பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/7h80uJW9a88
ஜல்லிக்கட்டு
இது நம்ம ஜல்லிக்கட்டு
துள்ளிக்கிட்டு
வரும் காளை துள்ளிக்கிட்டு
ஜல்லிக்கட்டு போலவொரு நம்மவூரு விளையாட்டு
துள்ளிக்கிட்டு ஓடிவரும் காளையோடு மல்லுக்கட்டு
நெல்லுக்கட்டு அடிச்சுப்புட்டு நீ வாடா ஜல்லிக்கட்டு
புல்லுக்கட்டு கொடுத்த காளை வருது பாரு சீறிக்கிட்டு
(ஜல்லிக்கட்டு)
களத்துமேட்டு விவசாயி வளர்த்த காளை வருது பாரு
பொழுதுபோக்கு இல்ல இல்ல எழுந்து வந்து பாரு பாரு
அழுத்தமாகச் சொல்லவேணும் அடங்க மறுக்கும் காள ஜோரு
விழுப்புண்ணும் படும் பாரு காள முட்டித் தூக்கும்போது
(ஜல்லிக்கட்டு)
செல்லமாக வளர்த்த காள துள்ளிக்கிட்டு வருது பாரு
கள்ளமில்லா உள்ளமாக வெள்ளக்காள வருது ஜோரு
சொல்லச் சொல்ல பாட்டு வரும் துள்ளித் துள்ளி ஆடு ஆடு
மெல்ல மெல்ல தமிழன் புகழ் மெட்டெடுத்துப் பாடு பாடு
(ஜல்லிக்கட்டு)
சீமக்காள செவலைக்காள மருதக் காள மாமன் காள
சீறிவரும் பாஞ்சு வரும் செகப்பியோட முத்துக்காள
திமிலுமேல ஏறினக்கா திமிரும் காள ஜோரு ஜோரு
தமிழனோட வீரம் பாரு தந்தனத்தோம் தாளம் போடு
(ஜல்லிக்கட்டு)
ஜல்லிக்கட்டு
இது நம்ம ஜல்லிக்கட்டு
துள்ளிக்கிட்டு
வரும் காளை துள்ளிக்கிட்டு
No comments:
Post a Comment