இந்த உலகில் உள்ள அனைத்து மருத்துவங்களும் இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையைத்தான் செய்கின்றன. அவற்றிற்கு பலமடங்கு பணம் வசூலிக்கின்றன. ஒரு ரூபாய் செலவில்லாமல் நாமே நம்முடைய இரத்தத்தை எப்படி சுத்தப்படுத்தலாம் என்பதைத்தான் செவிவழி தொடுசிகிச்சை சொல்லித்தருகிறது. 'நம்முடைய இரத்தத்தை மட்டும் எப்போதும் நாம் சுத்தமாக வைத்திருந்தால், உடல் உறுப்புகள் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும்.இரத்தத்தை எப்படி சுத்தப்படுத்துவது?' என்பதை சொல்லித்தருவதே செவிவழி தொடுசிகிச்சையின் நோக்கம்.
சில மணிநேரம் கழித்தபிறகு நாகை பாலமுரளி அவர்களிடம் பேசினேன். 'சென்னையில் இன்னும் சில தினங்களில் செவிவழி தொடுசிகிச்சை தொடர்பாக பேசுகிறேன். வந்து கலந்து கொள்ளுங்கள்.' என்று திரு. பாஸ்கர் சொன்னதாக பாலமுரளி ஐயா சொன்னார்.
அதன்பிறகு திரு. பாஸ்கர் அவர்கள் என்னிடம் பேசினார்.
'http:// munaivendrinaasureshkumarkavit haikal.blogspot.in/ என்ற வலைத்தளம் யாருடையது?' என்று கேட்டார். 'என்னுடையது' என்று பதிலளித்தேன். 'எதற்காக கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன். விரிவாக பதிலளித்தார்.
'எனக்கு இணையம் பற்றி தெரியாத காலகட்டத்தில் உதவி செய்வதாக ஒருசிலர் பழகினர். ஆரம்பத்தில் எனக்கு ஒருசில உதவிகள் செய்தாலும் காலப்போக்கில் அவர்கள் என்பெயரைச் சொல்லியும் செவிவழி தொடுசிகிச்சை பெயரைச் சொல்லியும் பணம் பறிக்கத் தொடங்கிவிட்டனர். சில மாதங்களுக்கு முன்புதான் அவர்களிடமிருந்து நமக்கான http://anatomictherapy.org/ என்ற இணையத்தை என் பெயருக்கு மாற்றினேன். உங்களின் பதிவில் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/11/blog-post_23.html) youtube ல் உள்ள காணொளிகளுக்கான இணைப்புகளை கொடுத்திருக்கிறீர்கள். நம்முடைய http://anatomictherapy.org/ சென்று அங்கிருந்து காணொளிகளை தரவிறக்கம் செய்யச்சொல்லி பரிந்துரை செய்யுங்கள். youtube ல் உள்ள காணொளிகளுக்கான இணைப்புகளை யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள். அப்படி செய்தால், அந்த காணொளிகளில் உள்ள எண்களுக்கு மக்கள் அழைப்பார்கள். அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் பாஸ்கர் அவர்கள் இங்கிருக்கிறார். இவ்வளவு பணம் கொண்டு வாருங்கள். அவரைப் பார்க்கலாம். என்று என் பெயரைச் சொல்லி பணம் பறிக்கின்றனர்.
நான் வெளிநாடு செல்ல வேண்டிய தகவல்களை சேகரித்துக்கொண்டு நான் அங்கு போகும் முன்னரே அவர்கள் அங்கு சென்று என் பெயரைச் சொல்லி பொடி, மருந்து என்ற பெயரில் விற்று மக்களிடம் பணம் பறிக்கின்றனர்.
செவிவழி தொடுசிகிச்சை மருத்துவத்தில் மருந்தே இல்லை என்று நான் பரப்புரை செய்கிறேன். ஆனால், சென்னையில் ஒரு வீட்டில் ஒருவர் என்பெயரைச் சொல்லி பொடி, மருந்து போன்றவற்றை விற்று பணம் பறிக்கிறார். சென்னை சென்றபோதெல்லாம் கூட்டத்தில் இவரை பற்றி சொல்வேன். யாரும் அந்த மோசடிப் பேர்வழியை தட்டிக் கேட்பதில்லை. மக்கள் அனைவரும் நான் பேசுவதை பார்க்கின்றனர். சென்று விடுகின்றனர்.
இதனாலேயே, கூட்டத்தில் பேசும்போது அந்த மோசடிப் பேர்வழிகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று சேர்த்தே சொல்கிறேன்.
உலக மருத்துவத்தில் நடக்கிற தில்லுமுல்லுகளை எதிர்த்து நாங்கள் பரப்புரை செய்கிறோம். ஒரு தனிமனிதனுக்காக பயந்து முடங்கினால், நாளை உலக அளவில் பிரச்சனைகள் உருவாகும்போது எப்படி அவற்றையெல்லாம் தீர்ப்பது? அதனாலேயே அவர்களிடமிருந்து எங்கள் மருத்துவம் தொடர்பான தகவல்களை படிப்படியாக நாங்கள் எங்கள் வசம் கொண்டுவர வேண்டும்.' என்றார்.
என்னிடம் அலைபேசி ஊடாக ஒருசிலமுறை தான் பேசினார். ஆரம்பிக்கும் ஒவ்வொரு முறையும் பேசி முடிக்கும் ஒவ்வொரு முறையும் 'வாழ்க இவ்வையகம்' என்ற வாக்கியத்தை உச்சரிக்கிறார்.
திரு. பாஸ்கர் அவர்களின் மனம்போலவே அவருக்கும் செவிவழி தொடுசிகிச்சை தொடர்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கும் எல்லாம் நல்லதாகவே அமையும் என்றே நான் கருதுகிறேன். மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.
-----------
Dear Sir/Madam, My brother Mr.Devarajan admitted in GH, chennai for kidney transplant which cost Rs.2 Lks. I request you to help. Thanks®ards Balamurali Ct.
8098858383, 9944527480
S.DEVARAJAN. AXIS BANK, TRICHY BRANCH. A/C NO.137010100267908 IFS CODE: UTIB0000137
வெற்றிநடை மாத இதழின் ஆசிரியர் திரு. பாலமுரளி அவர்களின் அண்ணனுக்கு சிறுநீரகக் கோளாறு காரணமாக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை சென்னையில் செய்ய வேண்டி ஒரு மாதத்திற்கு முன்பு வரை முகநூலின் ஊடாக ரூபாய் இரண்டு இலட்சம் வரை தேவைப்படுவதாகக் கேட்டிருந்தார்.
ஒரு வாரத்திற்கு முன்பு இது தொடர்பாக ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தேன். திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு தான் ஆரம்பிக்கவிருக்கும் 'அகரமுதல' இணைய இதழில் உதவி தேவை என வெளியிட திரு. பாலமுரளி அவர்களின் கடவுச்சீட்டு (Passport size) புகைப்படம் கேட்டார். இதனால் நான், பாலமுரளி ஐயா அவர்களிடம் அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டேன்.
தற்போதைய நிலவரப்படி, தன்னுடைய அண்ணனுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால், காலை வெட்டி எடுத்து விட்டதாகவும் அதனால் அறுவைசிகிச்சை செய்ய இயலவில்லை என்றும் வீட்டில் வைத்து பார்க்க வேண்டும் என்றும் சொன்னார்.
இந்தத் தகவலை இலக்குவனார் திருவள்ளுவன் ஐயாவிடம் சொன்னேன். அவரும், பாலமுரளி ஐயாவிடம் செயற்கைக் கால் பொருத்துவது தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்படுமா என்று தெரிந்து கொள்வதற்காக பாலமுறை ஐயாவை அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டதாகவும் இணைப்பு கிடைக்கவில்லை என்றும் என்னிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக நான் பாலமுரளி ஐயாவை தொடர்பு கொண்டேன். அவர் அதிகமாகத் தயங்கினார். என்ன யோசித்தார் என்பது தெரியவில்லை.
திண்டுக்கல் ஓவியா பதிப்பகம் மூலமாக சென்னை புத்தகக் கடையிலிருந்து என்னுடைய குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும் ஹைக்கூ நூல் சிங்கப்பூரில் விற்பனையில் மூலம் கிடைத்த பணம் சில வாரங்களுக்கு முன்பு இணைய வங்கிக்கணக்கு உதவியுடன் அதன் உரிமையாளர் திரு. வதிலைபிரபா அவர்களின் மூலமாக எனக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
அந்தத் தொகையை திரு. பாலமுரளி ஐயாவின் வங்கிக் கணக்கிற்கு என்னுடைய இணைய வங்கிக் கணக்கின் உதவியுடன் சற்றுமுன் அனுப்பி வைத்தேன்.
ஏற்கனவே, சென்னை புத்தகத் திருவிழாவில் என்னுடைய இருநூல்கள் விற்பனையின் மூலம் கிடைத்த தொகையை அவருக்கு அனுப்பி வைத்தேன்.
என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்.
வித்யாசாகர் அண்ணாவும் பணம் அனுப்பி வைத்ததாக கேள்விப்பட்டேன்.
உதவி செய்யும் மனப்பாங்கு உள்ள அன்பர்கள் தங்களால் முடிந்த பண உதவியை செய்யுங்கள்.
இந்தத் தகவலை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் உதவி செய்ய, பரிந்துரை செய்யுங்கள்.
குறிப்பு:
=============
செவிவழி தொடுசிகிச்சை நிபுணர் திரு. கோவை பாஸ்கர், ஒரு உறுப்பை வெட்டி எடுப்பது என்பது தவறான மருத்துவம். அப்படி வெட்டிஎடுத்தால் மற்ற உடல் உபாதைகள் (side effects) ஏற்படும். நம் உடல் உறுப்புகளே அவற்றை சரி செய்து கொள்ளும்.அறுவை சிகிச்சையோ உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையோ தேவையில்லை என்கிறார்.
ஆனால், வேறு வழியில்லாததால் தான், திரு. பாலமுரளி ஐயா அவர்களின் அண்ணனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம்.
ஒரு ரூபாய் செலவில்லாமல், அறுவை சிகிச்சை செய்யாமல், எந்தவித மருந்து மாத்திரையும் உட்கொள்ளாமல் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, இதய நோய் போன்றவற்றை குணப்படுத்த இந்தப் பதிவை பாருங்கள், படியுங்கள். http:// munaivendrinaasureshkumarkavit haikal.blogspot.com/2013/07/ blog-post_20.html
வருமுன் காப்போம் என்பது நம் கடமையன்றோ...
வந்தபின் பார்ப்போம் என்பது நம் மடமையன்றோ...
No comments:
Post a Comment