Saturday, November 9, 2013

மூன்று பேருக்கு வேலை - ரூபாய். ஒன்பது இலட்சம் வரை கொள்ளை - அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணையம் (டி.ஆர்.பி).

அனைவருக்கும் வணக்கம்,

தமிழ்நாட்டின் ஆசிரியர் தேர்வாணையம் செய்த குளறுபடியால் கடந்த ௨௦௧௨ (2012) நவம்பரில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் பலருக்கு (B.A communicative English போன்ற பல படிப்புகள் தகுதியற்றவை என முடிவெடுத்து ) வேலை கிடைக்காமல் அலைக்கழிக்கப் பட்டனர். 

கடந்த டிசம்பரில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வாணையத்திற்கு (TRB - Teachers Recruitment Board) எதிரான வழக்கில் கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பே வெளியான தீர்ப்பை ஆ. தே. ஆ (TRB) மதிக்காததால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றுபேர் நீதிமன்றத்தில் ஆ.தே . ஆ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர். 

மதுரை நீதிமன்ற நீதிபதிகளின் கைவரிசை 

நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் மூன்று பேருக்கும் ஆ. தே . ஆ பணிநியமன ஆணை வழங்கி மூன்று பேரும் வேலையில் சேர்ந்து விட்டனர். 

ஆனால், கடந்த நவம்பர் ௨௦௧௩ 2013 ல் தேர்ச்சியடைந்தவர்கள் என்று பணிநியமன ஆணையில் உண்மையை மறைத்து தற்போது வேலை வழங்கப் பட்டது போல் ஏற்பாடு செய்திருக்கிறது ஆ.தே .ஆ.

அந்த மூன்று பேரும் சரியாக ஒரு ஆண்டிற்கு முன்பே வேலையில் சேர்ந்திருக்க வேண்டியவர்கள். அப்படி சேர்ந்திருந்தால் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய மாதம் ஏறத்தாழ ரூபாய். இருபத்து ஆறாயிரம் வீதம் 12x 26000 = ௩௨௧௦௦௦ (321000) வரை மூன்று பேருக்கும் சேர்த்து ரூபாய் ஒன்பது இலட்சம் வரை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.

அந்த அன்றாடங்காய்ச்சிகள் மூன்று பேருக்கும் ரூபாய் மூன்று இலட்சம் வீதம் ரூபாய் ஒன்பது இலட்சத்தைத் தராமல் நீதிபதிகளும், ஆ.தே.ஆ ஊழியர்களும் பகிர்ந்து கொண்ட உண்மை அம்பலமாகியுள்ளது. 

வேடிக்கை பார்க்கும் அரசியல் விபச்சாரி ஜெயலலிதா 

காமராஜர் வாழ்ந்த காலத்தில் அரசியல்வாதிகள் தேசத் தலைவர்களாக மதிக்கப்பட்டனர். அதன்பிறகு தற்போதைய ஜெயலலிதா, கருணாநிதி, பிரணாப் முகர்ஜி, தமிழனின் மானத்தைக் கப்பலேற்றிய ப. சிதம்பரம் போன்ற பலரை அரசியல் வியாபாரிகள் என்று எழுதத் தொடங்கினோம். 

உண்மையை சொல்லப்போனால் ஜெயலலிதா, கருணாநிதி, பிரணாப் முகர்ஜி, தமிழனின் மானத்தைக் கப்பலேற்றிய ப. சிதம்பரம் போன்ற பலரையும் அரசியல் விபச்சாரிகள் என்று அழைப்பதே சாலச்சிறந்தது. விபச்சாரிகள் கூட வாங்கிய பணத்திற்கு நேர்மையாக நடந்து கொள்வார்கள்.

அரசியல் விபச்சாரியான கன்னடச்சி ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்கிறேன்.

