Sunday, April 26, 2026

விஷ்ணு பிறந்தநாள் (26-04-2026) - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/T2BjzC0JG1A?feature=share


அன்பான தம்பிக்கு
அழகான தம்பிக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்

எங்க மச்சக்காளைக்கு
தங்க மணிமாலைக்கு 
பிறந்தநாள் வாழ்த்துகள்

முல்லைமலர் சிரிப்புக்கு
முத்தம் தரும் வாய்க்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்

எக்கச்சக் குறும்புக்கு
எகத்தாளப் பேச்சுக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்

எங்க வீட்டு விஷ்ணுக்கு
எங்க குலசாமிக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்

என்றும் நலமுடன் வாழவே
வெற்றிகள் உன்னைச் சூழவே
உளமார வாழ்த்துகிறேன்

No comments: