Friday, March 14, 2025

பால புரஸ்கார் விருதாளர் ஐயா மு. முருகேஷ் உடனான சந்திப்பும் இலக்கியவாதிகளின் என்னுடைய சில கேள்விகளும்...

நான் கடந்த 2023 ஜனவரி முதல் வாரம், கவிஞரும் நண்பருமான தம்பி வாலிதாசனால் அழைக்கப்பட்டு பச்சையப்பன் கல்லூரி கவிதை பயிற்சிப் பட்டறையில் ஒரு பார்வையாளனாக என் இளைய மகள் நிறைமதியுடன் கலந்துகொண்டேன். கலந்து கொண்ட நான்கு மணி நேரங்களில் அங்கு மேடையில் பேசிய ஐயா மு. முருகேஷ் உட்பட அனைவரும் தி. மு. க வை புகழ் பாடி, முதல் அமைச்சர் ஸ்டாலினை புகழ் பாடி திராவிட ஆதரவாளர்களாக இருந்ததைக் கண்டு மனதளவில் வேதனை அடைந்தேன். 

இன்னும் பலர் தலித்திய ஆதரவாளர்களாக இருந்தனர். 

தலித்தியம், திராவிடம், தான் வளர்ப்பு மகளையே திருமணம் செய்த வெங்காய ராமசாமி போன்ற எல்லாமே தமிழர்களை மறைமுகமாக அழிக்கப் பிறந்த சித்தாந்தங்கள்.

மத்திய அரசின் பால புரஸ்கார் விருது வாங்கிய ஐயா மு. முருகேஷ் மேடையேறுவதற்கு முன் பேசும்போது "இசைப் பாடகர் கவிஞர் முனைவென்றி நா. சுரேஷ்குமார்" என்று என்னையும் இரண்டு முறை மேற்கோள் காட்டிப் பேசினார். ஆனால், அவரும் திராவிட ஆதரவாளர் என்று அறிந்தவுடன் மிகவும் மன வேதனை அடைந்தேன்.

அதன் பிறகு சில தினங்கள் கழித்து பச்சையப்பன் கல்லூரி குறித்தான whatsapp குழுமத்தில் இருந்த அனைவரையும் என்னுடைய "தமிழினத்தின் வேர்தேடி..." என்ற என் குழுமத்தில் இணைத்துக் கொண்டேன்.
நம் இந்த குழுமத்தில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த திராவிட, தலித்திய ஆதரவாளர்கள் அனைவரும் இணைந்திருக்கின்றனர்.

அதில் சிலர் இந்த நம் whatsapp குழுவை விட்டு வெளியேறி விட்டனர்.

விழிப்புணர்வில்லாத அந்த திராவிட, தலித்திய, வெங்காய ஆதரவாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே என்னால் முடிந்த தூய தமிழ் தேசியக் கருத்துகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

இலக்கியம் என்பது மொழியை வைத்து பொழுதுபோக்குவது அல்ல, பிழைப்புவாதம் அல்ல. 

இலக்கு + இயம் - ஒரு இலக்கை எடுத்து இயம்புதல், கூறுதல்.

இலக்கியம் என்பது அந்த மொழியையும் மொழி பேசும் இனத்தையும் உள்ளன்போடு நேசிப்பதுமே ஆகும்.

இன்று இலக்கியம் என்பது தமிழர்களை அழிக்க வந்த ஆளும் திராவிட, பிராமண சக்திகளை புகழ் பாடுவதும் அவர்களின் காலடி தொழுவதுமாகிப் போனதும் தான் வேதனை.

இலக்கியம் என்பது தூய தமிழ் தேசியத்தை காக்கும் விதமாக இயங்க வேண்டும். மாறாக அந்த இனத்தின் அழிவிற்கு துணை போகும் கூட்டத்தை ஆதரிக்குமெனில், இனம் அழிந்து மொழி எப்படி வாழும்? மொழி இல்லாமல் இலக்கியத்தின் பயனென்ன?

