Saturday, June 1, 2019

என் பெயருக்குப் பின்னால் சேர்வை என்ற சாதிப்பெயர் எதற்கு?

நரேந்திர மோடி என்பரை நாம் மோடி என்று அவருடைய சாதிப்பெயரை வைத்துத்தான் அழைக்கிறோம்.

ராகுல் என்ற ஒருவரை அவருடைய சாதிப்பெயரான காந்தி என்பதனை சேர்த்து ராகுல் காந்தி என்றே அழைக்கிறோம்.

நம் மாநிலத்தின் பக்கத்து மாநிலமான கேரளாவிலிருந்து வரும் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்களின் பெயருக்குப் பின்னால் மேனன் என்றும் நாயர் என்றும் தங்களின் ஜாதிப்பெயர்களை இட்டுக்கொள்வதை நாம் பார்க்க முடிகிறது. உதாரணமாக லட்சுமி மேனன், கௌதம் வாசுதேவ மேனன், சுவேதா மேனன், கார்த்திகா நாயர்.

வெளிநாடுகளில் taylor (tailor), cook என்று முடியும் பெயர்கள் மிகப் பிரபலம். taylor என்பதற்கு தையற்காரன் என்று பொருள். cook என்பதற்கு சமையற்காரன் என்று பொருள்.

இப்படி எல்லா இடங்களிலும் சாதிப்பெயரை தங்களின் பெயருக்குப் பின்னால் இட்டு தங்களின் தேசிய இன வரலாற்றை தங்களின் அடுத்த தலைமுறையினருக்கு கடத்துகின்றனர்.

நான் தமிழன் என்பதற்கான அடையாளம் என் குலம் மற்றும் குடிப் பெயரான அகமுடையான் எனும் சேர்வை.

தமிழர் யார் தெலுங்கர் யார் கன்னடர் யார் மலையாளி யார் என்று அறிந்து கொள்வதற்கு குலம் மற்றும் குடிகளை உள்ளடக்கிய ஜாதிப்பட்டம் அவசியம்.

தமிழர்கள் தங்களின் சாதிப்பெயரை மறந்ததே தங்களின் வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனதற்கான காரணம்.

பறையன் என்றால் சாதிவெறி அல்ல. கோனார் என்றால், நாடார் என்றால், பள்ளர் என்றால்,  கவுண்டர் என்றால் தேவர் என்றால் கள்ளர் என்றால் மறவர் என்றால் உடையார் என்றால் வன்னியர் என்றால் சாதிவெறி அல்ல. இவையெல்லாம் நாம் தமிழர் என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.

வெங்காய ராமசாமியின் சாதி ஒழிப்பு என்ற சதித்திட்டம் குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.

- முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை

Thursday, May 23, 2019

என் அப்பாவும் என் மாமனாரும் சீக்கிரம் செத்தால் நல்லது என்று தோன்றுகிறது

"நான் சாகும்வரை காங்கிரஸ் கட்சிக்காரன். அதிமுக கட்சிக்காரன். எனவே என்னுடைய வாக்குகள் காங்கிரசிற்கும் அதிமுக விற்கும் தான்" என்று சொல்லும் என் அப்பாவும், 23-05-2019 இரவு என் மனைவியிடம் அலைபேசியில் "என்னுடைய கட்சியான பாஜக வெற்றி பெற்று விட்டது." என்று மகிழும் என் மாமனாரும் எப்போது சாவார்கள் என்று 23-05-2019 இரவிலிருந்து என் மூளைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.

என் அப்பாவும் என் மாமனாரும் சீக்கிரம் செத்தால் நல்லது என்று தோன்றுகிறது. ஏனெனில், இன்றைய தேதியில் சென்னையில் பல இடங்களில் நிலத்தடி நீர் இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அல்லாடுகிறது ஊர். சென்னையில் மட்டுமல்ல, என்னுடைய மாமனார் ஊரான சாப்டூரில் (மதுரை திருமங்கலம் அருகில்) கிராமத்தில் கூட வறட்சி. தண்ணீர் இல்லை.

என் சாவிற்குப் பிறகு என் பிள்ளைகளுக்கு அவர்கள் கையில் பணம் இருக்கும். ஆனால், குடிக்க தண்ணீர் இல்லாமல், நா வறண்டு சாகும்.

இதெற்கெல்லாம் காரணம், பாஜக காங்கிரசின் சந்தை பொருளாதாரக் கொள்கையே.

கடந்த நான்காண்டுகளாக இணையம் வழியே இல்லுமிநாட்டிகளால் நமக்கு ஆபத்து என்று கத்திக் கதறினேன். இல்லுமிநாட்டிகள் என்பவர்கள் வேறு யாருமல்ல. நம்மை உளவியல் ரீதியாக அடிமைப் படுத்தி நம்முடைய அனுமதியுடன் நம்முடைய இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்களே இல்லுமிநாட்டிகள்.

உதாரணத்திற்கு மீத்தேன் எடுப்பது, ஹைட்ரோ கார்பன் எடுப்பது, பொள்ளாச்சியில் சிறுவாணி ஆற்று நீரை குத்தகைக்கு கொடுத்த அதிமுக திமுக அரசுகள், அதை ஏலத்திற்கு எடுத்து நம்மிடமே பணத்திற்கு விற்க வரும் சூயஸ் நிறுவனம் என பட்டியல் நீளும்.

சூயஸ் (suez) நிறுவனம் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட நிறுவனம். தற்போது பொள்ளாச்சியில் சிறுவாணி நீரை விற்க வந்திருக்கிறது. இந்த சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு அமெரிக்காவால் இயக்கப்படுகிற நிறுவனம். இது போன்ற நிறுவனங்கள் தான் இல்லுமிநாட்டிகள்.

சொந்த நாட்டு மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் அல்லாடும்போது தன்னுடைய நீர்வளத்தை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு அதுவும் வெளிநாடுகளால் துரத்தியடிக்கப் பட்ட சூயஸ் (suez) நிறுவனத்திற்கு வழங்கியது என்பது அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.

ஒரு பக்கம் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் 50,000 பணம் என்று கொடுத்துக்கொண்டு மறுபக்கம் விலைமதிக்க முடியாத நம்முடைய நிலத்தடி நீர் வளத்தை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வாரத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் துரோகச் செயலகளை பொதுமக்கள் புரிந்துகொள்ள முடியாமல் "நாங்கள் சாகும்வரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக" என்று உளவியல் அடிமைகளாக வாழ்ந்து பழகிப் போனவர்கள் நம் தமிழ்நாட்டு மக்கள்.

இதைத்தான் சீமான் மேடைகள் தோறும் கத்திக் கொண்டிருக்கிறார்.

இல்லுமிநாட்டிகளைப் பற்றி ஜான் பெர்க்கின்ஸ் (john perkins) தன்னுடைய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confessions of an Economic Hit Man)" என்ற நூலில் சொல்லுகிறார் "உங்களுடைய இயற்கை வளங்கள் உங்கள் கண்முன்னே பறிபோவதை பார்த்துக்கொண்டிருக்க சபிக்கப் பட்டவர்கள் பொதுமக்களாகிய நீங்கள்".