"நீ கொள்ளையடித்த என்னைப் போன்ற கீழ் நடுத்தர (Lower Middle Class) மற்றும் ஏழை, அன்றாடங்காய்ச்சிகள் கட்டும் வரிப்பணத்தை வைத்து நீ மஞ்சக்குளி, பேருந்து விழா என்ற பெயரில் விவசாயிகளின் (தமிழ்நாட்டில் ஏறத்தாழ விவசாயம் அழிந்து விட்டது. ஒப்பந்தம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து தண்ணீர் தர மறுக்கும் கேரள கர்நாடக அரசுகளைக் கேட்பதற்கு யாருக்கும் திராணி இல்லை.) வாழைமரங்களை வைத்து சுயவிளம்பரம் செய். இலவசத் தண்ணீரை பத்து ரூபாய் நன்னீர் என்ற பெயரில் விற்பனை செய்து கல்லா கட்டு. 

இவர்கள் மூன்று பேர்களுக்கும் தரவேண்டிய ரூபாய். ஒன்பது இலட்சத்தைத் தராமல் ஏன் கொள்ளையடித்தாய்? அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் வழக்கறிஞர்களுக்கு ரூபாய். முப்பதாயிரம் வரை செலவழித்துள்ளனர். 

நீ பதுக்கி வைத்திருக்கும் எங்களின் வரிப்பணம் எங்கே? கோடி கோடியாய் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களிடம் கொள்ளையடி. இவர்களைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளிடம் கொள்ளையடித்து ஏன் அந்த மூன்று பேர்களின் வயிற்றில் அடிக்கிறாய்?

உன்னைப் போன்ற விபச்சாரிகளை விடக் கேவலமான அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஈனத் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருக்கும்வரை உன்னைப் போன்றவர்களின் வியாபாரம் மன்னிக்கவும் விபச்சாரம் சூடுபிடிக்கும்."

கரன்சிக்கு கற்பிழக்கும் வேசிபோல தமிழ்நாட்டு ஊடகங்கள் 

கரன்சிக்கு கற்பிழக்கும் வேசிபோல தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்படுகின்றன. ஏற்கனவே செய்தித்தாள் என்ற பெயரில் வெளிவரும் தாள்களில் செய்திகள் எங்கே என்று தேட வேண்டியுள்ளது? அந்த அளவுக்கு விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் பணம் போதாதென்று ஜெயலலிதாவைப் போன்ற அரசியல் விபச்சாரிகளைப் போன்றவர்களின் படங்களை வெளியிட்டு  கல்லா கட்டும் தமிழ்நாட்டு ஊடக விபச்சாரி மகன்களே, பத்திரிகை தர்மத்தை மீறி பொய்யான செய்தியை வெளியிடுவதும் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களின் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வதும் உங்கள் தொழிலுக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

இந்தத் தமிழ்நாட்டு ஊடக விபச்சாரி மகன்கள் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களின் செய்திகளை, நான் அனுப்பும் உண்மைகளை கண்டுகொள்ள மாட்டார்கள், வெளியிட மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். 

இருந்தாலும் உண்மைகளை எழுத்தின் மூலம் வெளியுலகிற்குத் தெரிவிப்பதும் எழுதுவதும் என் கடமை. என் உரிமை.

மனித உரிமைகள் ஆணையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளேன்.

"எங்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் மூன்று இலட்சம் வீதம் மூவருக்கும் கிடைக்க வேண்டிய ரூபாய் ஒன்பது இலட்சத்தை ஆ. தே. ஆ ஊழியர்களுடன் சேர்ந்து எங்களுக்குத் தீர்ப்பளித்த நீதிபதிகளே கொள்ளையடித்து விட்டனர் அண்ணா. ஏற்கனவே, வழக்கறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய். முப்பதாயிரம் வரை செலவழித்து இந்த வேலையை வாங்கியிருக்கிறோம். இனி அந்த ஒன்பது இலட்சத்தைப் பெறுவதற்கும் கடந்த நவம்பரில் இருந்து வேலையில் சேர்ந்ததாக ஆணை வாங்கவும் வழக்குப் பதிவு செய்ய, வழக்கறிஞர்களுக்கு செலவு செய்ய எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை அண்ணா, கொள்ளையடித்த நீதிபதிகளிடமே மறுபடியும் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். எங்களைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளைப் பொறுத்தவரை மூன்று இலட்சம் என்பது மிகப்பெரிய தொகை. 

