'அப்பா தாடி, அப்பா டாடி - தாடி அப்பா, டாடி அப்பா' என்றும் பூசாரி அப்பா என்றும் நான் என் அப்பாவின் முகத்தாடையை உருவி செல்லங்கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தேன். எங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த என் மருமகன் விஷ்ணு அவனின் தாத்தாவிடம் நான் செய்வது போல அவனும் அவருடைய முகத்தாடையை உருவி விளையாடினான்.
அவனின் தாத்தாவை (அம்மப்பாவை) தாத்தை என்றும் அவனின் அம்மாச்சியை (அம்மம்மாவை) ஆச்சி, ஏச்சி என்றும் அவனின் அப்பாவை ஆப்பா என்றும் மழலைமொழியில் அவன் அழைக்கும் அழகைக் காண, கோடி கண்கள் வேண்டும்.
என் அம்மா அதாவது அவனின் அம்மாச்சி சொல்லிக்கொடுத்த படியே, என் அம்மா அவனிடம் மாமாவுக்கு உருவி முத்தம் கொடுடீ என்று அவனைப் பணித்தவுடனே என் மூக்கையும் முகத்தாடையையும் உருவி முத்தம் கொடுப்பான்.
ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை சென்றிருந்த போது என் நண்பன் ஒருவன் மூலம் ஈழ இசையமைப்பாளர் ஒருவர் அறிமுகமானார்.
கடந்த வாரம் தீபாவளிக்கு ஊருக்குப் போயிருந்தபோது அந்த அன்பான ஈழ இசையமைப்பாளார் ஈழத்திலிருந்து பேசியபோது என் குடும்பத்தினரை கேட்டார். விஷ்ணு பாப்பாவை நலம் விசாரித்தார். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
No comments:
Post a Comment