இல்லுமிநாட்டிகளின் நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. நம்முடைய இயற்கை வளங்களை சுரண்டி நம்மை பசியால், வறட்சியால் சாகடிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.

உலகின் 800 கோடி மக்கட்தொகையை 400 கோடியாக குறைக்கும் திட்டமே இது. இதற்காகக் தான் கடல் மாலை திட்டம் (சாகர்மாலா), ஆராய்ச்சி என்ற பெயரில் மலைகளை உடைத்து மலை மணல் (m-sand) என்ற பெயரில் விற்பது, ஆற்று மணல் கொள்ளை, தேனியில் குரங்காணி மலையின் காடுகளை தீ வைத்துக் கொளுத்துவது, நியூட்ரினோ திட்டம், சென்னையில் எண்ணூரில் கடலுக்குள் கப்பலில் உள்ள கழிவுகளை கடலில் கொட்டி கடலை மாசுபடுத்தி இயற்கை வளங்களை அழிப்பது இவை எல்லாமே மக்கள் தொகையை 400 கோடியாக அதாவது பாதியாக குறைக்கும் வேலையே.

மக்களின் எதிர்ப்பு அதிகம் இருந்தால் தற்காலிகமாக நிறுத்தி வைப்பார்கள். எதிர்ப்பு தொடர்ந்து இருந்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வேறு பெயரில் வருவது இதெல்லாம் இல்லுமிநாட்டிகளின் வேலை. உதாரணத்திற்கு மீத்தேன் திட்டம். தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம்.

நம்முடைய தமிழ்நாடு பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது. நம்முடைய தமிழ்நாடு தானாக பாலைவனமாக மாறவில்லை. மாற்ற தரகர் கூலி (broker commission) வாங்கிக் கொண்டு வேலை செய்வது பாஜக காங்கிரஸ் அதிமுக திமுக கட்சிகளே.

தம்முடைய பேரன் பேத்திகளுக்கு பணம் சேர்த்து வைத்தால் போதும். அவர்களுக்கு இயற்கை வளங்களான நிலத்தடி நீர், தூய காற்று இவற்றைக் கொடுக்க வேண்டுமே என்ற எண்ணமில்லாமல் அக்கறை இல்லாமல் காங்கிரஸ் பாஜக திமுக அதிமுக கட்சிகளுக்கு வாக்களித்த என் அப்பா, என் மாமனார், என் சித்தப்பா என காங்கிரஸ் பாஜக திமுக அதிமுக கட்சிகளுக்கு வாக்களித்த என் உறவினர்கள் சீக்கிரம் செத்தால் நல்லது என்றே தோன்றுகிறது.

- முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை

Monday, May 28, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மூல காரணம் (root cause) யார்?

👉 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மூல காரணம் (root cause) யார்?



காவல்துறையின் அராஜகம்.



👉 எப்படி?



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூறாவது நாளில் மனு கொடுப்பதற்காக சென்ற பொதுமக்களில் பெண்களின் நெஞ்சில் கை வைத்து காவல் துறையினர் அட்டூழியம் செய்துள்ளனர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் கோபம் அடைந்திக்கலாம்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த cctv camera வில் பதிவான காட்சிப்பதிவில் பலபேர் சேர்ந்து அரசாங்க வண்டிகளை, உடைமைகளை கல்வீசி சேதப்படுத்தியுள்ளனர்.



இதை சாக்காக வைத்து காவல்துறையினர் அப்பாவி பொதுமக்கள் போராட்ட குணத்தை உயிர் பயம் காட்டி இனிமேல் போராட்டம் செய்தால் கொல்லுவோம் என்றே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.



உண்மையில் அங்கே கல் எறிந்தவர்கள் போராட்டக்காரர்களா இல்லை sterlite னால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையா என்பது தெரியவில்லை.



உண்மையை புரிந்து கொள்ளுங்கள் sterlite என்ற வணிகனின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடும் இந்திய அரசாங்கமும் கடந்த சில வாரங்களாக இருந்து வந்துள்ளன. இந்த வணிகர்களை தான் என் போன்றவர்கள் இல்லுமிநாட்டிகள் என்று சொல்கிறோம். 



அரசாங்கத்திற்கே வட்டிக்குப் பணம் கொடுத்து அந்த அரசாங்கத்தை தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருபவர்கள் இந்த இல்லுமிநாட்டிகள்.



உண்மை இப்படியிருக்க, "தமிழ்நாடு அரசு sterlite க்கு மின்சாரம், தண்ணீர் இணைப்புகளை துண்டித்து விட்டது" என்று எடப்பாடி தமிழ்நாடு அரசு, உண்மை புரியாத ஏமாளிகளான இளிச்சவாயன்களான நம்முடைய காதிலே பூ சுற்றுகிறது.



மோடி, எடப்பாடி போன்றவர்கள் இந்த sterlite போன்ற corporate களிடமிடமிருந்து கையெழுத்து போட்டு commission வாங்கி broker வேலை செய்து வளர்ச்சி என்று நாம் தலையில் மிளகாய் அரைப்பது இன்னுமா நமக்குத் தெரியவில்லை?



மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமும் வேதாந்தா குழுமத்திலிருக்க "தமிழ்நாடு அரசு sterlite ற்கான மின் இணைப்பை துண்டித்து விட்டது" என்பதெல்லாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றதாகும்.



வேதாந்தா குழுமத்தின் head office இங்கிலாந்தில் இலண்டனில் உள்ளது. இதன் முக்கிய பொறுப்பில் உள்ள அகர்வால் என்பவர் ஒரு சேட். அதாவது மார்வாடி. நம்மூரில் கோனார், அகமுடையார், வேளாளர் என்பது போல அகர்வால் என்பது ஒரு ஜாதிப்பட்டம்.



இந்தியாவின் இல்லுமிநாட்டிகள் இந்த பணியா (மார்வாடி) கும்பல் தான். இந்திய அரசாங்கத்தை இயக்குபவர்கள் இந்த இல்லுமிநாட்டிகளே.



தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட உயர் அதிகாரியின் மனைவி அந்த வேதாந்தா குழுமத்தோடு தொடர்புடையவர்.



இல்லுமிநாட்டிகளின் network இப்படித்தான் மறைமுகமாக இருக்கும். இவற்றையெல்லாம் அறிவின் துணைகொண்டு நாம்தான் ஆராய்ந்து உண்மையின் வேரைத்தேடி பயணிக்க வேண்டும்.