இந்த வேலை கிடைத்ததே பெரிய விஷயம் என்று எங்கள் பெற்றோர் ஆறுதல் அடைகின்றனர். ஆனாலும் கிடைக்க வேண்டிய மூன்று இலட்சம் கிடைக்கவில்லையே, எங்கள் பெற்றோர் எங்களைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்தனர். ஆனாலும் கிடைக்க வேண்டிய மூன்று இலட்சம் கிடைக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. யாரிடம் சென்று நீதி கேட்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. முப்பதாயிரம் செலவு செய்த பிறகுதான், ஐம்பது சதவீத நீதியே கிடைத்திருக்கிறது. எல்லாவற்றையும் பணம் தான் தீர்மானிக்கிறது." என்று அந்த மூன்று பேர்களும் என்னிடம் தனித்தனியே அலைபேசி ஊடாக அழுது புலம்பினர். 

"வருத்தப் படாதீர்கள், என்னுடைய எழுத்தின் மூலமாக உங்களைப் பற்றிய செய்திகளை தொடர்ந்து கட்டுரைகளாக எழுதி வந்திருக்கிறேன். தற்போது, நீங்கள் சொன்ன செய்தியையும் கட்டுரையாக எழுதி மனித உரிமைகள் ஆணையம், தலைமைச் செயலகம் என அனைவருக்கும் அனுப்பி வைக்கிறேன். எங்காவது ஒரு மூலையில் நிச்சயம் யாராவது ஒருவர் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார். நிச்சயம் நீதி முழு வெற்றியடையும்." என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னேன்.



குறிப்பு:
==========

கன்னடச்சி ஜெயலலிதா போன்ற அரசியல் விபச்சாரிகள் பலருக்கும் எனக்கும் சொத்துத் தகராறோ வாய்க்கால் வரப்புத் தகராறோ எதுவுமில்லை. இங்கு நியாயம் மறுக்கப் படுகிறது. நீதி சிதைக்கப் படுகிறது. அவ்வளவுதான், இந்தக் கட்டுரையை படிக்கும் வாய்ப்பு, கன்னடச்சி ஜெயலலிதாவிற்கோ மற்ற அரசியல் விபச்சாரிகளுக்கோ படிக்கக் கிடைத்தால், என்மேல் கோபப்படுவதற்குப் பதிலாக, கொஞ்சம் தனிமையில் அமர்ந்து சிந்திப்பார்கள், அவர்கள் மனசாட்சி உறுத்த ஆரம்பிக்கும். அங்கு நல்லது நடக்க ஆரம்பிக்கும். இந்த ஒற்றை நம்பிக்கை தான் என் மனதில் உள்ளது.

அரசியல் தான் எல்லாவற்றிற்கும் ஆணிவேர். அரசியலைத் தவிர்த்து விட்டு மக்கள்நலனைப் பற்றி சிந்திப்பது முட்டாள்தனம். அரசியலை சீர்படுத்தி விட்டால் மற்ற அனைத்தும் நேராகி விடும்.






-----------------------------------------------------------

இது குறித்து சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. அதில் public service என்பது தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசு சார்ந்த நிறுவனங்களையும் குறிக்கும். TRB என தனியே அரசாணையில் குறிப்பிடப்படத் தேவையில்லை. எனவே ஆசிரியர்தேர்வாணையம் (TRB - Teachers Recruitment Board) தமிழக அரசின் ஆணையை மதித்து இந்த தீர்ப்பு வெளியான இரண்டு வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பிரதி எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.
ஆக அரசாணையையும் அவமதித்து நீதிமன்ற தீர்ப்பையும் அவமதித்துக் கொண்டிருக்கிறது ஆசிரியர் தேர்வாணையம். இது குறித்து எந்த நாளிதழும் வார இதழும் எந்த செய்தியையும் வெளியிடவில்லை. அந்தப் பொறுப்பை நான் ஏற்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இந்த இழையில் நடந்தவற்றை வெளி உலகிற்கு தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
வரும்  ஆகஸ்டு மாதம் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அரசாணையை வெளியிட்டு விட்டு அதனை மதிக்காத ஆசிரியர் தேர்வாணையம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தலைமைச் செயலகம் மீதும் தமிழ்நாடு அரசு மீதும் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு வெளியான பிறகும் அதனை மதித்து பணி நியமன வழங்க உரிய நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்தும் TRB மீதும் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். TRB மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் முழுமுதல் காரணமாக பாதிக்கப்பட்ட கல்லூரி முதல்வர்களும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் தான். அவர்களைத்தான் முதலில் அனைவரும் சேர்ந்து செருப்பால் அடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கல்லூரி முதல்வர்களும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தமிழ்நாடு அரசிடம் தொடர்பு கொண்டு அரசாணையை வெளியிட்ட பிறகு அந்த அரசாணை நடைமுறைப் படுத்தப் பட்டதா என்று பார்க்கவில்லை. மாதச் சம்பளம் கிடைத்தால் போதும் என்று கடனுக்கு வேலை பார்க்கும் இவர்களும் தண்டனைக்குரியவர்களே.
இவர்கள் அனைவரும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள். எங்கெல்லாம் நீதி ஒடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வன்முறை வெடிக்க ஆரம்பிக்கும். 
நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. நம் எதிரி தான் தீர்மானிக்கிறான்.
தாமதப்படுத்தப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதியும் அநீதிக்குச் சமமானது. சில மாதங்களுக்கு முன் ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் சார்பில் போராட்டம் வெடித்தது. மீண்டும் ஒரு முறை இன்னும் சில மாதங்களுக்குள் இன்னும் ஒரு போராட்டமோ வன்முறையோ வெடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயகத்திற்கும் இந்த மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளை உண்மையை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியுள்ளது. TRB நீதிமன்ற தீர்ப்பை மதித்தாலே போதும். பாதிக்கப்பட்டவர்களுக்காக யாரும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கத் தேவையில்லை.
ஆறு மாதங்களுக்கு முன் கடந்த டிசம்பர் மாதம் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரனை சந்தித்தேன். அப்போது அவர் சொன்ன செய்தி இதுதான்.
'அண்ணா, தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் பணிநியமன ஆணை வழங்கப்படாததிற்கான காரணத்தை தெரிந்து கொள்ள கல்லூரி முதல்வரையும் பல்கலைக் கழக துணைவேந்தரையும் அணுகினோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். அதன்பிறகு அவர்கள் யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்களில் சிலர் 
ஒன்று சேர்ந்து சென்னைக்கு சென்றோம். TRB அலுவலகம் சென்று கேட்டோம். அங்குள்ள ஊழியர்கள் எங்களின் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு எங்களை விரட்டியடித்தனர். பொதுவாக ஒவ்வொரு அலுவலகத்திலும் சந்தேகம் தீர்க்கும் பிரிவு (enquiry section) இருக்கும். ஆனால் TRB ஊழியர்கள் எங்களை விரட்டியடித்தனர். அரசாணையை கையில் வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து கேள்வி கேட்க அனுமதிக்க வில்லை. மீறி அங்கேயே நின்ற போது இங்கே நிற்கக் கூடாது. முடிந்தால் நீதிமன்றம் சென்று வழக்குத் தொடருங்கள். என்று கூறி விரட்டியடித்தனர். நீதிமன்றம், வழக்கு என்று போவதற்கு நிறைய செலவாகும். அவ்வளவு பணத்திற்கு நாங்கள் எங்கே அண்ணா போவோம்?' என்றார்.
நான் பதிலளித்தேன் 'கவலைப்படாதீர்கள் இதற்கெல்லாம் அதிக செலவாகாது உங்கள் பக்கம் நீதி உள்ளது தொடர்ந்து போராடுங்கள் இது குறித்து நான் மின்னஞ்சல் ஊடாக செய்தியாக என்னால் முடிந்தவரை நாளிதழ்களுக்கும் ஊடகங்களுக்கும் தலைமைச் செயலகத்திற்கும் அனுப்பி வைக்கிறேன். நம்பிக்கையோடு போராடுங்கள்.' 

