Saturday, January 14, 2023

தமிழர் திருநாள் ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/vFnk9EZvZbY


அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

நான் எழுதிய இப்பாடலில் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு எதற்காக தோன்றியது என்ற உண்மை வரலாற்றை இப்பாடலின் இறுதியில் சொல்லியிருக்கிறேன். 

பாடலை கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள். பொங்கலை, ஜல்லிக்கட்டை கொண்டாடி மகிழுங்கள். 

என்னுடைய இந்த விழியத்தின் இணைப்பை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பகிர்ந்து கொண்டு உங்கள் மகிழ்ச்சியை உலகம் முழுதும் பரப்புங்கள். 

இந்தப் பாடலை பாடிப் பதிவு செய்யும்போது மனதில் நிறைய மகிழ்ச்சி பொங்கியது. மகிழ்வான தருணமிது.

மீண்டும் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.






தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

தை மாதம் வந்தாச்சு பொங்கலும் பொங்குது
விவசாயம் செழிக்கவே தமிழர்கள் மகிழவே

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

செங்கரும்பு இனிக்கவே சந்தோசம் நிலைக்கவே
கால்நடைகள் ஆடிடவே கதிரவனும் குளிர்ந்திடவே 

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

பூர்வீகமாய் மண்பானையில் மணமணக்கும் மஞ்சள் கட்டி 
தித்திக்கும் மண்ட வெல்லம் தட்டித்தட்டி சேர்த்து வச்சு 

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

பகைவர்கள் ஒளிந்திடவே பகலவனும் ஒளிர்ந்திடவே
பச்சரிசி பொங்கிடவே பொங்கலுந்தான் தித்திக்கவே

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

காளைமாட்ட உழுது பழக்க காடுவயலில் ஏரும் பூட்ட
காளையைத் தான் தோழனாக்க கண்டுபிடித்த ஏறுதழுவல் 
பட்டிக்காட்டில் ஜல்லிக்கட்டு எங்க ஊரில் மஞ்சுவிரட்டு
தொட்டுப்புட்டா சீருமடா தழுவிப்புட்டா வீரனடா

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

வெட்டி வச்ச செங்கரும்பும் அவிச்சு வச்ச பனைக்கிழங்கும்
பச்சரிசி சர்க்கரைப் பொங்கும் பரம்பரையாய் நிம்மதி தங்கும்
சர்க்கரையில்லா வெண்பொங்கல் ஆநிரைக்கோர் மாட்டுப்பொங்கல் 
அக்கறையாகக் காணும்பொங்கல் அகிலமெங்கும் அதிரு மெங்கள் 

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

Sunday, December 25, 2022

கீழடிக்கு இணையாக நான் பிறந்த ஊர் முனைவென்றி. நிலவுடமை ஆதிக்கத்திற்கெதிராகச் சிவந்து சினந்து எழுந்த ஊர். புரட்சிக்கு வகுப்பெடுக்கும் ஊர் - அழகு ராட்சசி கவிதை நூலுக்கு விமர்சனம் எழுதிய இளையான்குடி முதிய கவிஞர்


 
















என் சிறு வயதில் என் தாத்தாவிடம் (அம்மாவின் அப்பா) என் ஊர் முனைவென்றி யின் பெயர்க்காரணம் குறித்து கேட்டேன். அவர் இரு விதமான பதில்களை பெயர்க்காரணங்களாக கூறினார்.

1. முனைவண்டி - என் ஊர் வழியே பழங்காலத்தில் மாட்டு வண்டிகள் வரிசையாக செல்லும்போது என் ஊர் வரும்போது ஒரு வண்டியின் அச்சாணி உடைந்ததாம். அதனால் முனை உடைந்த வண்டி முனைவண்டி என்று பெயர் சூட்டப்பட்டு முனைவென்றி யானது.

2. பழங்காலத்தில் ஒரு போர் நடந்து வெற்றி பெற்ற முனை இந்த ஊர். ஆதலால் இந்த ஊருக்கு வெற்றி முனை என்றாகி முனைவெற்றி -> முனைவென்றி என்றானது.

கடந்த டிசம்பர் 8ம் தேதி, இளையான்குடியிலிருந்து கவிஞர். ஹிதாயத்துல்லா என்ற முதியவரிடமிருந்து என் முதல் கவிதை நூலான "அழகு இராட்சசி" க்கு விமர்சன கடிதம் வந்தது.

அந்த விமர்சனத்தில் என் ஊர் முனைவென்றியை பற்றி சில வரிகள் இப்படி குறிப்பிட்டிருந்தார்.

தன பெயரிலேயே வெற்றியைப் பெற்றிருக்கின்ற முனைவென்றி கிராமம் ஒரு கீர்த்தியுள்ள கிராமம். நிலவுடமை ஆதிக்கத்திற்கெதிராகச் சிவந்து சினந்து எழுந்த ஊர். புரட்சிக்கு வகுப்பெடுக்கும் ஊர்.

ஆக, என் ஊர் முனைவென்றியில் ஏதோவொரு போர் நடந்திருக்கிறது. அந்தப் போரில் வெற்றி பெற்றதால் வெற்றி முனை -> முனைவெற்றி -> முனைவென்றி என்றாகியிருக்கிறது. ஆக, என் தாத்தா சொன்ன இரண்டாவது காரணப்பெயர் தான் சரி. அவர் ஏதோவொரு போர் நடந்ததாகச் சொன்னார். ஆனால் என்ன போர் நடந்தது எதனால் நடந்தது என்பது சொல்லவில்லை. 

இப்போது இந்த இளையான்குடி கவிஞர் சொன்னபிறகு அந்தப் போர் நிலவுடைமைச் சமூகத்திற்கு எதிராக நடந்த போர் என்பது உறுதியாகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய பதிவு.

நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு.  செய்தி. - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/10/3200.html

சில மாதங்களில் என் ஊரில் முதுமக்கள் தாழியை கண்டறிந்த ஐயா ராசேந்திரன் என்ற தொல்லியல் துறை சார்ந்த பேராசிரியருடன் தொடர்பு கொண்டேன். அவர் அனுப்பி வைத்த தரவுகளை சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்ச்சாலை தொல்லியல் துறையில் நேரில் சென்று சமர்ப்பித்தேன். சில மாதங்களில் எழும்பூரிலிருந்து அவருக்கு அழைப்பு வந்து அதில் "அகர வரிசைப்படி நீங்கள் கொடுத்த முனைவென்றி மற்றும் இன்னொரு ஊரிலும் தொல்லியல் துறை சார்பில் அரசாங்கத்திலிருந்து ஆராய்ச்சி துவங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருந்தாக அவர் என்னிடம் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், முனைவென்றியை குறித்து ஒரு ஆய்வுநூல் எழுதி முடிக்கும் தருவாயில் இருப்பதாகவும் இன்னும் சில வாரங்களில் அரபு நாடான ஷார்ஜாவில் முனைவென்றி குறித்து பேசப்போகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நாளை (26-12-2022) இளையான்குடிக்கு பயணமாகிறேன் அந்தக் கவிஞர் ஹிதாயத்துல்லா என்ற முதியவரை சந்த்திக்க... என் ஊரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள...

இன்னுமொரு செய்தி.

என் அப்பாவிடம் சில தினங்களுக்கு முன் என் அப்பத்தா வீரம்மாள் என்றாய் சிட்டுவைப் பற்றி (என் அப்பாவின் அம்மா) கேட்டேன்.

"என் அப்பத்தாவின் சொந்த ஊர் முனைவென்றி. என் அப்பத்தாவின் அம்மா அப்பா தங்களின் சிறு வயதிலேயே முனைவென்றியிலிருந்து பர்மா சென்று அங்கு தான் என் அப்பத்தா பிறந்ததாகவும் என் அப்பத்தாவின் அப்பா அம்மா பர்மாவிலேயே நிலங்கள் வாங்கி அந்த நிலங்களில் விவசாய வேலை செய்ய அந்த நாட்டு மக்களை பணியாட்களாக அமர்த்திருந்தனர். அந்த காலத்திலேயே பர்மா போன்ற வேறு ஒரு நாட்டில் சொந்த வீடு மற்றும் நிலங்களோடு விவாசாயப் பணியாளர்களை நியமித்து பெரும் செல்வந்தர்களாக நம் முன்னோர்கள் பர்மாவில் வாழ்ந்து வந்தது சாதாரண விஷயமல்ல. ஆனால், பர்மாவில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பத்தா போன்ற தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களையும் பிறநாட்டு மக்களையும் பார்மா நாடு விரட்டி விட்டதாகவும் அங்கிருந்து என் அப்பத்தா கட்டிய துணியோடு மீண்டும் முனைவென்றிக்குத் திரும்பியதாவும் இங்கு தன் மாமா முறையான கமுதிக்கு அருகிலுள்ள நீராவிக் கரிசல்குளம் என்ற ஊரில் வசித்த என் ஐயா தர்மலிங்கம் சேர்வை (என் அப்பாவின் அப்பா) யை திருமணம் செய்து கொண்டாள்." என அப்பா தெரிவித்தார்.

இன்னும் சில தினங்கள் என் ஊரான முனைவென்றியில் தான் இருப்பேன். என் அப்பத்தாவைப் பற்றியும் என் ஊரைப் பற்றியும் இன்னும் நிறைய செய்திகளை சேகரித்து அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.

நன்றி.

Friday, November 25, 2022

தெலுங்கு ஆரிய திராவிட கருணாநிதி மறைத்த உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து

தெலுங்கு ஆரிய திராவிட கருணாநிதி மறைத்த உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து - https://youtu.be/4QNlQAGzOm0

கருணாநிதியால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரிகள் திருத்தப்பட்டு (உதாரணத்திற்கு தமிழர்நல் திருநாடு என்பதற்கு பதில் திராவிட நல் திருநாடு ), வரிகள் நீக்கப்பட்டு ( ஆரியம் போல் உலக வழக்கொழிந்து ) மீதமுள்ள வரிகள் தான் நம் பாடப் புத்தகத்தில் உள்ளன. இந்த பாடப் புத்தகங்களை உருவாக்குவபர்கள் திராவிட சித்தாந்தத்தை நல்லது என்று நம்பி ஏற்றுக் கொண்டவர்களே. என் ஆறாம் வகுப்பு ஆசிரியர் எனக்கு சிறுவயதில் தலைவர் பிராபாகரனை பற்றி நீதி போதனை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார். தினமும் இரவு 9.15 முதல் 9.30 வரை வானொலி சிற்றலையில் (Short wave) BBC லண்டனிலிருந்து விடுதலை புலிகள் தொடர்பான செய்திகள் ஒலி பரப்பாவதாக சொன்னார். ( சில வருடங்களுக்கு முன்பு அந்த ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு விட்டது ). அவர் சொன்னதிலிருந்து வானொலி என் நண்பனாகிப் போனது. 

அன்று என் ஆசிரியர் விதைத்த விதை இன்று ஆலமரமாக என்னுள் வளர்ந்து நிற்கிறது.

எனவே, இதை படிக்கும் ஆசிரியர்கள் உங்கள் மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்தும் உண்மையல்ல என்ற உண்மையை சொல்லிக் கொடுங்கள்.

மேலும், சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 என்ற பெயரில் தமிழர் பெயரில் உள்ள தெருப்பெயர்கள் அழிக்கப்பட்டு தெலுங்கர்கள் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

எனவே, தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள். உங்கள் குல தெய்வத்தை தேடுங்கள். உங்கள் குடிப்பட்டத்தை மறக்காதீர்கள்.

தமிழர் என்ற நம்மினம் தமிழ் நாட்டில் நம் கண்முன்னே அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

Thursday, November 3, 2022

👉 துர்க்கை எனும் விபச்சாரக் கடவுளும் (Sex worker) நவ ராத்திரி எனும் இழிவான பண்டிகையும் கலப்பிரர் படையெடுப்பும்




துர்க்கை என்ற இந்து மதக் கடவுள் விபச்சாரி தான் என்று  2014 ல் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டதாம். அந்த துண்டறிக்கையை இந்திய பாராளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அப்போதைய அமைச்சர் ஸ்மிதி இராணி படித்துக் கான்பித்தார்.

துர்க்கை ஒரு விபச்சாரி தான் என்பதற்கான ஆதாரம் இந்தக் காணொளி (video). இதனை முழுமையாக பாருங்கள். உண்மை புரியும்.

துர்க்கை என்ற விபச்சாரி மைசூர் அரசனான மகிசாசுரன் என்ற தமிழ் அரசனை ஏமாற்றி ஒன்பது நாட்கள் உடலுறவு கொண்டு பத்தாவது நாளில் மைசூர் அரசனின் குஞ்சை அறுத்துக் கொன்றாள் இந்த விபச்சாரி துர்க்கை. இதன் பிறகு தான் கர்நாடக மைசூர் தமிழர்களான கவுண்டர்களை அதாவது கவுடா, கவுடர்களை (உதாரணத்திற்கு தேவகவுடா, கவுடா என்பது குடிப்பெயர்) கவுண்டர் என்ற தமிழ்க்குடிப் பெயரில் உள்ள ண் ன்னை நீக்கி கவுடர் கவுடா வாக்கி துர்க்கையின் கணவனான பரசுராமன்  கவுடர்களை அழைத்துக் கொண்டு மதுரைக்கு படையெடுத்து(தமிழர்களை வைத்தே தமிழர்களை அழித்த திட்டம்) அம்மை நோயை பரப்பி 10000 தமிழ் சித்தர்களை அழித்து இந்து மதம் எனும் இழிவான மதம் உருவானது என்பது மறைக்கப்பட்ட உண்மை வரலாறு.