அரசாங்க, தனியார் வேலையில் பணி செய்து மாதம் ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம் வாங்குபர்கள், அரசாங்கத்திடமிருந்து ஆதாயம் பெறுபவர்கள் ருசி கண்ட பூனையாகி இந்தப் பதிவினை வாசித்து விட்டு நமுட்டுச் சிரிப்போடு இதனை கடந்து போவார்கள். ஆனால் இப்படி சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் வீட்டிலும் ஒரு உயிர் போன பிறகே, அரசாங்கத்திற்கு பின்னால் வணிகர்கள் உள்ளனர், அந்த corporate நிறுவனங்களை காப்பாற்றவே அரசாங்கம் துடியாய் துடிக்கிறது, துப்பாக்கிச்சூடு நடத்துகிறது, உயிர்களை கொல்கிறது என்ற உண்மை புரிய ஆரம்பிக்கும்.



நீ காற்றுள்ள பந்தை எவ்வளவுக்கெவ்வளவு தண்ணீரில் அமுக்குகிறாயோ அவ்வளவு வேகமாக பந்து தண்ணீரின் மேலே எழும். இதைப்போலத்தான், இன்றைய ஆங்கிலம் போல் ஒரு காலத்தில் வணிக மொழியாக இருந்த தமிழை பேசும், உயிரநேயம் போதித்த எம் தமிழினம் எவ்வளவுக்கெவ்வளவு அடக்கப்படுகிறதோ ஒடுக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேலெழுந்து வரும். 



இந்த போராட்டங்களெல்லாம் தமிழ்நாடு என்ற தனிநாட்டிற்கான ஆரம்பமாகக் கூட இருக்கலாம்.

Tuesday, October 31, 2017

அன்பு மகளே




என்னன்பு மகளே என்னழகு மலரே
என்கனவின் நிலவே என்னுறவின் அழகே

உன்னழகு மழலையிலே அப்பான்னு அழைக்கயிலே
கண்ணோடு நீர்கொட்டும் காதோரம் தேன் சொட்டும்
கண்ணழகே மூக்கழகே காலழகே வாயழகே
உன்னழகை பார்த்தேதான் உண்மையிலே வியந்தேனே

உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
வான்கொஞ்சும் விண்மீனாய் நான்கொஞ்சும் பொன்மீனாய்
கண்முன்னே முழுநிலவாய் என்முன்னே எழில்மலராய்
கண்ணுள்ளே கருமணியாய் கலந்திட்ட கண்மணியே

மலரொன்று அழகாக மகளென்று பேர்சொல்ல
நிலவொத்த முகத்தோடு நீவந்தாய் தரணிதனில்
விலகாத அன்புடனே விரல்பிடித்து நீநடந்து
பழகுந்தமிழ் அழகுறவே பைந்தமிழ்நீ பேசவந்தாய்

பார்த்தவிழி மூடாமல் பார்க்கத்தான் தோன்றுதடி
சேர்த்தெடுத்த அகிலாக சிரிக்கின்ற உன்னழகு
கோர்த்தெடுத்த முத்துமாலை குழந்தையாக என்வீட்டில்
வார்த்தெடுத்த வதனமதில் வஞ்சியுந்தன் தாய்முகமே

பொம்மைக்குட்டி போலவேதான் பெண்குழந்தை பிறந்துவிட்டாள்
அம்மாடி ஆத்தாடி அழகாகப் பிறந்துவிட்டாள்
அம்மான்னு அப்பான்னு அழைக்கத்தான் பிறந்துவிட்டாள்
பொம்மாயி பெண்குழந்தை புதிபுதிதாய் கற்பனைகள்

நெஞ்சோடு நிறைந்தவளே நேசம்கொண்ட என்மகளே
பிஞ்சுமலர் சிரிப்பினிலே பித்தாச்சு என்மனமே
விஞ்சுகின்ற புகழோடு வாழ்வாயே நீயிங்கே
கொஞ்சுதமிழ் மொழிகொண்டு வாழ்த்துகிறேன் கவிதைவழி

Tuesday, April 18, 2017

என் செல்லம்

ஆறு மாதங்களுக்கு என் மனைவிக்காக ஒரு வெள்ளைத்தாளில் எழுதிய கவிதை. நேற்று எதார்த்தமாக எதையோ தேடும்போது இந்த கவிதை கிடைத்தது. தற்போது தட்டச்சு செய்தாகி விட்டது.

நீ எங்கள் வீட்டுத்தாரகை
என் நெஞ்சம் நிறைந்த தேவதை
பொங்கும் எங்கும் சந்தோசம்
புது உயிரால் கருவில் சங்கீதம்
என் உயிரில் கலந்த காதலிது
இது உனக்கும் உனக்கும் புரிகிறது
செல்லம் சொல்லிக் கொஞ்சுகிறேன்
என் உள்ளமெங்கும் உன்நினைவே
நீ இத்தனை நாளாய் காணவில்லை
என் திருமணம் தந்தது வானவில்லை
நிலவின் முதுகு இரகசியந்தான்
உன் அழகிய திருமுகம் அதிசயந்தான்
அழுதே கிடந்தேன் அன்றுவரை
இன்று ஆனந்தத்தில் அழுகிறேன்
குயிலின் குரலும் இனிமைதான்
உன் குரலும் தந்தது குயிலைத்தான்
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே
என் ஆயுள் நீண்டது பொன்மயிலே
நம் முன்னோர் செய்த புண்ணியமே
நம் பிள்ளை வயிற்றில் வளர்கிறது
நம் பெற்றோர் செய்த வேண்டுதலால்
நாம் இணைந்தே வாழ்கிறோம் நிம்மதியாய்
இன்றுமுதல் எனக்கு இரு பிள்ளை
என்றுமே எனக்கு நீ முதற்பிள்ளை
நினைப்பது எல்லாம் நடக்கிறது
என் நெஞ்சம் மகிழ்ச்சியில் திளைக்கிறது

Sunday, April 2, 2017

அறிமுக எழுத்தாளர்கள் கவனத்திற்கு...

2014ல் கடைசியாக கவிதை எழுதியது. அதன்பிறகு தானாக நின்று போனது. ஏனெனில், நான் வெளியிடட இரு நூல்களுக்கும் உரிமை ஆசிரியருக்கு என்று இரு நூல்களின் இரண்டாம் பக்கத்தில் அச்சிட்டு அதற்குரிய பணத்தையும் வாங்கிக் கொண்டு நூல்கள் வெளியிட்டு இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து முறைகேடான முறையில் அரசு அதிகாரிகளை கையூட்டு பெறவைத்து நூலாணையை பெற்று என் பெயருக்கு களங்கம் விளைவித்து என்னுடைய அந்த இரு நூல்களையும் புதிதாக "முதல் பதிப்பு" என அச்சிட்டு அவற்றை விற்று காசு பார்ப்பவை தான் பெரும்பாலான பதிப்பகங்கள்.

கடந்த 2014 தொடங்கி மூன்றாண்டுகளில் நிறைய அலைபேசி அழைப்புகள். அவற்றில் "நான் புதிதாக கவிதைநூல் வெளியிடவிருக்கிறேன். தங்கள் இருநூல்கள் வெளியிட்ட அந்த பதிப்பகம் மூலம் வெளியிடலாமா? அவர்கள் தான் நூலணையின் மூலம் நமது நூல்களை அரசு நூலகங்களில் வைக்க ஏற்பாடு செய்கிறார்களாமே" என்று கேட்டனர். "ஏமார்ந்து விடாதீர்கள். உங்கள் நூல்களை யார் சந்தைப் படுத்துவதற்கு உதவுகின்றனரோ, யார் உங்களை ஏமாற்றாமல் செய்து தருகின்றனரோ, யார் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த மாடடார்களோ அவர்களிடம் போய் அச்சிட்டுக் கொள்ளுங்கள். இதற்கு பேசாமல் நீங்களே ஒரு பதிப்பகம் தொடங்கி அச்சிட்டுக் கொள்ளலாம்." என்றே கேட்பவர்களிடமெல்லாம் சொன்னேன்.
2014ல் எனக்கு துரோகம் செய்த அந்த பதிப்பக உரிமையாளனை மின்னஞ்சல் ஊடாக பத்து பேர் முன்னிலையில் தொடர்புகொண்டு நியாயம் கேட்டேன். "நீ அறிமுக எழுத்தாளன். என் வடிவமைப்புதான் சிறந்தது." என்று என்னை மட்டந்தட்டி தன்னை பெருமை அடித்துக் கொண்டான் அந்த பதிப்பக உரிமையாளன். அந்த பத்துப் பேரில் ஒருவன் "எல்லா பதிப்பகங்களும் இப்படித்தான். எல்லோருமே இப்படித்தான்." என்று சொன்ன, சாமி வணக்கமுங்க, அரைகுடத்தின் நீரலைகள் என்றெல்லாம் எழுதிய ஒருவனும் கூட அப்படித்தான் என்று அதன்பிறகு தான் புரிந்துகொண்டேன். இந்த துரோகத்தையும் துரோகிகளையும் மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் என் மனதிற்கு மூன்றாண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது போல.

2014ல் அருவி காலாண்டிதழின் ஆசிரியர் ஐயா சீனிவாசன் அவர்கள் ஒருமுறை அலைபேசி ஊடாக "சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ் பாடத்திட்டத்தில் வைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஹைக்கூ கவிஞர்களில் நீங்களும் ஒருவர்." என்று சொன்னார். 2014ல் "குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்" என்ற என்னுடைய நூலிற்கு ஐயா ஈரோடு தமிழன்பன் அவர்களால் விருது கிடைத்ததற்கு பிறகு சில தினங்கள் கழித்து பெங்களூருவில் இருந்த எனக்கு அலைபேசி ஊடாக மறைந்த ஐயா எம். எஸ். தியாகராஜன் "தங்கள் கவிதையை நான் தான் தேர்வு செயதேன். உங்களை நான் நேரில் நான் சந்தித்ததில்லை. தங்களின் கவிதைகளை நான் உங்கள் நூலில்தான் படித்தேன். வடிவமைப்பிற்கான விருது அல்ல. உங்கள் கவிதைகளுக்கான விருது. தொடர்ந்து எழுதுங்கள். நான் சென்னையில் ஆலந்தூர் அருகில் தான் வசிக்கிறேன். வாய்ப்பிருந்தால் வீட்டிற்கு ஒருமுறை வாருங்கள்." என்று சொன்னார். "வடிவமைப்பை விட கவிதைகளுக்கான விருது" என்ற வார்த்தைகளை கேட்டபோதுதான் அந்த பதிப்பக உரிமையாளனின் "நீ அறிமுக எழுத்தாளன். என் வடிவமைப்புதான் சிறந்தது." என்ற பிதற்றல் அடிக்கடி என் நினைவிற்கு வந்தது.
நானும் ஒரு பதிப்பகம் துவங்கப் போகிறேன். அதன் பெயர் "விஷ்ணு பதிப்பகம்". நிறைய குடும்ப பொறுப்புகளை தாங்கி மூன்றாண்டுகள் கடந்துபோனது.

Wednesday, March 8, 2017

சுனாமி இயற்கை சீற்றம் அல்ல... இல்லுமினாட்டிகளின் திட்டம் (என்னுடைய விமர்சனமும் கருத்துக்களும் தமிழாக்கத்துடன்)

கடந்த திங்களன்று (0௭-0௩-௨0௧௭ - 07-03-2017) கோகுலம் கதிர் இதழிலிருந்து ஒரு பெண்மணி அழைத்திருந்தார். நான் எழுதி அனுப்பியிருந்த 'சுனாமி இயற்கை சீற்றம் அல்ல... இல்லுமினாட்டிகளின் திட்டம்' என்ற பதிவை படித்துவிட்டு "இதனை நாங்கள் எங்கள் இதழில் வெளியிட விரும்புகிறோம். எல்லாவற்றையும் தங்களா எழுதினீர்கள்? இணைக்கப்பட்ட படங்கள் தங்களால் உருவாக்கப்பட்டவையா?" என்று கேடடார்.

"இல்லை. மேலே தமிழில் உள்ளவை மற்றும் படங்கள் புலனத்தில் (whatsapp) என் நண்பர் மூலமாக எனக்கு கிடைத்தவை. இவற்றை படித்தவுடன் பார்த்தவுடன் எனக்குள் உண்டான கருத்துக்களை விமர்சனங்களை எனக்குத் தெரிந்த விடயங்களையும் சேர்த்து ஆங்கிலத்தில் அனுப்பியிருக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதியவை மட்டுமே என்னுடையவை." என்றேன்.

"நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியவற்றையும் தமிழில் மொழியாக்கம் செய்து அனுப்பி வைக்கவும். மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்." என்றார்.

"ஆமாம். அதற்காகத்தான் நானும் இதனை அனுப்பினேன். தங்களின் இதழில் எல்லாவற்றையும் சேர்த்து இல்லுமினாட்டிகள் என்ற பெயரையும் சேர்த்து வெளியிடுங்கள். ஏனெனில் யாருமே அந்த பெயரை வெளியிட மாடடார்கள். உங்களைப் போன்ற ஊடகங்கள் அவர்கள் பெயரை வெளியில் சொன்னால்தான் உண்மை எல்லோருக்கும் போய்ச்சேரும்." என்றேன்.

"நாங்கள் இல்லுமினாட்டிகள் என்ற பெயரை வெளியிட வேண்டுமெனில் எங்கள் மேலிடத்தில் அனுமதி பெறவேண்டும்." என்றார்.

"நீங்கள் இல்லுமினாட்டிகள் என்ற பெயரை வெளியிட மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் நன்றி. நான் தமிழாக்கத்துடன் அனுப்பி வைக்கிறேன்." என்றேன். அதன்படியே இங்கு நான் ஆங்கிலத்தில் எழுதியவற்றை தமிழில் மொழியாக்கம் செய்து இந்தப் பதிவை வெளியிடுகிறேன்.
---

Last monday (07-03-2017) i got a call from "Kokulam kathir" tamil magazine. She said "i have read your post about tsunami which you sent yesterday. We are looking to publish it in our magazine. Have you written this post? Have you created the images which you attached with your post?".