இதன் அடிப்படையில் இது தொடர்பாக தொடர்ந்து அவ்வப்போது மின்னஞ்சல்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். மனித நேயமுள்ள ஊடக நிருபர்கள் இது குறித்து செய்தி வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமில்லாத நீதி வழங்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் என்னுடைய விருப்பம்.
சீமான் அண்ணா, அன்பு எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், மதிப்பிற்குரிய திரு. இறையன்பு ஆகிய மூவருக்கும் என் அன்பான வேண்டுகோள். ஏனெனில் நீங்கள் மூவரும் ஊடகங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் மக்களோடு மக்களிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்கள்.


சீமான் அண்ணாவுக்கு, வணக்கம். ஒரு வருடத்திற்கு முன்பு என்னுடைய ஒரு பதிவில் இந்தியா என் பக்கத்து நாடு என்று நான் சொல்லியிருந்தேன். அதனை நீ படித்து விட்டு சில மாதங்களுக்குப் பிறகு போராளிகளைப் பற்றிய ஒரு தமிழ்த் திரைப்பட விழாவில் நீ பேசும் போது இந்தியா என் பக்கத்து நாடு என்று ஒரு அன்புத் தம்பி சொன்னார் என என் பெயரைச் சொல்லாமல் நான் சொன்ன வார்த்தையை நீ சொன்னது குறித்து நான் முகநூலில் காணொளியில்  (video) எட்டு மாதத்திற்கு முன் பார்த்தேன். அதே போல் TRB குறித்து என்னுடைய இந்த செய்தியையும் உனக்கான நேர்காணலில் நீ சொல்ல வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஈழத்தமிழர் பற்றியே போராடாமல் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் நீ பேச வேண்டும். போராட வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டுத் தமிழர்களே பலர் அன்றாட வாழ்க்கைக்கு போராடிக் கொண்டிருக்கும் இழிநிலையில் நீ ஈழத் தமிழர்களுக்காக மட்டும் போராடுவது நியாமல்ல. தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நலமோடு வேதனையில்லாமல் வாழ்ந்தால் தான் ஈழத்தமிழர்களுக்காக ஒன்றுகூடி போராட முடியும்.
ஒரு காலத்தில் காமராஜர் மக்களுக்காக வாழ்ந்தார். அவரை இந்த நன்றி கெட்ட மக்கள் தோற்கடித்தனர். மக்கள் மறந்து விட்டனர். ஆனால் காலம் அவரை தத்தெடுத்து நினைவில் வைத்து அடுத்த தலைமுறைப் பிள்ளைகளான நமக்கு நினைவூட்டியிருக்கிறது. அதே போல் தமிழர்களின் நலனுக்காக போராடும் உன்னைப் போன்றவர்களை மக்கள் கண்டுகொள்ளா விட்டாலும் காலம் நினைவில் வைத்துக் கொள்ளும். என்னைப் போன்றவர்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள்.

அன்பு எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு, வணக்கம். எல்லா தொலைக்காட்சி நிலைய நேரடி நேர்காணல் நிகழ்விலும் தாங்கள் கலந்து கொள்கிறீர்கள் மக்களின் அவல நிலை பற்றி, ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து (இது ஒரு தனிப்பட்ட இனத்திற்கான கொடுமைகள் அல்ல, ஒட்டுமொத்த மனித உரிமைக்கு எதிரான வன்முறை, படுகொலை என ) தங்களின் சிந்தனையை மக்களின் பார்வைக்கு முன் வைக்கிறீர்கள். தங்களின் நேர்காணலை பார்த்து கேட்டு பலரும் விழிப்புணர்வு பெறுகிறார்கள். அதே போல் TRB யால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருப்பதைக் குறித்தும் நீங்கள் பேச வேண்டும் அதனை கேட்கும் மக்கள் இது குறித்து விழிப்புணர்வு அடைவார்கள் என்பது என்னுடைய விருப்பம். என்னுடைய வேண்டுகோள்.


மதிப்பிற்குரிய திரு. இறையன்பு அவர்களுக்கு, வணக்கம். மாணவர்களின் கல்வி குறித்தும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் அவர்களின் தேர்வுமுறை பாடத்திட்டம் குறித்தும் IAS தேர்வு குறித்தும் அக்கறைப் படும் தாங்கள் இது குறித்தும் பேச வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.


முகநூல் குழுமங்கள் சிலவற்றில் அரசியலைப் பற்றிய பதிவுகள் நீக்கப்படும் என அறிவுறுத்தப் பட்டுள்ளன. படித்தவர்களின் இப்படிப்பட்ட அறியாமை குறித்து எனக்கு மனதிற்கு வேதனையாக உள்ளது.
'மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி மக்களாட்சி, ஜனநாயக ஆட்சி. எனவே அரசியல் பேசுங்கள். நமக்காக நம்மில் ஒருவரால் நடைபெறும் ஆட்சியைப் பற்றி நாம் பேசினால் எழுதினால் சிந்தித்தால் தான் நாம் நலமுடன் எந்தக் குறைகளும் இல்லாமல் வாழ முடியும் ' என மறைந்த ஐயா எம். எஸ். உதயமூர்த்தி அவர்களும் மக்கள் சக்தி இயக்க நண்பர்களும் அடிக்கடி சொல்வார்கள். எழுதுவார்கள்.
எத்தனையோ சுயநலவாதிகள், கொள்ளையர்கள் அரசியலில் வியாபாரிகளாக வலம்வரும்போது ஐயா அவர்களின் வார்த்தைகளுக்கேற்ப அரசியலைக் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறேன் எழுதிக் கொண்டிருக்கிறேன். சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இது தெரியாமல் 'அரசியல் பேசாதீர்கள்' என்று சொல்லும் மூடர்களை  நினைத்து நான் எந்த சுவற்றில் முட்டிக் கொள்ள?

முதலமைச்சரின் கவனத்திற்கு:
நாங்கள் வாக்களித்து உங்களை முதலமைச்சராக்கினோம். உங்கள் ஆட்சியில் ஒரு அரசு அலுவலகத்தில் அராசகமும் முறைகேடுகளும் நடைபெறுகின்றன. உரிய நடவடிக்கை எடுங்கள். 



---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் <munaivendri.naa.sureshkumar@gmail.com>
Date: 2013/5/10

சில மாதங்களுக்கு முன் இந்தப் பதிவை இட்டவுடன் ஒரு சில குழும நண்பர்கள் இது குறித்து அக்கறையோடு கேட்டார்கள். ஒருவர் நீதிமன்ற தீர்ப்பின் பிரதியை அனுப்பி வைக்கக் கேட்டார்.

அதன்படி இந்த மின்னஞ்சலோடு மதுரை நீதிமன்ற தீர்ப்பின் பிரதியை இணைத்திருக்கிறேன்.

எண் 5 மற்றும் 6 வது பத்தியில் சொல்லப்பட்டுள்ளதை வாசித்துப் பாருங்கள்.

அரசாணையில் ஆசிரியர் தேர்வாணையத்திற்கும் இது பொருந்தும் என்று குறிப்பிடப் படவில்லை என்ற டி. ஆர். பி யின் (puplic services என்ற வார்த்தை டி.ஆர்.பி யை குறிக்காது) பதிலை/வாதத்தை வைத்து மதுரை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

"puplic services என்ற வார்த்தைக்குள் டி.ஆர்.பி யும் அடங்கும் என்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தீர்ப்பு வெளியாகிய இரண்டு வாரங்களுக்குள் பணிநியமன ஆணை வழங்கப் படவேண்டும்" என டி.ஆர். பி க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆக மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பிலும் டி.ஆர். பி க்கு சாதகமாகத் தான் தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆனால் டி.ஆர்.பி இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையோ பதிலோ தராததால் பாதிக்கப்படவர்கள் சார்பில் டி.ஆர். பி யின் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

"puplic services என்றாலே அது ஆசிரியர் தேர்வாணையத்தையும் குறிக்கும் என்பது நாம் அறிந்ததே. ஏனெனில் டி.ஆர்.பி யும் தமிழ்நாட்டில் தான் உள்ளது. இதுவும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்குகிறது" என்பது பாதிப்பட்டவர்களின் வாதம்.

இது மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பு தான். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் பணிநியமன ஆணை வழங்கியே ஆக வேண்டும் என்று தீர்ப்பளித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருந்தார்கள். (சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரதி எனக்கு இதுவரை கிடைக்கவில்லை).

puplic services என்றால் அதற்குள் டி.ஆர்.பி வராது என்று வாதம் செய்து முரண்டு பிடித்த டி. ஆர். பி யின் இந்த முடிவைப் பார்க்கும் போது டி.ஆர். பி ஏதோ தவறு செய்துவிட்டு அதை மறைப்பதற்காக இப்படி சப்பைக்கட்டு கட்டுவதாக யூகங்கள் கிளம்புகின்றன. டி. ஆர். பி க்கு ஏன் பாதிக்கப்பட்டவர்கள் மேல் இவ்வளவு கொலைவெறி என்று தெரியவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் எந்தப் பாவமும் அறியாதவர்கள். அன்றாடம் உழைக்கும் பணத்தையெல்லாம் தன் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும் என்று பணத்தை தண்ணீரைப் போல் செலவழித்துப் படிக்க வைக்கும் பெற்றோர், தூக்கம் பசி மறந்து படித்து தேர்ச்சியடைந்தும் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு மூலையில் முடங்கிக் கிடக்கும் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்கள் ஒரு பக்கம்.

தமிழ்நாட்டிலேயே வாழும் தமிழனுக்கே வாழ்வதற்கும் அன்றாட தேவைகளுக்காகவும் இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது.

ஆக மொத்தத்தில் அரசாணையே தவறு என்கிறது டி.ஆர்.பி. அரசாணையை வெளியிட்ட தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப் பட வேண்டும். இல்லையென்றால் கடந்த டிசம்பர் மாதம் சென்னை நந்தனத்தில் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சரின் நிகழ்வு பொதுசொத்தில் (மக்களின் வரிப்பணத்தில்) தற்புகழ்ச்சி செய்து கொண்டதாகவும்  சுய விளம்பரம் செய்து கொண்டதாகவும் முதலமைச்சரின் மீது பழி வந்து சேரும். மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதலமைச்சர் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகின. இதையெல்லாம் முதல்வர் மனதில் வைத்து நியாயமான முறையில் தமிழ்நாடு அரசு பாதிப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

முதலமைச்சரின் பார்வைக்கும் இது அனுப்பப்பட்டுள்ளது.

---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் <munaivendri.naa.sureshkumar@gmail.com>
Date: 2013/2/25
Subject: உயர்நீதிமன்ற தீர்ப்பு - அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணைய் (டி.ஆர்.பி).
To:


ஆசிரியர் தேர்வு ஆணையம் செய்த முட்டாள்த்தனமான செயலை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். கடந்த வாரம் தீர்ப்பு வெளியானது.

"இன்னும் இரண்டு வாரம் முதல் ஒரு மாத காலத்திற்குள் அரசாணையை மதித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட வேண்டும்" என நீதிபதி தீர்ப்பளித்ததாக கடந்த வாரமே எனக்கு செய்தி கிடைத்தது.

ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிடும் என எதிர்பார்த்தேன். குறிப்பாக தினமலர் கல்விமலர், புதிய தலைமுறை போன்ற ஊடகங்களை அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் ஊடகங்கள் அனைத்துமே இது தொடர்பான செய்தியை இருட்டடிப்பு செய்தது மனதில் வேதனையை உண்டாக்கியது.

தற்போது இந்த செய்தியை இந்த இழை மூலமாக வெளி உலகிற்கு தெரிவிக்கிறேன்.

நன்றி.

அனைவருக்கும் வணக்கம்,

ஆசிரியர் தகுதித் துணைத்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 2012 ல் நடைபெற்றது. தேர்ச்சியடைந்த மாணவ மாணவியருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த நவம்பர் 10 2012 க்குள் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 'இளங்கலை ஆங்கில இலக்கியமும் இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலமும் சமம்' (B. A. Communicative English is equivalent to B. A. English) என்று தமிழக அரசு சார்பில் அரசாணை கடந்த நவம்பர் 27 ல் வெளியாகியுள்ளது. (Refer my attachment).

