என்னுடைய வாழ்வில் ௨௦௦௫ (2005) ம் ஆண்டில் என்னிடம் பழகிய அ. சரவணராஜ் அண்ணா (இவர் ௨௦௦௦ 2000 முதல் ௨௦௦௫ 2005 ஆகிய ஐந்து ஆண்டுகளில் ஏதோவொரு ஆண்டில் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற மரபுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர்.)
ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் 'துஷ்யந்த் சரவணராஜ் என்ற பெயரில் அவருடைய கவிதையொன்று வெளிவந்திருந்தது. துஷ்யந்த் என்பது அவருடைய ஆண்குழந்தையின் பெயராகத் தான் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கணிப்பு.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் நான் படித்த கணினித் துறையும் அவர் படித்த தமிழ்த்துறையும் அருகருகே உள்ளன. ௨௦௦௪ (2004) ம் ஆண்டில் என்னுடைய படிப்பை ஆரம்பித்தேன். அவர் அதே ஆண்டில் தன்னுடைய முதுகலை தமிழ் படிப்பின் இரண்டாமாண்டை முடித்து விட்டு சென்று விட்டார். ௨௦௦௫ (2005) ம் ஆண்டில் அவரைப் பற்றி கேள்விப் பட்டு அவர் வேலைபார்த்த கானாடுகாத்தானுக்குச் சென்றேன். அவரைப் பற்றி சொல்லுமாறு அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். தன்னைப் பற்றி சொன்னார். காரைக்குடியில் உள்ள என்னுடைய விடுதிக்குத் திரும்பினேன்.
நான் ஆரம்பத்தில் என்னோடு அன்பாக பழகுகிறவர்களைப் பற்றி வாழ்வியல் உண்மை நிகழ்வுகளை உள்வாங்கியோ, அவர்களுக்கும் எனக்கும் இடையில் நடந்த வாழ்வியல் நிகழ்வுகளை உள்வாங்கியோ தான் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அதுவும், அந்த நிகழ்வுகள், மனதில் ஓர் அதிர்வை, பாதிப்பை ஏற்படுத்தி விட்டால், கவிதைக்கான கரு அங்கிருந்து கிடைத்து என்னை எழுதத் தூண்ட ஆரம்பிக்கும். இதற்காக நான் எப்போதும் மெனக்கெட்டதில்லை. இப்படித்தான் ஆரம்பகால கட்டங்களில் நான் எழுத ஆரம்பித்தேன். இப்படி அவருக்காக எழுதிய மூன்று கவிதைகள்.
காதல்க்கவி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/08/blog-post_5200.html
சாதனைக்கவி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/08/blog-post_1666.html
கவிவள்ளல் - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/08/blog-post_6156.html
மறுமுறை அவரைச் சந்திக்கபோது, நான் அவருக்காக எழுதிய காதல்க்கவி என்ற கவிதையை கையெழுத்துப்பிரதியாக அவரிடம் கொடுத்தேன். வாங்கிப் படித்துவிட்டு பத்திரமாய் வைத்துக் கொண்டார்.
நான் அவருக்காக எழுதிய இரண்டாவது மற்றும் மூன்றாவது கவிதைகளை என்னுடைய வகுப்பில் கானாடுகாத்தானிலிருந்து வந்து படிக்கும் ஒரு தோழியிடம் கொடுத்தனுப்பினேன். மறுநாள் அவள் என்னிடம் வந்து "அவரை சந்திக்க இயலவில்லை." என என்னிடமே திருப்பித் தந்து விட்டாள். பல நாட்கள் கழித்தபிறகு நான் மீண்டும் கானாடுகாத்தானுக்குச் சென்றபோது அவரிடம் கொடுத்தேன். அவருடைய அறையில் அவருடைய லுங்கியை அணிந்து கொண்டு பக்கத்தில் உணவகத்தில் உண்டு, அவருடைய அறையில் உறங்கி காலையில் கிளம்பி விடுதிக்கு வந்திருக்கிறேன். அவர் அறையில், இரவு உறங்கும்போது அவர் என்ன செய்கிறார் எனப் பார்த்துக் கொண்டே தூங்கி விடுவதுண்டு. அவர் TRB க்கும் TNPSC க்கும் படித்துக் கொண்டிருப்பார்.
அவர் தற்போது கோயம்புத்தூரில், அரசுப் பள்ளியில் அரசு ஆசிரியராக நிரந்தர வேலையில் உள்ளார். என்னிடமிருக்கும் அவருடைய அலைபேசி எண்ணுக்கு (௯௯௪௩௩௩௨௧௧௬ 9943332116) கடைசியாக கடந்த ௨௦௦௯ (2009) ல் பேசினேன். அதன்பிறகு அதே எண்ணுக்கு முயற்சி செய்தேன். அழைப்பு மணி போகும். ஆனால், யாரும் பேசுவதில்லை. பலமுறை முயற்சி செய்து விட்டு அந்த எண் காலாவதி ஆகிவிட்டதாக முடிவு செய்து விட்டேன்.
ஆனால், என்னோடு பழகியவர்களுடனான நினைவுகள் எப்போதும் என்னுடனேயே இருக்கும். சில நேரங்களில் என்னையும் மீறி கண்ணீர் வரும். அதிகமாய் வலிக்கும். தனிமையில் எங்காவது சுற்றித் திரிவதுண்டு.
௨௦௦௯ ம் (2009) ஆண்டில் அவருடைய முதல் கவிதைநூல் 'விழிநீர் வழியே விழுகிறாய்' கோவை விஜயா பதிப்பகம் மூலமாக வெளிவந்திருந்தது. கோவை விஜயா பதிப்பகம் தொலைபேசி எண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு பேசி அவர் பெயரைச் சொல்லி அவருடைய கவிதைநூலின் பெயரைச் சொல்லி அவர் அலைபேசி எண்கள் வேண்டும், அவருடைய கோவை முகவரி வேண்டும் என்றேன். "அவர் இங்கு அடிக்கடி வருவார். ஒரு வாரம் கழித்துப் பேசுங்கள்" என்றார்கள். அதன்பிறகு சில வாரங்கள் கழித்துப் பேசினேன். "அவர் இன்னும் வரவில்லை. வந்தால் வாங்கி வைக்கிறோம்." என்றனர்.
கோவையில் இருந்து வெளிவரும் சிற்றிதழ்களுக்கும் ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவிற்கும் அவருடைய அலைபேசி எண்கள், முகவரி தெரிய வாய்ப்புகள் உள்ளன, அவர்கள் இந்த மின்னஞ்சலைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும். எனவே, இந்த மின்னஞ்சல் மூலமாக, அவருடைய முகவரி குறித்து கேட்கலாமா என்று நினைத்து இந்த மின்னஞ்சலை எழுதிக் கொண்டிருந்தேன். இடையில் ஒரு எண்ணம். மீண்டும் அதே அலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்து முயற்சித்தேன். சரவணராஜ் அண்ணா பேசினார். மூன்றரை ஆண்டுகள் கழித்தபிறகு இன்று சில மணிநேரங்களுக்கு முன் பேசினேன். என்னை அவருக்கு நினைவுபடுத்தினேன். ஆனந்தவிகடனில் ஒன்றரை மாதங்களுக்கு முன் அவருடைய கவிதை 'துஷ்யந்த சரவணராஜ்' என்று அவருடைய மகன் பெயரில் வந்திருப்பதாகச் சொன்னேன். உடனே அவர் "மகனுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன் எனக்கு மகள் பிறந்து பிறந்திருக்கிறாள். சமீப காலங்களாக என்னுடைய கவிதைகள் தொடர்ந்து ஆனந்தவிகடனில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆசிரியர் குழுவிலிருந்து அடிக்கடி எனக்கு அழைப்பு வரும். உங்களுடைய அழைப்பைப் பார்த்தவுடன் அவர்கள் தான் அழைக்கிறார்கள் என நினைத்து விட்டேன்." என்றார். பிறகு "என்னுடைய இரு கவிதை நூல்களை தங்களுக்கு அனுப்ப வேண்டும். தங்களுடைய கோவை முகவரி அனுப்புங்கள்." என்றேன். அனுப்பி வைப்பதாகச் சொன்னார்.
இந்த மின்னஞ்சல் மூலமாக அவரின் அலைபேசி மற்றும் முகவரி கிடைத்து விடும் என்று நம்பிக்கையோடு இந்த மின்னஞ்சலை எழுத ஆரம்பித்தேன். அனுப்புவதற்குள் தற்போது நான் அவரிடம் பேசி விட்டேன்.
நன்றி.

No comments:
Post a Comment