I said "No. Whatever i sent you in tamil about somalia poverty, america and israel somebody written and i received it via whatsapp. And also, i got those two images from whatsapp itself. Myself just have shared my feedbacks, comments, opinions along with whatever i know to you in english. Whatever you could see english content i have written. Other than that, i received them from whatsapp."

She said "Could you please translate the english contents which you have written to tamil and send to me?. So that, we can create awareness to the society by publishing it."

I said "Yes. That's why i have sent it to everyone. In your magazine, kindly mention the name 'illuminati' along with this post. Because, no one knows about illuminati. And also, no one is ready to publish about illuminati even they dont want to mention the name 'illuminati'. Each and every media should pronounce and mention the name 'illuminati'. Then only everyone can know about illuminati."


She said "If we mention the name 'illuminati', we have to get permission from my boss."

I said "Yes. I know you guys aren't ready to mention the name 'Illuminati'. Anyhow, thank you. I send again this post to you with tamil translation." Based on it, i translated and i shared the post in tamil also which i have already written in english.

புலனத்தில் (Whatsapp) படித்த செய்தி
================================

வளர்ச்சி என்கின்ற பெயரில் ஒரு கண்டத்தை அழித்தார்கள் வல்லரசு வியாபாரிகள்.
மழையின்மையால் வறுமையில் அழிந்ததாக சொல்லப்படுவதெல்லாம் சுத்த பொய்.... 

-----👇👇👇👇👇

சோமாலியா வறுமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வறுமைக்கு காரணம் என்னவென்று ஓரு சிலருக்கே தெரியும். 

மேற்கத்திய நாடுகள் சோமாலிய நாட்டு அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு அந்த நாட்டின் மீது மறைமுக தாக்குதல் நடத்தினார்கள். நமக்கு பணம் கிடைக்குறது நமக்கென்ன என்று சம்மதம் என சோமாலிய தலைவர்கள் தெரிவித்தனர். இன்று மொத்த நாடே நாசமாய் போனது. கையூட்டு வாங்கியவர்களின் சந்ததி உட்பட. 

சோமாலியாவின் முதல் நாசம் 1960களில் மேற்கத்திய நாடுகள் அமெரிக்காவின் தலைமையில் மீத்தேன் மற்றும் இதர வாயுக்களின் சோதனை சோமாலியாவின் ஒட்டு மொத்த விவசாயத்தையே அழித்து விட்டது. 

இரண்டாவது விளையாத பூமி என்று அதே அமெரிக்கர்களால் முத்திரை  குத்தப்பட்டு,  அந்த நாட்டை உலக குப்பை தொட்டியாக்கி கடல்வளத்தையும் அழித்தார்கள். ஓரு விவசாயியும், மீனவனும் இல்லாமல் போனால் எஞ்சியவர்கள் உணவுக்காக கொள்ளையர்களாகத்தானே மாற முடியும். ??

அதே அமெரிக்கர் வயிற்று பசிக்கான சோமலியர்களின் கொள்ளையிலும்,  வயிற்றில் புல்லட்டை சுட்டு பரிசளித்தான். நம் கண் முன்னே ஓரு நாடே சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி போல் முழ்குகிறது.  சோமாலியர் சில நேரங்களில் பல உயிரை கொடுத்து கடத்திய கப்பலில் சில உணவு பொருட்களை திருடி சென்ற அவலமும் உண்டு. பசிக்காக போராடுபவனுக்கு கடல் கொள்ளையன் பட்டமும்

இன்றைய கார்ப்ரேட் அமெரிக்க,  இஸ்ரேலின் அடுத்த சோமாலிய பார்வை நம்நாடு. கார்ப்ரேட்களுக்கு நம் நாட்டில் மோடி ஓதுக்கி குடுத்த நிலம் தமிழ்நாடு. தனக்கு ஓட்டு போடாத இவர்கள் இருந்தாலென்ன,  செத்தாலென்ன என்ற மோடியின் மனநிலையாக இருக்கலாம்.
கிளின் இந்தியா என்று மாய கூச்சலிட்டு மக்களின் கண்னில் மண்னை தூவிய மோடி பல டண் குப்பைகளை இந்தியாவில் கொட்ட உலக நாடுகளுக்கு அனுமதி வழங்கி முடிந்து விட்டது. 

சென்னையில் ஓரு கப்பல் விபத்து அதனால் பல லட்சம் லிட்டர் கழிவு ஆயில் கொட்டியது. அது விபத்து அல்ல. நம் தமிழ்நாட்டின் மீது நடத்தப்பட்ட வெள்ளோட்டம். இனி வருங்காலங்களில் நம் நாட்டை தேடி கேன்சர் குப்பையும் வந்து கொண்டிருக்கிறது. 

இந்த மீத்தேன் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றால் 3,000 கோடி மத்திய அரசுக்கு,  தமிழக நல்லி எலும்பு நாய்களுக்கு 400 கோடி கிடைக்கும். தமிழக மக்களாகிய நாம் விரைவில் சோமாலியாக மாற தயாராகி கொள்ள வேண்டும். 

தமிழ்நாட்டை இந்தியாவிடமிருந்து மீட்க போகிறோமா ? அல்லது பாஜக தலைவர்கள் சொல்வது போல் இந்தியாவிற்காக தமிழ்நாட்டை இழந்து சோமாலியா போல் செத்து மடிய போகிறோமா என்ற கேள்விக்கு விடை தேடும் விளிம்பில் நிற்கிறோம்.
---------

மேலே உள்ள பதிவில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மனிதகுலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக யாரோ ஒருவர் குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். ஆனால், இல்லுமினாட்டிகளில் ஒருசிலரின் பூர்வீகம் இஸ்ரேல் என்றும் யூதர்கள் இல்லுமினாட்டிகளுக்கு நேரடி அடிமைகளாக இருக்கிறார்கள் என்றும் இல்லுமினாட்டிகள் அமெரிக்காவிற்கு பின்னாலிருந்து கொண்டு அமெரிக்காவை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் நம்மில் பலருக்கு தெரியவில்லை.

இல்லுமினாட்டிகளே அமெரிக்காவை நேரடியாக ஆளுகின்றனர். இஸ்ரேலிலிருந்து கொண்டு யூதர்கள், இல்லுமினாட்டிகளின் மனிதகுலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு நேரடியாக உதவிசெய்து அவர்களின் பயங்கரவாதத்தை செயல்படுத்துகின்றனர்.

மனிதகுலத்தின் அனைத்து இனங்களுக்கும் உண்மையான எதிரி இல்லுமினாட்டிகளே.

நாம் எப்போதும் இல்லுமினாட்டிகளுக்கான அநாமதேய நாடுகளான (benami) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இல்லுமினாட்டிகள் பற்றி பேசுவதில்லை.

ஆனால், நான் எப்போதும் நம் உண்மையான எதிரியான இல்லுமினாட்டிகள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன்.

பெண்விடுதலை என்ற ஒன்றைக் கூட இல்லுமினாட்டிகள் நம் பாரம்பரிய கூட்டுக் குடும்பத்தை சிதைக்கவே உருவாக்கினர்.

சுவாமி விவேகானந்தா, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மோதிலால் நேரு ஆகியோர் இல்லுமினாட்டிகளின் கையாட்களாக (freemasons) இல்லுமினாட்டிகளுக்குக் கீழ் வேலைபார்த்தனர் என்ற உண்மை யாருக்குமே தெரியவில்லை. தெரியாத அளவிற்கு வரலாற்றை திரித்து எழுதிவிட்டனர். சோனியா காந்தியும் இல்லுமினாட்டிகளின் கையாளாக (freemason) இல்லுமினாட்டிகளுக்குக் கீழ் வேலைபார்த்து வரும் உண்மையும் நாம் யாருக்குமே தெரியவில்லை.

ஆதாரம்: http://www.masonindia.in/index.php/some-very-well-known-indian-freemasons/.

அதுமட்டுமில்லாமல் நம் பாரம்பரிய குருகுலக் கல்விமுறையை ஒழித்துக்கட்டியவர்கள் இல்லுமினாட்டிகளே.

நாம் எப்போதும் நம் அரசியல்வாதிகளையும் மோடியையும் திட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நான் எப்போதும் இல்லுமினாட்டிகளை திட்டிக் கொண்டிருக்கிறேன்.

நாம் எப்போதும் இல்லுமினாட்டிகளின் கையாட்களைப் (benami) பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நான் கையாட்களான அரசியல்வாதிகளின் உண்மையான முதலாளியான இல்லுமினாட்டிகளைப் பற்றியே உங்களுக்குச் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.

மோடி என்பவரும் கூட இல்லுமினாட்டிகளின் கையாளே.

சுனாமி ஒரு இயற்கை சீற்றம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல. அது இல்லுமினாட்டிகளின் வேலை.

இல்லுமினாட்டிகள் எப்போதும் தங்கள் செய்யப் போவதை தங்களின் திட்ட்ங்களை முன்கூட்டியே கேலிச்சித்திரங்களின் மூலமும் தமிழ் மற்றும் ஆங்கில திரைப்படங்களின் மூலம் சொல்லிக் கொண்டே வருகின்றனர். நாம்தான் கவனிப்பதில்லை.

உதாரணத்திற்கு சில நிகழ்வுகள்
---------------------------------------------------------

அ. இரட்டைக் கோபுர இடிப்பு நிகழ்வு தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது அல்ல. அது இல்லுமினாட்டிகளால் முன்கூட்டியே ஒருசில கேலிச்சித்திரங்களிலும் ஆங்கில திரைப்படங்களிலும் முன்னறிவிக்கப்பட்டே நிகழ்த்தப்பட்டது.

ஆதாரம்: இணையத்தில் தேடிப் பாருங்கள்.

ஆ. "அன்பே சிவம்" என்ற திரைப்படத்தின் மூலம் இல்லுமினாட்டிகள் சுனாமியைப் பற்றி முன்னறிவிப்பு செய்துவிட்டே சுனாமியை நிகழ்த்திக் காட்டினர்.

இ. ௫00 (500) மற்றும் 1000 (௧000) ரூபாய் நோட்டுகளை தடைசெய்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே 'பிச்சைக்காரன்' தமிழ் திரைப்படத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டே இல்லுமினாட்டிகளின் கையாட்களான மோடி மற்றும் இன்னபிற அரசியல்வாதிகளால் நிகழ்த்தப்பட்டது.

ஈ. அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப்பை இல்லுமினாட்டிகளே நியமித்தார்கள். ட்ரம்ப் தான் அடுத்த அதிபர் என்று இல்லுமினாட்டிகள் கேலிச்சித்திரங்களிலும் ஆங்கில திரைப்படங்களிலும் முன்னறிவிக்கப்பட்டே நிகழ்த்தப்பட்டது.

இன்னும் பல நிகழ்வுகள் சொல்லிக்கொண்டே போகலாம்.
---

சுனாமி என்ற நிகழ்வு இல்லுமினாட்டிகளால் திடடமிட்டே நிகழ்த்தப்பட்டது.

இல்லுமினாட்டிகள் freemasonry என்ற அமைப்பின் மூலமாகவே தங்களின் திட்ட்ங்களை நடைமுறைப்படுத்துகின்றனர்.

freemasonry என்பது இல்லுமினாட்டிகளால் நடத்தப்படும் ஒரு அமைப்பு. வெளியே தொண்டு செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு உள்ளே மனித குலத்திற்கு தீங்குவிளைவிக்கும் எல்லாவற்றையும் இணையம், பத்திரிகை தொலைக்காட்சி, மருத்துவம் உள்ளிடட எல்லா துறைகளின் மூலமாக நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.

https://www.youtube.com/watch?v=cXzDz3VO65o&feature=youtu.be

சென்னையில் ஆயிரம்விளக்கு பகுதியில் இல்லுமினாட்டிகளின் கிளை நிறுவனம் உள்ளது. இதைப்போலவே ஒவ்வொரு பெருநகரங்களிலும் இல்லுமினாட்டிகள் தங்களின் கிளைகளை நிறுவி தங்களின் திட்ட்ங்களை செயல்படுத்துகின்றனர்.

நான் இல்லுமினாட்டிகளைப் பற்றி மேலே சொன்ன அனைத்தும் மிக முக்கியமானவை. நீங்கள் படிப்பது மட்டுமல்லாமல் அனைவரும் தெரிந்துகொள்ள இதனை மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் பீட்டா (PETA) என்ற பெயரில் இல்லுமினாட்டிகளே உள்ளனர், மீத்தேன் திடடம், ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் பெரிய நிறுவனங்களுக்கு பின்னால் இல்லுமினாட்டிகளே உள்ளனர் என்ற உண்மைகளை மனதில் வைத்தே எல்லா நிகழ்வுகளையும் கண்காணியுங்கள்.
-----
In this post, somebody mentioned america and israel doing illegal activities. Yes, but most of us don't know that some of illuminati came from israel and Jews are the direct slaves of illuminati.

 Illuminati directly ruling america. From israel Jews directly helping to illuminati to execute illuminati's illegal activities.

The real enemy of us is illuminati.

We are always talking about benami (america and israel) of illuminati.

But I have been talking about real enemy (illuminati).

Women freedom created by illuminati for collapsing joint families.

Swami vivekananda, M.K. Gandhi, Mothilal Nehru worked as freemasons under illuminati. Sonia Gandhi is also working as a freemason under illuminati.

Proof: http://www.masonindia.in/index.php/some-very-well-known-indian-freemasons/.

And also illuminati destroyed our traditional gurukulam education.

We are always talking about benami of illuminati. But I am always talking about illuminati who is a real enemy to the entire world.

We are always scolding about modi and our politicians. But I am always scolding about illuminati.

We are always thinking about benami. But I am always informing u about owner of benami (illuminati).

