கார்த்தீகையன் என்ற பெயரே கார்த்திகேயன் என்றானது.

ஏன் முருகன் கார்த்தீகையன் என்று அழைக்கப் பட்டார்?

குமரிக் கண்ட அழிவிற்கு பிறகு சித்தரான முருகன் எஞ்சிய தம் மக்களை அழைத்துக் கொண்டு வந்து குடியேறிய இடம் தமிழீழத்தில் உள்ள (இன்றைய இலங்கையில் உள்ள) கதிர்காமம் என்பதாகும்.

கதிர் என்றால் கேழ்வரகு கதிர், சோளக் கதிர், நெற்கதிர் என்பதாகும்.
காமம் என்றால் கிராமம் என்று பொருள்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் வாழ்ந்த காலத்திற்கு முன்பு கிராமம் என்ற வார்த்தை தமிழில் இல்லை. காமம் என்ற வார்த்தையே தமிழில் இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் காமம் என்பதற்கு கிராமம் என்று பொருள்.

விவசாயத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் முருகனே. முருகன் போர்க்கலைகள் (Martial Arts) தெரிந்த படைத்தளபதி.

விவசாயத் தொழில்நுட்பம் முதன்முதலில் தொடங்கிய இடம் தமிழீழம் தான். தமிழீழத்தில் உள்ள கதிர்காமம் தான். விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டு தமிழீழத்தில் யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குபேரன் என்ற மன்னன் தன் மக்களோடு செல்வச் செழிப்போடு வாழ்ந்தது தமிழர்களாகிய நம்முடைய வரலாறு. குபேரன் போல் நாமும் செல்வ செழிப்போடு நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும் என்பதற்காகத் தான்  நாமும் நம்முடைய வீட்டிலோ வியாபாரம் செய்யும் இடத்திலோ குபேர பொம்மையை வைத்திருக்கிறோம்.

10000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசிவன் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாடும் தமிழீழமும் இணைந்த, தமிழீழத்திற்குக் கீழே பரந்து விரிந்த நிலப்பரப்பாய் குமரிக்கண்டத்தில் மக்கள் அனைவரும் குறிஞ்சி நிலமாகிய மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த காலமே கிரித யுகம் (கிருத யுகம்) ஆகும். கிரி என்றால் மலை (உதாரணத்திற்கு சதுரகிரி) என்று பொருள். கிரித யுகம் என்றால் மக்கள் மலைகளில் வாழ்ந்த யுகம் என்று பொருள்.

மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த ஆதிகாலத் தமிழர்கள் மலைக்குறவர்கள் என்றும் வரையர்கள் (பறையர்கள்) என்றும் அழைக்கப் பட்டனர். 

ஆதிசிவனும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மலைக்குறவராகவும் வரையராகவும் (பறையராகவும்) அறியப்பட்டார். தமிழர்கள் அனைவருமே ஆதிகாலத்தில் வரையர் (பறையர்) மற்றும் குறவர் இனத்திலிருந்து தோன்றியவர்கள் தாம்.
வரை என்றால் தமிழில் மலை என்ற பொருளும் உண்டு. வரையர் என்றால் மலையில் வாழ்பவர் என்று பொருள்.

மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக காலப்போக்கில் மனிதர்கள் மலையிலிருந்து இறங்கி முல்லை நிலமாகிய காடுகளில் வாழ்ந்தனர். தரையில் மக்கள் வாழ்ந்ததால் அந்த யுகம் தரைத யுகம் (திரேதா யுகம்) என்று அழைக்கப் பட்டது.

மக்கட்தொகை பெருகப் பெருக, உணவின் தேவை அதிகமானது. அப்போது வாழ்ந்த முருகன் காடுகளில் ஒரு பகுதியை அழித்து தீயிலிட்டுக் கொளுத்தி, பனைமரக் காடுகளைக் கொளுத்தி சமநிலமாக்கி விவசாயம் என்ற உயரிய தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.

முருகன் பனைமரக் காடுகளை கொளுத்தி விவசாயத்தை தொடங்கிய காலம் மழைக்காலம் (கார் காலம்) தொடங்கிய இந்த கார்த்தீகை மாதத்தில் தான். கார்த்தீகை என்பதே மருவி கார்த்திகை என்றானது.

முருகன் பனை மரக் காடுகளை கொளுத்தி விவசாயத் தொழில்நுட்பத்தை கண்டறிந்ததன் நினைவாகத் தான் கிராமங்களில் சொக்கப்பனை கொளுத்தி முருகனையும் விவசாயத்தையும் வழிபடுகின்றனர்.

குமரிக் கண்ட அழிவிற்கு பிறகு தமிழர்களின் மக்கட்தொகை குறைவதைக் கண்ட முருகன் மக்கட்தொகையை உயர்த்த முடிவுசெய்து இரும்புச் சத்து மிகுந்த, இனப்பெருக்கத்திற்கு உதவி செய்யும் ஒரு மரத்தை அனைவரின் வீட்டிலும் நட்டு வளர்க்கச்சொல்லி பரிந்துரைத்தார் முருகன். அந்த மரம் முருகனின் பெயரால் முருகன் மரம் என்றே அழைக்கப்பட்டு நாளைடைவில் இன்று முருங்கை மரம் என்றானது. முருகனின் நினைவாகத் தான் இன்றும் நாம் நம் வீட்டில் முன் பகுதியிலோ அல்லது பின் பகுதியிலோ முருங்கை மரம் வளர்க்கிறோம். முருங்கை மரத்தின் இலை, காய், பூ என அனைத்தும் இரும்புச்சத்து மிகுந்தவை.

நாமும் இந்த கார்த்திகை மாதத்தில் முருகனையம் விவசாயத்தையும் போற்றும் விதமாகத் தான் வீடுகளில் தீபமேற்றுகிறோம்.

Friday, July 5, 2019

Oh my baby

Yesterday night i wrote the following english rhyme to my daughter Ritanya Servai.



👉 Oh my baby


Oh my baby oh my baby
Writing poems is my hobby

See my face see my face
Life is not a running race
God is only our own boss
Live your life like a sage

Come for a while come for a while
On your face keep always smile
Make your life with a different style
Live with pleasure in my soil

Oh my baby oh my baby
Writing poems is my hobby

ஒரு வருடத்திற்கு முன்பு மெரினா கடற்கரையில் என் மகள் ரிதன்யா சேர்வையோடு நான்...
























Tuesday, July 2, 2019

முப்பாட்டன் கதிர்காம முருகனும் விந்தணுவின் வடிவில் முருகன் கைகளில் உள்ள வேலும் கிறித்தவ இசுலாமியனின் பூர்வீகமும்

என்னுடைய சமீபத்திய பதிவுகள்.


நான் பிறந்தபோது என் அம்மா எனக்கு என்னுடைய முப்பாட்டன் முருகனின் பெயரையே சொல்லி "வேல்முருகன்" என்று பெயர் வைத்தாள். வேல்முருகன் என்பதே என்னுடைய ஜாதகத்தில் இருக்கும் பெயர்.

என்னுடைய முதற்பெயர் முனைவென்றி நா. வேல்முருகன் என்பதே.

என்னுடைய முதற்பெயர் வேல்முருகன் என்ற என் முப்பாட்டன் பெயர் தான். என் பெயரை நா. வேல்முருகன் சேர்வை என்று சான்றிதழ் தொடங்கி எல்லாவற்றிலும் மாற்ற முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய ஆறு வயதில் என்னை முதல் வகுப்பில் சேர்க்கப் போகும்போது என்னுடைய அப்பா எனக்கு சுரேஷ்குமார் என்று பெயர் மாற்றம் செய்ததாக கூறினாள் என்னுடைய அம்மா.

ஆணின் விந்தணுவின் வடிவிலேயே தன்னுடைய வேலை வடிவமைத்திருக்கிறார் என்னுடைய முப்பாட்டன் முருகன். குமரிக் கண்ட அழிவின் போது தன்னுடன் மக்களை அழைத்துக் கொண்டு ஈழத்தில் உள்ள கதிர்காமத்திற்கு வந்து குடியேறி விவசாயத் தொழில் நுட்பத்தை முதன்முதலில் இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் முருகனே.

நீருழிப் பேரழிவால் மக்கட்தொகை குறைந்ததைக் கண்டு முருகன் மக்கட்தொகை பெருக்கத்தை அதிகரிக்க ஒரு மரத்தை அனைவரின் வீட்டிலும் வளர்க்கச் சொல்லி அதன் இலைகளை காய்களை உண்ணும்படி சொன்னார் முருகன். அந்த மரத்தின் பெயர் முருகன் மரம். அந்த மரமே இன்று நாம் வளர்க்கும் முருங்கை மரம். 

விந்தணுவின் வடிவத்தை ஒரு விஞ்ஞானி போல் ஆராய்ச்சி செய்து தன்னுடைய வேலை வடிவமைத்திருக்கிறார் முப்பாட்டன் முருகன்.

தமிழில் பெயர் வைப்பதால் மட்டுமே ஒருவர் தமிழராகி விட முடியாது. ஒரு வெள்ளைக்காரர் இங்கு வந்து நூறு ஆண்டுகள் தங்கிய பிறகு அவரின் பேரன் தமிழ் மொழி மீது பற்றுதலால் தனுடைய பேரை தூய தமிழில் வைப்பதால் அவரை நாம் தமிழராக ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டின் பூர்வ குடிகளே தூய தமிழர்கள்.தமிழரின் பூர்வ குடிகளை எப்படி தெரிந்து கொள்வது? தமிழரின் குலம் மற்றும் குடி அதாவது தமிழரின் ஜாதி அடையாளங்களை தேடுங்கள். தூய தமிழரை இனங்காணலாம்.

தமிழில் பெயர் வைக்கும் அனைவரையும் தமிழாராய் பார்க்கும் பெருந்தன்மை மனம் உள்ளதாலேயே தமிழ்நாட்டின் பூர்வீகக் குடிகளான தமிழன் வீழ்ந்து அரசியல் மற்றும் பொருளாதார பலமின்றி அடிமையாகக் கிடக்கிறான்.

இங்குள்ள பெரும்பான்மை தமிழர்கள் கிறித்தவர்களாகவும் இசுலாமியர்களாகவும் மதம் மாறியவர்கள்.

தமிழர்கள் இந்துக்கள் அல்லர். தமிழர்கள் குல தெய்வ வழிபாட்டாளர்கள். அதாவது, தமிழர்கள் பெருங்கோயில்களுக்குச் செல்லும் வழமை இல்லாதவர்கள். ஆதித்தமிழர்கள் ஆசிவக மார்க்கத்தை பின்பற்றியவர்கள். ஆசிவகத்தின் பாலைவன வடிவமே இசுலாம்.

இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் நம்மை எல்லாம் அவன் வசதிக்காக இந்துவாக, கிறித்தவனாக, இசுலாமாக பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போய் விட்டான்.

சமீபத்தில், கர்நாடகாவில் ஒரு பிரிவினர் தாங்கள் இந்துக்கள் அல்லர், தாங்கள் லிங்காயத்துக்கள் என்று சொல்லி பிரிந்ததை நினைவு படுத்தினால் கொஞ்சமாவது அந்தந்த தேசிய இனங்களின் தொன்மையும் வரலாறும் புரியும்.

சாதி என்பது தமிழனின் குலம் மற்றும் குடி சார்ந்த அடையாளம். தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத பிற இனத்தவர்  குறிப்பாக தெலுங்கர்களும் யூத  பிராமணர்களும் ஊடுருவியுள்ளனர். பிற இனத்தவர்களை அடையாளம் காட்டுவதற்கு என்னுடைய குலம் மற்றும் குடிப்பட்டம் ஏனைய ஒரு சில கருவிகளோடு சேர்ந்து ஒரு கருவியாக செயல்படுகிறது.

வெங்காய ராமசாமி தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லி இல்லாத சாதிக் கலவரத்தை தூண்டி தமிழர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள குல மற்றும் குடி வரலாற்றைத் தாங்கி நிற்கும் சாதிப் பட்டத்தை அழித்து தமிழ் தேசிய வரலாற்றை அழிக்கும் வேலையை தொடங்கி வைத்தவரே வெங்காய ராமசாமி தான்.

அடுத்தடுத்த பதிவுகளில் வெங்காய ராமசாமியின் துரோகங்களை விரிவாக சொல்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை படியுங்கள்.