ஆனால், இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலம் படித்து தகுதித் துனைத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளின் பெயர்கள், கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிட்ட இறுதிப் பட்டியலில் இல்லை. என்ன காரணம் என்றும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் (அதிகபட்சமாக 100 பேர்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால்,
அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணைய்தை இதுவரை தமிழக அரசு என்னவென்று கேட்டதில்லை. அரசாணைக்கு மதிப்பில்லை.

இது தொடர்பாக செய்திகளை  ஊடகங்கள் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துள்ளன.  தமிழக முதலமைச்சர் இந்தப் பதிவை படிக்க நேர்ந்தால் நிச்சயம் மனம் வருந்துவார் என நம்புகிறேன். உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

 பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் உங்கள் அனைவரையும், உங்கள் உதவியையும் பெரிதும் எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் காத்திருக்கின்றனர்.

மனித நேயம் உள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். இதுபோன்ற பதிவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் பெருந்தன்மையான மனம் வேண்டும். அந்த நல்மனம் எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

கீழ்க்கண்ட நியாயங்களை பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நான் முன்வைக்கிறேன்.

1. 'அரசாணை இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை' என பொறுப்பில்லாமல் காட்டுமிராண்டித் தனமாக பதிலளித்து அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணைய்தின்மீதும் அங்குள்ள ஊழியர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் வெளிப்படையான நிர்வாகம் இல்லை. வெளிப்படையான இறுதிப் பட்டியல் வெளியீடு இல்லை. திரைமறைவில் ஏதோ தில்லுமுல்லு நடப்பதாகத் தெரிகிறது.

3. ஆசிரியர் தகுதித் துணைத்தேர்வின் வினாத்தாளின் இரண்டாம் பக்கத்தில் 'சமமான பட்டப்படிப்பு' என அவர்களே சொல்லியிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்களின் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

4. அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் இறுதிப் பட்டியலில் பெயர் வெளியிடாமல் இழுத்தடிக்கும்  ஆசிரியர் தேர்வு ஆணையம், பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்களின் எதிர்காலத்தை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கான சரியான தெளிவான விளக்கமும்ஆசிரியர் தேர்வு ஆணைய ஊழியர்களிடம் இல்லை.


நானும் ஒரு பத்திரிகையாளனாக இருந்திருக்கிறேன், நானும் ஒரு கவிஞன், எழுத்தாளன் என்ற முறையில் எழுத்தின் பலமும் எழுதுகோலின் பலமும் எனக்கு என்னவென்று நன்றாகவே தெரியும்.

இலக்கிய இதழ் ஆசிரியர்களே, ஒரு வேண்டுகோள். தாங்கள் சிற்றிதழ்களாக இருந்தாலும் சரி. இலக்கியம் = இலக்கு + இயம். ஒரு இலக்கை எடுத்து இயம்புதல்.
சமுதாய மாற்றம் என்ற ஒரு இலக்கை எடுத்து இயம்புங்கள் ஊடக அன்பர்களே.


தமிழர்களின் தாய்நாடான தமிழ்நாட்டிலேயே நியாயமான உரிமைகளைப் பெற ஆள்பலமும் இல்லாமல் பணபலமும் இல்லாமல் அதிகார பலமும் இல்லாமல் தன்னந்தனியே போராட வேண்டியிருக்கிறது. வேதனையோடு வாழ வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டை ஒரு தமிழனோ தமிழச்சியோ ஆண்டிருந்தால் தமிழர்களின் வலி வேதனை புரிந்திருக்கும். தற்போது அப்படி இல்லை. காசுக்காக நக்கிப் பிழைக்கின்ற கூட்டம்தான் அதிகம்.

மனித நேயம் உள்ளவர்கள், இந்தப் பதிவைக் குறித்து பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை நேர்காணல் செய்ய விரும்புகிறவர்கள், என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

No comments: