Monday, February 28, 2022

எனக்காகப் பிறந்தவள்

விழியத்தைக் காண - https://www.youtube.com/watch?v=I8c_CJBBwtA




எனக்காகப் பிறந்தவளே
என் மனதில் நிறைந்தவளே
உனக்காக நானிருப்பேன்
உன்னுள்ளே நிறைந்திருப்பேன்

ஆண்குழந்தை நமக்கில்லை
ஆனாலும் குறைவில்லை
எனையுன் பிள்ளையென
ஏற்றுக்கொண்ட என்னுயிரே

எனக்குத்தான் பசியென்றால்
துடித்தே தான் சமைக்கின்றாய்
கொஞ்சமெனக்குக் காய்ச்சலென்றால்
நெஞ்சந்தான் பதறுகின்றாய்

சண்டை போட்டுத் திட்டினாலும்
சமாதானம் செய்வதற்கு
முதலில் வந்து நானழுவேன்
பிறகுனையே சிரிக்க வைப்பேன்

இன்றுனக்குப் பிறந்தநாள்
எனக்கின்று சிறந்த நாள்
மனையாளே இனியவளே
வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்

Tuesday, January 25, 2022

வெள்ளையாடை தேவதைகள்

கவி பாடிய காணொளி - https://youtu.be/hI4ZhReRR6Y


வெள்ளைநிறச் சீருடையில் 
வந்தாளெங்கள் தேவதையே
முல்லைமலர் சிரிப்புடனே
முகமெல்லாம் புன்னகையே

உணவும் மறந்து உறக்கம் மறந்து
உயிர்கள் காத்திடும் தேவதைகள்
கனவும் கலைந்து கணவன் மறந்து
கருணை பொங்கும் காவியங்கள்

குடும்பம் மறந்து குழந்தை மறந்து
புன்னகை செய்யும் தாதியர்கள்
கவலை மறந்து கண்ணீர் மறைத்து
நோய்கள் விரட்டும் தூதுவர்கள்

கொட்டும் மழையை அடிக்கும் வெயிலைக்
கடந்தே செல்லும் காவலர்கள்
சொட்டும் கண்ணீர் உடல்வலி தாங்கி
பிணிகள் போக்கும் செவிலியர்கள்

ஊரும் அடங்க வீட்டில் முடங்க
கொடும்நோய் தீர்க்கும் ஓவியங்கள்
சிறுநீர் அடக்கி அமர மறந்து
நடந்தே திரியும் நல்லுள்ளங்கள்

உதிரப்போக்கும் கால்கள் வழிய
உயிரும் உருக உதிரமும் உருக
விடுப்பென்பதே கனவில் மட்டும்
மூன்றுநாள் கடந்தும் ரத்தம் சொட்டும்

உன்னைப்போல செவிலியர் பார்த்தால்
அன்னையைப் பார்த்தது போலாகும்
கண்ணைமூடி விசமும் குடித்து
உன் கை பட்டால் நோய்தீரும்

மண்ணில் வாழும் கடவுளையெல்லாம்
உன்றன் உருவில் காண்கின்றேன்
எல்லையில்லா ஆனந்தம் பெருகி
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்


Friday, January 14, 2022

வயலோடு உறவாடி... புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்

பாடல் வரிகளுக்கான காணொளி - https://youtu.be/OfQaLfJHcQ4

என்னிடமிருந்து வெளிவந்த புத்தம்புது மெட்டு இது. நான் ஒரு ஆகச் சிறந்த பாடகனுமில்லை. எனக்கு இசையைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், கவிதைகளை, பாடல்களைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். சிறுவயதில் என் அம்மா, அப்பா சொல்லித் தந்த தமிழ், சிறுவயதில் பாடசாலை வகுப்பறைகளில் நான் உன்னிப்பாக கவனித்தவை இவை மட்டுமே தமிழ் மீது தீராத காதலை உண்டாக்க வைத்தவை. மற்றபடி, இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் நான் கணினித்துறையில் படித்தமையால் தமிழை தொடர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு பறிபோனது. 

இருந்தபோதிலும் சமீப காலமாக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, இணையம் வழியே தூய தமிழ் தேசியம் குறித்த ஆராய்ச்சிக் காணொளிகள், கட்டுரைகள் போன்றவற்றை படித்ததன் விளைவாய் கவனித்ததன் விளைவாய், நான் இப்போது எண்ணிப் பார்க்கிறேன் "நாம் ஆரம்ப காலகட்டத்தில் நம்முடைய கவிதைகளில், கவிதை நூல்களில் தவறான வரலாற்றை முன்னுதாரணமாக பல இடங்களில் உவமையாக எழுதியிருக்கிறோம். இனி அந்த மாதிரியான தவறுகளை செய்யக் கூடாது. உவமையாகச் சொல்ல வேண்டிய இடங்களில் தமிழர் சார்ந்த உண்மை வரலாற்றை மட்டுமே முன்னுதாரணமாகச் சொல்ல வேண்டும். ஒரு போதும் நாம் சிறுவயதில் படித்த தமிழர்களைப் பற்றிய தவறான, கட்டுக் கதையான வரலாற்றை எந்த இடத்திலும் என்னையறிமல் கூட என் கவிதைகளில், பாடல்களில், பதிவுகளில் வெளிவந்து விடக்கூடாது, எழுதக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்".

நம்மிடமிருந்து வெளியே வரும் வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட மாத்திரை அளவில் அதாவது ஒரு குறிப்பிட்ட ஒலி அளவில், ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் அமைந்தால் போதும். அந்த வார்த்தைகளே தனக்குள் ஒரு மெட்டை தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டு நம்மை துள்ளலிசையோடு மெல்லிசையோடு பாட வைத்து விடும். அப்படித்தான் இந்தப் பாடலும். 

நான் கவிதை எழுதத் துவங்கிய 2004 ஆண்டு தொடங்கி என்னுடைய கவிதைகளை எழுதும் போதும் சரி, எழுதி முடித்தவுடன் மனதிற்குள் வாசிக்கும் போதும் சரி, என்னுடைய பெரும்பாலான கவிதைகள் பாடல்களாக ஏதோவொரு மெட்டுடன் ஒலித்ததை நான் கவனித்தே வந்திருக்கிறேன். அன்று முதல் கடந்த ஆண்டு வரை "நாம் எழுதும் கவிதைகளும் சரி. நமக்கு கிடைக்கும் மெட்டும் சரி, படிக்கும் வாசகர்களாலும் அதே மெட்டை பாடலாக பாடி உணர முடியும்" என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் 26 அன்று என் மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் எழுதிய பாடலை குரல் பதிவாக பகிரியில் (whatsapp) என் நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். 

மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் எழுதிய பாடல் - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/04/blog-post_25.html

நான் B.Sc (C.S) படிக்கும்போது என்னோடு எமனேஸ்வரத்திலிருந்து B.Com படித்த என் நண்பர் சபரீஷ் பாண்டியன் பதில் அனுப்பியிருந்தார் "நீ அனுப்பியதை நாங்களாவே வாசித்திருந்தால் சாதாரணமாகத் தான் இருந்திருக்கும். ஆனால், நீ குரல் பதிவில் அனுப்பியதை கேட்ட பிறகு தான் அந்த மெட்டோடு கேட்கும் பாடல் வரிகள் இனிமையாகவும் கேட்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. வாழ்த்துகள் ".

இவரின் பதிலை கேட்ட பிறகுதான் "நமக்குக் கிடைத்த மெட்டோடு பாடலை நாமோ அல்லது யாரோ ஒருவரோ பாடிக் காட்டினாலோ தான் வாசகர்களுக்குப் புரிகிறது. அவர்களாகவே வாசித்தால் பெரும்பான்மையோருக்கு அந்த மெட்டு புலப்படுவதில்லை. அவர்களுக்கு பாடிக் காட்டுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார்" என்ற பேருண்மையை புரிந்து கொண்டேன். 

இந்தக் காணொளி என்னுடைய இரண்டாவது காணொளி. என்னுடைய முதல் காணொளி என் இரண்டாவது மகள் நிறைமதிக்கு எழுதிய பாடல் - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/07/blog-post.html

ஒரு இசையமைப்பாளரின் அடிப்படைத் திறமையே புதிது புதிதான மெட்டுக்களை உருவாக்குவது தான். குறிப்பிட்ட உணர்விற்கேற்ப குறிப்பிட்ட மெட்டு தான் பாடலுக்கு அடிப்படை. அதன் பிறகுதான், பாடல் வரிகள், பக்க வாத்தியங்கள், துணை இசைக்கருவிகள் அனைத்தும். மெட்டு மக்களுக்குப் பிடித்திருந்தால், அந்தப் பாடல் வெற்றியடைகிறது. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது.

கடந்த செப்டம்பர் 19, 2021 ஞாயிறு அன்று அதிகாலை 3 மணிக்கு என்னை தூக்கத்திலிருந்து என்னுடைய மன மகிழ்ச்சி என்னை எழுப்பி ஒரு மெட்டையும் "வயலோடு உறவாடி" என்று இந்தக் பாடலையும் தட்டச்சு செய்ய வைத்தது. பாடல் முதலில் வெளிவந்ததா மெட்டு முதலில் வெளிவந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், மெட்டோடு சேர்ந்தே பாடலின் ஒவ்வொரு வரிகளும் வெளிவந்தன.

இந்தப் பாடல் உருவான விதத்தை இங்கு சொல்வது மிகவும் விறுவிறுப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும் என்பதால் இங்கு தொடர்ந்து சொல்கிறேன்.

கடந்த செப்டம்பர் 18, 2021 சனி மாலை 3.30 மணிக்கு மஞ்சள்பட்டினத்தில் இருக்கும் என் வீட்டிலிருந்து என் இரு சக்கர வாகனத்தில்  (bike) முனைவென்றிக்கு என் அம்மாச்சிக்கு (அம்மம்மா) சாப்பாடு கொடுத்து விட்டு நெல் விதைத்த வயலையும் பார்த்தது விட்டு வரலாம் என கிளம்பி ஊர் செல்லும் வழியில் ஊருக்கு வெளியே உள்ள எங்கள் வயலை பார்த்தேன். அப்போது தான் நெல் விதைத்திருந்தோம். பயிர்கள் முளை விட்ட நிலையில் மழையில்லாமல் கருகிப் போயிருந்தன. மிகவும் நான் அப்போது அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அதே வேதனையோடு அம்மாச்சியைப் பார்க்க வீடு வந்து சேர்ந்தேன். மாலை 4 மணிக்கு வீடு வந்தபிறகு வயலில் விழுந்து கிடந்த பனம்பழத்தை ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ருசித்துத் தின்று கொண்டிருந்தேன். அப்போது இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். 

எங்கள் கடை மற்றும் வீட்டிற்கு எதிரே உள்ள முருகன் கோயிலின் கோபுரத்தை புகைப்படக் கருவியால் பத்தி செய்து கொண்டிருந்தார். நான் "நீங்கள் யார்?" என்று கேட்டேன். இரண்டு நபர்களில் ஒருவர் என்னருகே வந்து "என் பெயர் இராஜேந்திரன். நான் ஒரு தமிழ் பேராசிரியர். கோவையில் ஒரு கல்லூரியில் பணிபுரிகிறேன். இங்கு முனைவென்றி கொளஞ்சித் திடலில் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழியை நான் கண்டறிந்தேன். இது குறித்து பதிவு செய்து செய்தியாக வெளியிட News TN என்ற ஊடகத்திலிருந்து வந்தவர் அவர்" என சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சொன்ன செய்திகள் எனக்கு அவ்வளவு எளிதில் புரியாமலும் மிகவும் நம்ப முடியாமல் ஆச்சர்யமாகவும் இருந்தது. அவர்கள் சென்ற பிறகு மாலை 5 மணியளவில் கடுமையான மழை. மாலை 5  மணிக்குத் துவங்கி 7.30 மணி வரை இரண்டரை மணி நேரமாக வெளுத்து வாங்கியது. 

எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை. சற்றுமுன் தான் கருகிய பயிர்களை பார்த்து விட்டு "மழை பெய்தால் தான் பயிர்கள் பிழைக்கும். மழை பெய்ய வேண்டும்." என வேண்டிக் கொண்டே மிகவும் மன வேதனையோடு வீடு வந்து சேர்ந்தேன். அந்த வேதனையில் இருந்த எனக்கு இரண்டரை மணி நேரமாக பெய்த மழையால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாலை ஆறு மணிக்கு இருள் சூழ்வதற்குள் மஞ்சள்பட்டணம் செல்ல வேண்டும் என நினைத்த எனக்கு இரு சக்கர வாகனத்தை எடுக்க முடியாத அளவிற்கு வாசலில் அன்று வெள்ளம் கரை புரண்டோடியது. அதனால் வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு பரமக்குடிக்கு செல்லும் பேருந்தில் இரவு 9 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். "கடுமையான மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. பயிர்கள் நன்றாக வந்து விடும்." என்ற மகிழ்ச்சியில் உறங்கினேன். 

அடுத்த நாள் ஞாயிறு அன்று அதிகாலை 3 மணிக்கு என்னை தூக்கத்திலிருந்து என்னுடைய மன மகிழ்ச்சி என்னை எழுப்பி ஒரு மெட்டையும் "வயலோடு உறவாடி" என்று இந்தக் பாடலையும் தட்டச்சு செய்ய வைத்தது. இந்தப் பாடலை எழுதும்போது எனக்குக் கிடைத்த மெட்டும் பாடல் வரிகளும் என்னை அளவு கடந்த மகிழ்ச்சியை அடைய வைத்தன. சில நாட்கள் கழித்து, முகநூலிலும் தினமணி, indian express போன்ற செய்தித்தாள்களிலும், youtube லும் என் சொந்த ஊர் முனைவென்றியைப் பற்றி 3500 ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊர் முன்னோர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழியைப் பற்றி செய்திகள் வெளிவந்ததை பார்த்த பிறகுதான் என்னால் நம்ப முடிந்தது. அன்று இராஜேந்திரன் சொன்ன செய்திகள் முழுமையாகப் புரிந்தன. 

முதுமக்கள் தாழி பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பே இந்தப் பாடல் வரிகளில் என் ஊரைப் பற்றியும் வார்த்தைகள் வெளிவந்திருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்தபோது ஏதோவொரு உள்ளுணர்வும் என் ஊரின் மேல் உள்ள அளவு கடந்த பற்றுமே என் ஊரைப் பற்றியும் இந்தப் பாடலில் எழுத வைத்திருக்கின்றன என்பதை அதன்பிறகு உணர்ந்து மகிழ்ந்தேன்.

அதன்பிறகு என் ஊர் முனைவென்றியின் முதுமக்கள் தாழி குறித்து நான் நேரில் சென்று எடுத்த புகைப்படத்துடன் கூடிய என்னுடைய பதிவு - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/10/3200.html

வைகை ஆற்றின்  நீர் ஆயூர் கண்மாய்க்குச் செல்லும் கால்வாயின் கரையில் தான் எங்கள் வயல் அமைந்துள்ளது. ஆனாலும் அந்த நீரை எங்கள் வயலுக்கு பாய்ச்ச மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். முனைவென்றி கண்மாயும் எங்கள் வயலிலிருந்து சுமார் மூன்று மைல் கல் தொலைவில் இருக்கிறது. அங்கிருந்து தண்ணீர் பாய்ச்சலாம் என நினைத்தால் அந்த நீர் எங்கள் வயலுக்கு வருவதற்கு பழைய வாய்க்காலும் பாராமரிக்கப் படவில்லை. அதைத்தாண்டியும் வரும் வழியில் உள்ள வயல் காரர்கள் மறைத்துக் கொள்வார்கள். எனவே எங்கள் ஊர் கண்மாய் தண்ணீரை பாய்ச்சுவது என்பது கடினமான ஒன்று. மழையை மட்டுமே நம்பி நாங்கள் நெல் விவசாயத்தை மேற்கொள்கிறோம். எனக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக வீட்டிலிருந்த படியே வேலை (work from home) என்பதால் சனி மற்றும் ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்களில் கடந்த 2020 ல் வயலில் நான் களையெடுத்தேன். நாற்று நட்டேன். உதவி செய்தேன். அதோடு கடந்த ஆண்டு எங்கள் ஊரிலும் சரி சென்னையிலும் சரி நல்ல மழை. ஆனால் இந்த 2021 ல் கடந்த செப்டம்பர் 18 அன்று இரண்டரை மணி நேரம் பெய்த மழையைப் போல் சென்னையில் பெய்தாலும் எங்கள் ஊரில் மழை பொய்த்ததால் எங்கள் வயல் நான்கில் மூன்று பங்கு பயிர்கள் கருகி வீணானது.

செப்டம்பர் 18 அன்று இரண்டரை மணி நேரம் பெய்த மழையால் நான் அடைந்த மகிழ்ச்சி தொடர்ந்து இன்று வரை நிலைக்கவில்லை. நான் எழுதிய இந்தப் பாடலை கடந்த செப்டெம்பருக்குப் பின் நான் சென்னையில் அதிக நாட்களும் பரமக்குடியில் எப்பொழுதாவதும் இருக்கும்படியான சூழலாலும் அதன்பிறகு "சென்னையில் வீடுகளில் நீர் புகும் அளவிற்கு பெய்த தேவையில்லாத மழை நம்மூரில் பெய்யாமல் போனதே. விவசாயத்திற்குத் தேவையான குறிப்பிட்ட கால அளவில் தேவைப்படும் மழைநீர் போன ஆண்டைப் போல் இந்த ஆண்டு பெய்யவில்லையே" என்ற வருத்தத்தாலும் இந்தப் பாடலை காணொளியாக பதிவு செய்யாமல், செய்ய மனம் வராமல் வைத்திருந்தேன். 

இன்று தமிழர் திருநாள். நம் வயல் தான் முறையான பராமரிப்பு இல்லாமல் வீணானது. மற்ற வயல்கள் நல்ல செழிப்புடன் இருக்கிறதே என்ற மன மகிழ்வோடு விவசாயத் தொழில்நுட்பத்தை கதிர்காமத்தில் முதலில் தொடங்கிய நம் முப்பாட்டன் முருகனை வணங்கி இந்தப் பாடலையும் காணொளியையும் பெருமகிழ்ச்சியோடு வெளியிடுகிறேன்.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.


பொன்வண்டின் பாட்டு பூங்காற்றும் கேட்டு
மண்வாசம் பார்த்து மனமெங்கும் பாட்டு

கன்னங்கள் வழிந்திடும் நீர்
எண்ணங்கள் உயர்ந்திடும் பார்
வண்ணங்கள் நிறைத்திடும் ஊர்
சின்னங்கள் காத்திடும் பேர்

ஏ இடியிடிக்குது மின்னலடிக்குது
மழையடிக்குது சாரலடிக்குது
கொடைபிடிக்கல கூந்தல் நனையுது
உள்ளம் மகிழுது பள்ளம் நிறையுது
உயிர் உருகுது பயிர் செழிக்குது
பச்சை தெரியுது உச்சி குளிருது

இளந்தென்னைக் காற்று இதமான பாட்டு
உளவானில் நேற்று உருவான பாட்டு

மண்ணுக்குள் புதைந்திடும் வேர்
கண்ணுக்குள் ஒளிந்திடும் நீர்
மண்மீது நிலைத்திடும் வார்
மழையாகப் பொழிந்திடும் கார்

ஏ உச்சி வெளுக்குது மச்சும் குளிருது
வெயிலடிக்குது குளிரடிக்குது
மரமசையுது இலையசையுது
மின்னலடிக்குது இடியிடிக்குது
மறுபடியுமிங்கு மழையடிக்குது
மனம் குளிருது சனம் மகிழுது

என்னோடு ஆடும் மழையிங்கு பாடும்
மண்ணோடு கூடும் மண்வாசம் பாடும்

கண்கூசும் அழகினைப் பார்
வெண்மேகம் தவழ்ந்திடும் ஊர்
என்தேகம் சிலிர்த்திடும் பார்
என்னுள்ளம் மகிழ்ந்திடும் பார்

ஏ தென்றலடிக்குது சிலுசிலுக்குது
நீர் உயருது நெல் உயருது
வரப்புயருது வளம் கொழிக்குது
நலம் பெருகுது உளமுருகுது
இறையருளிது மறைபொருளிது
மழை பொழியுது மனம் குளிருது
(பொன்வண்டின் பாட்டு)

Monday, November 29, 2021

வானொலிப் பைத்தியமாகிய நான்... - ஒப்புதல் வாக்குமூலம். வானொலி என் தொப்புள்கொடி சொந்தம்.

கடந்த 2021 தீபாவளி அன்று நான் வாங்கிய வானொலிப்பெட்டி.




நான் பிறந்த ஆண்டு 1984, ஆகஸ்டு 21. எனக்கு விவரம் தெரிய 1990 க்குப் பிறகு வானொலியின் மத்திய அலையில் (Medium waves) தூத்துக்குடி 100 Mega Waat, திருச்சி 100 Mega Waat மற்றும் இலங்கை ஆகிய நிலையங்கள் அதிக ஒலிபரப்புத் திறனுடன் கேட்கும். 

அப்போதெல்லாம் பண்பலை நிலையங்கள் (FM) எங்கள் ஊர் பக்கம் கிடையாது. எல்லாமே தூத்துக்குடி, திருச்சி மற்றும் இலங்கை நிலையங்கள் தான். 

இருந்தாலும் சென்னை முதல் அலைவரிசை (Chennai PC) 200 Mega Waat திறனுடன் என்னுடைய ஊர் முனைவென்றியில் எப்பொழுதாவது காற்று வீசும்போது காலை மற்றும் இரவு நேரங்களில் ஏறத்தாழ 700 மைல் கல் தொலைவில் உள்ள சென்னையிலிருந்து பதுங்கிப் பதுங்கிக் கேட்கும்.

இன்னும் சொல்லப்போனால், அதாவது நான் பிறப்பதற்கு முன், சென்னை வானொலி முதல் அலைவரிசையை மத்திய அலையில் ஒலிபரப்புத் துவங்கியபோது கதிர்வீச்சினால் பலர் பாதிப்படைந்தனராம். பறவைகள் மயங்கி விழுந்தனவாம். அதனாலேயே 200 Mega waat திறனாக குறைக்கப் பட்டதாம்.

இந்த 200 Mega Waat திறனால் தான் சென்னையிலிருந்து ஏறத்தாழ 700 மைல்கல் தொலைவில் உள்ள என் ஊர் முனைவென்றியில் என்னால் கேட்க முடிந்தது.

இவை தவிர சிற்றலையில் (Short Waves) விடுதலை புலிகள் தொடர்பான இலண்டன் பிபிசி செய்திகள், சீன வானொலி மற்றும் சிங்கப்பூர் வானொலி (இன்றைய ஒலி 96.8 FM) ஆகியவற்றை என் தாத்தாவின் கடையில் என் மாமா வைத்திருந்த பெரிய panasonic வானொலிப் பெட்டியில் கேட்டதுண்டு.

என் வீட்டில் என் அப்பா, அம்மா மற்றும் நெருங்கிய நண்பர்கள் உறவினர் என்னை வானொலிப் பைத்தியம் என்றே அழைத்தனர்.

மதுரை, திருநெல்வேலி ஆகிய வானொலி நிலையங்கள் மத்திய அலையில்(Medium Waves) குறைந்த ஒலிபரப்புத் திறனுடன் கேட்கும். வானொலிப்பெட்டியை அந்தந்த வானொலி நிலையங்கள் இருக்கும் திசைநோக்கித் திருப்பினால் இன்னும் தெளிவாக கேட்கும்.

2000 க்குப் பிறகு கோடைக்கானல், மதுரை, காரைக்கால், திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற பண்பலை ஒலிபரப்புகள் (FM) கிடைக்கத் துவங்கின.

இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் யாழ், இலங்கை வானொலி தென்றல், capital, வசந்தம், சூரியன், சக்தி, இலங்கை வானொலி தமிழ்ச்சேவை, தமிழ்ச்சேவை இலக்கம் ஒன்று (இணைய வானொலி), மற்றும் தர்மபுரி, கன்னியாகுமரி போன்ற வானொலி நிலையங்களையும் இணையம் வழி  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

2009 ல் நடந்த யுத்தத்தால் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. 

கடந்த ஓராண்டாக, தூத்துக்குடி வானொலியின் மத்திய அலை 100 கிலோ வாட் திறனுடன் இருந்த ஒலிபரப்பு கோரோனாவை காரணங்காட்டி நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக 100.1 பண்பலையாக (FM) உள்ளூர் வானொலியாக மாற்றப் பட்டிருக்கிறது.

அதன்பிறகு 2007 தொடங்கி சென்னையில் பண்பலை ஒலிபரப்புகளை குறிப்பாக சென்னை வானவில் (Chennai FM Rainbow), FM Gold, Vivid Bharti, சூர்யன், மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ மற்றும் பிக் ஆகிய பண்பலை நிலையங்களோடு சேர்த்து மத்திய அலையில் (MW) சென்னை அலைவரிசை இரண்டு ஒலிபரப்புகளை கேட்டபோதும் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு சென்னை முதல் அலைவரிசையில் ஒலிபரப்பாகும் "இலக்கியம் பேசுவோம்" நிகழ்ச்சியை தவறாமல் கேட்கும் நேயர்களில் நானும் ஒருவன்.

என் வாழ்க்கையை விட்டு பிரிக்க முடியாதபடி என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது வானொலிப் பெட்டியும் வானொலி நிலையங்களும்.
கடந்த சில ஆண்டுகளாக DRM என்று அழைக்கப் படுகிற டிஜிட்டல் ஒலிபரப்பை சென்னை அலைவரிசை 1, திருச்சி அலைவரிசை 1 ஆகியவை ஒலிபரப்புகின்றன.

இவை தவிர DTH (Direct To Home) என்ற  செயற்கைக்கோள் அலைவரிசைகள் மூலமும் Air Tamil என்ற பெயரில் சென்னையின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
ஒலிபரப்பின் வடிவங்கள் மாறினாலும் நிலையங்களின் பெயர் மாறினாலும் என் போன்ற நேயர்களின் வனொலியோடு தொடர்புடைய உணர்வுகள் ஒன்று தான்.
ஒருவேளை நான் சென்னையில் இல்லாமல் பரமக்குடியில் இருந்தால் கூட தற்பொழுதெல்லாம் இணையம் வழி தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் வளர்த்த ஆடு மாடுகள் போல வானொலியும் வானொலி நிலையங்களும் என் போன்றவர்களுக்கு தொப்புள் கொடி உறவு போன்றது.

வானொலி கேட்டு வளர்ந்த கடைசித் தலைமுறை நாம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், வானொலி காற்றலை தொடங்கி இணையம், DTH, DRM என தன்னை உருமாற்றிக் கொண்டு நமக்கு சிரமமின்றி நம்மை வந்தடைகிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் நாம் வானொலியைத் தான் கேட்கிறோம் என்ற உணர்வின்றி கூட  smartphone ல் FM app வழியாக, இணையம் வழி, News on Air செயலி (App) வழியாக, இன்று உற்பத்தியாகிற வண்டிகளில் DRM களில் நவீன தொழில்நுட்பத்தில், DTH வழியாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, வானொலியை கேட்கும் கடைசித் தலைமுறை நாம் இல்லை.

வானொலி பல்வேறு பரிமாணங்களில் தன்னைத்தானே உருமாற்றிக் கொண்டு, மலையிருந்து உதித்து கடல் நோக்கிப் பாயும் ஆறு போல என்றும் சிரஞ்சீவியாய் நம்முடைய காலத்திற்குப் பிறகும் நிலைத்திருக்கும்.

Saturday, November 20, 2021

புயல்மழையும் பெருவெள்ளமும்...

 




பூமிக் குழந்தைக்கு
வானம் என்ற தாயின்
தனங்களான 
மேகங்கள் சுரக்கும் 
தாய்ப்பாலே மழை

பூமி தன் சத்துக்களை 
கொழுப்பாக புரதமாக
பாதுகாத்து வைக்க
தேர்வு செய்யப்பட்ட
இடங்கள் தான்
எலும்பு மஜ்ஜைகளான
ஏரி குளங்கள் கண்மாய்கள்

குழந்தையை ஏமாற்றி
உணவை திருடித் தின்னும்
திருடர்கள் போல்
பூமியின் ஏரி குளங்களை
குடியிருப்புகளாய் மாற்றினோம்

இன்று
ஊட்டச்சத்து குறைந்த
குழந்தை போல 
வறண்டு கிடந்த
பூமியில்
தாயப்பாலெனப் பெய்த
பெருமழையை
சேமித்துவைக்க
இடமின்றி
இயற்கை வளங்களை
சூறையாடிக் கொண்டிருக்கும்
நம்மை தண்டிக்க
பெய்துவிட்டுப் போனது
புயல்மழையும் பெருவெள்ளமும்
வீடுகளில் குடியிருப்புகளில்
புகுந்து...

Wednesday, October 27, 2021

உன் சுவாசக் காற்றாய்...

 உன் 
அன்பு மழையில்
நனைந்து நனைந்து
கரைந்துருகிக் கொண்டிருக்கிறேன்
மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க...

உருகி உருகி - நீயெனைப் 
பருகிப் பருகி
உன் இதழ்வழி
தொண்டைக்குழி நனைக்கிறேன்
நான்.

உன் இதழோரேம்
உடல்சூட்டால் 
நான் சில துளிகளாய்
ஆவியாகி 
காற்றோடு கலந்து
உன் மூச்சின்வழி
உன் இதயம்தொட்டு
உன் நுரையீரல் தொட்டுத்
திரும்பிக் கொண்டிருக்கிறேன்
என்றென்றும் 
உன் சுவாசக் காற்றாய்...

Friday, October 22, 2021

(பாகம் - இரண்டு) கர்ணன் (2021) திரைப்படமும் மகாபாரதமும் கொரோனா தடுப்பூசியும் உலக அரசியலும்

இந்தப் பதிவின் முதல் பாகத்தை வாசிக்காதவர்கள் வாசித்துவிட்டு இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து படியுங்கள்.

கர்ணன் (2021) திரைப்படமும் மகாபாரதமும் கொரோனா தடுப்பூசியும் உலக அரசியலும் - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/05/2021.html

கடந்த ஐந்து மாதங்களாக எழுத வேண்டும் எழுத வேண்டுமென முயற்சித்து முதலாம் பாகத்தில் விடுபட்ட விவரங்களை முதலில் சொல்லி முடித்துவிட்டு பிறகு மற்ற விவரங்களை சொல்கிறேன்.

குறவர்கள் அதாவது யூத பிராமணர்களின் கட்டுக்கதையான மகாபாரதத்தில் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகிற குறவர்கள் அன்றைய தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ( அதாவது இன்றைய கேரளம் ) வாழ்ந்தனர்.

மகாபாரதப்போர் நடைபெறக் காரணமாக இருந்தவன் யூதனான சகுனி என்பவன் தான். அன்றே மக்கட்தொகையை கட்டுப்படுத்த குறிப்பாக, தமிழர்களை அழித்தொழிக்க தமிழர்களுக்குள் இருந்த சிறிய பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி  மகாபாரதப் போரை நடத்த, தூண்டி விட்டவன் யூதனான சகுனி தான்.

தமிழர்களுக்கிடையே இருந்த அந்த சிறிய பிரச்சனை என்ன? இந்தப் பதிவின் முதலாம் பாகத்தில் நான் இதனை விவரித்திருந்தாலும் இப்போது இன்னும் விளக்கமாகச் சொல்லப் போகிறேன்.

அன்றைய தமிழகத்தில் அதாவது தமிழ்நாடும் கேரளமும் இணைந்த பகுதியில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்குக் கிழக்கே திருநெல்வேலியை உள்ளடக்கிய பகுதிகளில் வாழ்ந்த சித்தர் இராவணனின் வம்சாவளிகளான மள்ளர்கள் அதாவது பாண்டியர்கள் (யூத பிராமணனின் கட்டுக்கதையான மகாபாரதத்தில் சொல்லப்பட்ட பாண்டவர்கள்) முருகன் மற்றும் குபேரனின் அடியொற்றி விவாசாயத் தொழில்நுட்பத்தைச் செய்ய காட்டைக் கொளுத்தி நிலத்தைத் திருத்தி விவசாயம் செய்ய முடிவு செய்தனர். 

விவாசாயத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் ஈழத்தின் கதிர்காமத்தில் கண்டுபிடித்துத் தொடக்கி வைத்தவர் நம்முடைய முப்பாட்டன் முருகனே. அதேபோல் விவசாயத்தால்,ஈழ நாட்டையே யாழ்ப்பாணத்திலிருந்து செழிக்க வைத்து, நாமெல்லாம் பணக்காரக் கடவுளென அழைக்கப்படும் சித்தர் மற்றும் அரசரான குபேரன். அவர் ஆட்சி செய்த யாழ்ப்பாணம் ஈழத்தின் வடக்கே அமைந்திருப்பதால் தான், வடக்கு திசையை குபேர திசையென்றும் குபேர மூலையென்றும் வாழ்க்கை சாத்திரம் என்ற வாஸ்து சாஸ்த்திரத்தில் நாம் அழைக்கிறோம்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்கு மேற்கே அதாவது இன்றைய கேரளத்தில் வாழ்ந்தவர்கள் தான் குறவர்கள் அதாவது யூத பிராமணனின் கட்டுக்கதையான மகாபாரதத்தில் சொல்லப்பட்ட கௌரவர்கள். குறவர்கள் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்தனர். அவர்கள் மலையேறினர். மலை ஏறர் என்ற சொல்லில் உள்ள ஏறர் என்ற சொல்லே சேரர் என்றாகி சேரலம் என்றாகி கேரளம் என்றானது.

பாண்டியர்கள் வாழ்ந்த திருநெல்வேலி பகுதிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே உள்ள கிருஷ்ணன்கோவில், திருவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இடையர் என்று அழைக்கப் பட்டனர். அதாவது, திருநெல்வேலி பகுதிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே வாழ்ந்த மக்கள் இடையர் என்று அழைக்கப்பட்டனர். 

தலித் என்ற வார்த்தை தமிழில் இல்லை. தமிழ்நாட்டில் சாதிக்கலவரத்தைத் தூண்டியவர்கள் யூத பிராமணர்களும் தெலுங்கர்களும் தான். சாதிக்கலவரங்களை தூண்டிவிட்டு சாதிகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் தமிழர்களின் வரலாற்றையும் தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளையும் தமிழர்களின் குல தெய்வ வழிபாட்டையும் அழித்தவர்கள் தெலுங்கர்களும் யூத பிராமணர்களும் தான்.

நாம் வணங்கும் ஆதிசிவனே பறையர் குலம் தான். விஜயநகரப் பேரரசு என்று தமிழ்நாட்டிற்குள் நுழைந்ததோ அன்று தொடங்கியது இந்த சாதிக் கலவரங்கள். தூண்டி விட்டவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தேறிகளான யூத பிராமணர்களும் திராவிடம் என்ற பெயரில் தெலுங்கர்களும் தான். சாதிக் கலவரங்களை தூண்டிய யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் தமிழ்நாட்டிற்குள் வாழ்ந்துகொண்டு சாதிக்கலவரத்தைத் தூண்டிவிடும் பிறமொழியாளர்களும் தான் தமிழ்நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டியவர்களே தவிர, ஒற்றுமையாக வாழ்ந்த தமிழர்களிடமிருந்து குலம் குடிப் பட்டங்களை அல்ல, சாதிகளை அல்ல. குலம் குடிப் பட்டங்களை, சாதிகளை ஒழித்தால் தமிழன் வரலாறு இல்லாத அநாதையாகி தமிழினம் அழிந்து போகும்.

பறையர்களுக்கு எதிரி முக்குலத்தோர், பள்ளர்களுக்கு எதிரி வன்னியர் என்று யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் பிறமொழியாளர்களும் கடந்த காலங்களில் தூண்டிவிட்ட சாதிக்கலவரங்களுக்கு காரணம் யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் பிறமொழியாளர்களும் தான் என்று சொல்வதை விட்டு விட்டு, சாதிக் கலவரங்களை காட்டிக் காட்டி, பறையர்களுக்கு எதிரி முக்குலத்தோர், பள்ளர்களுக்கு எதிரி வன்னியர், தமிழனுக்கு எதிரி தமிழனே என்று சொல்லிச் சொல்லி விஜயநகரப் பேரரசு, பரசுராமனின் கலவரப் படையெடுப்பு (களப்பிரர் படையெடுப்பு) போன்ற தெலுங்கர்களால் தமிழர்களுக்குள் செயற்கையாகத் தூண்டப்பட்ட சாதிப்பகையை ஊதிப் பெரிதாக்கும் வேலையைத்தான் கர்ணன் திரைப்படம் மூலம் மாரிசெல்வராஜூம், பா. ரஞ்சித் போன்ற தெலுங்கனும் தொடர்ந்து படமெடுத்து வருகின்றனர்.

உண்மையில் பறையர்களுக்கு எதிரி முக்குலத்தோர் அல்ல, பள்ளர்களுக்கு எதிரி வன்னியர் அல்ல.

பறையர், முக்குலத்தோர், பள்ளர், கோனார், வன்னியர் என ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் எதிரி யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் பிறமொழியாளர்களும் தான் என இதைப் பற்றி திரைப்படங்களில் பேசுங்கள். இந்த உண்மைகளை எந்தவொரு இயக்குநரும் திரைப்படங்களாக எடுக்கப் போவதில்லை. ஏனெனில், தமிழ் திரைப்படங்களை, தமிழக அரசியலை என ஒட்டுமொத்த தமிழகத்தையுமே மறைமுகமாக ஆட்சி செய்பவர்கள் யூதர்களும் திராவிடம் என்ற பெயரில் பிறமொழியாளர்களும் குறிப்பாக தெலுங்கர்களும் தான்.

உண்மையில்  பறையர்கள், பள்ளர்கள் என் சகோதரர்கள். இந்த உண்மை கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்புதான் எனக்கு தெரியத் துவங்கியது. அதுவும் உலக அரசியல் (world politics) குறித்தும் புவிசார் அரசியல் (geo politics) குறித்தும் தெரிந்துகொள்ளத் துவங்கிய பின்புதான். மாரி செல்வராஜ் என்பவர் ஒரு தெலுங்கராக இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.



நன்றி:-

தமிழ் சிந்தனையாளர் பேரவை.

Monday, October 4, 2021

நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு. செய்தி.

செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி - https://youtu.be/vX75x_3C_to

நான் எடுத்த புகைப்படங்கள் - https://photos.app.goo.gl/xz5aLpKWJJcH9J3T7

நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு.

செய்தி.

நேற்று முன்தினம் நானும் என் மாமா மங்களசாமியும் என் ஊர் முனைவென்றியிலுள்ள முதுமக்கள் தாழி கண்டெடுக்கப் பட்ட இடத்தைத் தேடிப் போனோம். அந்த இடம் கடைசியில் எங்கள் வண்ணான் கண்மாய் வயலுக்கு மிக அருகாமையில் 300 முதல் 400 அடி தூரத்தில் வண்ணான் கண்மாயின் நீட்சியாக ஆவடியாத்தான் கண்மாயில் பார்த்தோம்.

எங்கள் வயலுக்கு வண்ணான் கணமாயில் என்னுடைய சிறுவயதில் நானும் என் அப்பாவும் ஏற்றம் வைத்து நீர் இறைத்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி நெல், பருத்தி, மிளகாய் போன்றவை பயிரிட்ட பழைய நினைவுகள் தோன்றுகின்றன இப்போதும்.

எங்கள் வயலைத் தாண்டிச் செல்லும்போது என் மாமா சொன்னார் "இதற்குப் பெயர்தான் கொழஞ்சித் திடல். கொழஞ்சி என்பது ஒரு செடி. வயலுக்கு இயற்கை உரம். நம்மூர் விவசாயிகள் என்னுடைய சிறுவயதில் இந்தக் கொழஞ்சிச் செடிகளைத் தான் உரமாகப் பயன்படுத்த இங்கிருந்து அறுத்துக் கொண்டு போவோம். அப்போதெல்லாம் இயற்கை உரமாக இந்தச் செடி தான்."

முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் விற்காமல் கிடந்த வெடி மருந்துகளை உரமென்றும் பூச்சிக்கொல்லி என்றும் இந்திய அரசாங்கத்தின் துணையோடு பசுமைப் புரட்சி என்ற பெயரில் விற்பனை செய்து நாம் விளைவிக்கும் உணவுப் பொருட்களை உரம், பூச்சிக்கொல்லி என விசமாகவே விளைவிக்கிறோம்.

கொழஞ்சித்திடல் அருகே வண்ணான் கண்மாயின் தொடர்ச்சியான ஆவடியாத்தான் கணமாயில் நான் எடுத்த புகைப்படங்கள்.

Friday, July 30, 2021

செல்லக்குட்டி நிறைமதி

என் இரண்டாவது மகள் நிறைமதியின் பிறந்தநாளிற்கான பாடல் - https://www.youtube.com/watch?v=dntXiT9ohs8


ஆட்டம்போடும் சேட்டக்குட்டி பாட்டுப்பாடும் ஆட்டுக்குட்டி
வாடியம்மா வாடி - எங்க
வாசமுள்ள தாயி
கூட்டம்கூடும் பாட்டுப்படி கூடச்சேர்ந்து ஆட்டம்பிடி
தேடியுகம் தேடி - பெத்த
தெய்வ முத்துமாரி

செல்லமடி வெல்லமடி செல்லக்குட்டி நிறைமதி
ஆடியோடி வாடி - எங்க
ஆயி மகமாயி
கள்ளமில்லா உள்ளமடி கன்னுக்குட்டி நிறைமதி
கூடி விளையாடி - எங்க
குறும்பான தேனீ

கன்னமதில் வண்ணமடி எண்ணமதில் நிறைமதி
பாடலாகப் பாடி - எங்கும்
பரவசமாய் ஆடி
கண்ணெதிரே என்னுலகம் உன்னுருவம் நிறைமதி
காற்றாக மாறி - எங்கும்
ஊற்றாக ஊறி

வஞ்சிமொழி கொஞ்சுங்கிளி நெஞ்சமதில் நிறைமதி
வானவில்லைத் தேடி - எங்கும்
காணவில்லை வாடி
கொஞ்சுமொழி விஞ்சுமெழில் தஞ்சமடி நிறைமதி
கோலமயில் வாடி - எங்க
குலசாமித் தாயி

கால்முளைத்த தென்றலொன்று கண்ணெதிரே நிற்குதிங்கு
கூவுங்குயில் வாடி - இங்கு
கட்டிமுத்தம் தாடி
எல்லையில்லா அன்பினிலே எங்கும்நிறைக் கடவுளரே 
இறைவனையே பாடி - அன்பில்
இறையருளைத் தேடி

Tuesday, June 15, 2021

கோரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்ட என் அப்பாவும் அம்மாவும் சீக்கிரமே செத்தால் நல்லது.

 கடந்த  இரண்டு மாதங்களாக என் வீட்டிலிருந்து அலைபேசி அழைப்பு வரும்போதெல்லாம் படித்துப் படித்துச் சொன்னேன் "தடுப்பூசி இப்போது போடவேண்டாம். தடுப்பூசி என்பது எலிகளுக்கும் பிற விலங்குகளுக்கும் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சோதனை செய்து பார்த்த பிறகுதான் மனிதர்களுக்கு செலுத்துவார்கள். ஆனால், கொரோனா தடுப்பூசி மட்டும் ஆறு மாதங்களுக்குள் அவசர அவரசமாக உயிர் பயம் காட்டி போட்டுக்கொள்ளச் சொல்லி விளம்பரப் படுத்தப் படுகிறது, மறைமுகமாக நிர்பந்திக்கப் படுகிறது. எனவே, இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் வரை உங்களை சுற்றி நடப்பவற்றை உற்றுநோக்குங்கள் (Observe). பிறகு, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதைப் பற்றி சிந்திக்கலாம். தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் இறந்து போனது நினைவிருக்கிறதல்லவா?" என்று. ஆனாலும் இன்று மதியம் அலைபேசியில் பேசியபோது என் வீட்டில் வசிக்கும் 60 வயது மதிக்கத்தக்க கிழவனான என் அப்பாவும் கிழவியான என் அம்மாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டு வீடு நோக்கி போய்க்கொண்டிருப்பதாக சொன்னார்கள். அப்படியே இணைப்பை துண்டித்து  விட்டேன்.


பெற்ற மகன் சொன்ன அன்பான வார்த்தைகளை காது கொடுத்துக் கூட கேட்காத இவர்கள் இருவரும் இருந்தாலென்ன செத்தால் எனக்கென்ன? படிக்காத மடையர்கள் என்றாலும் பரவாயில்லை. என் அம்மா எட்டாம் வகுப்பு வரை படித்தவள். என் அப்பா அரசாங்கத்தில் உயர்பதவில் வகித்துவிட்டு ஓயவூதியம் பெற்றுக் கொண்டிருப்பவர். 


என் மனதில் எவ்வளவு வேதனையும் வலியுமிருந்தால் இவர்கள் இருவரும் செத்தால் நல்லது என்று சொல்கிறேன்.


"நான் தான் படித்துப் படித்துச் சொன்னேனே? பிறகெதற்கு தடுப்பூசி போட்டுக் கொண்டீர்கள்?" என்று கேட்டேன். "மற்றவர்கள் போட்டுக் கொண்டார்கள். அதனால் நாங்களும் போட்டுக் கொண்டோம்." என்றார்கள். "மற்றவர்கள் மலத்தை அள்ளித் தின்றால் நீங்களும் மலத்தை அள்ளித் தின்பீர்களா?" என்று கேட்டு விட்டு இணைப்பை துண்டித்து விட்டேன்.


இவர்கள் இருவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வைத்ததன் மூலம் இவர்கள் செத்து அதன்மூலம் இந்த கோரோனோ தடுப்பூசி நாடகத்தை வெளி உலகிற்கு அம்பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையுமென்பதால் ஒரு வகையில் பார்த்தால் என் அப்பன் வேல்முருகன் என் குடும்பத்தில் இவர்கள் இருவரையும் பலி கொடுக்க முடிவெடுத்து விட்டான் போலும்.


 இது இப்படி இருக்க, அடுத்து மூன்றாவது அலை வருமாம். அது குழந்தைகளைத் தான் தாக்குமாம். கோரோனோவை பரப்பி விட்ட உலகை ஆளும் வர்க்கங்களுக்குத் தெரியாதா? கோரோனோ அடுத்து யாரைத் தாக்குமென்று?


சும்மா சொன்னால், கோரோனோ தடுப்பூசியை யாரும் போட்டுக் கொள்ள மாட்டார்கள்? உயிர்பயம் காட்டினால் தான் போட்டுக் கொள்வார்கள் என்ற தாரக மந்திரத்தை நன்றாக உணர்ந்தே செயல்படுகிறது உலக ஆதிக்க வர்க்கம். தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தியாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக உலக வல்லாதிக்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டு திட்டமிட்டு பரப்பப்பட்ட நோய் தான் இந்த கோரோனோ.


ஐந்தாண்டுகளுக்கொருமுறை நாம் தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்கிக் கொண்டு நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறோம். தேர்தலில் வாக்களிக்க நமக்கு தரப்படும் பணம் நம்முடைய வரிப்பணம் தான். அதை வாங்கிக்கொண்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.


நல்ல தலைவர்கள் தான் தங்களுடைய மக்களைப் பற்றியும் அவர்களின் அடுத்த தலைமுறையைப் பற்றியும் சிந்திப்பார்கள். ஆனால் நாம் நல்ல தரகர்களை அதாவது அரசியல்வாதிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறோம். 


அரசியல்வாதி என்பவன் வேறு. தலைவன் என்பவன் வேறு.


தலைவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது தன்னை நம்பிய மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகள் மக்களை பலி கொடுத்தாவது தங்களுடைய தரகுக்கூலியை (commission) பெறத் துடிப்பவர்கள்.


நான் அரசாங்கத்தை மதிக்கிறேன். ஆனால், அரசியல்வாதிகளை அல்ல.


அரசாங்கம் சொல்வன செய்வன வற்றையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம். அரசாங்கத்தை கேள்வி கேளுங்கள். அரசாங்கத்தை சந்தேகப்படுங்கள். ஏனெனில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நம்மால் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தலைவர்கள் அல்ல, தரகர்கள் தான்.


நான் பிறந்தபோது என் அம்மா எனக்கு வைத்த பெயர் வேல்முருகன். என் முப்பாட்டன் வேல்முருகனைப் பற்றி தெரிந்துகொண்ட பிறகு, ஒன்றாம் வகுப்பு சேரும்போது என் அப்பா வைத்த சுரேஷ்குமார் என்ற பெயரை வேல்முருகன் என்று என்னுடைய உண்மையான பெயராக எனக்கு  வைத்துக்கொண்டேன்.


குறிப்பாக குழந்தைகளும் திருமணமாகாதவர்களும் தடுப்பூசி போட வேண்டாம். உங்களுக்கு குழந்தை பிறப்பதில் இந்த தடுப்பூசி சிக்கல்கள் உண்டாக்குவதன் மூலம் உங்கள் வம்சமே இனி இல்லாமல் போய்விடக் கூட வாய்ப்புண்டு. ஏனெனில் உலக இரகசியக் குழுக்களின் நோக்கம் உலக மக்கட்தொகையை குறைப்பது தான் (World depopulation agenda 2030).