Modi is a benami of illuminati.

We are all thinking that tsunami is a natural calamity. But it is not true. It is a plan of illuminati. They are always pre-announcing their plans via cartoons, tamil movies, hollywood movies etc.

Sample incidents
================

1. Twin tower collapsing event pre-announced by illuminati in few cartoons and hollywood movies before sep 11, 2001.

Proof: U can google it.

2. Tsunami pre-announced by illuminati in a tamil movie called "Anbe sivam" in 2003. But tsunami happened in 2004.

3. Demonetization of 500 and 1000 pre-announced in a tamil movie called "pichaikaran" in 2016 april. But real demonetization happened in nov 2016.

4. New president trump pre-announced by illuminati in lot of cartoons and few hollywood movies before 1 and half years.

Etc...


Tsunami planned and excuted by illuminati.

Via Freemasonry, they are executing.

Freemasonry is an organization owned by illuminati. Outside of the world they are acting as a social activists. But, internally they are cheating us in many ways.

https://www.youtube.com/watch?v=cXzDz3VO65o&feature=youtu.be

In chennai thousand light, branch of illuminati organization (Grand lodge) located. Similarly, in each city of every countries, they opened their branches. Via grand lodge Freemasonry, they are executing their plans.

https://www.youtube.com/watch?v=pwsEThIpKDc&feature=youtu.be

It is really important. Kindly forward it to everyone.

We have to keep in back of the mind always about illuminati.






Sunday, January 22, 2017

ஜல்லிக்கட்டுக்கு உண்மையான எதிரி, PETAவின் உண்மையான உரிமையாளர், உலகின் அனைத்து தேசிய இனங்களுக்கும் உண்மையான எதிரி - 666, இல்லுமினாட்டி, illuminati, freemasonry

Dear friends,

Most of us don't know about illuminati.

Their other names are  666, இல்லுமினாட்டி, illuminati, freemasonry, இரகசிய குடும்பம், இஸ்ரேல் குடும்பம், secret சொசைட்டி, 13+4=17 blood lines, 13+4=17 இரத்த நாளங்கள், church of satan, சாத்தானை வழிபடக் கூடியவர்கள், knight templars.

If any protester who supports jallikkaddu takes print out of the following image to make a poster, i will be joining with them in DLF or Marina.





News from Dinamalar, Coimbatore (22-01-2017)


Please share this video to everyone. Illuminati is the owner of PETA. Rothschild and his generations among 13 blood lines (Secret society, Royal family, Illuminati, freemasonry) are the real enemy for jallikkaddu.

Kindly watch this video and share to everyone. Everyone should know about illuminati.

ஜல்லிக்கட்டுக்கு உண்மையான எதிரி, PETAவின் உண்மையான உரிமையாளர், உலகின் அனைத்து தேசிய இனங்களுக்கும் உண்மையான எதிரி - 666, இல்லுமினாட்டி, illuminati, freemasonry - https://www.youtube.com/watch?v=84BBvWT_-mk

jallikattu vs Illuminati- சல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது இவர்களா? - https://www.youtube.com/watch?v=vkML3DBz5Pc

Jallikattu solution by Healer basker / bold speech /must watch - https://www.youtube.com/watch?v=xFF4zyyZ9Z0

Swami vivekananda, M.K. Gandi, Jawaharlal nehru and sonia gandhi (Jews) are all working as freemasions under illuminati.

See this page - http://www.masonindia.in/index.php/some-very-well-known-indian-freemasons/

Sunday, January 1, 2017

மூன்றாம் உலகப் போர் ? உண்மையோ? ஆராய்க (illuminati, secret society, freemasonry)

அனைவருக்கும் வணக்கம்,

இரண்டாண்டுகளுக்கு முன் நான் எழுதிய ஒரு பதிவின் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/07/blog-post_22.html) தொடர்ச்சியாகவே இதனை பதிவிடுகிறேன்.



Illuminati - https://www.youtube.com/watch?v=Mqwuk36MVrs

ஃப்ரீ மேசனரி 1: முன்னுரை |இலும்மினாட்டி அமைப்பு - https://www.youtube.com/watch?v=tvuc-7RfqHk

ஃப்ரீ மேசனரி : 2 லூசிபர் வழிபாடு செய்பவர்களா - https://www.youtube.com/watch?v=MG00__GzStY

ஃப்ரீ மேசனரி : 3 இந்தியாவில் தோற்றம் - https://www.youtube.com/watch?v=xasMZyZ3sXI

ஃப்ரீ மேசனரி : 4 இந்திய சுந்திர போராட்டம் நாடகம் - https://www.youtube.com/watch?v=pMZukM0cLQ0

ஃப்ரீ மேசனரி 5 : அமெரிக்காவை உருவாக்கியது இவர்களே - https://www.youtube.com/watch?v=EPyexWy4etw&t=15s

உண்மையான சுதந்திர போராட்டம் - நேதாஜி - https://www.youtube.com/watch?v=e1GAcx2H9-w&t=32s

நிலவு பயணமும் ஃப்பிரீ மேசனரியும் (NASA)(Apollo) - https://www.youtube.com/watch?v=RvwzsCM60PE

கோகினூர் வைரம் மர்மம் என்ன ? - https://www.youtube.com/watch?v=CxC6yYtKYF8

சாத்தான் கொம்பு குறியீடு - https://www.youtube.com/watch?v=PQsccts1HSY

இல்லுமினாட்டி குறியீடுகள் - https://www.youtube.com/watch?v=3IIqu0zbBns

France nice attack is just a fake ? - https://www.youtube.com/watch?v=VHsiT9Vqi00&index=8&list=PL-waXt4xAtLZRtPTSEi6Hj8OdfoHA0BZx

satanic church - https://www.youtube.com/watch?v=ikennqSRcbs&index=14&list=PL-waXt4xAtLZRtPTSEi6Hj8OdfoHA0BZx

டைட்டானிக்கை இல்லுமினாட்டிகள் மூழ்கடித்தது ஏன் ?  - https://www.youtube.com/watch?v=KS9a_BsffEQ

விஜய் டிவி இலுமினாட்டிகளுடையதா ? - https://www.youtube.com/watch?v=_Uk0hWWfgSk

அப்பல்லோ மருத்துவமனை - https://www.youtube.com/watch?v=4ATpkW2Nah8

ஐயா அப்துல் கலாமுக்கும் இலுமினாட்டிகளுக்கும் தொடர்பு இருக்குமா ? - https://www.youtube.com/watch?v=Y1TZIinxzek

சத்குரு சக்கி வாசுதேவ் இலுமினாட்டி கைப்பாவையா ? - https://www.youtube.com/watch?v=Z1Phe5CgIhc

ரூ.500 ,ரூ.1000 செல்லாது! உலக அரசியல் எனது பார்வையில் - https://www.youtube.com/watch?v=SG4furuSxhQ

அடுத்த அமெரிக்க அதிபர் யார் ? முன்னறிவிக்கப்பட்டது - https://www.youtube.com/watch?v=KJ8OU8xXTeA

மூன்றாம் உலகப் போர் ? எங்கே? இலுமினாட்டி திட்டம் என்ன? - https://www.youtube.com/watch?v=FuM8NBWTXBQ

ISIS இலுமினாட்டி தீவிரவாதம் (ஆதாரம்) - https://www.youtube.com/watch?v=FdFGkDo7Ckc

IND Vs Pak தமிழ்நாடு ராணுவமயமாக்கபடுமா ? - https://www.youtube.com/watch?v=gh_WtndLzus

எல்லை அரசியல் ! இலுமினாட்டி அரசியல் ? கவனம் - https://www.youtube.com/watch?v=SzyZH3h6egg

Knights Templar details - https://www.youtube.com/watch?v=mp6DBl-DQig

பணமற்ற பொருளாதாரத்தை நோக்கி இந்தியா ? - https://www.youtube.com/watch?v=FfTc0Rs7DJo

இயேசு பிறந்த நாள் டிசம்பர் 25 இல்ல? - https://www.youtube.com/watch?v=r0QeNI0Z66I&t=4s

பசுமை புரட்சியும் உலக அரசியலும் - https://www.youtube.com/watch?v=W5oyKDBunM0

முகநூல் இலுமினாட்டி? - https://www.youtube.com/watch?v=qBfQWLjPvD4

Hollywood நுண்ணரசியல் - https://www.youtube.com/watch?v=UXZ74eVJUQY

Angels & Demons ல் வரும் இல்லுமினாட்டிகள் இல்லை இவர்கள் - https://www.youtube.com/watch?v=kF0pg6VaR4Q

JIO Reliance உலக அரசியல் பார்வையில்!! - https://www.youtube.com/watch?v=npj-_Y6ikws

மலாலா யூசுப்சையி இல்லுமினாட்டி கைப்பாவை ? - https://www.youtube.com/watch?v=5q_GQI3sjd8

POKEMON GO Danger ! India , Chennai - https://www.youtube.com/watch?v=dS-FUUAFMt0

Indian Illuminati Sonia Gandhi - https://www.youtube.com/watch?v=614QmpRRKKM

இல்லுமினாட்டி நிறுவனங்கள் - https://www.youtube.com/watch?v=EtFCq5O-AVM

இந்திய ரிசர்வ் வங்கியும் இலுமினாட்டிகளும் - https://www.youtube.com/watch?v=jzLE6r1t-fs

உலக மக்களை அடிமையாக்கும் வங்கிகள் - 01 - https://www.youtube.com/watch?v=jPXIXqLgStY

உலக மக்களை அடிமையாக்கும் வங்கிகள் - 02 - https://www.youtube.com/watch?v=bixBg3tN4hc

வங்கி தீமைகளின் ஊற்று - https://www.youtube.com/watch?v=szNifzHR1mA

வங்கிகளுக்காக போர் & ரோத்சைல்ட் வங்கி இல்லாத நாடுகள் - https://www.youtube.com/watch?v=o65-yGsIiC4

காசு பணம் துட்டு இலுமினாட்டி : 1 - https://www.youtube.com/watch?v=ItUblGHJCgU

9/11 இரட்டைகோபுர தகர்ப்பு முன்னறிவிப்புகள் ? - https://www.youtube.com/watch?v=hUz-LBXbroM

சிகா வைரசை பரப்பியது இல்லுமினாட்டிகள் - https://www.youtube.com/watch?v=RE_uBKytLy8

How to join Illuminati in Tamil ? - https://www.youtube.com/watch?v=Dv9XIzg6uzk

பிரஞ்சு புரட்சி நவீன அழிவின் தொடக்கம் - https://www.youtube.com/watch?v=4FOflnuOeLw

குடியரசும் மக்களாட்சியும் இலுமினாட்டி திட்டத்தின் பகுதி - https://www.youtube.com/watch?v=AuJ0AN5NNhQ

தாக்குவதும் பாதுகாப்பதும் அவனே ! அடிமைகள் நாம் ? - https://www.youtube.com/watch?v=FPlch17kK80

தற்சார்பு வாழ்க்கை - https://www.youtube.com/watch?v=VOZWI-GW_TQ

பணம் சம்பாதிக்க குறுக்கு வழி உலக அரசியல் உண்மைகள் - https://www.youtube.com/watch?v=OtAldfMBXds

இலுமினாட்டிகள் செய்திகளை அறிய - https://www.youtube.com/watch?v=nP6rbQQFe8E

புதிய தொடர் மறைக்கப்பட்ட உண்மைகள் - https://www.youtube.com/watch?v=JD0sfqacpo8

எகிப்தின் ஒற்றை கண்கள் - https://www.youtube.com/watch?v=9gd-YzGzFdk

டொனால்ட் ட்ரம்ப் ஃப்ரீ மேசனா இருப்பாரா ? - https://www.youtube.com/watch?v=PBWGyi6qPME

95% உலக ஊடங்களை கட்டுப்படுத்தும் 6 இலுமினாட்டி நிறுவனங்கள் - https://www.youtube.com/watch?v=KLTtZAPKrhg

Tuesday, March 31, 2015

வாழ்த்துச் சொல்லுங்கள் (சிறுவர் பாடல்)

பாப்பாவுக்கு பிறந்தநாளில் வாழ்த்துச் சொல்லுங்கள்
பலூன் மிட்டாய் பம்பரமெல்லாம் வாங்கித் துள்ளுங்கள்

விஷ்ணு பாப்பா நல்லபாப்பா சொல்லிப் பாடுங்கள்
விளையாடத்தான் கூட்டிச்சென்று குதித்து ஆடுங்கள்

துறுதுறுவென்று ஓடும்பாப்பா எங்கள் பாப்பாதான்
துள்ளிக்குதிக்கும் மான்போலவே எங்கள் பாப்பாதான்

சுறுசுறுப்பாக காலையிலெழுந்து பள்ளியில் நிற்கணும்
சுட்டிப்பாப்பா நீயும்தானே நன்றாய் கற்கணும்

அள்ளஅள்ளக் குறையாமலே அழகே பேரழகு
அகரம் சொல்லிப் பேசும்போது அதுவும் ஓரழகு

செல்லம் தங்கம் வைரம் முத்து சொல்லிக் கொஞ்சுங்கள்
முத்தம் தாடா முத்தம் தாடா என்றே கெஞ்சுங்கள்

கூவும் குயிலின் இசையை இசையை உன்னில் நான்கண்டேன்
குட்டிப்பாப்பா கட்டிக்கரும்பாய் இனிக்க நான்நின்றேன்

சுட்டிக்கைகள் என்னைதினமும் எறும்பாய்த்தான் கிள்ளும்
குட்டிக்கால்கள் எங்கோசென்று என்மேல்தான் துள்ளும்

மூக்கும் பல்லும் புதிதாய் புதிதாய் கவிதைகளையே சொல்லும்
முத்தே அழகே அன்பேதானே என்றைக்கும் வெல்லும்