Sunday, March 2, 2025

என் விழியில் பூவாக - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtube.com/shorts/08mibC8f0IU?feature=share



என் விழியில் பூவாக
நீ மலர்கிறாய்
என் செவியில் தேனாக
நீ பாய்கிறாய்

கனவு முழுதும் கலைந்து போக 
கவிஞன் மனமும் கவிதை பாட
நினைவு முழுதும் உன்னைச் சேர்க்க
நிலவும் வந்து உளவு பார்க்க 

என் விழியில் பூவாக
நீ மலர்கிறாய்
என் செவியில் தேனாக
நீ பாய்கிறாய்
---

கண் திறந்து பார்த்தாலே
எதிரில் நிற்கிறாய்
என் வானில் நிலவாக 
நீ தோன்றினாய்

உறவு என்று உன்னைத்தேட
உலகம் என்று உன்னை நாட 
மலர்கள் மீது பார்வை செல்ல
மனமும் முழுதும் மகிழ்வில் துள்ள 

கண் திறந்து பார்த்தாலே
எதிரில் நிற்கிறாய்
என் வானில் நிலவாக 
நீ தோன்றினாய்
---

பால் வண்ணம் மாறாமல்
பாசம் கொள்கிறாய்
வேல் விழியால் என் நெஞ்சை 
குத்திச் செல்கிறாய் 

வெல்லம் உன்னை செல்லம் கொஞ்ச
உள்ளம் எங்கும் வெள்ளம் ஆக
கள்ளம் இல்லா உள்ளம் நீயே 
கொள்ளை அழகு கொஞ்சும் தாயே

பால் வண்ணம் மாறாமல்
பாசம் கொள்கிறாய்
வேல் விழியால் என் நெஞ்சை 
குத்திச் செல்கிறாய் 
---

என் இதயம் முழுதாக 
நீ நிறைகிறாய் 
என் தேசம் எங்கெங்கும்
நீ விரைகிறாய்

மரணம் என்று ஒன்றும் இல்லை 
மனதில் காதல் கொண்ட பிள்ளை 
பயணம் தொடரும் கவலை இல்லை
பாசம் பொங்கும் அன்பின் எல்லை 

என் இதயம் முழுதாக 
நீ நிறைகிறாய் 
என் தேசம் எங்கெங்கும்
நீ விரைகிறாய்
---

Sunday, February 9, 2025

நம் முன்னோர்கள் உருவாக்கிய ஆங்கில மொழி

https://www.facebook.com/reel/1669755110278065?mibextid=rS40aB7S9Ucbxw6v

இந்த விழியம் வெறும் நகைச்சுவைக்காக மட்டுமல்ல. ஆங்கில மற்றும் பிற மொழிகளின் பெரும்பாலான வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை தான்.

உதாரணத்திற்கு,

அரிசி - rice 

பின்னுதல் - பின்னு - ஸ்பின்னு - spin 

பஞ்சு - ஸ்பஞ்சு - sponge

பீடு நடை (வேகமான நடை) - பீடு (வேகம்) - ஸ்பீடு - speed

தமிழ் வார்த்தைகளுக்கு முன் ஸ் என்ற உச்சரிப்பைச் சேர்த்து பல ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழிலிருந்து ஆங்கிலத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

என் அம்மாச்சி அடிக்கடி முட்டி வலிக்கிறது என்று சொல்வதற்கு பதில் கிண்ணி வலிக்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

உருவத்தில் சின்னக் கிண்ணம் போலத்தான் முட்டி இருக்கும்.

முட்டிக்கு அதாவது கிண்ணிக்கு ஆங்கிலத்தில் knee. அதாவது, கிண்ணி -> knee. இந்த knee யில் k என்ற எழுத்தை க் என்று உச்சரிக்கக் கூடாது என்று k silence என்று கிண்ணி  யை knee யாக மாற்றியிருக்கிறான் வெள்ளைக்கார யூதன்.

இதே போல் மதுரை என்று சொல்வதற்கு பதில் மருதைக்கு போறியா? என்று கேட்க நான் பார்த்திருக்கிறேன்.

உண்மையில் மதுரை முன்னொரு காலத்தில் மருத நிலமாக அதாவது ஐந்திணைகளில் ஒன்றான வயலும் வயல் சார்ந்த இடமாக அதாவது விவசாய நிலமாக இருந்திருக்கிறது.

மதுரையை மதுரை என்று சொல்லத் தெரியவில்லையே என்று என் அம்மாச்சியை கிண்டல் செய்திருக்கிறேன். ஆனால், காலப்போக்கில் தான் புரிந்தது மதுரை அல்ல மருதை என்று.

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை வட்டார வழக்கு கொச்சைத் தமிழை நான் வெறுத்தேன். முனைவென்றியை முனவண்டி என்று சொல்வது, மதுரையை மருதை என்று சொல்வது, முகத்தை மூஞ்சி என்று சொல்வது போன்ற பல. ஆனால், காலப்போக்கில் இந்த வட்டார வழக்கு கொச்சைத் தமிழ், நம் வரலாற்றை உள்ளடக்கியிருக்கிறது என்று புரிய ஆரம்பித்த போது கொச்சைத் தமிழையும் நான் நேசிக்கத் தொடங்கினேன்.

என் அம்மாச்சியின் இறுதி நாட்களில் சென்னையிலிருந்து என் சொந்த ஊரான முனைவென்றிக்கு என் அம்மாச்சியை பார்க்க வந்திருந்த போது என் மகள்கள் இருவரிடமும் "நம் குல தெய்வத்தை வணங்க ஐந்து மணி நேரம் பயணம் செய்து தஞ்சாவூர், நீடாமங்கலம் அருகில் போய் தான் பார்க்க வேண்டும். பாட்டி தான் நம்மூரில் இப்போது நம் குல தெய்வம் ஆயியாராம்மன். காலில் விழுந்து வணங்குங்கள்." என்று சொல்ல காலைத் தொட்டு வணங்கி நாங்கள் மூவரும் திருநீர் வாங்கினோம்.

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

Tuesday, December 24, 2024

இராவணன் கண்ட சிந்தாமணி மருத்துவம் - சித்த மருத்துவத்தின் முன்னோடி

நன்றி: இணையம்






சித்த மருத்துவத்திற்கு மிகவும் முந்தைய காலத்தில், தமிழர்களின் மருத்துவ முறையாக இருந்தது ‘சிந்தாமணி மருத்துவம்’ தான். இந்த சிந்தாமணி மருத்துவம், ராவணன் உருவாக்கிய மருத்துவ முறையாகும். அவர் ஒரு தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார்.

பெரும் சிவ பக்தரான ராவணன், இலங்கையை சிறப்பாக ஆட்சி செய்த அரசர். இவரின் இயற்பெயர் சிவதாசன் நிலவழகிப் பாண்டியன். இவரின் பிற பெயர்கள் தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேசுவரன், திரிலோக அதிபதி.

இசை, வான சாஸ்திரம், அரசியல், மனோ தத்துவம், மந்திரம், மருத்துவம், ஜோதிடம், விஞ்ஞானம், ஓவியம், இலக்கியம் முதலான பத்து கலைகளில் நிகரற்று விளங்கினார். 27 நூல்களை படைத்துள்ளார். அவற்றுள் மருத்துவ நூல்களும் முக்கியமானவை. மிகச்சிறந்த மருத்துவராகவும் நமக்கு பல மருத்துவ குறிப்பு களையும் அவர் தந்துள்ளார்.

ராவணன் வைத்திய முறையை இரண்டாக பிரித்துப் பார்க்கலாம்.

1. மக்கள் இன்றைக்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நடைமுறை (பாட்டி) வைத்தியம்.

2. சித்த மருத்துவம்.

கோமாவில், அதாவது ஆழ்நிலை மயக்கத்தில் இருப்பவர்களை சுயநினைவுக்கு கொண்டுவரும் சிகிச்சை முறையும் அதில் கூறப்பட்டுள்ளது.

விபத்துகளின் போது ஏற்படும் காயங்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சைகள் இல்லை. ஆனால் ராவணனின் மருத்துவத்தில் அதற்கு தீர்வுகள் உண்டு. முதுகெலும்பு வளைவு, இடுப்பு எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களுக்கும் இவரின் மருத்துவ முறையில் சிகிச்சை உண்டு.

ராவணன் தன் மனைவி மண்டோதரி கருவுற்றிருக்கும் சமயத்தில், ‘பெண்கள் கருவுற்றிருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் நோய் தாக்கம், அதற்குண்டான மருத்துவம், குழந்தை பிறந்த பிறகு குறிப்பிட்ட காலம் வரை ஏற்படும் நோய் தாக்கம், அதற்குண்டான மருத்துவம்’ ஆகியவற்றைக் கண்டறிந்து அதனை நூலாக இயற்றியுள்ளார்.

பதினோறாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பெரும் நோயினால், பல குழந்தைகள் இறந்து போயின. பல மருத்துவ சிகிச்சை செய்தும் பலனில்லாமல் போனது. அதனால், குழந்தை மருத்துவம் தொடர்பான பல மருத்துவ நூல்களை ஆராய்ந்தனர். அப்போது ‘ராவண குமார தந்த்ரா’ என்ற நூலில் கிடைத்த மிகப்பழைய மருத்துவ சிகிச்சையை கையாண்டனர். அம்மருத்துவ முறையில் கூறப்பட்டபடி மருந்துகளை அரைத்துக் கொடுத்தனர். அம்மருந்துகளை உண்ட குழந்தைகளும் முழுமையாக குணமடைந்தனர்.

இம் மருத்துவநூல் குழந்தை களுக்காக, ராவணனால் எழுதப் பட்டதால் அவரது பெயரிலேயே ‘ராவண குமார தந்த்ரா’ என்று அழைத் தனர். இதற்கு “ராவண பிரக்தவல சூத்திரா” என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்நிகழ்வினை ‘David Gordon White’ என்பவர், தன்னுடைய ‘The Alchemical Body Siddha Traditions in india’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் ரீதியான வெளிப்படையான நோய்களும், பிறப்புறுப்பில் ஏற்படும் புண்களும், அதற்குண்டான மருத்துவ முறைகளைக் கூறும் ‘அர்க்க பரிக் ஷா’ என்ற நூல், மனித உடம்பிலுள்ள நரம்புகளை (துடிப்பு பரிசோதனை விவரம்) பற்றிய சிகிச்சை முறைகளை கூறும் ‘நாடி பரிக் ஷா’, ‘நாடி விஜன்னா’ ஆகிய நூல்கள், மூலிகை வேர்களின் சக்திகளையும், அவற்றின் மூலம் குணப்படுத்தும் நோய் சிகிச்சை முறைகளையும் (சிக்கலான நோய்களுக்கான ஒவ்வொரு மூலிகையின் பயன்பாடு மற்றும் அளவு மற்றும் குணப்படுத்துதல்) கூறும் “அர்க்க சாஸ்திரா” என்ற நூல், காயங்களை உடனடியாக குணப்படுத்தக்கூடிய சிந்துரம் மருத்துவம், அத்தியாவசிய எண்ணெய்களின் பல்வேறு சிகிச்சைகள், உட்புற பயன்பாட்டிற்காக நறுமண தாவரங்களில் இருந்து வடிகட்டிகளைப் பிரித்தெடுப்பதற்கான நிலையான இயக்க முறைகள் பற்றிய “அர்க்க பிரகாஷா” என்ற நூல் என பல மருத்துவ நூல்களையும் ராவணன் படைத்துள்ளார்.

அவர் தனது அறிவார்ந்த படைப்பு களின் சிறந்த தொகுப்பான ‘ராவண சம்ஹிதா’ என்ற மருத்துவ நூலை எழுதியுள்ளார். இது ஆயுர்வேத அறிவியலைப் பற்றி பேசுகிறது.

மேலும், மனிதர்கள் தங்களது உடம்பை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒருசில மருந்துகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ராவணன் தன் மருத்துவ முறையில் கூறியுள்ளார். அவற்றை நேரிடையாக எடுத்துக்கொண்டால் அம்மருந்தின் தன்மையால் அவற்றின் மீது வெறுப்பும், குழந்தைகள் சாப்பிடாமல் இருக்கும் என்பதால் அம்மருந்துகளை உணவில் சேர்த்து உண்ண விழைகிறார். மூன்று பொருட்களையும், அவற்றுடன் ஐந்து வேர்களையும் நாம் உண்ணும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.
இதனை “தூணபகா” என்பர். அதாவது “து” என்றால் மூன்று, “பகா” என்றால் ஐந்து. அம்மருந்து பொருள் வேறொன்றுமல்ல தமிழர்களின் உணவுப் பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கும் குறுமிளகு, இஞ்சி, பூண்டு இம்மூன்றும்தான். ஐந்து வேர்கள் ‘கண்டங்கத்திரி, சிறுநெருஞ்சி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி’ ஆகும். இதனை ‘சிறுபஞ்சமூலம்’ என்பர். இலங்கையில் இன்றும் இந்த உணவுப்பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், கொத்தமல்லி, சீரகம், கருஞ்சீரகம், கருவாப்பட்டை (லவங்கப்பட்டை), மிளகு என இந்த ஐந்து பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ராவணன் கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக, நம் உணவில் சேர்க்கப்படும் சீரகம். (சீர்+அகம்) அகத்தை சீராக வைப்பதற்கு சீரகம் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பொதுவாக அஜீரண கோளாறுகள், செரிமானத் தடை போன்ற பிரச்சினைகளுக்கு சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கும் பழக்கம் இன்றளவிலும் உள்ளது.

என் அம்மாவின் குல தெய்வம் என் ஊர் முனைவென்றியில் உள்ள வீரபத்திர சாமியாகிய இராவணன் தான். 

என் ஊர் முனைவென்றியில் வீரபத்திர சாமியை சிவனின் இன்னொரு வடிவமாகத்தான் வணங்குகின்றனர். 

இராவணன் தான் வீரபத்திரன் என்பது என் ஊரில் உள்ள பலருக்கும் புதிய செய்தி. இதனை அவ்வளவு எளிதில் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காலப்போக்கில் உண்மை புரியும்.

Tuesday, October 15, 2024

செயற்கை மழை மற்றும் Red Alert நாடகங்கள் - இல்லுமினாட்டி யூத பிராமண பிண்டாரிகளின் அட்டூழியங்கள்

2015 ஆம் ஆண்டு யூத பிராமண ஜெயலலிதாவால் சென்னையில்  உண்டாக்கப் பட்ட செயற்கை வெள்ளம். - https://youtube.com/shorts/_bg4Xz3tYp0?si=fDKG1BbZ_GztWcEW









இந்த ஆண்டும் 2+0+2+4 = 8 கிருஷ்ணனை குறிக்கும் ஆண்டு.

தன்னுடைய முன்னோனான சகுனியை மகாபாரதப் போரில் கொன்ற கிருஷ்ணனை பழிவாங்கும் நோக்கில் மழைக்காலமான அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இயற்கை மழை என்ற பெயரில் செயற்கை மழையை உண்டாக்கி red alert என்று மக்களை துன்புறுத்துகின்றனர் ஐயர், ஐயங்கார் எனும் இல்லுமினாட்டி யூத பிராமண பிண்டாரிகள்.

காலம் காலமாய் தமிழர்களை பழிவாங்க, அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் மன நோயாளிகள் இந்த யூத பிராமண பிண்டாரிகள். 

இது குறித்து இந்த ஆண்டு கிருஷ்ணனின் ஆண்டு என்பதால் கிருஷ்ணனின் வம்சாவழிகளான நம்மை துன்புறுத்த டிசம்பரில் அதிக மழை பொழிய வைப்பார்கள் என ஐயா பாண்டியன் ஏற்கனவே பலமுறை எச்சரித்திருந்தார். இப்போது அக்டோபர் மாதமே யூத பிராமண பின்டாரிகள் செயற்கை மழையை உண்டாக்கி நம்மை துன்புறுத்தி, சிரித்து மகிழத் துவங்கி விட்டனர்.

அறிவியலின் முன்னோடியான நம் தமிழர்கள் மற்றும் தமிழ் பாரம்பரியம் நீடூழி வாழ வேண்டுமென நாம் நம் சித்தர்களை மனமுருகி வேண்டுவோம். 

🙏

Tuesday, July 30, 2024

கத்துங்கிளி நிறைமதி

எங்கள் வீட்டு குட்டி இளவரசிக்கு இன்று ( 31-07-2024) பிறந்தநாள் - https://www.youtube.com/shorts/MKxWXnrboV4



தத்தையிவள் முத்துமகள்
தத்தித்தத்தி நடப்பாள்
கத்துங்குயில் வித்தைகளை
கற்றுப் புகழ் படைப்பாள்
முத்துதிரும் அத்தைமகள்
பெத்தெடுத்த சிறப்பாய்
எத்திசையுங் கத்துங்கிளி 
முத்துமணி பறப்பாள் 

வஞ்சிமொழி கொஞ்சுங்கிளி
நெஞ்சமதை மயக்கும்
கொஞ்சிக் கொஞ்சித் துஞ்சுமெழில்
நெஞ்சைத் துளைதுளைக்கும்
மஞ்சள் வெயில் கொஞ்சும் குயில்
கெஞ்சிக் கெஞ்சி அழைக்கும்
நெஞ்சமதில் மஞ்சமிட்டு 
மங்கையிவள் உறக்கம் 

கண்ணெதிரே கண்மணியே
பெண் குழந்தை ஜொலிப்பாள்
மண்ணுலகில் என்னுலகாய்
என் மகளே இருப்பாள்
என்னெதிரே கண்கள்வழி 
பெண்ணிலவே விழிப்பாள்
பொன்னுதிரும் புன்னகையே
இன்பமதில் திளைப்பாள்

Wednesday, May 15, 2024

பிரகதிக்குப் பிறந்தநாள் (16-05-2024) - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/Up1QEBTW--A




மலரே மகளே மறுமகளே
மனதில் நிறைந்த திருமகளே
அழகே நிலவே திருப்புகழே
இரவில் ஒளிரும் சிறு அகலே

தரையில் தவழும் அலைகடலே
தாவிக் குதிக்கும் சிறுமுயலே
குறைகள் இல்லா கோமகளே
கொஞ்சிப் பேசும் புதுமடலே

மயிலே மழையே மரகதமே
மாமன் தோளில் பூரதமே
குயிலே குறும்பே கொண்டாட்டமே 
குதிப்பாய் பறப்பாய் வண்டாட்டமே

வானம் தாண்டி வளர்வாயே
வாழ்க்கை முழுதும் மகிழ்வாயே 
தேனினும் இனிதாய் வாழ்வாயே 
தேவதை நீயும் சிரிப்பாயே

பிறந்தநாளில் வாழ்த்துகிறோம்
இறைவன் அருளும் கிடைக்கட்டும்
சிறப்பாய் வாழ்வில் உயர்வாயே 
சித்தர்கள் அனைவரின் அருளுடனே... 

Wednesday, May 8, 2024

இசையமைப்பாளர்/தானியங்கி (auto) ஓட்டுநர் மெட்டில், இசையில், குரலில் நேற்று நான் மெட்டமைத்து, எழுதி, பாடி வெளியிட்ட என் மகள் ரிதன்யா குட்டிக்கான பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்

 பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/M83tOYbXVcc


பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன் 

இசை: திரு. கோபி 

பாடியவர்: திரு. கோபி 


சில மாதங்களுக்கு முன்பு தானியங்கியில் (auto) செல்ல முயற்சித்து ஒரு ஓட்டுநரின் வண்டியில் பயணித்தோம். மூத்த மகள் ரிதன்யா விடம் keyboard ற்கான இசைப்பயிற்சி செல்வதற்கான நேரம் குறித்து பேசிக் கொண்டே சென்றோம். உடனே ஓட்டுநர் என் மகளிடம் இசைப்பயிற்சி குறித்து விரிவாகப் பேசினார். நான் குறுக்கிட்டு "இசையில் ஆர்வம் உண்டா?" என்று கேட்டேன். அவரும் "நான் ஒரு இசையமைப்பாளர். என் மகனுக்கு பயிற்சி அளித்து அவன் தற்போது keyboard நன்றாக வாசிப்பான்" என்றபடியே அவரின் youtube channel ன் சிலவற்றை அனுப்பி பார்க்கச் சொன்னார். 


அதன்பிறகு நான் வெளியிடும் youtube விழியங்களை அவருக்கு அனுப்புவேன். அவர் எனக்கு அனுப்பினார். நேற்று நான் மெட்டமைத்து எழுதி பாடிய பாடலின் இணைப்பை அனுப்பிய உடனே பாடல் வரிகளை அனுப்புங்கள், ரிதன்யாவின் புகைப்படங்களை அனுப்பச் சொல்லி நேற்று மாலை எனக்கு என் பாடல் வரிகளில் அவரின் வேறு ஒரு மெட்டில் அவரின் குரலில் இசை சேர்த்து இந்த விழியத்தை அனுப்பினார்.


குரலும் இசையும் அருமை. ஒரு மணி நேரத்தில் வேறு ஒரு மெட்டில் பாடலை உருவாக்கி விட்டார். இசையமைப்பாளர் கோபி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Tuesday, May 7, 2024

ரிதன்யா குட்டிக்கு பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/poHO6q12aaw


09-05-2024 அன்று என் மூத்த மகள் ரிதன்யா வுக்கு பிறந்தநாள். 

இசையைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், இந்தப் பாடலில் பல இடங்களில் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் இரண்டாக உடைத்து (chopping) பாடும்போது நான் உருவாக்கிய மெட்டில் இரண்டாக உடைத்த வார்த்தைகள் பிசிறு தட்டாமல் சரியாக பொருந்துகிறது. உதாரணத்திற்கு உள்ளம் என்ற வார்த்தையை உள்+ளம் என உள் ளம் எனப் பிரித்து பாடியிருக்கிறேன். 

ஒரு இசையமைப்பாளருக்கான அடிப்படைத் தகுதியே மெட்டமைப்பது. புதுப்புது மெட்டுகளில் தான் பாடல் வரிகள் வழியே பாடல்கள் மக்கள் மனதைக் கவர்கின்றன. எனக்கு புதுப்புது மெட்டுகள் இறை சக்தியிடமிருந்து கிடைப்பதாக உணர்கிறேன். ஒரு இசையமைப்பாளருக்கான அடிப்படைத் தகுதியே மெட்டமைப்பது என்பதால் நானும் ஒரு இசையமைப்பாளரே.

2005 ம் ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது என்னோடு அண்ணன் அ. சரவணராஜ், யா. சாம்ராஜ் போன்ற இன்ன பிற கவிஞர்களும் பொறுப்பாசிரியர்களாக பணியாற்றிய போது மாத இதழின் ஆசிரியர் முதல் இதழின் முதல் பக்கத்தில் முன்னுரையில் என்னுடைய ஒரு கவிதையைப் படித்த தாக்கத்தில் "ஒரு சங்கீதக் கலாநிதி போல் தொடையில் தட்டிப் பாடச் சொல்லும் கவிதைகளை தருபவர்" என்று என்னை அறிமுகம் செய்திருந்தார். இன்றும் நான் 
ஒரு சங்கீதக் கலாநிதி போல் தொடையில் தட்டிப் பாடச் சொல்லும் பாடல்களை மெட்டமைத்து, எழுதி, பாடிக் கொண்டிருக்கிறேன்.

நீங்களும் பாடலை என்னோடு சேர்ந்து பாடி என் மகள் ரிதன்யா வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரியப் படுத்துங்கள். 

நன்றி.




வா நீ என அழைத்தால் 
நீ வருவாய் கண்ணே - என் 
வாழ்வே நீ என்றேன் 
நீ வந்தாய் முன்னே

கண்கள் முன்னே பேரழகே 
கால் முளைத்த நூறழகே
உன்னை விட்டு எங்கே போவேன் 
உன் முன்னே மழலை ஆவேன் 
---


அன்பே என் அன்பே 
என் மகளே நீ வா 
கண்ணே என் முன்னே 
என் மலரே நீ வா 

கண்ணிமைக்கும் நேரத்திலே 
கண் சிமிட்டி நின்றுவிட்டு 
கன்னத்திலே முத்தமிட்டு 
காணாமல் போனதென்ன
---


முத்தே என் மணியே
என் உடலின் உயிர் நீ
சொத்தே என் சுகமே
என் உலகம் இங்கு நீ

வண்ண வண்ண பூக்களெல்லாம் 
உன்னழகைக் கேட்பதென்ன
வானவில்லும் கீழிறங்கி 
உன்னழகைப் பார்ப்பதென்ன
---


கள்ளம் இல்லா உள்ளம்
என் செல்லம் நீ வா
துள்ளும் அன்பு வெள்ளம் 
என் வெல்லம் நீ வா

வெண்ணிலவும் பூமி வந்து 
உன்னைத் தொட்டுப் பார்ப்பதென்ன
மீன்கள் எல்லாம் பக்கம் வந்து 
முத்தமிட்டுப் போனதென்ன
--

Thursday, April 25, 2024

விஷ்ணுவின் பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/eEAyboetAF8


சில தினங்களுக்கு முன்பு தான் கள்ளழகராகிய திருமாலாகிய அனைவரின் வீட்டில் வசிப்பவன் என்ற பொருளில் வீட்டினன் -> வீட்னு -> விஷ்ணு என்ற விஷ்ணுவின் ஆற்றில் இறங்கும் விழா வெகு விமர்சையாக மதுரை, பரமக்குடி போன்ற ஊர்களில் கொண்டாடப்பட்டது. இப்போது, எங்கள் வீட்டு விஷ்ணுவுக்கு இன்று பிறந்தநாள். நான் எழுதிய இப்பாடலைப் பாடி வாழ்த்துவோம்.




எங்க வீட்டு செல்லத்தம்பி
என்றென்றும் தங்கக்கம்பி
எங்க குலம் உன்ன நம்பி
எந்த னுயிர் சுட்டித்தம்பி

தத்தி வரும் மானே - என்
தங்கை மகன் தானே
சொட்டும் மலைத் தேனே - சிவ 
கங்கைச் சீமைக் கோனே 

முத்தந்தரும் மச்சக்காள
முழுநிலவின் அழகு போல
சொத்துசுகம் எல்லாம் ஆள 
செல்ல மகன் பிறந்த வேள 

கண்ணின் மணி போல - இங்கு
கவிதை பாடும் சோல 
கண்ணன் பிறந்த நாள - இங்கு
கவியும் வாழ்த்தும் வேள

பள்ளி செல்லும் மான்குட்டி
துள்ளி ஓடும் வான்முட்டி
வெள்ளி நிலா  எட்டியெட்டி 
அள்ளி அணைக்கும் சுட்டிச்சுட்டி

தங்கத் தம்பி செல்லம்
முத்தம் கொடுக்கும் வெல்லம் 
பொங்கும் அன்பு வெள்ளம் 
பாடி வாழ்த்தி வாழ்த்துச் சொல்லும்